1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

அன்னை எனும் பொக்கிஷப் பெட்டகம்

Discussion in 'Regional Poetry' started by natpudan, Mar 25, 2010.

  1. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    அன்னை எனும் பொக்கிஷப் பெட்டகம்

    எனதருமை பொக்கிஷப் பெட்டகமே:

    உன்னுள்ளே என் அன்பை வைத்தேன்,
    அதை பல மடங்காய் திருப்பித் தந்திட்டாய்.

    உன்னுள்ளே என் கவலைகளை வைத்தேன்,
    அதை முழுவதுமாக இல்லாமல் களைந்திட்டாய்.

    உன்னுள்ளே பத்து மாதம் எனை பொக்கிஷமாய் வளர்த்தாய்,
    உன்னுடனே வைத்து எனை 20 வருடங்கள் அன்போடு காத்தாய்.

    நீயல்லவா என் பொக்கிஷப் பெட்டகம்,
    நீயல்லவா அன்னையே என் பொக்கிஷப் பெட்டகம்.

    இன்று இதை எப்படி மறந்தேன்?
    இன்று உனை கவனிக்க முடியாமல்,
    உனை கொண்டு விட்டேன் முதியோர் காப்பகத்தில்.
    கற்பகிரகத்தில் வைத்து எனைப் போற்றி வளர்த்த,
    உனை கொண்டு விட்டேன் முதியோர் காப்பகத்தில்.

    நீ தந்த அன்பை இன்று உனக்கு தர நான் மறந்தேன்,
    நீ களைந்த என் கவலைகளை மட்டுமே இன்று நான் உனக்குத் தருகிறேன்.

    நீ வருந்துவது அறியும்,
    ஆனால் நானறிவேன், நீ எனை சபிக்க மாட்டாய்,
    ஏனெனில் நீ என் பொக்கிஷப் பெட்டகம் அல்லவா.

    அன்னை அப்படியே இருக்க,
    பிள்ளை நான் ஏன் மாறி விட்டேன்?

    (இது இன்று அன்றாடம் நாம் காணும்,
    காட்சிகளைப் பற்றிய ஒரு வருத்தப் பார்வை.
    தொலை நோக்குப் பார்வையுடன், அருகில் இருக்கும்,
    சொந்தங்களை தொலைத்து விடாதீர்கள், என வலியுறுத்தும் பார்வை).
     
    Loading...

  2. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    really a nice thought!!!
    a good message to youngsters now!!! keep going nats!!!
    lovely karuththu!!!!:)
     
  3. iyerviji

    iyerviji Finest Post Winner

    Messages:
    34,587
    Likes Received:
    28,749
    Trophy Points:
    640
    Gender:
    Female
    Dear Nats

    Thought provoking post. Hope every son looks after his parents nicely.

    love
    viji
     
  4. ganges

    ganges Gold IL'ite

    Messages:
    2,858
    Likes Received:
    52
    Trophy Points:
    110
    Gender:
    Female
    dear nats

    Manadai urukkivitta kavidai. Idu unmai endru therindirundalum padikkumbodu yedo ippodudan arivadu pol oru mana ulaichal. Idu patri erkanave naan oru thread il kooriyirunden. Our parents were lucky. Our children will not have enough time to look after us becasue of their job pressure. The way they are working, we the parents are still worry about them. Even if you go and stay with them they will not have enough time to spend with you. Parents always will think about their children and them for their children. It is more or less a oneway process.


    ganges
     
  5. Soldier

    Soldier Gold IL'ite

    Messages:
    2,461
    Likes Received:
    77
    Trophy Points:
    110
    Gender:
    Female
    Touching poem Nats.

    Should be an eye opener for those who do not care for their parents.
    Mother's love is the only thing that has no substitute on earth.

    Good writing!!
     
  6. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    touching one nats....

    remembered a story about a son who wants to gift his mother's heart to his wife... when he takes the heart and runs to his wife, he fell down. the mother's heard then asks him if he is hurt....

    Such is mother's love....

    Today people are running behind money that they kill their beloved ones for money and power.....
     
  7. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    Nandri Yamini.
     
  8. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள நட்புக்கு,

    அன்னை என்றும் நம்மை அரவணைக்கும் அன்பே உருவானவள். தன் உதிரத்தாலும், சதையாலும் நமக்கு உருவம் தந்தவள், தன் உயிரை கொடுத்து நம்மை ஈன்றேடுத்தவள், நம்மை சீராற்றி, பாராட்டி, தந்தையிடமும், தனையனிடமும், வாங்கும் அடியிலிருந்தும் பல சமயங்களில் காப்பாற்றி வளர்த்தவள். இன்றும் கூட, எனக்கு பிடித்த பதார்த்தங்களை, என் வருகையின் போது எனக்காக செய்து வைத்துக் கொண்டு காத்திருக்கும் அந்த தன்னலம் அற்ற அன்பு வேறு யாரிடம் இருக்க முடியும்.

    ஆனாலும் இத்துணை செய்த அவளுக்கு, நம்மால் என்னதான் செய்ய முடிந்தது. அவள் வாழும் காலம் வரை, இயன்ற பொழுதெல்லாம் சென்று அவளுக்கு சில பணிவிடைகள் செய்வது தவிர.

    அன்னையை பற்றிய அற்புதமான கவிதை நண்பரே. ஒவ்வொரு வார்த்தையும், கல்லில் பொறிக்கப் பட வேண்டியவை. இயலாத காரணத்தால் ஏன் இதயத்தில் பொறித்தேன்.
     
  9. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    Yes Viji Ma.

    These days I think it should not be only sons. Even daughters should remember that Ma.

    Sari thaanae? See your daughters are example to that.
     
  10. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    இந்த கவிதை இசைஞானி இளயராஜா ஒரு புத்தகத்தில் சொன்னது ௦- இது அவருக்கு பிடிச்ச கவிதையாம்....

    உன் தாய் உன்னை பெற்றபோது பட்ட
    பிரசவ வேதனைக்கு - ஈடாக - நீ என்ன
    திருப்பித்தர முடியும் ?
    மனிதனாக எத்தனை பிறவி எடுத்தாலும்
    அத்தனை பிறவியிலும் அன்னையை
    வேதனைப்படுத்தாமல்
    நீ பிறக்க முடியாது!
    அந்த வேதனைக்கு பரிகாரமாக
    நீ எது செய்தாலும் - அது குறைவுடையதே
    அதனால்...
    உன் தாயைத் தெய்வமென வணங்கு
    அந்த வணக்கம் - எந்த பள்ளத்தையும்
    நிறைவு செய்துவிடும்.....



    Sandhya
     

Share This Page