1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

உந்தூழ்

Discussion in 'Regional Poetry' started by veni_mohan75, Apr 5, 2010.

  1. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    குழலிசை தந்த இனிய குழலே
    உனது இசைக்கு ஏது ஈடே
    வெறும் காற்றை வீசு தென்றலாக்கி
    எங்கள் செவிகளில் பேசு மொழியாகினாய்

    நெடிதுயர்ந்து வளரும் புதர் தாவரம்
    மூங்கில் என்பது உனது பெயர்
    உனது மலருக்கு பெயரோ உந்தூழ்
    எப்போதாவதுதான் மலரும் என்பதால்
    யாரும் அறியாத பெயரும் கூட

    பொதுவாக மலரால் மலர்கின்ற
    செடிக்கோ, மரத்துக்கோ பெருமை
    ஆனால் உன் மலரோ மலர்ந்தால்
    உனக்கு அது அழிவின் ஆரம்பம்

    இன்னும் உனது மரம் மலர்ந்ததால்
    அழிவும் அதைத் விரைவில் தொடரும்
    எனும் ஒரு பழஞ் சொல் இன்றும்
    மிசோரத்தில் உள்ளது

    ஆண்டுக்கு ஒருமுறை மலரும்
    வகையும் உன்னில் உண்டு
    எப்போது பூக்கும் என்று தெரியாத
    வகையும் உன்னில் உண்டு

    ஆராய்ச்சி மாணவர்களுக்கே உன்
    மலரும் பருவம் குறித்த ஒரு
    விவரமும் இன்னும் சரியாக
    கிடைக்கவில்லை என் அறிவிப்பு உள்ளது

    எத்துனை எத்துனை பொருட்கள்
    செய்கின்றன உன்னை வைத்து
    அத்தனையும் உபயோகித்தாலும்
    மெல்லிசை தரும் உனது குழலிசை
    உள்ளம் கொள்ளை கொண்டது.

    விநோதமானது உனது வரலாறு
    இருப்பினும், உனது இசையை
    ரசிக்க இதெல்லாம் தடை இல்லை

    Name : Bamboo
    Botonical name : Bambusa oldhamii
    Family: Poaceae


    பின் குறிப்பு : இணையத்திலும், இல்லத்திலும், இடையறாத எனது அலுவல்கள் என்னை அனுமதிக்காததால், சனி அன்று நான் எழுத இயலாமைக்கு வருத்துகிறேன். எனது நண்பர்களின் கவிதைகளுக்கும் என்னால் சரியான பின்னூட்டம் கொடுக்க இயலவில்லை. இங்கிதம் அறிந்த நண்பர்கலாகையால் என்னை யாரும் குறை சொல்லவோ என் மீது கோபம் கொள்ளவோ மாட்டீர்கள் என்ற நம்பிக்கையில் - வேணி
     
  2. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    நாங்கள் குறை சொல்ல மாட்டோம்,
    வருந்துவது உங்கள் பூக்கள் தானே,
    அதைக் கண்டு நாங்களும் வருந்துகிறோம்.

    குழல் இசை தரும் உந்தூழ்,
    குறைகளைப் போக்கிடுதே. நன்று வேணி.

    ஆராய்ச்சி மாணவர்களுக்கு உந்தூழ் பூப்பது தெரியாமல் இருக்கலாம்,
    உங்கள் பூக்கள் விடாது மலர்வது எங்களுக்கு தெரியுமே.
     
  3. Padmini

    Padmini IL Hall of Fame

    Messages:
    6,795
    Likes Received:
    1,177
    Trophy Points:
    345
    Gender:
    Female
    Undhoozh kanu undhappatten
    Udane pinnottam varaiya
    Urudhi valaiyum moongil adhu
    Ullaththai thodum vannam varaindhai kavidhai
    Unadhu karpanai kandu
    Umaiyai nirkiren
    Anbhudan
    pad
     
  4. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    dear veni,
    unthool,
    peyarai oru kavithai molam arivithamaiku nandri,
    kavithai vayilagave thagaval thantha pangum arumai.
     
  5. ramvino

    ramvino Platinum IL'ite

    Messages:
    4,510
    Likes Received:
    278
    Trophy Points:
    200
    Gender:
    Female
    very nice abt bamboo dear.............
     
  6. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    Veni... ungal kavithai varavillai'yendraal varuvadhu kovam illai adhu yekkam.....

    Azhagaana kavithai.... adharkkul pookum poovundu yendru naan ungal kavithai paarthu therindhu konden....


    Sandhya
     
  7. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள நட்புக்கு,

    உங்கள் பின்னூட்டம், அது என்னை மேலும் மேலும் எழுதத் தூண்டும் ஊட்டம், அது இருந்தால் என்றும் நிற்காது எனது கவியோட்டம். மலர்கள் வருந்தியதோ என்னவோ, எனக்கு மிகவும் வருத்தமாகத் தான் இருந்தது. நினைவெல்லாம் மலர்களைச் சுற்றியே.

    நன்றி நண்பரே.
     
  8. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    எனதன்பு பத்மினி மா,

    வெகு நாட்களாயிற்று, என் கவிதைக்கு உங்கள் பின்னூட்டம் வந்து. மிக்க மகிழ்ச்சி அம்மா. இங்கே கவிகளும் அவர்களின் கவிகளும் நிறைய இருப்பதால் எனக்கும் நேரம் போதவில்லை அம்மா. அதுபோலத் தானே உங்களுக்கும்????

    எப்படி நீங்கள் எல்லா பின்னூட்டமும் இப்படி ரைமிங்கா தரீங்க மா. சான்சே இல்ல. எனது கவிதை படித்து பின்னூட்டமும் கவிதையாய் தந்த அம்மாவுக்கு நன்றிகளும் வணக்கங்களும் பல
     
  9. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    மதுரமான தோழியே,

    எனது கவிதை கண்டு, படித்து, ரசித்து தாங்கள் தந்த பின்னூட்டம் எனது கவிதைகளுக்கு தந்தது நீரூட்டம். நன்றி தோழி
     
  10. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Dear Vinu maa,

    Thank you friend for stepping in to give your lovely feedback dear.
     

Share This Page