1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

What's In A Name? #சிறுகதை

Discussion in 'Stories in Regional Languages' started by crvenkatesh1963, Aug 23, 2019.

  1. crvenkatesh1963

    crvenkatesh1963 Silver IL'ite

    Messages:
    65
    Likes Received:
    126
    Trophy Points:
    83
    Gender:
    Male
    What's in a name? #சிறுகதை

    இது பொய்தான் என்று என் அறிவு அடித்துச் சொன்னாலும் நடந்ததை இல்லையென்பது எப்படி?

    வருடம் 2014 இருக்கும். என் வங்கியின் சேவைக் கிளையில் (cheque processing centre) இரவுநேரப் பணியில் இருந்த காலம். செக்குகள் ஸ்கேன் செய்யப்பட்டு இணையம் மூலம் அனுப்பப்படும். பின்னர் அது வங்கி வாரியாக பிரிக்கப்பட்டு பிரத்யேக வங்கிக்கும் மீண்டும் இணையம் மூலம் அனுப்பப்படும். அப்படி வரும் செக்குகளில் பெயர் தேதி முதலியவை சரிபார்க்கப்பட்டு தவறானவை திருத்தப்பட்டு என்ட்ரி செய்யப்படும். பின்னர் அந்தந்த கணக்குகளில் டெபிட் செய்யப்படும். சுமார் பத்தாயிரம் செக்குகள் பிரதிதினம் வரும்.

    நாங்கள் ஏழுபேர் இரவுப்பணியில் இருந்தோம். வேலை டைட்டாக இருந்தாலும், சில நாட்கள் வேலை முடித்து வீட்டுக்கும் திரும்பி விடுவோம். என்னுடன் ரமேஷ் என்ற இளைஞர் பணிபுரிந்தார். அவர் எனக்கு எல்லாவிதத்திலும் உதவியாக இருந்தார். அவருக்கு வலது கையில் ஆறு விரல். அதிர்ஷ்டம் என்று நாங்கள் சொல்வோம். மிகத் திறமைசாலி. மடமடவென்று வேலையை முடித்து விடுவார். அவர் என்னை வீடுதிரும்பும் நாட்களில் கத்திப்பாரா முனையில் (இன்றைய ஆலந்தூர் மெட்ரோ) விட்டுவிடுவார். அங்கிருந்து தாம்பரம் பஸ் பிடித்து தாம்பரத்திலிருந்து ஆட்டோ பிடித்து வீடு போவேன்.

    ஆனால் நடந்த சம்பவம் இவை பற்றியது அல்ல.

    நாங்கள் செக்குகள் என்ட்ரி செய்யும் போது பேசிக்கொண்டே வேலை செய்வோம். அதுவும் ஒரு சீனியர் நண்பர் நிறைய ஜோக்குகள் சொல்வார். அலுப்பில்லாமல் வேலை நடக்கும். ஆனால் அந்த சீனியர் நண்பர்தான் ஒருநாள் அந்த அதிசயத்தைக் கண்டுபிடித்தார்.

    நாங்கள் பேசிக்கொள்ளும் போது பல்வேறு விஷயங்கள் அலசப்படும். பல பெயர்கள் அரசியல் சினிமா பிரபலங்கள் பெயர்கள் அலசப்படும். எந்த ஒரு நபர் பெயர் அல்லது ஒரு பொருள் /செயல் பெயர் அதிகம் அடிபடுகிறதோ சொல்லி வைத்தாற்போல யாராவது ஒருவருக்கு செக்குகளில் அடிக்கவேண்டிய பெயராக அது வரும்.

    உதாரணத்துக்கு காமதேனு என்று பேசினால் சற்று நேரத்தில் காமதேனு எண்டர்ப்ரைசஸ் சென்று ஒரு செக் வரும். இப்படி தினமும் நடைபெறும். ஒரு நாள் அதிசயத்தின் உச்சமாக மாதா வைஷ்ணவ தேவி சென்று வந்ததைப் பற்றி சொல்லிக்கொண்டிருந்தேன். ஐந்தே நிமிடத்தில் எனக்கு மாதா வைஷ்னோ தேவி பேக் வர்கஸ் என்று ஒரு செக் வந்தது.

    இப்படி தினம் தினம் நடைபெற்றாலும் நாங்கள் அதிசயம் கொள்வது நிற்கவில்லை.

    அப்போதுதான் ஒரு நாள் அது நடந்தது. நான் எழுதிய ஓடியன் கதையைப் பற்றி அன்று அலசல். என் சீனியர் நண்பர் சொன்னார் "இது ரொம்ப அபூர்வ பெயர். இது எப்படி வருமென்று பார்ப்போம்"

    சோதனையாக அன்று யாருக்குமே அந்தப் பெயர் கொண்ட செக் வரவில்லை. So, இது ஒரு freak coincidence என்று நாங்கள் முடிவுக்கு வந்தோம். அன்று என் வேலை சீக்கிரம் முடிந்து விட நான் ரமேஷுக்கு உதவ சென்றேன்.

    "சார் நான் இன்னிக்கு பைக் கொண்டு வரல. அதனால நீங்க கிளம்பிக்குங்க. எனக்கு லேட்டாகும் " என்றான்.

    சரியென்று நான் புறப்பட்டு பஸ் ஸ்டாண்ட் சென்று பஸ்ஸுக்கு காத்திருக்கலானேன். சற்று நேரத்தில் பார்த்தால் "சார்" என்று கையாட்டியபடி ரமேஷ்.

    "நம்ம சீனியர் என் வேலைய செய்யறேன்னு சொல்லிட்டார். வெங்கட் தனியா போவார். நீ துணைக்குப் போன்னு அனுப்பிட்டார்" என்றார்.

    எனக்குச் சந்தோஷம். அட்லீஸ்ட் கத்திப்பாரா வரை துணை.

    பேசிக்கொண்டே சென்றோம். அன்றைக்கு ஓடியன் பெயர் செக்கில் வராதது பற்றி, த்ருஷ்யம் சினிமா பற்றி என்று பல டாபிக்குகள்.

    சுமார பதினைந்து நிமிடங்களில் கத்திப்பாரா. "சரி சார், குட் நைட். நாளைக்கு பார்க்கலாம்" என்று எழுந்த ரமேஷ் என் கையைப் பற்றிக் குலுக்கிவிட்டு சட்டென்று இறங்கிச் சென்றார்.

    பிறகு இன்னும் அரைமணியில் நான் வீடு வந்து சேர்ந்தேன். சுஜாவிடம் அன்று நடந்த அதிசயத்தைப் பற்றிச் சொன்னேன். (அவளுக்கு அந்த மாதிரி பெயர்கள் வருவது தெரியும்). அவளுக்கும் ஆச்சர்யம்.

    மறுநாள் ஆபீஸ் சென்றதும் முதலில் பார்த்தது ரமேஷைத்தான்.

    "ரொம்ப சாரி சார். நேத்து வேலை முடியவே ரொம்ப நேரம் ஆயிடிச்சு. நான் இங்கியே தூங்கிட்டேன். நீங்க நேரத்துக்குப் போய் சேர்ந்தீங்களா?" என்று கேட்டான்.

    எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. நேற்றைய சம்பவங்கள் வேகமாக மனதில் ஓடின. கடைசியில் ரமேஷ் கைகுலுக்கிவிட்டுப் போனதுவரை. அப்போதுதான் எனக்கு ஒரு விஷயம் உறைத்தது.

    நேற்று ரமேஷ் எனக்குக் கை கொடுத்தபோது அவர் வலது கையில் ஐந்துவிரல்கள் தான் இருந்தன என்று என்னால் சத்தியம் செய்ய முடியும்.

    நான் சட்டென்று ரமேஷின் வலது கையைப் பார்த்தேன். சுண்டு விரலோடு ஒட்டிய ஆறாவது விரல் என்னைப் பார்த்துச் சிரித்தது.

    இது பொய்தான் என்று என் அறிவு அடித்துச் சொன்னாலும் நடந்ததை இல்லையென்பது எப்படி?

    வீயார்
     
    Loading...

  2. SpringB

    SpringB Platinum IL'ite

    Messages:
    832
    Likes Received:
    3,209
    Trophy Points:
    265
    Gender:
    Female
    Very interesting to read your story. Nice one
     
    crvenkatesh1963 likes this.
  3. ARIKA

    ARIKA Silver IL'ite

    Messages:
    103
    Likes Received:
    94
    Trophy Points:
    70
    Gender:
    Female

Share This Page