1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

நிறம் மாறும் நிலவே வா!

Discussion in 'Stories in Regional Languages' started by yams, Apr 29, 2010.

  1. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    part-1:




    கோயில் புறாக்கள் சிறகடித்து பறக்கும் அழகில் மற்றவர்கள் மனம் மறந்திருக்க மலர்விழியின் விழிகள் மட்டும் அதை ஏக்கமாய் பார்த்தது!
    இந்த புறாக்களை போல் தானும் சிறகடித்து பறந்து திரிந்த காலங்களை நினைக்க நெஞ்சம் ஏக்கத்தை தத்தெடுத்து கொண்டது!
    என்ன இது மனித பிறவி தனக்கும் நிம்மதி இல்லாமல் பிறர் நிம்மதியும் கெடுத்து இந்த வாழ்க்கைக்கு அவற்றை போல் கவலை இன்றி வாழ்ந்து விடலாமே! என்று தான் பிறவி எடுத்ததையே நொந்தாள்!
    ஆனால் பார்ப்பவர் அப்படி என்றும் கூறியதில்லை கர்பகிரகத்து சிலையே பெண்ணுருவாய் வந்தது போல் என்ன ஒரு தெய்வீக அழகு என்று வியக்காதவர்களே இல்லை!அப்படி இருக்க இந்த அழகு பதுமைக்கு தான் வாழ்கையில் எவ்வளவு இன்னல்கள்???
    அல்லது இன்னல்களே இவள் வாழ்க்கை! என்று பிறக்கும் போதே இவள் தலையில் எழுதி இருந்ததோ என்னவோ?
    அப்படி இருக்க வாய்ப்பில்லை என்று தான் மனம் கூறியது!

    இதோ போனவருடம் கூட இந்த நேரத்திற்கெல்லாம் எவ்வளவு சந்தோஷமாய் இருந்தாள் ஆனால் இன்று!
    நினைக்கும் போதே கண்களில் நீர் வழிவதாய்!
    இந்த சுய பட்சாதபத்தை முதலில் விட்டொழிக்க வேண்டும் என்று முகம் துடைத்தவளின் தோளில் ஆதரவாய் ஒரு கை விழவும் நிமிந்து பார்த்தவளின் இதழோரம் மெல்லிய புன்னகை அரும்பியது!
    அவள் தந்தை கிருஷ்ணன் மகளின் அருகில் அமர்ந்து அவள் தலையை வருடினார்!
    "என்னடா ஒரு மாதிரியாவே இருக்க? கண்ணெல்லாம் கலங்கி இருக்கு! அழுதயா?"என்று அக்கறையாய் கேட்கும் அந்த தந்தையை நினைக்கும் போது அழுகை முட்டியது!

    இவருக்கும் தான் தன்னால் எத்தனை கஷ்டங்கள்? பிறந்ததில் இருந்தே தன் மகளில் ரோஜா நிற பாதம் வாடி விடுமோ என்று தூக்கியே அலைந்த இந்த அன்பு தந்தைக்கு தன்னால் சந்தோஷத்தை தான் தர முடியவில்லை இப்படி தள்ளாத வயதில் இவருக்கு பாரமாய் வந்து அமர்ந்திருக்கிறேனே என்று மனம் தவிக்க ஆறுதலாய் அவர் தோள் சாய்ந்தாள்!

    மகளின் தலையை வருடியவர் "கஷ்டமும்! கவலையும்! நம்ம மனசுல தான் டா இருக்கு அத மனசுல இருந்து தூக்கி போட்டு பாரு எவ்வளவு நிம்மதி வரும்னு! என்று அன்பாய் கூறியவரையே பார்த்தாள் அவர் அன்பு மகள்!
    இவரும் தான் எத்தனை அறிவுரை கூறி இருப்பார்! அதில் ஒன்றையாவது கேட்டிருந்தால் இந்து துயரம் வந்திருக்குமா? வேண்டாம் அதையே நினைக்க கூடாது இனியாவது தந்தை சொல் கேட்டு நடக்க பழக வேண்டும்!
    என்று உறுதி பூண்டவலாய் முகம் துடைத்து புன்னகை பூத்தாள்!

    தந்தைக்கும் தான் தன் மகளை தெரியாதா என்ன? மனதில் ரணத்துடன் இப்படி அவள் புன்னகைக்கவும் அவருக்கு என்னவோ போல் இருந்தது ! எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் பிறந்தநாளை கூட இவள் நிம்மதியாய் கொண்டாட முடியாமல் தவிக்கிறாளே! பிறந்த நாள் வர போகிறது என்று ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே குதிக்கும் மகளுக்கும் இன்று பிறந்த நாளுக்கு விலையுயர்ந்த துணிகள் இருந்தும் சாதாரண காட்டன் புடவையுடன் கண்களில் வலி மின்ன அமர்ந்திருக்கும் இந்த மகளுக்கும் வித்தியாசம் மலையளவாய்! ஒரு முறை திரும்பி கோவிலை பார்த்தவர் முருகா! என் தங்கத்திற்கு மட்டும் ஏன் இந்த கஷ்டம் எல்லாம்? எல்லாரையும் போல் அவளும் நிம்மதியாய் வாழ அருள் புரியப்பா என்று மானசீகமாய் வேண்டியவரின் வேண்டுதலை ஏற்றது போல் கோவில் மணி பலமாய் அடித்தது!
     
    Loading...

  2. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    next kathaya aarambichittayaamaa very nice yams moththam eththana episode irukku
     
  3. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள யாமினி,

    ஆரம்பம் அமர்களமாக உள்ளது செல்லம். ஆனா என்னடா நடுவுல நீ அடுத்த எபிசொட் எப்ப போடுவேன்னு வெயிட் பண்ண முடியல. இப்படி எந்தக் கதையும் விட்டு விட்டு நான் படிக்கவே மாட்டேன். உனக்காகத்தான் படிக்கறேன். இதுல நடுவுல நெறைய பீட் பாக்ஸ்-வேற கதை எந்தப் பக்கத்துல இருக்கு-ன்னு அவசர அவசரமா பக்கத்த தேட வேண்டி இருக்கு. சோ எபிசொட் பய் எபிசோடா நான் FB தரலை-ன்னு வருத்தப்படாதே. உன் கதை முடிஞ்சவுடனே முழுக் கதைக்கும் தரேன் சரியா????

    இந்தக் கதை எவ்ளோ எபிசொட் போகும்-ன்னு மட்டும் சொல்லிடு ப்ளீஸ்.

    மலர்விழி - பெயர் செலக்ஸன் ரொம்ப நல்லா இருக்கு. கதை பேரும் ரொம்ப நல்ல இருக்கு.

    வாழ்த்துக்கள் :thumbsup:thumbsup
     
  4. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    hey naanae on the spot la thondradha ezhudhuraen da eththana episodenu kaetta enna solla? mudikkum bodhu dhaan enakkae theriyum!



    [​IMG]
     
  5. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    nandri veni ma! feeling sad that you wont give feedbacks nu i started a new thread for feedbacks but what to do they merged it! anyways thanks for wishing me in advance veni ma!

    [​IMG]
     
  6. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    very well yams naa summa thaa ketta enga episode eththanainu solliruvayonu payanthuttan
     
  7. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    யாமினி,
    இரண்டாம் கதை ஆரம்பமே அபாரம் ,நல்ல flow ,இதை இன்னும் நல்லா maintain பண்ணி கதை எழுதினால் ,சத்தியமே செய்யலாம் இது அனுபவசாலியான ஆசிரியர் கதை என்று.
    கதையை சிறிது,சிறிதாக அவிழ்க்கவும் ,வர்ணனை அதிகம் வரட்டும்.
     
  8. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    thanks julia!:bowdown i am from chennai:cheers
     
  9. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    nandri deepa!:bowdown yaedho idhaampa varudhu adjust pannikonga pls i will try to improve! thanks for the suggestions!:cheers
     
  10. Kalasen

    Kalasen New IL'ite

    Messages:
    89
    Likes Received:
    0
    Trophy Points:
    6
    Gender:
    Female
    Hi Yamini,


    You have started your second story.

    Amarkkalamaga aarambichirukke.

    Good luck.
     

Share This Page