1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

Final Episode - இருள் மறைத்த நிழல் - 75

Discussion in 'Stories in Regional Languages' started by mstrue, May 6, 2010.

  1. mstrue

    mstrue New IL'ite

    Messages:
    2,065
    Likes Received:
    256
    Trophy Points:
    0
    Gender:
    Male
    [​IMG]

    "இவ்வளவு அன்பு இருப்பவள், அப்படியும் என்னை விலகி விட தானே முடிவு செய்தாய்?" என்று நளந்தன் குறை போல் சொல்ல, "பின்னே, விலக முடியாதபடி கட்டி போட்டுவிட்டு என்றெல்லாம் வெறுப்பாக சொன்னீர்களே.. விலகாமல் என்ன செய்வதாம்?" என்றாள் மிதுனா.

    "'Reading between lines' என்று கேள்விப்பட்டதில்லையா? அப்படியே 'literal'-ஆக அர்த்தம் செய்து கொள்வதா? உன் காதலால் என்னை விலக முடியாதபடி கட்டி போட்டு விட்டு, போகிறேன் போகிறேன் என்று சொல்கிறாயே என கோபித்து கொண்டேன்" உல்லாசமாக சிரித்தான் நளந்தன்.

    நளந்தன் மேல் தனக்கிருக்கும் ஆதிக்கம் பெருமிதம் தந்தாலும் அவனை வருத்தி விட்டோமே என்று மனம் வருந்த, "நீங்கள் தான் உங்களை போட்டு அப்படி வருத்தி கொண்டீர்களே. தாத்தாவிற்கு கொடுத்த வாக்கிற்காக, மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவிக்கிறீர்களோ என்று.. உங்களுக்காக தான், நந்தன்.. நான் விலகி விட நினைத்தேன். உங்களை பிரிவது உயிரை பிரிப்பது போல தான் இருந்தது." என்று மனதை மறைக்காமல் சொன்னாள்.

    அவள் விரல்களோடு விரல் பொறுத்தி விளையாடி கொன்டிருந்த நளந்தன், "அது அன்று பால்கனியில், நான் தவித்த தவிப்பு வேறு.. உன்னை விலக்கமுடியாததால் வந்த தவிப்பு" என்று மென்னகை புரிந்தான்.

    அவள் வியந்து பார்க்க, "மெய், மது. உன் மனம் குணம் எதையும் ஆராயாது, முட்டாளின் சொர்க்கத்தில் இருந்தேனும் உன்னை காதலிக்க நான் முடிவு செய்த நேரம் அது. அப்போது போய் நீ வந்து தாத்தாவிற்கு கொடுத்த வாக்கை மதிக்க வேண்டாம், உங்களை மணக்கும் எண்ணமே எனக்கு இல்லை என்றெல்லாம் நீ சொன்னாயா! எனக்கு வந்தது பார் கோபம்" என்று கண்களில் சிரிப்பு தேக்கி சொன்னான்.

    "அன்று வேலையே ஓடவில்லை. ஓடி வந்து பார்த்தால், அஞ்சியது போலவே அம்மிணி ஆளையே காணோம். அன்று எப்படி மனம் துடித்தேன் தெரியுமா?! பெட்டியை தூக்கி கொண்டு கதவருகில் நீ நிற்கையில் என் இதயம் நின்று துடித்தது. உன்னை என்றுமே இழக்க நான் தயாரில்லை என்று அப்போது தெள்ளதெளிவாய் தெரிந்தது. எப்படியோ உன்னை நிறுத்தி வைத்தேன். எப்படியும் உன் மனதை மாற்றிவிடலாம் என்று நான் நம்பிக்கையோடு இருந்த சமயம் சுகந்தன் நர்ஸ் உனக்கு போன் செய்த விஷயத்தை என்னிடம் சொல்ல, சுபலாவின் சதி வெட்டவெளிச்சம் ஆனது. உன் தாத்தா பற்றிய சேதி உனக்கு ஊர் சென்ற அன்றே கிடைத்திருந்தால், உன் எண்ணமெல்லாம் உன் தாத்தாவை சென்றடைவதில் தானே இருக்கும்? சுபலா சொன்னபடி திட்டம் தீட்டுவது எப்படி ஆகும்? மதூ..உன்னை அநியாயமாக வறுத்தேடுத்தேனே என்று அன்று ரொம்பவும் நொந்து போனேன்.. எங்கே என்னை வெறுத்துவிடுவாயோ என்று ஒரு கலக்கம். உன்னை கை நீட்டி அடித்து.. 'டி' போட்டு பேசி.. எனக்கே என் மேல் வெறுப்பாக இருந்ததே!"
    மனம் தாளாதவன் போல, அன்று கை தடம் பதிய அறைந்த அவள் கன்னத்தை, இன்று மயிலிறகால் வருடுவது போல அத்தனை மென்மையாய் வருடினான்.

    அந்த கைகளில் இதழ் பதித்த மிதுனா அவன் கலக்கம் தீர்ப்பவள் போல அவனோடு வாகாக ஒண்டி அவனின் கன்னத்தோடு கன்னம் வைத்தாள். மூன்று நாள் அலைச்சலில், ஷேவ் செய்யப்படாத அவன் தாடி இதமாக குத்தியது. இயற்கையிலேயே நேர்த்தியாய் , டிசைனர் 'Stubble' போல வளர்ந்திருந்த அந்த தாடியில் விரல்களை ஓட்டிய மிதுனா, "ஒரு பெண்ணை கை நீட்டி அடிப்பது தவறு தான் என்றாலும், அன்றைக்கு நீங்கள் என்னை அடித்ததை நான் ஆணாதிக்கமாக பார்க்கவில்லை. அது என் மேல் நீங்கள் வைத்த 'அன்பின் ஆதிக்கம்'. நம் அன்பு பொய்த்து விட்டதோ என்று பொங்கிய உங்கள் கோபத்தின் ஆதிக்கம். சில நேரங்களில் கோபமும் அன்பின் வெளிப்பாடு தானே. நேசிப்பவளிடம் கோபத்தை காட்டாமல் வேறு யாரிடம் காட்டுவார்களாம்? 'டி' போட்டு பேசியது கூட ஒரு உரிமையில் தானே! அன்பின் அடிப்படையில் வந்த உரிமை. அது எனக்கு ஆனந்தமே." என்று மனமுவந்து சொன்னாள்.

    வேறு சமயமென்றால் நளந்தனின் இயல்புக்கு, "ஆஹா, அடிக்க லைசென்ஸ் கிடைத்துவிட்டது." என்று விளையாட்டாய் ஏதாவது பேசியிருப்பான். ஆனால் இப்போதோ மிதுனாவின் மட்டற்ற அன்பு அவனை திக்கு முக்காட வைத்தது.

    தொண்டையை செருமிக் கொண்டு, ஒரு கையால் அவள் கூந்தலை வருடியபடி பேசினான், " அப்போதெல்லாம் உன் கழுத்தில் நான் போட்ட இந்த சங்கிலி தான் எனக்கு ஆதாரம். அது உன் கழுத்தில் தொங்கும் வரை உன் மனதில் எனக்கு இடமுண்டு என்று நம்பிக்கை வளர்ப்பேன். அந்த நம்பிக்கையில் தான் தாத்தாவிற்கு போன் செய்து, நான் சொல்லும் வரை ஊருக்கு திரும்ப வேண்டாம் என்று சொல்லி, நம் மனம் ஒன்றுபட இடையூறின்றி இருக்க எல்லா வேலையாட்களையும் நிறுத்தி, அதுவும் சரிவராது, ஒரு இடமாற்றம் உன் மனதை மாற்றுமோ என்று தோன்ற, நிலம் அது இது என்று சொல்லி, உன்னை இங்கே அழைத்து வந்து.." அவன் விவரிக்க விவரிக்க அவளுக்கு பயங்கர வியப்பாக இருந்தது.

    "ராஜதந்திரமா?! " என்று கண் சிமிட்டி சிரித்தாள் மிதுனா. பட்டாம்பூச்சி போல படபடத்த அந்த கண்ணிமைகளில் மென்மையாய் இதழ் ஒற்றிய நளந்தன், "பின்னே, இப்படி எல்லாம் ராஜதந்திரம் செய்ததால் தானே இன்று இந்த நளமகாராஜாவுக்கு ஆள்வதற்கு இந்த அழகு ராஜ்யமும், ஆட்டி படைக்க இந்த ராஜ்யமே ராணியாகவும் கிடைத்தாள்!" என்றான்.

    கண்கள் மின்ன சிரித்த மிதுனா, "அப்புறம் வேறு என்னென்ன ராஜதந்திரம் தெரிந்து வைத்திருக்கிறீர்கள்?!" என்றாள்.

    "நிறைய இருக்கிறது, மானா!" என்றான் ஒரு மர்ம புன்னகையோடு.

    "மானாவா?! " என்று அவள் வியந்து பார்க்க, "ம்.. மிதுனா, மானா, தேனா, மீனா, சோனா.. இப்படி உன்னை பல பெயர் சொல்லி அழைத்து வைத்தால், நான் நிம்மதியாக தூங்கலாம் பார்" என்றான் புதிராக.

    "விளங்கும்படி சொல்லுங்களேன்" என்று மிதுனா சிணுங்க, "இப்படி தோன்றிய பெயர் எல்லாம் சொல்லி உன்னை கொஞ்சி வைத்து விட்டால் தூங்கும் போது எந்த பெண் பெயர் சொல்லி புலம்பினாலும், விஷயம் புரியாது நீயும் உன் பெயரை தான் அனத்துகிறேன் என்று நினைத்து கொள்வாய்..நமக்குள் சண்டை வராது பார்! நானும் எவள் பெயரையாவது தூக்கத்தில் உளறிவிடுவேனோ என்ற பயமின்றி நிம்மதியாக உறங்கலாம்" என்று சொல்லி குறும்பாக சிரித்தான்.

    அவன் மார்பில் செல்லமாக அடித்தாள் மிதுனா.
    "ஆளை பார்! 'ஒருத்தியிடம் காதல் என்று உணர்ந்தால், அதன் பின் ஏகபத்தினி விரதன் நான்' என்று சொல்லியது மறந்து போச்சா?" ஒரு விரல் நீட்டி அவள் பத்திரம் காட்ட,
    "அப்படியா சொன்னேன்?! நன்றாக யோசித்து பார், 'ஏகப்பட்ட பத்தினி விரதன்' என்று சொல்லியிருக்கப் போகிறேன்!" என்று வாய் விட்டு சிரித்தான்.

    நளந்தனின் அந்த மாயச்சிரிப்பில் எப்போதும் போல மனம் லயித்த மிதுனா அவனின் முகவாய் வெட்டை ஒரு விரலால் மிருதுவாக வருடி பார்த்தாள். வருடிய விரலுக்கு ஒரு ஈர முத்தம் தந்து, பின் தன் இதழ்களை அவளது கன்ன கதுப்புகளுக்கு குடியேற்றிய நளந்தன் மெதுவே குனிந்து ஆசையோடு அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்தான். சில நிமிடங்களுக்கு பின்னர் பிரம்ம பிரயத்தனப்பட்டு தன்னை கட்டுக்குள் கொண்டு வந்த நளந்தன், நாணத்தால் செங்கொழுந்தாக சிவந்து தலை கவிழ்ந்து நின்ற மிதுனாவின் முகம் நிமிர்த்தி, "நம் தேனிலவு இந்த கிராமத்தில் தான், மது." என்று சொல்லி கள்ளச்சிரிப்பு சிரித்தான்.

    நளந்தனின் அந்த மோகன சிரிப்பில் இமைக்க மறந்த மிதுனா உள்ளம் கொள்ளை போனாள்.

    நிழல் நிஜத்தை நிறைத்தது
    ~ முற்றும் ~
     
    2 people like this.
    Loading...

  2. Kalasen

    Kalasen New IL'ite

    Messages:
    89
    Likes Received:
    0
    Trophy Points:
    6
    Gender:
    Female
    Hi True,

    Very nice story,

    Epoo aduththa innings start panna poringa?

    Eagerly waiting.
     
  3. mstrue

    mstrue New IL'ite

    Messages:
    2,065
    Likes Received:
    256
    Trophy Points:
    0
    Gender:
    Male
    Thanks, Kala!
    For now, no idea of writing real soon..
     
  4. Priesh

    Priesh Platinum IL'ite

    Messages:
    2,066
    Likes Received:
    633
    Trophy Points:
    208
    Gender:
    Female
    Aha, mudichitingale, mudichitingale(vadivelu style). Happy ending, konjam samadhanam.

    Really superb. padikumpodhe yenakku visual padam parkara mathiri than irundhadhu.:)

    Adutha kathaikka waiting. Keep rocking:thumbsup
     
  5. MahiSree

    MahiSree Gold IL'ite

    Messages:
    557
    Likes Received:
    279
    Trophy Points:
    138
    Gender:
    Female
    Hey mstrue,

    WOW...:)
    Priesh sonna mathiri, read pannum pothe visualize panni parthutte irundhen.

    Azhagana kadhai nadai...Romba nalla irundhathu.
    Naan ennoda office la kallathanama padichittu, reply ezhudharen.
    Avvalavu involvement...

    Innum niraiya kadhaigal ezhutha ennudaiya vazhthukkal.:thumbsup

    Anbudan,
    MahiSree
     
  6. Bagiya

    Bagiya New IL'ite

    Messages:
    98
    Likes Received:
    0
    Trophy Points:
    6
    Gender:
    Female
    Hi True,

    Very Nice story, As i said in my first reply this my first love story i read so patiently without missing any lines.

    Basically i never read stories as am very lazy and don't have patience. Till now i have read only 4 novels that too historical novel of kalki and sandalyans. Even that i will read ending first then read the other parts.

    You really rocked true. A big applause to you dear :clap.

    Thanks for not putting me in suspense


    Keep rocking
     
    Last edited: May 6, 2010
  7. g3sudha

    g3sudha IL Hall of Fame

    Messages:
    7,985
    Likes Received:
    8,293
    Trophy Points:
    445
    Gender:
    Female
    MST

    Kadhai simply superb.............
    atleast last episodela yavadhu, nandan padam draw seidhu irukkalam. ............... (unga herova)
    appadi enna bayam, herova kaatta...............

    sikirame adutha kadhaiya start pannungo .........

    endha mailukku reply pls.--------------
    Bye see you in ur next story!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
     
    Last edited: May 6, 2010
  8. DDC

    DDC Silver IL'ite

    Messages:
    479
    Likes Received:
    39
    Trophy Points:
    50
    Gender:
    Female
    True,:thumbsup
    Beautiful story & excellent narration. I can quote so many lines that were more like poetry than prose. You are an extremely talented lady and should just compile the whole story & add in your sketches & start shopping for publishers. You will probably be one of a very few author-artists, if not the only one. Look forward to seeing your name in print.

    Waiting for another good read-காத்திருப்பதிலும் சுகமிருக்கு

    உங்கள் அவரும் இப்படியே ரசிச்சு ரசிச்சு உங்களை உணர்ந்து ஆராதிக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்


    --DDC
     
  9. meen11

    meen11 New IL'ite

    Messages:
    17
    Likes Received:
    1
    Trophy Points:
    3
    Gender:
    Female
    this is my first comment. i happened to see ur story only 2 days back. finally i finished it today. simply great no other words to say. really u r not any less to other romantic novel writers now. definitely u shd try to publish ur story b'cos it deserves it.

    i saw ur reply to other comment that u r not goin to write again anytime soon. y don't u reconsider that for us readers.

    yet again u have given us a very simple, clean, wonderful and simply superb story. may god bless u in whatever u choose to do.

    meena
     
  10. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    அன்புள்ள மிஸ்.உண்மை!
    என்ன கூற வார்த்தைகள் அற்று போயின தங்கள் கதையை படித்ததும்!
    அருமை தோழி!
    மேலும் நிறைய படைத்திட என் வாழ்த்துக்கள்!:thumbsup
     

Share This Page