1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

செண்பக மலர்

Discussion in 'Regional Poetry' started by veni_mohan75, Mar 20, 2010.

  1. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அரைத்தெடுத்த சந்தனம்
    போல ஒரு நிறம்
    புதிய வெள்ளையிலும் உண்டு
    ஒரு நிறம்

    மனதை கிறங்கடிக்க
    ஒரு வாசனை
    புத்தியை மழுங்கடிக்க
    ஒரு வாசனை

    கொத்து கொத்தாய்
    மலர்சரங்கள் வைத்தாலும்
    உன் ஒத்தை மலரின்
    வாசனைக்கு ஈடாகுமா?

    அழகிய பச்சையில்
    உன் இலைகள், அதற்கு
    கிரீடமாய் உன் மலர்கள்

    அரும்பாகி, மொட்டாகி,
    பூவாகும் வரை அனைத்துமே
    அழகுதான் உன்னிடம்

    பூவான பிறகோ என் மனம்
    இல்லையடி என்னிடம்..
     
    Loading...

  2. susri

    susri Silver IL'ite

    Messages:
    1,596
    Likes Received:
    42
    Trophy Points:
    83
    Gender:
    Female
    மணக்க மணக்க புதிய நிறங்களுடன் அணிவகுக்கின்றன உங்கள் கவிதைகள் .
    செண்பகத்திற்கு எனது அன்பு முத்தங்கள் . [​IMG] [​IMG] [​IMG]

     
  3. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள சுசரி,

    நன்றிகள் பல உங்களுக்கு தோழி. உடனுக்குடன் வரும் தங்கள் பின்னூட்டம் கண்டு, உடனே இன்னொரு கவிதை எழுதலாமா என்று கூட யோசனை வருகிறது...

    முத்தங்கள் செண்பகத்துக்கு மட்டும் தானா? என்ன கொடும சார் இது??????:bonk:bonk
     
  4. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    மல்லிகா ஒரு பாடலை நினைவு படுத்தும் முன்னர் நான் முந்திக் கொள்கிறேன்.

    சென்பகமே....சென்பகமே.....

    அந்தப் பாடல் முழுமையாய் நினைவில் இல்லை, ஆனால் உங்கள் கவிதை அருமை.
     
  5. Padmasrinivas

    Padmasrinivas Silver IL'ite

    Messages:
    1,940
    Likes Received:
    26
    Trophy Points:
    85
    Gender:
    Female
    Dear Veni,

    Very beautiful!

    There are many Champaka (CheNbgam) trees lining the road outside our apartment and your words have described the cycle of the green leaves crowned with buds that turn to sandal or cream blooms and the fragrance that permeates the air and fills the heart with joy,

    Wish I had your prowess to say all this in Tamizh,

    Love,
    Padma
     
  6. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    dear veni,
    ungal kavithai thalaipai parthavudan oododi vanthen vasikka.
    SHENBAGAM- that name is devotional one in our house.
    because it the name my grandmother, she passed away before 55years.
    but now itself we remind the name and building 'manimandapam' for her.
    we going to celebrate the function on 10th April.each year we celebrate her thithi as sumangali pooja.

    that name shenbagam is famous and my husband's name is senbaganathan.
    we 12 of ladies formed self help group ,we named it 'shenbagam'.

    'VASAMULLA MALARGALILE VANDUGAL MOIKATHA MALAR-SHENBAGA MALAR'
     
  7. meenakshirajan

    meenakshirajan Silver IL'ite

    Messages:
    837
    Likes Received:
    83
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Hi Veni,
    Ungal Kavithaiyileye Shanbaga Malar vasam migha arumaiyaga veesugirathu.
    Meenakshi
     
  8. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள நட்புக்கு,

    பாடல் நல்ல பாடல் தான், நமது பசு நேசன் திரு.ராமராஜன் அவர்களது பாடல். இது மலரை பற்றியது அல்ல, மலரின் பெயரை கொண்ட ஒரு பசுவை பார்த்து பாடுவார்.

    எனது கவிதை படித்து நல்ல கருத்துகளையும் அருமையான பாடலையும் சொன்ன நபருக்கு நன்றிகள் பல பல.

    மல்லிகா, இதோ உங்களுக்கு போட்டியாக நண்பர் வந்துவிட்டார்.
     
    Last edited: Mar 20, 2010
  9. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    Migavum rasikka vaitha kavithai.... literally i could feel the bloom of the flowers.... i would say your poems are also a kind of virtual treat because with your words, i often feel the imagination spreading in front of my eyes... and always imagine your words with pictures....

    Very beautiful......
     
  10. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள பத்மா மேடம்,

    இதுதான் நான் தங்களிடம் இருந்து பெரும் முதல் பின்னூட்டம். செண்பக மலருக்குதான் அந்த அதிர்ஷ்டம் போலும். ஆனாலும் நீங்களும் அதிரிஷ்டசாலிதான். ஒரு மலரே மனதை மயங்கச் செய்யும். இதில் நிறைய மலர்களோடான மரங்கள் வேறு அருகே இருந்தால் கேட்கவா வேண்டும்???

    எனது கவிதை படித்து நல்ல கருத்து சொன்ன தங்களுக்கு நன்றிகள் பல.

    கருத்துகள் அழகானதாக இருக்கையில் மொழி ஒரு தடை இல்லை. உங்கள் கருத்து என்னுடையதை விட மிக அழகு :thumbsup
     

Share This Page