1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

பாரதி பாடியதும், பாடாததும்

Discussion in 'Regional Poetry' started by natpudan, Mar 31, 2010.

  1. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    பாரதி பாடியதும், பாடாததும்

    தனி ஒருவனுக்கு உணவில்லை எனில்,
    ஜகத்தினை அழித்திடுவோம் என்றான் பாரதி.

    கண்ணம்மாவைப் பாடிய பாரதி;

    தனி ஒருவனுக்கு காதலி இல்லை எனில்,
    ஜகத்தினை அழித்திடுவோம் என்று பாடினானா?

    இல்லையே, ஏன் என்று வினவினேன்?

    உணவு தனி மனிதனின் வயிற்றுப் பசி, புசித்தால் போய்விடும்,
    காதல் இரு மனங்களின் மனப் பசி, ருசித்தாலும் போவதில்லை.

    அதனால்தானோ அவன் பாடவில்லை?
     
    Loading...

  2. ganges

    ganges Gold IL'ite

    Messages:
    2,858
    Likes Received:
    52
    Trophy Points:
    110
    Gender:
    Female
    அன்புள்ள நட்ஸ் ,


    கவிதை கண்டேன். ஆஹா ! பாரதத்துக்கு புதிய பாரதி கிடைத்த சந்தோஷத்தில்
    திக்கு முக்காடிவிட்டேன்.
    கருத்தை உறுதி செய்துகொள்ள பாரதி இல்லாததால்
    அப்படியே எடுத்துக்கொள்ளலாமே.


    நன்றி நண்பா.


    கங்கா
     
  3. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    பாரதி பாடலைனா என்ன நட்ஸ் அது தா நீங்க பாடிடீங்களே
     
  4. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    கங்காவின் ஊக்குவிப்பு இருந்தால்,
    ஒரு சாரதி கூட, பாரதி ஆக முற்படுவான்.
     
  5. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    தங்கள் அன்புக்கு நன்றி ராமன்.
     
  6. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    nats, pinnootam kudukka vaarthai illai....:hatsoff
     
  7. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    Sandhya Athuvum Paravaayillai.

    Thank you.
     
  8. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள நண்பரே,

    இதோ வந்துட்டேன். அதென்னடா புது விஷயம் பாரதி பாடாததுன்னு வந்தேன்.........

    பாரதிக்கு காதலிக்க நிறைய விஷயங்கள் இருந்தன நண்பரே கண்ணம்மாவைத் தவிரவும்..... கண்ணன், குயில், வீசும் காற்று, அலை மோதும் கடல், சிறிய பறவை அனைத்துக்கும் மேல இயற்கை இன்னும் பல. காண்பன அனைத்தையும் காதலித்தான். அவன் கண்ணம்மாவை விடவும் நேசித்த விஷயங்கள் மிகவும் அதிகம். விடுதலை விரும்பி. தேசத்தை உயிரை விட உயர்வாக நேசித்தான்.

    அப்படி உள்ள யாராக இருந்தாலும் அவர்களுக்கு காதலி நிச்சயம் இருந்திருப்பாள் அவர்களுக்குத் தெரியாமல் கூடவாவது.....

    பசிப் பிணி போனால்தான் உடை பற்றியும், உறைவிடம் பற்றியும் சிந்தனை வரும். பிறகு ஒரு இல்லத்தரசி பற்றிய சிந்தனையும் வரும். உண்ணவே உணவில்லை எனில், காதலி மட்டும் எதற்கு கூட சேர்ந்து பட்டினி இருக்கவா??

    இன்றைய காதலர்களுக்கு, காலை எழுந்ததிலிருந்து, இரவு படுக்கச் செல்லும் வரை அனைத்து செலவுகளுக்கும் தந்தை தான் சம்பாரிக்கிறார். அலை பேசி கட்டணமும் அவர் தலையில் தான் விடிகிறது. இப்படி இருக்கையில் இவர்களுக்கு காதலி வேண்டுமா? என்னை பொறுத்த வரையில் காதலி வேண்டும் என்ற எண்ணம் வருகையில், ஒரு பெண்ணுக்கு தன்னை கண்டால் பிடிக்க தன்னிடம் உள்ள தகுதிகளை எவன் ஒருவன் உயர்த்தி இருக்கிறானோ அவன் காதலிப்பதே சிறந்தது.

    காதல் ஜெயிக்க வேண்டுமானால் காதலர்கள் உயிர் வாழ வேண்டுமே. அதற்கு காதல் மட்டும் போதாது அல்லவா??? கட்டிய மனைவியை தங்கத் தட்டில் வைத்து போற்ற வேண்டாம். ஆனாலும், அடிப்படைத் தேவைகளான உன்ன உணவு, உடுக்க உடை, இருக்க உறைவிடம் என்றாவது காக்க வேண்டாமா??? உழைத்து பிழைக்க உடலுருதியும் கூடவே மன உறுதியும் வேண்டும், கூடவே கொஞ்சம் கல்வியும் வேண்டுமே.



    இந்த கருத்துகள் எல்லாம் முதிர்வடையாத ஒன்று இரண்டு இன்றைய காதல் பற்றிய என்னுடைய கருத்து மட்டுமே. யாரை வருத்த வேண்டும் என்று சொன்னது அல்ல. பிழையிருந்தால் மன்னிக்கவும் :bowdown:bowdown
     
    Last edited: Mar 31, 2010
  9. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    ரொம்ப நேரமா பின்னோட்டம் வரும் வரும் என,
    காத்திருந்து, காத்திருந்து நேரங்கள் போனதம்மா.

    அப்பவே நினைத்தேன், வேணி பார்த்தாச்சு,
    ஆயுதங்களின் அணிவகுப்பு தயாராகிறது என்று.

    நீங்கள் கூறியதில் எந்த தவறும் இல்லை வேணி.

    இதில் எதுவுமே இல்லாமல் இருந்தாலும் காதல் வரும்,
    ஆனால் அது இரண்டு மனங்களின் காதலாக மட்டும் தான் இருக்க வேண்டும்,
    காலம் கூடி, முயற்சி திருவினை தரும் வேளையிலே தான் கை பிடித்தல் வேண்டும்.

    அந்தக் கருத்தில் நான் உங்களுடன் தான்.

    அதே கருத்தில் தான் அவன் பாட வில்லை என்று இன்னும் நினைக்கிறேன்.
     
  10. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    நன்றி நண்பரே, நான் சொன்ன கருத்தை நான் சொன்ன விதமாகவே புரிந்து கொண்டமைக்கு. இந்தப் புரிதல் எனக்கு உங்களிடம் மிகவும் பிடித்த விஷயங்களில் ஒன்று. பின்னூட்டம் தந்து விட்டு கொஞ்சம் உதறல் எடுத்தது என்னவோ உண்மை. இருப்பினும் ஒரு ஓரத்தில் சிறு நம்பிக்கை இருந்தது. காப்பாற்றினீர்கள் அதை.

    நீங்கள் சொன்ன கருத்தை நானும் ஆமோதிக்கிறேன், காதல் வருகையில் தகுதி பார்ப்பது இல்லைதான். ஆனால் வெற்றி அடைய சில தகுதிகள் வேண்டும் என்றுதான் சொன்னேன்.

    நன்றிகள் பல உங்களுக்கு நண்பரே
     

Share This Page