1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

வசந்தம் வந்ததே.....

Discussion in 'Regional Poetry' started by veni_mohan75, Apr 2, 2010.

  1. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    நேற்று முன்தினம்
    அந்தி சாய்ந்த நேரம்
    எங்கோ ஒரு குயில் கூவியது
    எனது அலை பேசிதான்

    எடுத்து காதில் வைத்ததும்
    மீண்டும் குயில் கூவியது
    என்னடா இது என்று பார்த்தால்
    நமது கலைக் குயில்,
    கலையின் காதலி,
    நாட்டிய தாரகை,
    எனதருமை தோழி சரோஜா...........

    யஷிகுஷி என்ற பெயரில்
    இண்டசை கலக்கும் இனியவள்
    அவர்தான் பேசுகிறார் என
    நான் அறிந்த நொடியில் எதோ
    பூமிக்கும், வானுக்குமாய்
    உலகளந்த பெருமாள் போலே
    நானே வளர்ந்ததுபோல ஒரு
    உற்சாகம் உள்ளே குமிழியிட்டது

    காலம் போவதே தெரியாமல்
    உரையாடினேன், அது எனது
    அலைபேசிக்கே பொறுக்கவில்லை
    போலும், சார்ஜ் தீர்ந்து போய்
    அணைந்து விட்டது.

    மீண்டும் வருமா வசந்தம் என
    வருந்திக் கொண்டு இருக்கையில்
    இன்று மீண்டும் பேசினேன்.

    வசந்தமாய் வந்த தோழியே
    வாழ்க நீ பல்லாண்டு
     
    Loading...

  2. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    குயில் கூவ,
    குயில் பேச,
    குயில் கேட்க,
    குயில் எழுதி,
    காகம் படித்து கரைகிறது.

    அன்புக்குண்டோ தாழ்?
    வசந்தம் இங்கும் வீசுகிறது.
     
  3. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள நட்புக்கு,

    உண்மைதான் நண்பரே. அன்பிற்கு அணை கூட போட முடியாது, இதில் தாழ் என்ன சுண்டைக்காய்??? என்னை ஆனந்த அதிர்ச்சிக்கு ஆளாக்கினால் என் தோழி. வசந்தம் அங்கு வரை வந்ததில் எனக்கும் மகிழ்ச்சி

    ஆமாம் இதில் காகம் எங்கு வந்தது ??????????
     
  4. iyerviji

    iyerviji Finest Post Winner

    Messages:
    34,587
    Likes Received:
    28,749
    Trophy Points:
    640
    Gender:
    Female
    Anbulla Veni

    Ivvalavu arpudhamaga kavidhai ezhuda enge karru kondai, padikka padikka puallrikkaradhu.

    Dont know whether I have written is correct. I am not so good in writing tamil . Rasikka than theiryum ezhudha theriyadhu

    love
    viji
     
  5. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    எதிர் பார்த்தேன் எழுதும் போதே;
    கேட்டு விட்டீர்கள். அது நாந்தேன்!!!!!:)
    சும்மா ஒரு ரய்மிங், விட்டுடுங்க போனா போவுது, சின்ன பய்யன்...:hide:
     
    Last edited: Apr 2, 2010
  6. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    Great Veni..... congrats for those moments.........

    One small doubt.... from where do you get their phone numbers.....
     
  7. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    அலுவகம் சென்று ilலே பழியாய் கிடக்கும் அன்புத் தோழியே
    வசந்ததிற்கு வரவேற்பு கொடுத்த வஞ்சியே
    வான்வழி தாக்குதலால் (conference call) விழி பிதுங்கி விட்டேன்
    வார்த்தைகள் வரவில்லை.
    மீண்டு வருவேன் மீண்டும்.
    வாழ்க வளமுடன் ....வற்றாத (அறிவுச்) செல்வதுடன் .....
     
    Last edited: Apr 3, 2010
  8. ganges

    ganges Gold IL'ite

    Messages:
    2,858
    Likes Received:
    52
    Trophy Points:
    110
    Gender:
    Female
    dear Veni,

    Super poem. Friendship oru vasantham thaan. Azhagaga chollivitteergal.

    ganges
     

Share This Page