1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

கண்ணம்மா...

Discussion in 'Regional Poetry' started by veni_mohan75, Mar 1, 2010.

  1. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    கைகளிலே உன்னை வைத்தால்
    காற்றிலே கலந்து விடுவாய்,
    கண்ணிலே உன்னை வைத்தால்
    கண்ணீரில் வெளியேறி விடுவாய்,
    என்றே இதயத்தில் வைத்தேன்

    என் இதயத்தின் துடிப்பு நீ
    என் உதிரத்தின் ஒவ்வொரு துளியிலும் நீ
    நான் சுவாசிக்கும் மூச்சு நீ
    நான் பேசும் பேச்செல்லாம் நீ

    பூமி சூரியனை சுற்றுகிறதாம், நான்
    உன்னை அன்றோ சுற்றி சுற்றி வருகிறேன்.
    என்ன செய்தாய் நீ? என்னவோ செய்தாய் நீ.

    என் உயிரே கண்ணம்மா, நீ எனது கண் அம்மா.
    என்னுடனே இருந்தால் நீ நல்ல பெண் அம்மா
     
    Loading...

  2. bluefairy

    bluefairy New IL'ite

    Messages:
    64
    Likes Received:
    0
    Trophy Points:
    6
    Gender:
    Female
    வேணி,


    அழகான கவிதை வேணி.........
    ஆசை, பாசம், காதல்னு பல சுவையோட இனிமையான கவிதை........
    என் வீட்டில என்ன கண்ணம்மா தான் செல்லமா கூப்பிடுவாங்க.
    எனக்கு பிடிச்ச கவிதை எனக்கு பிடிச்ச பேர்ல படிச்சது சந்தோஷமா இருக்கு.........
    :)
    ரொம்ப நல்ல இருந்துச்சு.


    அன்புடன்,
    எழில்.
     
  3. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள எழில்,

    அருமையான பின்னூட்டம் தந்த அன்பான தோழிக்கு என் நன்றிகள் பல. கண்ணம்மா என்பது எனது தோழிகள் என்னை அழைக்கும் பெயர். எனக்கு அந்த பெயரின் மீது உள்ள காதல் அவர்கள் அறிந்ததே.

    என்னை போலவே இன்னொரு பெண்ணையும் கண்டேன். கண்டத்தில் மகிழ்ச்சி மிக கொண்டேன்.
     
  4. Padmini

    Padmini IL Hall of Fame

    Messages:
    6,795
    Likes Received:
    1,177
    Trophy Points:
    345
    Gender:
    Female
    Bharathi kadhal konda Kannamma
    Veniyin sirungara Kavidhaiyil Kannamma
    Neeyenadhuir Kannamma enran mahakavi
    Avan adi thottu Veniyum varaindhal kavin migu pa onru
    Anbhudan
    pad
     
  5. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள பத்மினி மா,

    பாரதி கவிதையில் நான் கொண்டது காதல்
    எனது கண்ணம்மாவுடன் அடிக்கடி மோதல்
    அதனால் தான் வந்தது இந்த சாடல்
    தங்கள் பின்னூட்டம் தான் எனக்கு மாடல்.

    எனது கவிதைக்கு பின்னூட்டம் தந்த பத்மினி அம்மாவுக்கு என் நன்றிகள் பல.
     
  6. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Inimel..."kannamma' veni enre koopidalaamaa..

    Innoru kannammavaiyum..yezhilaiyum inge sandhiththadhil magizhchi..

    sriniketan
     
  7. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male

    வேணி,

    என்னமா சொல்லிட்டீங்க,
    கண்ணம்மா - கலக்குறீங்க.

    கொஞ்சம் சிரிக்கலாமா?

    கைகளிலே உன்னை வைத்தால்
    காற்றிலே கலந்து விடுவாய்

    கற்பூரமா?

    கண்ணிலே உன்னை வைத்தால்
    கண்ணீரில் வெளியேறி விடுவாய்

    கண் மையா?

    என்றே இதயத்தில் வைத்தேன்

    பேஸ் மேக்கரோ?
     
  8. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    "Inimel..."kannamma' veni enre koopidalaamaa.."
    "தங்கள் சித்தம் என் பாக்கியம் ஸ்ரீனி "

    பல விஷயங்கள் எனக்கும் எழிலுக்கும் ஒத்து போகிறது, சில ரசனைகளையும் சேர்த்து.

    எனது கவிதை ரசித்து கருத்து சொன்ன இனிய தோழிக்கு இனிமையான நன்றிகள் பல
     
  9. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள நட்புக்கு,

    கற்பூரம்தான் - கரைந்தும் மனம் வீசும் எனது நேசம்
    கண் மை அல்ல - என்னை காக்கும் இமை
    பேஸ் மேக்கர் அல்ல - பீஸ் (peace ) மேக்கர்

    தங்கள் பின்னூட்டம் படித்தேன், ரசித்தேன், சிரித்தேன். நன்றிகள் பல உங்களுக்கு.
     
  10. ganges

    ganges Gold IL'ite

    Messages:
    2,858
    Likes Received:
    52
    Trophy Points:
    110
    Gender:
    Female
    Indus veliyidai kannamma undan

    kavidhayai padithu rasikkinren.

    Amudootum matru FB kkalum

    padithu padithu ingu rasikkiren.


    ganges
     

Share This Page