1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

தெய்வம் உண்டோ???????

Discussion in 'Snippets of Life (Non-Fiction)' started by yams, Apr 9, 2010.

  1. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    எனக்கு எப்பவுமே கடவுள் மேல அவ்வளவா ஈடுபாடு இருந்தது கிடையாது!!அம்மா சாமிகும்பிட கூப்பிட்டா கடமைக்குன்னு கும்பிடுவேன் அப்பவும் கடவுளே நீ இருக்கணு சொல்றாங்க எனக்கு தெரியாது ஆனா ஒரு வேலை இருந்தா எல்லாரையும் நல்லா வெச்சுருனு தான் கேப்பேன் அதுக்கு மேல கேக்க தோணாது! ஆனா ஒரு விஷயம் நமக்கு மேல ஒரு சக்தி இருக்குனு நம்புவேன் அதுதான் காத்த,இயற்கைய நம்மள படச்சது...! ஏன் அந்தரத்துல இந்த பூமிய சுழல வைக்கிறது கூட அந்த சக்தி தான் என்ன தான் அறிவியல் வளர்சில அப்படி இல்லன்னு சொன்னாலும் அது உண்மை தான்!!!!

    எனக்கு ஒரு பழக்கம் உண்டு அது மனசு கஷ்டமா இருந்தாலோ இல்ல சோர்வா இருந்தாலோ...கோவிலுக்கு கண்டிப்பா போவேன் அங்க சாமி கும்பிட்றேனோ இல்லையோ இருக்குற கோவில் மண்டபத்துல போய் கண்ண மூடி உட்காந்துடுவேன்!!!!!சில சமயம் ஒன்னு இல்ல ரெண்டு மணி நேரம் கூட!!! அப்ப கண்ல இருந்து அருவி மாதிரி கண்ணீர் கொட்டும்(என்னை அறியாம)!



    அப்படி ஒரு நாளு மனசு சரி இல்லன்னு நான் கோவிலுக்கு போய் வழக்கம் போல மண்டபத்துல உட்கார்ந்தேன் துர்க்கை அம்மன் சந்நிதி பக்கத்துல!!அப்ப திடீர்னு ஒரு வயசான அம்மா முகம் நிறைய மஞ்சள பூசிட்டு என்கிட்ட வந்து ஏம்மா அழற கஷ்டம் யாருக்கு தான் இல்ல மகாலட்சுமி மாதிரி இருக்க ஏன் டா?? பூ பொட்டு இல்லாம இப்படி தனிய உட்காந்து அழறன்னு என் நெத்தில குங்குமம் வெச்சு என்னை திருப்பி தலைல பூ வெச்சாங்க!!!!!!!டக்குனு மனசுல அப்படி ஒரு நிம்மதி!! இருந்த கஷ்டம்லாம் பஞ்சா பறந்த மாதிரி இருந்துச்சு!!!!!

    அவங்க பூ வெச்சதும் உடனே எங்க அம்மா குரல் கேட்டுச்சு நேரம் ஆயிடுச்சுன்னு அம்மா தேடி வந்துட்டாங்கன்னு கோவில் படி வர போய் பார்த்தேன் அப்படியே எட்டி தெரு முனை வரை பாத்தும் எங்க அம்மா இல்ல சரி அந்த பூ வெச்ச அம்மாக்கு நன்றி சொல்லவே இல்லையேன்னு உள்ள திரும்பின அவங்கள காணும் கோவில் முழுக்க தேடினேன் எங்கயுமே இல்ல!!!!! பெரிய கோவில்னாலும் பரவாஇல்ல அது சின்னது கண்டிப்பா என்னை தாண்டி போகவும் வாய்பில்ல!!!!! எனக்கு ஒரே குழப்பம் என்னடா இது யாரு இவங்க?? வந்தாங்க... பூ வெச்சாங்க....... திடீர்னு காணும்னு ஐயர் கிட்ட கூட போய் கேட்டேன் அவர் இல்லையே மா எனக்கு தெரிஞ்சு அப்படி யாரும் வரலன்னு சொன்னாரு!!!!

    வீட்டுக்கு வந்து எங்க அம்மா கிட்ட உன் குரலை கேட்டேன் மா எப்ப வந்தீங்கன்னு கேட்ட இல்ல டி நான் கால் வலின்னு இங்க தான் படுத்திருக்கேன் நான் வரலன்னு சொன்னங்க அப்ப அவ்வளவு தெளிவா எனக்கு எங்க அம்மா குரல் கேட்டது எப்படி??? வந்தது யாரு???? உண்மைலயே கடவுள் இருக்காங்களான்னு என்னை சந்தேக படவெச்ச சம்பவம்!!!!!!
    மறக்க முடியாததும் கூட!!!!!!:coffee
     
    Loading...

  2. iyerviji

    iyerviji IL Hall of Fame

    Messages:
    34,594
    Likes Received:
    28,763
    Trophy Points:
    640
    Gender:
    Female
    Dear Yams

    It was touching to read your exerience. The lady who came and consoled you was none other than the Devi herself. When we are sad and think of God , he is always there to help us and care us.

    love
    viji
     
  3. Soldier

    Soldier Gold IL'ite

    Messages:
    2,461
    Likes Received:
    77
    Trophy Points:
    110
    Gender:
    Female
    Very touching Yaamee!

    You are really blessed to be blessed and touched by Goddess herself.
    At least now have you started believe the existence of God?

    I felt happy and blessed too to read this nice post.
     
  4. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    is it really possible of happening viji ma??
     
  5. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    yes mallika akka!!!!!
    really it seems that somethings are happening beyond everything!!!!
    that is the power of god!!!!!!!!!
    :)
     
  6. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    யாமினி,

    வாழ்க்கையில் நம்பிக்கை மிக முக்கியம். அது எந்த ரூபத்தில் இருந்தாலும்.
    பலருக்கு கடவுள் மீது நம்பிக்கை, சிலருக்கு மற்ற நம்பிக்கைகள். எந்த நம்பிக்கையாய் இருப்பினும் அது தரவேண்டும் மன அமைதி. மனம் அமைதி பெற்றால் தான் சிந்தனை தொடங்கும், சிந்தனை தொடங்கினால் தெளிவு பிறக்கும். உனக்கு தெளிவு கிடைத்ததில் எனக்கு மகிழ்ச்சி.

    உனக்கு ஆழ் மனதில் என்ன கவலை? எதற்காக தனியே இருந்து கண்ணீரில் கறைகிறாய்? இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, அழுகை நின்று விட்டதா? நீ தேடுகிற மன அமைதி முழுமையாக கிடைத்து விட்டதா? அற்புதங்கள் சில சமயம் நடக்கலாம், நமக்குள் வாக்குவாதம் வேண்டாம். நமக்கு கஷ்டம் இருப்பின் ஒவ்வொரு முறையும் தெய்வம் வந்து துணை புரிய எதிர்பார்த்தல் கூடாது.

    அதனால் தான் கேட்கிறேன், முழுமையான அமைதி கிடைத்ததா? இல்லையெனில் தீவிரமாக காரணங்களை ஆராய்ந்து, அறிந்து அவற்றை முற்றிலும் களைய முற்படுதல் மிக முக்கியம்.

    இந்த புதிய அனுபவம் பெற்றதற்கு வாழ்த்துக்கள். நான் கூறியதைப் பற்றி சிந்தித்து செயல்படு. சீரும், சிறப்பும் பெற்று இனிதே வாழ்வு சிறந்திடும்.
     
  7. Soldier

    Soldier Gold IL'ite

    Messages:
    2,461
    Likes Received:
    77
    Trophy Points:
    110
    Gender:
    Female
  8. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    life la ennaikkumae nirandharama nimmadhi kidaikkanumnu enna mudiyaadhu nats!!!!!!!

    yaarukku dhaan kashtam ella enbadhu vayasu paattikku life mudiya pogudhaenu kavala!!

    naappadhu vayasula veettu prachana yaen naalu vayasu kuzhandha kooda schooluku ponumaenu kavala padudhu!

    so i don't usually take it much stronger!!!!!!

    kashtamnu paaththa adhu ekkachama indha agekulla face panniyaachu!!!!
    solla arambicha neenga kaettutae irukka vaendiyadhu dhaan!!!!

    hmmm kashtama irukkum bodhu anga pona nimmadhi kidaikkum!


    other than that that tears just andha amidiyaana sozhalla varadhu thats all!
    a mother may shed tears after the birth of a baby na like that yaedho baaram erangaradhunaala dhaan i am shedding after that veettukku vandha yamini ya pudikka paththu peru dhaan venum!!!
    !!!:biglaugh:biglaugh:biglaugh
     
  9. mithila kannan

    mithila kannan Gold IL'ite

    Messages:
    3,400
    Likes Received:
    189
    Trophy Points:
    155
    Gender:
    Female
    அன்பினிய யாமினி,
    அருமையான கதை.மிக எளிய நடையில் எத்தனை பெரிய கருத்தினை சொல்லியிருக்கிறீர்கள்!
    கடவுள் என்று ஒருவர் இருக்கிறாரா?வித விதமான பூக்களை பார்க்கும்போது,குட்டிகுழந்தைகளின் களின் கள்ளமில்லாத சிரிப்பை பார்த்து பரவசப் படும்போது எனக்கு தோன்றும்,கடவுள் கண்டிப்பாக இருக்கிறார் என்று.
    பிரியமுடன்
    மிதிலா
     
  10. Amma15

    Amma15 Gold IL'ite

    Messages:
    676
    Likes Received:
    327
    Trophy Points:
    138
    Gender:
    Female
    Dear Yamini,

    I got goose bumps reading your narration. Somehow in some form God makes us feel His presence. I have felt it innumerable times and daily feel Her presence.

    Love,
    Usha
     

Share This Page