1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

காற்று....

Discussion in 'Regional Poetry' started by veni_mohan75, Feb 23, 2010.

  1. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    என் சுவாசமே - ஊரெல்லாம் நீ
    பரப்பினாய் வாசமே.

    நீரின்றி அமையாது உலகு..
    நீயின்றி இங்கேது உலகு..

    அசையா பொருட்களின் அசைவானாய் -
    ஊதும் குழல்களின் இசையானாய்.

    நீயின்றி எரியாது நெருப்பு
    நீ வந்தால் கோடையில் சிறப்பு

    தென்றலாய் வந்தாய்
    தெவிட்டாத இன்பம் தந்தாய்
    குளிர் காற்றாய் வந்தாய்
    குளிரூட்டி குறுகுறுப்பு தந்தாய்

    பேச்சானாய், எங்களின்
    உயிர் மூச்சானாய்

    உன் மென்னடையால் மரங்களை
    ஆனந்த தாண்டவம் ஆட வைத்தாய்
    உன் வன்னடையால் அவைகளை
    ருத்ர தாண்டவமும் ஆட வைத்தாய்

    முன்பெல்லாம் காற்றில் சுத்த வாசனை மட்டுமே - இப்போதோ
    சில செத்த வாசனையும் அல்லவா வீசுகிறது....

    காற்று மாசடைவதை தடுப்போம்..... சுற்றுச் சூழல் காப்போம்....
    இயற்கையால் இன்பம் பெறுவோம்.......
     
    Loading...

  2. indu2386

    indu2386 New IL'ite

    Messages:
    8
    Likes Received:
    4
    Trophy Points:
    3
    Gender:
    Female
    hi vani,

    its really nice, u can even take some more points relevant to green initiatives,:idea:idea
     
  3. deraj

    deraj Platinum IL'ite

    Messages:
    2,312
    Likes Received:
    533
    Trophy Points:
    210
    Gender:
    Female
    Dear Veni

    Very nice.

    Netru Varunan

    Indru Vayu

    Nalai???
     
  4. bluefairy

    bluefairy New IL'ite

    Messages:
    64
    Likes Received:
    0
    Trophy Points:
    6
    Gender:
    Female
    அன்புள்ள வேணி,

    ரொம்ப நல்ல கவிதை...........


    அசையா பொருட்களின் அசைவானாய் -
    ஊதும் குழல்களின் இசையானாய்.


    அதிலும் குறிப்பா இந்த வரிகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது.
    எல்லா கவிதைலயும் இருக்க கருத்துக்கு ஒரு பெரிய ஓஓஓ........:thumbsup

     
  5. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள இந்து,

    வருக, வருக என இரு கரம் கூப்பி உங்களை இண்டஸ் லேடீஸ்-க்கு வரவேற்கிறேன்.

    எனது கவிதை படித்து கருத்து சொன்ன தோழிக்கு என் நன்றிகள் பல. பஞ்ச பூதங்களை பற்றியும் எழுதி இருக்கிறேன். ஒரு பூதம் மட்டும் நாளைக்கு. நான்கு already இருக்கு. படித்து கருத்து சொல்லுங்கள்.
     
  6. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள தீபா,

    நீ தீபா - நாளைக்கு தீ பா.

    கவிதை படித்த தீபமே, என் கவிதைகளின் தூபமே.... நன்றி நன்றி நன்றி.........
     
  7. Padmini

    Padmini IL Hall of Fame

    Messages:
    6,795
    Likes Received:
    1,177
    Trophy Points:
    345
    Gender:
    Female
    Neerinri amaiyadhu Ulagu
    Un kavidhai illamal iyngadhu IL ulagu
    Karuththal Ullam nirappinai
    Kavin migu varigalaal idhayam thottai
    Un kavidhai yil mayangudhu en manadhu.
    Anbhudan
    pad
     
  8. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள எழில்,

    கவிதை கண்டு, படித்து, ரசித்து, கருத்து சொல்லி பாராட்டி என்னை அடுத்த கவிதை எழுத சீராட்டும் என் இனிய தோழிக்கு நன்றிகள் பல.

    "அசையா பொருட்களின் அசைவானாய் -
    ஊதும் குழல்களின் இசையானாய்"

    நானும் ரசித்து வடித்தேன் இந்த வரிகளை. நம் ஒரு சில ரசனைகள் ஒரே மாதிரி இருப்பதையும் ரசிக்கிறேன்.....

     
  9. deraj

    deraj Platinum IL'ite

    Messages:
    2,312
    Likes Received:
    533
    Trophy Points:
    210
    Gender:
    Female

    chooooooooooooperrrrrrrrrrrrrrrrr appu
     
  10. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள பத்மினி மா,

    தங்களின் பின்னோட்டம் கண்டு மகிழ்ந்தேன். உள்ளம் சற்றே நெகிழ்ந்தேன்.... கவிதை வரிகள் உங்கள் மனதை தொட்டால், அதை எழுதிய விரல்கள் உங்கள் பாதம் தொடும். பயம் வேண்டாம். அபயம் பெறத்தான்.:)

    எல்லாம் தங்களில் போன்றோரின் ஆசீர்வாதம் தான். தங்கள் பாராட்டுகளுக்கும், வாழ்த்துகளுக்கும் எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
     

Share This Page