1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

சிறுபூளை

Discussion in 'Regional Poetry' started by veni_mohan75, Apr 21, 2010.

  1. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    இதுவும் நாம் அனைவரும் அறிந்த
    மலர்களில் ஒன்று தான். போகிப்
    பண்டிகைக்கு காப்பு கட்டும் போது
    வைக்கும் மலர்களில் ஒன்று

    விசேஷமான நிறமோ, மனமோ
    இல்லாத மலர் எனினும், எத்தனை
    நாள் இருந்தாலும், வாடாத மலர்
    இது, மலர்கையிலே காய்ந்தது
    போலத்தான் இருக்கும்

    வெள்ளையும், துளி மஞ்சளும்
    கலந்த நிறம் மலருக்கு, அழகிய
    பச்சையில் சிறு சிறு வட்டங்களாக
    இலைகள், நீண்ட தண்டு போன்ற
    காம்பு, ஒரு புதர்த் தாவர வகை இது

    காப்புக் கட்டுவதை தவிர எதற்கும்
    உதவாத, மலர் போல இருந்தாலும்
    நிறைய மருத்துவப் பலன்களைத்
    தன்னகத்தே கொண்ட சிறு மலர்

    Name : Mountain Knot Grass
    Botanical name: Aerva lanata
    Family: Amaranthaceae

    Medicinal Uses: This herb is described as one of the best known remedies for bladder and kidney stones. Ayurvedic practitioners recommend a decoction of the plant to be taken internally for a few days to dissolves the stone and to clear the urinary path.
     
  2. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    அழகாக பூவின் சிறப்பை எடுத்துச் சொன்ன உங்கள் கவிதை பிரமாதம்......
     
  3. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    very nice venimohan poolaii poovai puthu vithamaaga kaanpiththathar ku nandrikal pala
     
  4. Soldier

    Soldier Gold IL'ite

    Messages:
    2,461
    Likes Received:
    77
    Trophy Points:
    110
    Gender:
    Female
    nice poem Veni dear. But their names are so strange no?

    Idhu malarum pothey kaayntha maadhiri irukkuma? so sad! But that is God's creation. So we shall not mind about that no?

    How many more to go?
     
  5. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    சிறுபூளை காப்பு கட்ட மட்டும் அல்ல,
    எங்கள் வேணி கவிதை பாடவும் உதவுதே.

    காய்ந்த மலரானதால் போகிக்கு கட்டுகிறார்களோ?
    காயாதிருந்தால் பொங்கலுக்கு கட்டி இருப்பார்களோ என்னவோ?
     
  6. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    romba azhagu veni ma!!!!:cheers
     
  7. pussy

    pussy Gold IL'ite

    Messages:
    4,186
    Likes Received:
    304
    Trophy Points:
    185
    Gender:
    Female
    Romba azhagu Veni ......... Both your poem and the pictures.
    Thanks a lot....
     
  8. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    நல்ல பின்னூட்டம் தந்த இனிய தோழிக்கு நன்றிகள் பல :bowdown
     
  9. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    கவிதை படித்து கருத்து சொன்னமைக்கு நன்றி ராம்.
     
  10. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    எனதன்பு மல்லிகா,

    உண்மைதான் தோழி, பெயர்களும் விசித்திரம், அதன் இயல்பும் விசித்திரம் தான். காய்ந்தே இருந்தாலும், காட்டிலே இருந்தாலும் அதுவும் ஒரு நாள் கூரை ஏறுகிறதே????

    இறைவனின் பூக்கள் படைப்பில் இன்னும் நிறைய விசித்திரங்கள் நமக்குக் காத்திருக்கிறது. கவிதை படித்து என்றும் இனிமையாய் பின்னூட்டம் தரும் என் இனிய மல்லிகைக்கு நன்றிகள் பல.

    கணக்கு வாத்தியாரா நீங்க???? நேற்று முன்தினம் சொன்னேன் முப்பது என்று. இன்றைக்கு எழுதப் போகும் மருதமும் சேர்த்து முப்பத்தி இரண்டு.
     
    Last edited: Apr 22, 2010

Share This Page