1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

Tortoise and longevity

Discussion in 'Posts in Regional Languages' started by jayasala42, Apr 1, 2016.

  1. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,365
    Likes Received:
    10,561
    Trophy Points:
    438
    Gender:
    Female
    விலங்குகளில் மிக நீண்ட ஆயுளை உடையது ஆமை.200 வருடங்கள் கூட வாழும்.
    இவற்றின் நீண்ட ஆயுளுக்குப் பல காரணங்கள் இருந்தாலும், மிக முக்கிய காரணம் ஆமையின் மூச்சு விடும் திறன்.
    மூச்சுப் பயிற்சியால் மனிதன் வாழ்நாளை அதிகரித்துக் கொள்ள முடியும் என யோக சாத்திரங்கள் கூறுகின்றன.ஆனால் எந்த யோகக் கலையையும் பயிலாமலேயே ஆமைகள் இயல்பாக மெதுவாக மூச்சு விடுகின்றன.
    'சரம்' என்ற வார்த்தைக்கு 'மூச்சு' என்ற பொருள் உண்டு.நாம் பரபரப்பாக இருக்கும்போது ஒழுங்கு இல்லாமல் மூச்சு விடுகிறோம்.அதனால்தான் அதை 'அவசரம்' என்கிறோம்.
    மனிதன் சராசரியாக நிமிடத்துக்கு 12-18 முறை மூச்சு விடு கிறான் .யானை, ஆமை, முதலை போன்றவை நிமிடத்துக்கு 4 அல்லது 6 முறை மட்டுமே மூச்சு விடுகின்றன..நீண்ட நெடிய நிதான மூச்சினால் நுரையீரலுக்கு oxygen முழுமையாகக் கிடைக்கிறது.இதயத் துடிப்பு சீராகிறது.ஜீரண
    உறுப்புகள் வலிமை பெறுகின்றன.

    நம் முன்னோர்கள் பல் வேறு விலங்குகளையும் அவற்றின் மூச்சு திறனையும் நன்கு உணர்ந்திருந்தனர்.
    ' ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
    எழுமையும் ஏமாப்பு உடைத்து'
    என்கிறார் வள்ளுவர்.ஐம்புலன்களையும் அடக்கி ஆமைபோல் ஒழுங்காக வாழ்ந்தால் ஏழு பிறவியும் சிறப்பு மிக்கதாக அமையும் .
    கீதையில் கண்ணன்
    யதா சம்ஹரதே சாயம் கூர்மோங்கானீவ சர்வச:
    இந்த்ரியாணீ ந்த்ரியார்த்தேப்யஸ் தஸ்ய ப்ரக்ஞா
    ப்ரதிஷ்டிதா

    ( புலன்கள் அவற்றின் நோக்கப் பொருள்களிலிருந்தும் ஆமை தன உறுப்புக்களைக் கூட்டிற்குள் இழுத்துக் கொள்வதைப்போல -விளக்கிக் கொள்பவனே உண்மையான அறிவில் நிலை பெற்றவன் என்று அறியப்படுவான்.)
    கூர்மாவதாரத்தில் தான் மரணத்தை வெல்லும் அம்ருதம் கிடைக்கப் பெற்றது.

    Jayasala 42
     
    vaidehi71 likes this.
    Loading...

  2. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    "கூர்மாவதாரத்தில் தான் மரணத்தை வெல்லும் அம்ருதம் கிடைக்கப் பெற்றது."..............ரொம்ப சரி நீங்கள் சொல்வது :)...........அருமை அருமை !
     
    vaidehi71 likes this.

Share This Page