1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

Thiru Adhyayana Vaikunta Ekadasi

Discussion in 'Posts in Regional Languages' started by jayasala42, Dec 21, 2015.

  1. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,367
    Likes Received:
    10,570
    Trophy Points:
    438
    Gender:
    Female
    கார்த்திகை ரோகிணியிலிருந்து தை உத்தரம்வரை அத்யயன பருவம்.இக்காலத்தில் திவ்யப் பிரபந்தம் வாசிப்பதோ ,காலட்சேபம் பண்ணுவதோ கூடாது. பிரபந்தப் பாடசாலைகளுக்கு இப்பருவத்தில் விடுமுறை.ஆண்டாளின் திருப்பாவைக்கு மட்டும், அதுவும் மார்கழி 30 நாட்களில் விதி விலக்கு.

    வேத பாராயணம் மட்டுமே நடந்து வந்து,அத்யயன உத்சவம் எனப் பெயரும் பெற்றது.இதுதான் பல நூற்றாண்டுகளாக நடை பெற்று வந்தது.


    திருமங்கை ஆழ்வார் நம்பெருமாளிடம், வடமொழி வேதத்துடன் திருவாய்மொழியையும் செவி சாயத்தருள வேண்டினார்.பகலில் வேத பாராயணமும் , வைகுண்ட ஏகாதசி தொடங்கி 10 நாட்கள் இரவில் திருவாய் மொழி அனுசந்தானம் செய்யப்பட்டது.
    பின்னர் ஓரிரு நூற்றாண்டுகள் மக்கள் திவ்யப்ரபந்தம் என்று ஒன்று இருப்பதையே மறந்து விட்டனர்.
    எட்டாம் நூற்றாண்டின் இறுதியில் அவதரித்த நாதமுனிகள் ,யோக நிலையில் திவ்ய ப்ரபந்தம் முழுமையும் அறிந்து ,தமிழ் வேதம் மீண்டும் தழைக்க வகை செய்தார்.

    சாதாரண ஜனங்களை பொருத்தவரை இது மக்களைக் கவரும் ரத்னாங்கி, முத்தங்கி, மோகினி அலங்காரம், திருமங்கை மன்னன் வேடு பறி என்ற கவர்ச்சிமிகு அம்சங்களைக் கொண்டது.உண்மையில் இது தான் தமிழ்த் திருவிழா.வைணவர்கள் ஆற்றிய அரும் பெரும் தமிழ்த் தொண்டுக்கு அங்கீகாரம் அளிக்கும் உன்னதத் திருவிழா.

    பகல் பத்து,இராப் பத்து அரையர் சேவையில் நாள்தோறும் எத்தனை பாசுரங்கள் பாடி அபிநயிக்க வேண்டும் என்றே ஒரு schedule வரையப் பட்டுள்ளது.

    அத்யயன த் திருவிழாவில் உண்மையில் பகவானைவிட அடியவர்களுக்கே முன்னுரிமை .

    Jayasala 42
     
    2 people like this.
    Loading...

Share This Page