1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

எங்க ஊரு பச்சகிளிகள்!!!!

Discussion in 'Stories in Regional Languages' started by pgraman, May 2, 2010.

  1. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    ஆமாங்க இவங்க ஊருல நெறையா பச்ச கிளிங்க இருக்கு ஆனா நம்ம கதைல வரப்போற நாலு பேருக்கு எது பச்ச கிளின்னு கதை படிச்சதுக்கு அப்புறம் நீங்களே சொல்லுவீங்க. அவங்க ஊரு தமிழ் நாட்டோட தென்கோடியில இருக்குற ஒரு வறண்ட கிராமம் ஆனா நல்லா ஆறு போகம் விளையும் இருந்தாலும் வறண்ட பூமி. இந்த ஊருக்குன்னு ஒரு சாபம் இந்த ஊருல பொம்பள புள்ளைங்களே கெடயாது பொறக்கறது எல்லாமே ஆம்பள பசங்க தான்.

    இந்த நாலு பேருல சுரேஷ் இவன் தான் கதையோட ஹீரோ. நந்தா, பாலா, ரவி இவங்க மூணு பெரும் சுரேஷோட பிரண்ட்ஸ். எப்ப பாரு இந்த நாலு பெரும் ஒண்ணா தான் திரிவாங்க. இவங்க பேசுறது எல்லாம புள்ளைங்கல பத்தி தான். என்னங்க பண்றது இல்லாதத பத்தி தான எல்லாரும் அதிகமா பேசுவோம் இவுங்களும் அதே மாதிரி தான் இல்லாத புள்ளைங்கள பத்தியே பேசுவாங்க. அதுக்காக இவங்கள தப்பா நெனசுராதீங்க. எப்டியாவது சாகறதுகுள்ள லவ் பண்ணி கல்யாணம் பண்ணனும்ங்கறது தான் இவங்களோட லட்சியம் கொள்கை குறிக்கோள் எல்லாமே.

    ச்சே!! என்னடா இது வாழ்கை லவ் பண்றதுக்கு ஒரு புள்ளைங்க கூட இல்லையே டா வாழ்க்கையே வெறுப்பா இருக்கு டா என்று பாலா கதற
    ஆமாண்டா இதெல்லாம் நம்ம அப்பாங்க செஞ்ச பாவம் இல்லேன்னா இப்டி ஒரு புள்ளைங்க கூட பொறக்காம இருக்காது.
    உடனே சுரேஷ் ஆமாண்டா நாம கனவுல தவிர வேற எங்கயும் பொண்ணுங்கள பாத்ததே இல்லையே டா ஸ்கூல் கூட பசங்க படிக்கிற ச்சூலா பாத்து நம்ம அப்பாங்க சேத்து விட்டு நம்மள காவு வாங்கிட்டாங்க டா. ச்சே....வாழ்க்கையே வெறுமையா இருக்கு மச்சான்
    என்று ஒவ்வொருவரும் கதற அவர்களுக்கு அன்று அவர்களின் கதறலுக்கு விடிவுகாலம் வரும் என்று யாரும் எதிர் பார்க்கவில்லை.
    ஆம் ! வறண்டு கிடந்த அவர்கள் வாழ்கையில் வசந்தம் வீச தயாரானது. ஆம் பட்டணத்தில் இருந்து ஒரு காலேசு பஸ்சு ஆரவாரத்துடன் வந்து நின்றது. பஸ்சின் உள்ளே லட்டு லட்டாக பெண்கள். இவங்க நாலு பேரும் எப்பவும் முச்சந்தியில் தான் அமர்ந்து இருப்பார்கள். பஸ் வந்து நின்றதும் இவர்கள் எதிரில் தான் இந்த கண் கொள்ள காட்சியை கண்ட நால்வர் வாயிலும் water falls உருவாக நாய் கரண்டு கம்பியை பார்த்த மாதிரி பாத்துகிட்டு இருந்தாங்க.
    பஸ் டிரைவர் ஏப்பா!! தம்பிகளா!!! இந்த பாதை ஆணூருக்கு
    போகுமான்னு கேட்டது தான்
    நாலு பேரும் ஒட்டு மொத்தமாக ஆமா!! ஆமா!! நாங்களும் அந்த ஊரு தான் வாங்க வழிய காட்டுரோம்னு பஸ்ல தொத்திகிட்டாங்க.

    ஆமா!! என்ன விஷயமா எங்க ஊருக்கு வந்திருக்கீங்கனு சுரேஷ் கேட்க.

    ஒரு கேம்ப் போடுற விஷயாம வந்திருக்கோம் தம்பின்னு டிரைவர் சொல்ல அந்த ஆரவாரத்தில் அவனுக்கு ஒன்றும் கேட்க வில்லை
    மறுபடியும் கேட்டால் கேவலமாக இருக்கும் என்று ஓ! அப்டியா நாங்களும் அங்க தான் இருக்கோம் நு சுரேஷ் சொல்ல டிரைவர் முழித்தவாறே வண்டியை செலுத்த ஆரம்பித்தார்

    பஸ் ஊரை அடைந்ததும் நால்வரும் இறங்கி பஸ்ஸை விட்டு கொஞ்சம் தூரம் தள்ளி போய் நின்று கொண்டனர். அப்ப தான் எல்லா புள்ளைங்களையும் நல்ல பாக்க முடியுமாம் பக்கத்துல நின்ன பாக்க முடியாதாம்
    ஒவ்வொரு புள்ளைங்களா எறங்க எறங்க அவனுகளால வாட்டர் fallsai கட்டு படுத்தவே முடிய வில்லை. இருந்தாலும் நான்கு பேரும் நான்கு புள்ளைங்கள செலக்ட் பண்ணிட்டாங்க எதுக்குன்னு பாக்குறீங்களா எல்லாம் அவங்க லட்சியத்தை அடையறதுக்கு தான்.
    டேய் அவளுக பெற எப்டியாவது தெரிஞ்சுக்கணும் டா எப்டி டா தெரிஞ்சுக்கறது என்று நந்த கேட்ட்க
    ஆமாண்டா என்ற சுரேஷ் டேய் டிரைவர கரெக்ட் பண்ணி பேர தெரிஞ்சுக்கலாம் என்றான்
    ஆமாம் டா என்று அனைவரும் ஒப்புக்கொள்ள
    எப்படியோ டிரைவர கரெக்ட் பண்ணி அந்த நாலு புள்ளைங்க போரையும் தெரிஞ்சுகிட்டாங்க சுரேஷ் செலக்ட் பண்ணுன பொண்ணு பேரு பிரியா இதே மாதிரி நந்தா பாலா ரவி செலக்ட் பண்ணுன புள்ளைங்க பேரு ஆலிஸ், சௌம்யா, சோபியா.
    இவங்க நாலு பேரையும் அந்த நாலு பசங்களும் எப்டி கரெக்ட் பண்றாங்களா?? இல்லையா?? அப்டிங்கறது தான் கதை.
    கரெக்ட் பண்ற படலம் ஆரம்பம்
     
    Loading...

  2. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    Super anna...
    Apadi oru gramam ila...
    Neengala otarathu thaana?
    Epadi ipadi elam yosikeeringa?
     
  3. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    dai idhaellam konjam kooda nalla illa da! ponnungala correct pandradha paththi oru kadhaya?????? unna adakka yaarumae illaya? adhula vara suresh neeya illadha vara sandhosham dhaan! amma priyaa inga vandhu paaru ma unga annan pandra vaelaya? ivana poi kadha ezhudha sonniyae paaru thalaivaru evvalavu sooooper concept pudichurukaaru![​IMG]

    deva ushaar sollitaen![​IMG] jaasthiyaa irukae!
    thalaivarae nadaththunga nadaththunga![​IMG]
     
  4. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    akka...we will see how far he can go..... ippa thaana arambichurukaru..... pakkalam...... yesterday itself he told ka about what name he would choose for his heroine.....
     
  5. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    cont ............
    டேய் நாம இவங்கள எப்டியாவது கரெக்ட் பண்ணி நம்ம லட்சியத்தை அடைஞ்சே ஆகணும் டா என்று சுரேஷ் சொல்ல
    ஆமாடா ஆனா எப்டி டா அவளுகள பாத்தா foreigners மாதிரி இருக்காளுக டா என்னத்த தான் திம்பாநகனு தெரியல டா இவ்வளவு கலரா இருக்காளுக என்று பாலா புலம்ப
    confident மச்சி confident நம்மளால கண்டிப்பா முடியும் என்று ரவி உற்சாக படுத்த
    அருமையான யோசனை சொன்னான் நந்தா என்னனு பாக்குறீங்களா வேற என்ன கவிதை எழுதி குடுக்கலாம்னு யோசனை கூறியதும அனைவரும் ஆமாண்டா நாம நாலு பெரும் தனிதனியா கவிதை எழுதி அவளுகள அசதிடனும் என்று கூறி விட்டு நால்வரும் கவிதை எழுத பிரிந்து சென்று location தேட ஆரம்பித்தனர். ஒருவழியாக நால்வரும் locationai தேடி எழுத தொடங்கினர்

    சுரேஷ் மரத்து மேல் ஏறி உட்க்காந்து யோசிக்க ஆரம்பித்தான், பாலா வீட்டு ஓட்டின் மேல் ஏறி அமர்ந்து எழுத தொடங்கினான், நந்தா குளத்திற்குள் இறங்கி நீச்சல் அடித்து கொண்டே யோசித்தான், ரவி அங்கும் இங்கும் நடந்து கொண்டே யோசித்து கொண்டு இருந்தான்.

    சுரேஷ் யோசிக்கும் கவிதை
    அன்பே!! நீ அண்டாவாக இருந்தால்
    நான் அதுல தண்ணியாக இருப்பேன்
    நீ குண்டாவாக இருந்தால்
    நான் அதில் கூலாக இருப்பேன்
    என்று எழுதி கொண்டு இருந்தான்

    வாங்க பாலா என்ன எழுதுறான்னு பாப்போம்
    அன்பே!!!
    வடைல இருக்கு பருப்பு வடைல இருக்கு பருப்பு
    நீ எம்மேல காட்டாத வெறுப்பு
    என்ன நீ ஏத்துகிட்ட எனக்கு வரும் பொறுப்பு

    ச்சே !! எங்கயோ போயிட்டான்

    அடுத்து நந்தா
    அன்பே
    நான் நாயி !!
    ஆமா நான் நாயி தான் !!
    உன்னோட ஆமாங்கிற பிஸ்கட்ட தூக்கி போடு!!
    உன் பின்னாடி நன்றியோட சுத்தி வருவேன்!!
    அடேங்கப்பா

    அடுத்து ரவி
    அன்பே !!
    ட்ரவ்சர் கிழிஞ்சா தைக்க தேவ ஊசி !!!
    இப்ப என்னோட மனசு கிழிஞ்சு போச்சு தைக்க தருவா ஊசி!!
    நீ தரலைனா நா ஆவான் சந்நியாசி !!!
    இந்த பாவம் உனக்கு வேணுமா கொஞ்சம் நல்லா யோசி!!

    எல்லாரும் கவிதை எழுதி முடிச்சிட்டு ஒண்ணா கூடி டேய் கவிதை எழுதியாச்சு இப்ப எப்டி டா அவங்க கிட்ட தர்றது என்று ரவி கேட்க்க.
    தைரியமா போயி நாமலே குடுத்திரலாம் டா என்று சுரேஷ் சொல்ல
    டேய் குடுக்கும் போது ஏதாவது டயலாக் பேசணும் டா என்ன டயலாக் பேசுறதுன்னு யோசிக்கலாம் ஆளுக்கு ஒரு டயலாக் யோசிக்கலாம் அதுல நல்லதா ஒன்ன செலக்ட் பண்ணி எல்லாரும் அதையே சொல்லலாம் இல்லேன்னா ஒவ்வொருத்தரும் யோசிச்சதையே வச்சுக்கலாம் என்று பாலா கூற அனைவரும் யோசிக்க ஆறஅம்பித்தனர்
    சுரேஷ் சொன்ன டயலாக் "இந்த பேப்பெர்ல உங்களுக்காக நான் சென்ச்ச ஸ்வீட் இருக்கு சாப்பிட்டு எப்டி இருக்குனு சொல்லுங்க என்றான் "
    பாலா சொன்ன டயலாக் "இந்த பேப்பெர்ல ஒரு மூச்சு இருக்கு சுவாசிக்க பயன் படுதிக்கங்கனு சொன்னான் "
    நந்தாவும் ரவியும் டேய் எங்களுக்கு என்ன சொல்றதுன்னு தெரியல டா என்று சொல்ல சுரேஷும் பாலாவும் சொன்னதையே அனைவரும் பயன் படுத்தலாம் என்பர் முடிவெடுத்தனர்

    டேய் ஒவ்வொருத்தரா தனி தனியா போயி சொல்லலாம் அப்ப தான் நல்லா perform பண்ண முடியும் என்று ரவி கூற

    முதலாவதாக சுரேஷ் சென்றான். ப்ரியாவை தனியாக அழைத்து இந்த பேப்பெர்ல ஒரு மூச்சு இருக்கு என்று சொல்லி கொண்டு இருக்கும் போது
    டேய்!! எரும!!!!!!! டேய்!!!! எரும!!!!!!!!!!!! என்று ஒரு சத்தம் மெதுவாக தூரத்தில் இருந்து கேட்பதுபோல் இருந்தது. உடனே சுரேஷ் மூச்சு மேட்டரை அப்படியே நிறுத்தி விட்டு எரும மேட்டரை உன்னிப்பாக கவனித்தான்.

    டேய்!!!! எரும மாடு !! மணி 11 ஆச்சு இன்னும் வெயிலடிக்கிற சொரணை கூட தெரியாம தூங்கிட்டு என்று சொல்லும் அவன் அம்மாவின் குரல் கணீர் என்று ஒலித்தது.

    அவனுக்கு அப்பொழுதுதான் தெரிந்தது இதுவரை கண்டதெல்லாம் கனவென்று.
    ச்சே இன்னைக்கும் கனவுதானா என்று நினைத்தவன்
    அதான்னே பாத்தேன் நம்ம ஊருல பொண்ணுங்களாவது வர்றதாவது அதுவும் பட்டணத்துல இருந்து வேற வருவாங்களா என்று சலித்துக் கொண்டே அடுத்த கனவிற்கு தயாரானான்.
    THE END
     
    Last edited: May 2, 2010
  6. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    Ada kadavule...
    athanayum kanava?
    Deva ne thatti kelu pls...
     
    Last edited: May 2, 2010
  7. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    Koduma kodumannu kovilluku ponaa anga oru koduma(unga kathai raman) jingu jingunnu adduchaaaaam.[​IMG]

    Nerla parthen chutnee thaan ....[​IMG]
     
  8. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    enaku manasu varala ram anna...... aanaa kathai romba super-a iruku...... siruchu sirichu kannula thanniye vanthuruchu......
     
  9. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    thanks vaisu athuvaa varuthu
     
  10. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    saroj indha reply paaththu sirichu enakku vayiru valiyae vandhuduchu![​IMG]
     
    Last edited: May 2, 2010

Share This Page