1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

What is True Vaishnavism

Discussion in 'Posts in Regional Languages' started by jayasala42, Dec 4, 2013.

  1. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,367
    Likes Received:
    10,570
    Trophy Points:
    438
    Gender:
    Female
    ஸ்ரீ வைஷ்ணவக் கோட்பாடுகளைப் பற்றிப் படிக்கும்போது என்னைக் கவர்ந்தது ஒரு சிறிய கதை.

    அந்தப் பவள மல்லி மரம் ஆண்டாள் தாசருக்காகவே பூத்துக் குலுங்கியது.அந்த மரம் எந்தப் பூவையும் உதிர விடாது.ஏனெனில் தரையில் உதிர்ந்த பூக்களை அவர் பெருமாளுக்கு சாத்துவதில்லை.

    அன்று ஒரு நாள் பூப் பறிக்கையில் ஒரு எறும்பு அவரைக் கடிக்கவும்,,கை நழுவி ஒரு மலர் தரையில் விழுந்து விட்டது.



    ' நான் மாலையாகும் பேற்றினை இழந்து விட்டேனே" என்று அழதது மலர்.

    தாய் மரம்," இது உன் விதி, அடுத்த பிறவியில் நீ முயன்று மாலையாகலாம் என்றது.. மலர் சமா தானம் அடையாமல் பெருமாளிடம் முறையிட்டது.நான் மலர்ந்ததே மலர் வண்ணனின் மலரடி சேரத்தானே.என் பிறவியே வீணாகிப் போனதே'என்று புலம்பியது.


    பெருமாளும்" நீ எங்கிருந்தாலும் நீ எனக்குரி யவள்தான் " என்றார்." மலர் அமைதி அடையவில்லை.


    " உயர்வு, தாழ்வு என்ற வேற்றுமையின்றி ,ஊருக்குப் பொல்லானையும் உமக்கு நல்லானாக ஏற்றுக் கொள்ளும் வைபவம் படைத்த தாங்கள் ,நான் யார் காலிலும் மிதி படுவதைப் பார்த்து வாளா இருத்தல் தங்கள் திருவருளுக்கு இழுக்கல்லவா?"என்றது மலர்.


    கோவிலை அடைந்த ஆண்டாள் தாசர் மாலையைக் கட்டி மூச்சுக் காற்றுக் கூட படாமல் பக்தியுடன் பெருமாளுக்குச் சாற்றினார்.

    திருமார்பிலிருந்த மாலை சரிந்து விட்டது." ஏன் இந்த அபச்சாரம்?"


    ஒற்றை மலரைத் தவற விட்ட தவற்றினால் தான் மாலை


    சரிந்தது" என்றார் பெருமாள்.


    " அந்த பூ குறை பட்டு விட்டதே ,இறைவனுக்கு உகந்ததா?:


    " மகனே, குவலயம் வந்த யாரிடத்தில் குறையில்லை?உன்னிடத்தில் குறையில்லையா?உன்னை நான் ஒதுக்கினேனா?"


    ஆண்டாள் தாசன் எழுந்தார் , அறியாமையிலிருந்தும் தான்.


    மண்ணில் கிடந்த மலரை எடுத்தார். நாராயண மந்திரம் ஜபித்து ,பெருமாளின் மார்பிலிருந்து சரிந்த மாலையுடன் சேர்த்தார். மணிவண்ணன் ஏற்றான்.


    ஒற்றை மலரும் அன்றே இறைவனை அடைந்தது..


    மரத்தின் உச்சியில் ஜொலிக்கும் மலரும், புழுதியில் கிடக்கும் மலரும் இறைவனுக்கு ஒன்றுதான்.

    எல்லா மாந்தர்களும் ஒன்றுதான் .
    Jayasala42
     
    1 person likes this.
    Loading...

Share This Page