1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

ஓட வாழ்வு...

Discussion in 'Regional Poetry' started by ktg, Mar 3, 2010.

  1. ktg

    ktg Senior IL'ite

    Messages:
    150
    Likes Received:
    6
    Trophy Points:
    23
    Gender:
    Male
    ஓ என்று ஓசைவிட்டு ஓடிச்சென்ற ஓடம்
    ஓசையின்றி ஓட்டமின்றி ஒதுங்கி நிற்குதே

    கள்வன் அந்த பாறை வந்து மோதியதாலோ
    அல்ல பயணம் செய்த பயணிகளின் பாரத்தினாலோ
    இந்த வேக வாழ்க்கை சோகமாகி முடங்கிவிட்டதே

    பயணம் செய்த பயணிகளோ அதை எண்ணவுமில்லை
    இந்த ஓடத்தின் பாரம் கூட குறையவுமில்லை

    சில மனிதர்களும் இவ்வோடவாழ்க்கை வாழ்கிறார்களே
    தன் பிள்ளைகளும் இப்பயணிகள் போல எண்ணுகிறார்களே

    பழுதடைந்த ஓடம் சேற பலக்கரைகளும் உண்டு
    இப்பாசமுள்ள பெரியோர் வாழ முதியோர் இல்லங்களும் உண்டு

    பெற்றோர் பலரின் பாரம் படிய
    சிறியோர் சிலரின் சிந்தனை சிறக்கட்டும்....
     
    Loading...

  2. ganges

    ganges Gold IL'ite

    Messages:
    2,858
    Likes Received:
    52
    Trophy Points:
    110
    Gender:
    Female
    arthamulla varigal.

    cheers.

    ganges
     
  3. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள ப்ரீத்தி,

    குறை குடங்கள் கூத்தடிப்பதை
    பார்த்த நிறை குடங்கள் அதன்
    கண்ணீராலே நிரம்பி வழிகின்றன.

    என்று வரும் சிறார்களுக்கு பொறுப்பு என தவிக்க வைக்கும் வரிகள். நல்ல கருத்துள்ள கவிதை.
     
  4. susri

    susri Silver IL'ite

    Messages:
    1,596
    Likes Received:
    42
    Trophy Points:
    83
    Gender:
    Female
    அன்புள்ள ப்ரீத்தி ,
    எக்காரணம் கொண்டும் பயணிகளை நம்பி இல்லை இக்காலத்து படகுகள் . கயிறின் உதவி ( பிள்ளைகளின் உதவி ) இருக்கும் வரை நிலையான இடத்தில் இருக்கும் படகுகள் , தன்னை கவனிப்பார் இல்லையெனில் படகினில் ஓட்டை விழும்வரை மூழ்காமல் மிதந்துகொண்டுதான் இருக்கிறது .........
    உங்கள் கவிதை மிக அருமை . :thumbsup
     
  5. ktg

    ktg Senior IL'ite

    Messages:
    150
    Likes Received:
    6
    Trophy Points:
    23
    Gender:
    Male
    வேணி,

    என் மெய் சிலிர்க்கிறது உங்கள் வரிகளைப் பார்த்து... என்ன அருமையான கருத்துக்கள்...
     
  6. ktg

    ktg Senior IL'ite

    Messages:
    150
    Likes Received:
    6
    Trophy Points:
    23
    Gender:
    Male
    உண்மை தான். படகுகளும் கற்றுக்கொண்டன... பாவம், அதன் துயரை யார் அறிவாரோ???

    உங்கள் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி...
     
  7. ktg

    ktg Senior IL'ite

    Messages:
    150
    Likes Received:
    6
    Trophy Points:
    23
    Gender:
    Male
    Thanks Ganges...
     
  8. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    ப்ரீத்தி நல்ல கருத்து.

    ஓட வாழ்வு,
    ஓட்ட வாழ்வாய்ப் போனதனால்,
    ஓட்டை விழுந்த ஓடம் ஓரங்கட்டப் படுவது,
    இயற்கையின் நியதியா? இல்லை,
    செயற்கையாகிப் போன உறவுகளா?
     
  9. ktg

    ktg Senior IL'ite

    Messages:
    150
    Likes Received:
    6
    Trophy Points:
    23
    Gender:
    Male
    செயற்கையின் சீற்றமே அதற்குக் காரணம் நட்பு... :-(
     
  10. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    superb lines preethi....
     

Share This Page