1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

சுள்ளி

Discussion in 'Regional Poetry' started by veni_mohan75, Apr 6, 2010.

  1. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    இந்த பெயரைக் கேட்டவுடன்
    நமக்கு நினைவுக்கு வருவது
    காய்ந்து போன சிறு குச்சிகள்
    வெயில் காலத்தில் அதை
    சேகரிக்கும் மக்கள் தான் இல்லையா??

    உண்மை என்னவென்றால், ஒரு சதுர
    அடி மரத் துண்டு, இரண்டாயிரத்துக்கும்
    மேலே விலை போகக் கூடிய
    கருங்காலி எனப்படும் மரத்தின்
    மலர் பெயர் இது

    அழகிய அடர் சிவப்பு இதன் மலர் நிறம்
    வெளிர் பச்சை, அடர் பச்சை என
    இதன் இலைகளின் நிறம், நெடிதுயர்ந்து
    வளரும் இந்த மரம், பார்க்க எல்லா
    மரத்தையும் போல இருந்தாலும்
    இது உறுதிக்குப் பெயர் போனது

    எத்துணையோ கலைப் பொருட்கள்
    இதை கொண்டு செய்கின்றனர்
    இணையத்தில் தேடினால் நிறைய
    யானைகளும், வேறு சில பொருட்களும்
    இருந்தன. அதன் விலையைப் பார்க்கையில்
    அந்த யானையை உயிருடனே வாங்கி விடும்
    அளவு அதிகம்.

    அந்தக் காலத்தில் கலப்பை செய்ய
    இந்த மரம் தான் பயன்பட்டதாம்
    எத்துனை பொருட்கள் செய்தாலும்
    இதற்க்கு ஈடாகுமா???

    அவ்வையே பாடிய கருங்காலி மரம்
    "கருங்காலிக் கட்டைக்கு
    நானாக் கோடாலி
    இருந்கதளைத் தண்டுக்கு
    நானியதே "

    உறுதி வாய்த்த மரத்தின் அழகு
    வாய்ந்த பூ இந்த சுள்ளி ......

    Name : Ebony
    Botonical name : Diospyros ebenum
    Family: Ebenaceae
     
    Last edited: Apr 7, 2010
  2. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    சுள்ளி மலர் பூக்கும் கருங்காலி மரம்.
    இது செய்தி. கேள்விப்பட்டது உங்கள் மூலம்.
    கேள்விப்பட்ட விதம், கவிதையின் மூலம்,
    உங்கள் அழகான எழுத்தோவியத்தின் மூலம்.

    கருங்காலி என திட்டும் வழக்கு,
    எந்த மரபிலிரிந்து / மரத்திலிரிந்து வந்தது / வளந்தது.
    விலை / பலன் கூடிய மரத்தினை எதற்கு காலிகளுடன் ஒப்பிட வேண்டும்?

    வயசான காலத்துல மூளைக்கு வேலை, இல்லாத நான் என்ன பண்ணுவேன்?

    மிகவும் சரி, யானையை வாங்கி விடலாம், தீனி போட்டு கட்டு படியாகாது.
     
    Last edited: Apr 6, 2010
  3. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    oru poo' vai select panni, adhai pathi anaithum collect panni, ippadi azhagaay oru kavithai koduthu... yengalukku padikka kudutha... naangal :drowning'aamal iruppoma ungal kavithaiyile.....
     
  4. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    correct dhaan sandhya akka sonnadhu ippa naanum unga kavidhaila:drowning
    veni ma!!
     
  5. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    super venimohan naa picture irukkum nu veka vekamaa keela vanthu paarththa aana illa its k great venimohan
     
  6. ganges

    ganges Gold IL'ite

    Messages:
    2,858
    Likes Received:
    52
    Trophy Points:
    110
    Gender:
    Female
    Anbu Veni,

    Karungali allathu chulli patriya azhagiya kavithai. oru vilakka vuraiyai kavithai vadivathil azhagaaga chitharithirukkireergal. Karungaali enbathu keralavil marunthu gunam ulla maramaga ninaikkiraargal. Karungali pattaiyai thanneeril pottu kudippargal.
    Podi cheithu ennayil kaichi thadavikolvargal. Ithu rendu ondru thaana endru theriyavillai.

    Nats Neengal chonna mathiri, keralavil kaalai vaarugiravargalaiyum otru velai cheibavargalaiyum Karungali endru vimarshippargal. Eno ?

    Veni thodarattum ungal pani.

    ganges
     
  7. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள நட்புக்கு,

    அட அட, உங்கள் பின்னூட்டம் தான் வெயிலில் எனக்கு விசிறி. உங்கள் பின்னூட்டங்கள் தான் என் கவிதை நெருப்பை மேலும் விசிறி கொழுந்துவிட்டு எரியச் செய்யும் விசிறி. உங்கள் கவிதைக்கு நான் விசிறி.

    கருங்காலி எனத் திட்டும் மரபு, ம்ம்ம்மம்மம்ம்ம்ம் மரம் மேலே பார்க்க எல்லா மரத்தை போல இருந்தாலும், உள்ளே கருப்பு நிறத்தில்தான் இருக்கும், அதற்காக இருக்கலாம். மேலும், இது உறுதிக்குப் பெயர் போனது, எத்தனை சொன்னாலும் கல் மாதிரி இருக்கியே என்று கூட சொல்லி இருக்கலாம்:).

    மூன்றாம் பத்தியில் ஒரு உண்மை விளம்பி, உண்மையை புட்டு புட்டு வைத்திருக்கிறார். இல்லாமலேயே எழுதும் கவிதைகள் இப்படி இருக்கிறது. இனி அது வேறு இருந்திருந்தால், நான் :hide::hide:

    எனது கவிதை படித்து அழகாய் பின்னூட்டம் தந்த நண்பருக்கு நன்றிகள் பல
     
  8. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள சந்தியா,

    எனது கவிதை படித்து, ரசித்து, நல்ல அழகிய பின்னோட்டம் கொடுத்த தோழிக்கு நன்றிகள் பல. நான் பட்ட சிரமங்கள் எல்லாம் உங்களை போல நண்பர்களின் பின்னோட்டம் காண்கையில் சூரியனைக் கண்ட பனி போல விலகி விடுகிறது தோழி.

    நன்றிகள் பல உங்களுக்கு
     
  9. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள தோழி,

    எனது கவிதை படித்து கருத்து சொன்ன சுட்டிப் பெண்ணுக்கு நன்றிகள் பல
     
  10. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    என்ன செய்வது ராமன், நேற்று எனது கணினியும், நெட்டும் காலை வாரி விட்டது. கவிதையைப் போடவே, ஆவி போய்விட்டது. இதோ இன்று படங்களும் போட்டு விட்டேன். பார்த்து கருத்து சொல்லுங்கள்.

    எனது கவிதை படித்து கருத்து சொன்ன ராமுக்கு நன்றிகள்
     

Share This Page