1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

ஏன் வரவில்லை????

Discussion in 'Regional Poetry' started by veni_mohan75, Apr 22, 2010.

  1. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    நான் தவழும் வயதில், எனை அள்ளி
    எடுத்து அன்னை கொஞ்சுகையில்
    கூட இருந்து எனைக் கொஞ்சி மகிழ
    நீ ஏன் வரவில்லை

    முதல் முதலில் பள்ளிக்குச் செல்ல
    நான் அழுகையில் என்னைசமாதானம்
    செய்து எனைக் கைபிடித்து கூட்டிச் செல்ல
    நீ ஏன் வரவில்லை??

    பள்ளியில், படிப்பிலும், விளையாட்டிலும்
    பரிசுகள் பல நான் பெறுகையில், கைதட்டி
    மகிழ்ந்து, பெருமிதமாய் எனை கொண்டாட
    நீ ஏன் வரவில்லை

    கவிதை சொல்லி, கதைகள் பல சொல்லி
    என்னை ஊக்குவித்து, எனக்கு நல்லது எது
    என பல விஷயங்கள் சொல்லி என்னை
    வழிநடத்த நீ ஏன் வரவில்லை

    தவறி விழுந்து தாடை பெயர்ந்த பொழுதும்,
    தமிழில் விழுந்து கவிதை மலர்ந்த பொழுதும்
    வேஷம் போட்ட நாடகம் அரங்கேறிய பொழுதும்
    துவேஷம் கொண்டு நான் தடுமாறிய பொழுதும்
    நீ வரவில்லை

    சிறப்பாய் பணி செய்து பரிசு பெற்ற போதும்
    சீரும் சிறப்புமாய் நான் என்னவன் கரம்
    பற்றி, கண்ணீரும், உள்ளே சிறு பயமுமாய்,
    என்னவர் இல்லம் புகும் போதும் நீ வரவில்லை

    என் மகவை நான் பெறுகையில், அவனைக்
    கண்டு, உச்சி முகரவும், என்னை கண்டு
    நெகிழ்ச்சி நிறையவும், என் கண்ணீர் துடைக்கவும்
    நீ வரவில்லை

    வாழ்வின் என் சிறப்பான தருணங்கள் என
    நான் நினைத்த எதிலும் நீ என்னுடன் இல்லை
    நீ வேண்டும் என் நான் நினைத்த தருணங்கள்
    எதிலும் நீ என்னுடன் இல்லை

    ஏன் இல்லை நீ?? ஏன் வரவில்லை நீ??

    (**இல்லாத அண்ணனுக்கு ஒரு தங்கையின் கவிதை**)
     
    Last edited: Apr 22, 2010
    vaidehi71 likes this.
    Loading...

  2. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    ரொம்ப அழகா நெஞ்சை தொட்டது உங்கள் கவிதை!
    அண்ணன் இல்லாத ஊமை மனதின் கதறலை பறைசாற்றுவதாய்!
    எனக்கும் தெரியும் அம்மா இந்த கதறலை பற்றி பள்ளியில் படிக்கும் காலத்தில் என் தோழியரின் அண்ணன்கள் அவர்களை அழைத்து செல்ல வெகு நேரம் காத்து அழைத்துசெல்லும் போதும் ஆருதாளாய் தோள்சாய ஏங்கும் போதும் என்மனதின் ஏக்கம் போலவே!!!
    வெகு அருமை தங்கள் வரிகள்!
    விவரிக்க வார்த்தைகள் தான் இல்லை!!!:bowdown
     
  3. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    very touching kavithai venimohan annan illaatti enna thambi naa irukkan la
     
  4. Padmini

    Padmini IL Hall of Fame

    Messages:
    6,795
    Likes Received:
    1,177
    Trophy Points:
    345
    Gender:
    Female
    Thangai unnai vaari anaikka
    Singamena oru Annan illaiye
    Thangamai un vazhkkayil nadakka
    Pasamalerana varaadha Annanukku
    Thingal mugam konda Veniyin eakkam
    Vindu uraiththadhu kavinmigu Kavidhai
    Anbhudan
    pad
     
  5. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    இந்த ஏக்கம் என்றும் என் கண்களில் நீர் நிரப்பும், எனவே நிறைய எழுத முடியவில்லை தோழி. நன்றிகள் பல
     
  6. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Very kind of you da thambi. Thank you.
     
  7. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    Wow veni.... no words to give fb... will come later and give...
     
  8. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    எனதன்பு பத்மினி மா,

    அச்சோ என்ன சொல்வேன் நான், என்ன சொல்வேன். என் அண்ணன் ஏக்கத்தை மீறி என்னை மகிழச் செய்தது உங்கள் பின்னூட்டம். இதுபோல் பின்னூட்டம் தர இன்னொருவர் பிறந்துதான் வர வேண்டும்.

    கவியாய் பின்னூட்டம் தந்த அன்னைக்கு நன்றிகளும், எனதன்பு :kiss:kiss
     
  9. pussy

    pussy Gold IL'ite

    Messages:
    4,186
    Likes Received:
    304
    Trophy Points:
    185
    Gender:
    Female
    :wowVeni romba azhagana kavidai. Ungalin yekkam ovvoru variyilum therigiradhu. Arumayana Varigal.
     
    Last edited: Apr 22, 2010
  10. ramvino

    ramvino Platinum IL'ite

    Messages:
    4,510
    Likes Received:
    278
    Trophy Points:
    200
    Gender:
    Female
    hi veni ma!!,
    arumaiyana kavithai and ungal karpanai arumai dear!! nanum rombave eageraa yarai varavillai enru solreengalo enru ninaithen dear....anal illatha annanai enrathum nichayamagave naan konjam kooda ninaithu parkavillai dear........its very nice!!! (enakku annan irukanga dear........rendu per...ellam foriegn laa irukkanga) ana akkavai pathiyum eluthunga.(enakku akka illaiye))
     

Share This Page