1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

Why Doesn't Vaigai Mingle With Ocean?

Discussion in 'Posts in Regional Languages' started by jayasala42, Jan 10, 2017.

  1. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,365
    Likes Received:
    10,561
    Trophy Points:
    438
    Gender:
    Female
    மேற்கே இருந்து ஓடி வந்து கிழக்கே கடலில் கலக்கின்ற நீர் பெருக்குகள் நதி எனப்படும்.இதற்கு மாறாக நர்மதை ,தபதி நதிகள் கிழக்கே தொடங்கி மேற்கே கடலில் கலக்கும்.மேடான மேற்குப் பகுதியிலிருந்து தாழவான கிழக்குப் பகுதிக்கு வருவது இயற்கையை ஒட்டிய பெண் தன்மை.எனவே பெண்மைக்குரிய விகுதி சேர்த்து 'நதி' என்று அழைக்கிறோம்.இயல்புக்கு மாறாக மேல்நோக்கி பாயும் நீர் பெருக்குகள் 'நதம்' என்று அழைக்கப்படும்.நர்மதை ,தபதி இரண்டும் நதங்கள் .

    வைகை நதி கடலில் கலப்பதில்லை.அது பற்றிய விவாதம் குலோத்துங்கன் சபையில் நடந்தது.
    ஒட்டக கூத்தர் சொன்னார்," எங்க சோழ நாட்டுக் காவிரி போல உங்க பாண்டிய நாட்டு வைகை வருமா?"
    புகழேந்தி சொன்னார்,"உங்க நதி சாதாரண நதி.எல்லா நதியும் போல் கடலில் கலக்கிறது.எங்க நதி கடலில் கலக்காது.ஏன் தெரியுமா?
    இந்த கடல் இருக்கே, இது பாற்கடலுக்கு உறவு.பாற்கடல் சிவ பிரானுக்கு நஞ்சை அளித்தது.ஆலகால விஷம் அங்கிருந்து தானே வந்தது?எம்பெருமானுக்கு நஞ்சை
    அளித்த பாவியாகிய கடலோடு நான் போய்ச் சேருவேனா/என்று சொல்லி சிவ பக்தி மிக்க வைகை கடலில் கலக்க வில்லை'. .
    இதை உள்ளடக்கி அவர் பாடிய அருமையான பாடல்;

    நாரியிடப் பாகருக்கு நஞ்சளித்த பாவியென்று
    வாரியிடம் புகுதா வைகையே -மாறி
    இடத்தும் புறத்தும் இருகரையும் பாய்ந்து
    நடத்தும் தமிழ்ப் பாண்டி நாடு.
    இந்த கற்பனை புகழேந்திக்கு எப்படித் தோன்றியது?
    அதற்கு வித்திட்டவர் புகழேந்திக்கு முற்பட்டவரான சேக்கிழார்.

    காவிரி சிறிய தொட்டி மாதிரி தலைக் காவிரியில் ஆரம்பித்து,சோழ நாட்டுக்கு வரும்போது அகண்ட காவேரியாகி,மீண்டும் குறுகிக் கடலில் கலக்கிறது.
    சேக்கிழார் கூறும் கற்பனை வளத்துடன் கூடிய காரணம்.
    எம்பெருமானுக்கு நஞ்சளித்த பாவியாகிய கடலுக்குப் போய் என் வளத்தை எல்லாம் ஏன் கொட்ட வேண்டும்?
    சோழ நாட்டில் தன வளத்தை வாரி வழங்கி விட்டு,கடல் வயிறு நிறையாதபடி குறுகியதாம்.
    " கடல் வயிறு நிறையாத காவிரியின் கரை அணைந்தார் "
    இயற்கையாக நடக்கும் நிகழ்ச்சியில் கற்பனையை ஏற்றி சிவாநுபவத்தையும் காட்டுகிறார் சேக்கிழார்.
    Jayasala 42
     
    periamma and PavithraS like this.
    Loading...

Share This Page