1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

முதல் வணக்கம் ...... தமிழ் வணக்கம்

Discussion in 'Regional Poetry' started by Yashikushi, Apr 4, 2010.

  1. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    முதல் வணக்கம் ...... தமிழ் வணக்கம்[​IMG]



    முலைப்பாலோடு முத்தமிழையும்
    தேனாய்,உணவாய்,உயிராய்
    அமுதூட்டிய அன்னைக்கு -என்
    அன்பு வணக்கம்.

    உயிரையும் மெய்யையும் "அ"கரத்தோடு
    அக்கறையாய் அரிச்சுவடி ஆரம்பித்த
    முதல் தமிழ் ஆசானுக்கு -என்
    குரு வணக்கம்.

    பார்த்ததும்,படித்ததும்,கேட்டதும்
    முடிந்ததும் மறவாமல் என்
    துளிர் விட்ட உணர்விற்கு உணர்வாய்
    தளிர்விட தமிழ்-தாகத்திற்கு தணலாய்
    கவி கொடுத்து கை கொடுத்த
    பாரதியே உனக்கு- என்
    முதல் தமிழ் வணக்கம்....மொத்த வணக்கம் !

    மூச்சு மறந்தாலும்,பேச்சு மறந்தாலும்
    முத்தமிழை மறவாமல்
    நீரூற்றி, சீராட்டி, பாராட்டி, வேரூன்ற வைத்திருக்கும்
    தண்டமிழ் காவலர்களுக்கு -என்
    தன்மையான தனி வணக்கம்!


    தனித்தனி புள்ளிகளாய் இருந்த நம்மை
    நட்பின் மூலம் அழகான கோலங்களாய் மாற்றிய
    இந்துஸ் லேடி அரங்கதிற்கு -என்
    ஆயிரம் கோடி வணக்கங்கள்!


    என்னை அறிந்த தமிழுக்கு அறியாத முகங்களாய்
    நான் அறிந்த இடங்களில் அறியாத பெயர்களாய்
    நகல்களுக்கு நடுவில் அசலாய், IL நிழலாய்
    இங்கு கவிபாடும் குயில்களுக்கு -என்
    கொண்டாட்ட வணக்கம்.

    தமிழ் அறிந்தாலும் தட்டச்சு தெரியாமல்
    தயங்கி நின்ற எனக்கு
    தடம் காட்டி பயம் போக்கிய ஆபத்பாந்தகிக்கு
    குறிஞ்சிப் பண் பாடும் குற்றால வஞ்சிக்கு
    இரு- கரம் கூப்பிய வணக்கம்


    வணக்கம் சொல்லிப் பாருங்கள்
    வாழ்வில் வரும் மாறுதல்கள்
    மாறுதல்கள் வாழ்தலுக்கு அச்சாரம்-
    முழுவதுமாய் வாழ்ந்துவிட்டால்
    மணம் வீசிடுமே மானுட பூச்சரம்.
    வாழ்க!வளர்க !வளமுடன் !வணக்கத்துடன் !இணக்கத்துடன்
     
    Loading...

  2. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    saroj... am really happy to give the first fb....

    so beautifully written... actually the way you have written is so simple yet has the perfect blend of the language.... what i mean to say is its not the language that we use day to day tamil (like the one that i use) but its so easy to catch.... the lines are wonderful.... rthymically ending .....

    Great.... :bowdown:bowdown:bowdown

    Sandhya
     
  3. iyerviji

    iyerviji IL Hall of Fame

    Messages:
    34,592
    Likes Received:
    28,760
    Trophy Points:
    640
    Gender:
    Female
    Dear Saroj

    Welcome to the poems forum

    Wow. First poem itself is superb, so can expect many more from you. You seem to be an all rounder. So many poetess here now.
    I missed giving the first fb

    love
    viji
     
  4. rena2010

    rena2010 Senior IL'ite

    Messages:
    224
    Likes Received:
    4
    Trophy Points:
    18
    Gender:
    Female
    Poetess,

    Great poem. Expecting a lot more from you. Its good that you have nice talents. Kalakitinga pa...
     
  5. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    well written saroj!!
    welcome here!!
    very beautifully and rhythmically written!!!!!!:thumbsup
     
  6. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    முதல் பூங்கொத்து பின்னூட்டம் கொடுத்த சந்தியாவுக்கு வந்தனம்.
    மற்றட்ட மகிழ்ச்சி.
    இரத்தின கம்பள வரவேற்பு ...இரட்டிப்பு மகிழ்ச்சி .



    தமிழை த்ங்க்ளிஷாக எழுதுவதில் எனக்கு சிறிது தயக்கம்.சிரமமும் கூட
    படிப்பது அதைவிட சிரமம்.
    எனவே தனித் தமிழ்.
    சிரமத்திற்கு மன்னிக்கவும்
    தமிழ் எப்படி இருந்தாலும் இனிமைதான்.....உங்கள் வழக்கும் வார்த்தையும் சேர்த்து
    தமிழுக்கு நிகர் தமிழ் தான்

    நன்றி.
     
    Last edited: Apr 4, 2010
  7. ganges

    ganges Gold IL'ite

    Messages:
    2,858
    Likes Received:
    52
    Trophy Points:
    110
    Gender:
    Female
    முதல் கவிதையே முத்தாக தந்த யாஷி
    உங்கள் கருத்து தந்ததே எனக்கு குஷி
    வணக்கத்தோடு தொடங்கிய பாங்கு
    எல்லோரையும் தொட்டதே இங்கு


    மீண்டும் சிந்திப்போம் சரோஜ் . உங்கள் தட்டெழுத்து பயம் நீக்கிய குறிஞ்சி
    என்னையும் தமிழில் கவி எழுத தூண்டினார். வாழ்க அவர் தமிழ் தொண்டு.


    கங்கா
     
  8. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female

    விஜி மா
    நன்றியும் நவிலலும் என் சார்பில்.
    வரிசையில் என்ன இருக்கிறது -உங்கள்
    வார்த்தையில் ஆயிரம் ஆசிர்வாதம் இருக்கும்போது.
    வருவேன்.....வளர்வேன்
    ஓர் வரியாய்...
     
  9. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    நட்புடன் என் முன்னோட்டத்திற்கு முன்னேற்றம் கொடுத்ததற்கு
    நன்றி தோழியே.
    நிச்சயம் நிறைய்ய்ய்ய கொடுப்பேன்.
     
  10. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female

    கவிதைச் சாரலில் என்னை நனைத்த
    கங்கை மங்கையே.
    நன்றி

    ஆம் இளவேணி இங்கு இருக்கும் போது
    தமிழ் தானாய் வளரும்.
    நட்புடன் நண்பர் இருக்கையில்
    தமிழ் நலமாய் வாழும்.

    மீண்டும் சிந்தித்து சந்திப்போம்.......
     

Share This Page