1. The Great Big Must Read List : Find Interesting Book Suggestions
    Dismiss Notice
  2. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

tamil novel lovers

Discussion in 'Books & Authors in Regional Languages' started by deepthiraj, Jun 26, 2014.

  1. storiesdetails

    storiesdetails Junior IL'ite

    Messages:
    96
    Likes Received:
    8
    Trophy Points:
    13
    Gender:
    Female
    உனைத்தேன் என நான் நினைத்தேன் – (விஜிபிரபு)
    ஒவ்வொரு தந்தைக்கும் தன் மகள் பொக்கிஷமே, அவளின் எதிர்காலம் தூய்மையான இடத்தில் தான் சென்று சேரவேண்டும் என்று விரும்பினாலும் மகளின் ஆசை எந்த இடத்தில் நிலைக்கொண்டு இருக்கிறதோ அதை நிறைவேற்ற தன் விருப்பத்தைப் பின்னுக்குத் தள்ளுபவரே உறவையும் தாண்டி சிறந்த மனிதராக மகள் கண்ணில் விழுந்து இதயத்தைப் பாசத்தால் நிறைப்பார்.

    தன்னிடம் வரும் பெண்களை ஏன் ஒதுக்க வேண்டும் என்ற கேள்வியைக் கொண்டு தற்கால வாழ்க்கையில் திளைக்கும் மகன் கோகுலை சொத்துவாங்கும் விஷயமாக நண்பன் வீட்டிற்கு அனுப்பி ரங்கநாதன் போட்ட மனகணக்கு சரியான விடையை கொடுக்கிறது.

    மகள் மீது பேரன்பை வைத்திருக்கும் கணபதி அவள் பிறந்த போதே நண்பன் ரங்கநாதன் வீட்டிற்கு மருமகள் என்று பேச போக அதை விடாமல் பிடித்துக் கொண்டு இருக்கும் நண்பனுக்கு என்ன பதில் சொல்வது என்று புரியாமல் குழம்பி தவிப்பவருக்கு கோகுலின் குணம் தெரிந்தே தான் இருக்கிறது.

    பார்த்த முதல் பார்வையிலே இளையவர்கள் காதலில் விழ, கோகுலின் கடந்த காலம் தெரிந்த போது மலர் தடுமாறினாலும் எதிர்காலப் பாதையை வடிவமைக்கும் பொறுப்பை அவளிடமே ஒப்படைத்தவனின் கடந்த காலத்தை மறக்கவே முயன்று நட்பாக இருந்த இருகுடும்பமும் உறவாக மாறுதல் அடைய காரணியாகிறாள்.
     
  2. storiesdetails

    storiesdetails Junior IL'ite

    Messages:
    96
    Likes Received:
    8
    Trophy Points:
    13
    Gender:
    Female
    கனவுகள் மனதிலே மலருதே – (விஜிபிரபு)
    தொடர்ந்து தன் கதைகளில் குடும்ப அமைப்பில் இருக்கும் சாதகங்கள், உறவுகளுக்கும் இழையோடும் புரிதல்கள், ஒருவருக்காக மற்றொருவர் வாழ்க்கையே என்றாலும் விட்டுக்கொடுக்கும் பாங்கு, காதலை கூட அதிராமல் முழங்கி திருமணபந்தத்தில் இணையும் பொறுமை, குடும்பமே கொண்டாடும் கதாநாயகி, மலரைவிட மென்மையான அவளின் குணமே கண்ணீர் சிந்த வைக்கும் தகிப்பு என்று ஆசிரியர் எப்பொழுதும் எழுதுவதை விட்டுவிடாமல் இந்தக் கதையிலும் கொடுத்திருக்கிறார்.

    இருவேறு துருவங்களில் இருக்கும் இருவர் அருகில் வரும் போது உண்டாகும் சலசலப்பே கதையின் வீரியம்.

    கிராமத்து பெண்ணான பூஜா திடீர் என்று வந்து மோதி விழாமல் இருக்கத் தன்னைத் தாங்கிப்பிடித்தவனிடம் கைநீட்ட அதுவே பெரும் தொல்லையாக மாறிவிடுகிறது.

    தன்னை ஒருத்தி அதுவும் கிராமத்துக்காரி கை நீட்டி அடித்ததைப் பொறுக்க முடியாமல் பழிவாங்க போறேன் என்ற நினைப்பில் அவளை மணமுடிக்க வைபவ் துடித்தாலும் அவன் நிச்சயம் நடக்கும் போதே பிடிபட்டுவிடுகிறது பழி யார் வாங்குவார் என்று.

    தன்னால் முடிந்த அளவு பூஜாவின் மனதை திருமணம் முடிந்து வைபவ் காயப்படுத்தினாலும் பிறந்த வீட்டில் போய் வாழாவெட்டியாக நிற்கமுடியாது அது அவர்களின் மனதை துவளச் செய்யும் என்ற உறுதியில் கணவன் பண்ணும் அனைத்தையும் பொறுத்துக் கொண்டு போவதே அவளின் மீது அவனின் காதல் அதிகரிக்கச் செய்கிறது.

    கதாநாயகிக்கு முதலில் வெண்ணிலா என்று பெயர் வைத்து இருப்பார்கள் போல இரண்டு இடத்தில் அந்தப் பெயர் எட்டி பார்த்துவிடுகிறது.

    பழி வாங்குவேன் என்று செய்த காரியம் தனக்கே திருப்பி அடிப்பதை உணர்ந்தவன் அதை விட்டொழிவதை தவிர வேறு வழியில்லை.

    கதையில் பெரியவர்களுக்குக் கொடுத்த அதிக முக்கியத்துவம் இளையவர்களின் காதலையும் பழிவாங்கும் செயலையும் லேசாக நீர்த்துபோகச் செய்துவிட்டது என்னவோ உண்மை.
     
  3. storiesdetails

    storiesdetails Junior IL'ite

    Messages:
    96
    Likes Received:
    8
    Trophy Points:
    13
    Gender:
    Female
    உன் கைகள் கோர்த்து – ஆர்.மகேஸ்வரி
    ஓர் இடைவெளிக்கு பிறகு தன் தாய் பிறந்த வீட்டு ஆட்களுடன் அவரை மகள் சேர்க்கும் கதை.

    ஆஹா ஒஹோ என்று பெண்ணின் குணத்தைப் புகழ்ந்து விட்டு அதைவிட முக்கியம் அவளின் அழகு என்று சொல்லி அதை மட்டுமே முதன்மைப்படுத்தும் கதாசிரியர் இக்கதையிலும் அதைவிட்டுவிடவில்லை. தன் எழுத்தின் வழியே விவரமானவள் என்று சொல்லி சென்றாலும் கதாபாத்திரம் அரைவேக்காட்டுத்தனமாகக் கதையில் பேசுவது இயல்பாகவே இவர்களின் கதையில் நடந்தேறும் நிகழ்வு. அதுவும் மாறாமல் வருகிறது.

    கிராமத்து பள்ளிக்கு ஆசிரியராக வந்த கார்த்திகா தன் அழகாலும் செய்கையாலும் அவ்வூரையே கட்டிப்போடுகிறாள். ஊரின் ஜமீன் வம்சத்து வாரிசையும் தன் பின்னே அலையவிடுகிறாள்.

    அமெரிக்காவில் தான் தன் வாழ்க்கை என்ற முடிவில் இருந்த அரவிந்தனை இந்தக் கிராமமே உன் அடையாளம் என்ற புரிதலை உண்டாக்கிய கார்த்திகாவிடம் வீழ்ந்துபோனவன் அவளிடம் இருந்து மறுப்பு கிளம்பும் போது ஒதுக்கி வைத்த பழைய நிகழ்வுகள் பெரியவர்களால் தூசு தட்டப்படுகிறது.

    வேற்று ஜாதி பையனை தங்கை திருமணம் செய்தால் என்ற கோபத்தில் அவள் வீட்டை கொளுத்திய அரவிந்தனின் தந்தை இவ்வளவு ஆண்டுகளுக்குப் பிறகு முகத்தில் அந்தத் தழலை வாங்கி அடையாளத்தைத் தொலைத்து போய் இருப்பவளை கார்த்திகாவின் தாயாகப் பார்க்கும் போது தன் தவறின் ஆழம் புரிகிறது.

    குடும்பத்தினருக்குள் மன்னிப்புப் படலம் நடந்தேறிய பிறகு அரவிந்தனின் காதலுக்குச் சரியான பதில் வந்துசேர்கிறது.

    கௌரவகொலையின் பாதிப்புகள். விவசாயிகளின் மகன்கள் தன்னிறைவு அடைய உண்டாக்கிய பாதைகள் என்ற வகையில் தொட்டுச் செல்லும் கருத்துகள் ஏற்புடையவையே.
     
  4. storiesdetails

    storiesdetails Junior IL'ite

    Messages:
    96
    Likes Received:
    8
    Trophy Points:
    13
    Gender:
    Female
    காற்றோடு ரகசிய மொழிகள் - கவி சந்திரா
    மனம் எனும் வெற்றுப் பக்கத்தில் பல வகையான கிறுக்கலின் மூலம் உள்ளுக்குள்ளே சிதைத்துக் கொண்டு இருப்பவர்கள் பெரும் ஆபத்துக்குரியவர்களே.

    கதாநாயகியைக் கொடுமைப்படுத்துவது ஒருவகை ஆளுமை என்று சொல்லப்படும் குரூர வகையில் தான் இந்த கதையும் அடங்குகிறது. இரண்டாம் பாதியில் இருந்து கதாநாயகனின் வடிவமைப்பு ஒருவகை நேர்மையில் அடங்கிவிடுகிறது.

    குடும்பத்தில் ஒவ்வொருவராக இறந்துபோகப் பேரனை மட்டுமாவது காப்பாற்ற வேண்டும் என்ற நினைவில் வெளிநாட்டில் அவனைப் பாதுகாத்தாலும் இந்தியாவிற்கு அவன் திரும்பும் போது தாத்தாவின் பூதவுடலே வரவேற்கிறது.

    தாத்தாவின் இறப்பிற்குப் பின்னே இருக்கும் மர்மத்தை ஆராயும் பிரணப்பிற்கு ஒரு நுனி கூட கிடைக்காமல் போவது தான் பெரும் குழப்பமாக, நடுவில் அவ்வீட்டில் இருக்கும் பெண்ணான இளாவை கொடுமைப்படுத்துவது பொழுதுபோக்காக வைத்துக் கொள்கிறான். திடீரென அவளை மணந்து கொண்டு அதற்கொரு காரணத்தையும் கர்ப்பித்துகொள்ளுபவனிடமே அவளின் மனம் அலைபாய்கிறது. இருவருக்குள்ளும் அமிழ்ந்திருந்த வெளிப்படா காதல் முடிவில் தடையை உடைக்கிறது.

    இறப்புகளுக்கு எல்லாம் காரணம் ஒரு பெண் அதுவும் மனதால் சிதைந்து போனவள் என்று அறியும் போது பேரதிர்ச்சி தான் ஏற்படுகிறது. அந்த பகுதியே இக்கதைக்கு பலம் சேர்க்கிறது.

    வரைமுறையே இல்லாத எண்ணங்களை அடக்கத் தெரியாமல் விடும் போது என்ன மாதிரியான வாழ்க்கையை வாழ முடியும் என்பதைக் காட்டுவதற்கு இக்கதையில் பல கதாபாத்திரங்கள் இருக்கிறது.
     
  5. storiesdetails

    storiesdetails Junior IL'ite

    Messages:
    96
    Likes Received:
    8
    Trophy Points:
    13
    Gender:
    Female
    ரகசியமாய் ரகசியமாய் - மது ஹனி
    முகத்தில் புன்னகையை மட்டுமே காட்டும் மனிதரை எவருக்குத் தான் பிடிக்காது. அம்மாதிரியான மனிதர்களே மற்றவர்களுக்கு ஆறுதலான ஒரு வெளியை ஏற்படுத்துகின்றனர்.

    தான்‌ சந்தித்த பெண்ணை ஒன்பது வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சந்தித்தாலும் கால இடைவெளி அவர்களுக்குள் எழாமல் இயல்பான உரையாடல்களின் வழியே உறவின் பாதையில் அடியெடுத்து வைக்கிறான் விஷ்ணு.

    ஸ்ரீஜா என்ற பெண்ணின் புகழ்பாடுவதற்காகவா இந்த கதை என்ற கேள்வி கண்டிப்பாக மனதில் எழும். அது நியாயமே அதற்கான சாத்தியங்கள் தான் அதிகமாக இருக்கிறது ஆனால் எப்படி அவளை பார்த்தவுடன் மற்றவர்களுக்கு ஒரு ஆறுதல் உண்டாகுகிறதோ அதுபோலவே படிப்பவர்களுக்கும் சென்று சேர வேண்டி எழுதப்பட்டதில் ஒருவகை வெற்றி என்றே சொல்லலாம்.

    மென்மையாக நகரும்‌கதை. ஸ்ரீஜாவின் பக்கம் இருக்கும் ரகசியங்கள் உடைபடும் போது சகமனிதனின் ஆறுதலான ஒரு அரவணைப்பு எவ்வளவு முக்கியம் என்ற உணர்வை எழுப்பிவிடுகிறது.

    காலம் கடந்தே சகமனிதர்களைப் புரிந்துகொள்ளும் சிலரில் ஸ்ரீஜாவின் தந்தையும் அடக்கம். மனித மெல்லுணர்வுகள் காயப்படும் போது அவர்கள் எவ்வளவு வலுவாக உறவுகளை உதறித் தள்ளுகிறார்கள் என்பதற்கு அவர் ஒரு எடுத்துக்காட்டு.

    ஸ்ரீஜாவையும் ஜெய்யையும் ஒரு சேர அணைக்கும் பக்குவம் ஸ்ரீஜாவின் மூலமே விஷ்ணுவிற்குக் கடத்தப்பட்டது என்றால் மிகையல்ல.

    நல்முகத்தை மட்டுமே சமூகத்திற்குக் காட்டச் சொல்லிய கதையில் மழையும் அவ்வப்பொழுது தன்னிருப்பை காட்டி செல்கிறது.
     
  6. SantKana

    SantKana New IL'ite

    Messages:
    3
    Likes Received:
    0
    Trophy Points:
    1
    Gender:
    Female
    Hi all,
    I am new to this IL kindly help me to find the story name it’s been a while ago I read that story
    The story is heroine grandmother died to save the hero’s anni, then hero anni help heroine for her studies mean while hero fallen in love heroine refused his love and heroine joined the medical college and hero become the IPS officer in hero’s sister marriage he forcefully marry the heroine every one hate heroine from hero family later they both love each other and family accept too
     
  7. storiesdetails

    storiesdetails Junior IL'ite

    Messages:
    96
    Likes Received:
    8
    Trophy Points:
    13
    Gender:
    Female
    இது ஒரு தொடர்கதை - கலைவாணி சொக்கலிங்கம்
    மணவிலக்கு என்ற பதம் எப்பொழுதும் ஏதோ ஒருவருக்கு மாபெரும் துன்பியலை தான் வழங்கி வருகிறது.

    மனதைக் கசக்கிப் பிழியும் துன்பத்திலிருந்து விடுதலையாக ஒரு வாய்ப்பாக அது அமைகிறது என்றாலும் அதன் சதவீதம் மிகக் குறைவே. மாற்றங்களின் வடிகாலாக மணவிலக்கைக் கோருபவர்கள் நிதர்சனத்தின் பளுவைத் தாங்கமுடியாமல் அதுவே மற்றொரு அழுத்தத்தைக் கொடுக்கும் போது முன்பிருந்த வாழ்வே சொர்க்கம் என்று தெரிவது போல் எழுதப்படும் குடும்ப நாவல்களே அதிகம். இந்த கதையும் அம்மாதிரியான வகையில் தான் அடங்கும்.

    வலியத் திணிக்கப்பட்ட திருமணம் மட்டுமில்லாமல் கனவுகளுடன் இருப்பவளுக்கு அதைப் பொசுக்கும் போது உண்மை நிலவரத்தை எடுத்துரைக்காத பலனை முப்பது ஆண்டுகள் கடந்து அனுபவிக்கிறார் வாமனன்.

    மகளின் எதிர்காலத்தை முன்னிட்டு வந்தனாவின் தந்தை எடுத்த முடிவைக் கணநேர தீர்ப்பாக மட்டுமே அவள் பார்ப்பதை மாற்ற முடியாமல் அவள் போக்கிலே கணவன் விட்டுவிடுவது அவரின் தவறாகவே படுகிறது. அதன் முடிவு அறுபத்தி இரண்டு வயதில் விவாகரத்து வாங்கி குறுகிப்போகிறார்.

    தாய் தந்தைக்குள் இருக்கும் இடைவெளிகளை எதுவுமே தெரியாமல் வளர்ந்த மீராவிற்கு அவர்களின் விவாகரத்து பேரிடியாக விழுந்தாலும் தந்தையின் பக்கம் அவள் சாய அன்பு என்ற பற்றே காரணமாகிறது.

    மகள் தன் எல்லைக்குள்ளே நிற்கிறாள். தராசை உயர்த்தி பிடிக்காமல். அவர் அவர்கள் வாழ்வு அவர்களின் விருப்பம் என்ற அவளின் முடிவு தாய் வந்தனாவை கனவுலகிலிருந்து நிகழ்காலத்திற்கு இழுத்துப் போடுகிறது.

    ஏமாற்றத்திலும் துரோகத்திலும் மாட்டி அவதிப்படும் நேரத்திலே சகமனிதர்களின் தேவையை உணருகிறோம். வந்தனாவிற்கு அப்படிப்பட்ட சூழல் ஏற்படும் போது கணவனாக இல்லாமல் மீராவின் அப்பாவாகவாவது வாமனனின் துணை தேவைப்படுகிறது.

    கொடுத்தே பழக்கப்பட்ட வாமனனுக்கு தன் முன் கையேந்தும் பெண் மனைவியாக இல்லாமல் மாமனின் மகளாகவே தெரியும் போது தன் விருப்பம் என்ற ஒன்று முற்றிலும் அவரிடம் இருந்து விலகிப் போகிறது.
     
  8. storiesdetails

    storiesdetails Junior IL'ite

    Messages:
    96
    Likes Received:
    8
    Trophy Points:
    13
    Gender:
    Female
    மழை மோகினி -எஸ்.பாலசுப்பிரமணியன்
    ஒரு நல்ல டைம்பாஸ் நாவல் என்றே இதைச் சொல்லலாம்.

    ஆந்திர மலைகிராமத்தில் கொத்தடிமைகளாக மக்கள் நடத்தப்படுவதைக் கேள்விபட்டு அரசாங்கம் அவர்களுக்காகத் தீப்பெட்டி தொழிலை கற்றுகொடுத்து வேலைக்கு அமர்த்தியதில் இடைஞ்சல் வருகிறது. அங்கே மேனேஜராகப் பணிபுரிந்த கணேஷ் என்பவன் காணாமல் போவதால் சத்யா வேலைக்கு அமர்த்தப்படுகிறது.

    சத்யா இரயிலில் இருந்து இறங்கிய நொடி தொடங்கி அவனைப் பயப்படுத்துவது மாதிரி அமானுஷ்யங்கள் நடந்து கொண்டே வருகிறது. மீண்டும் தீப்பெட்டி தயாரிக்கும் தொழிலை மேற்கொள்ள ஆட்களைப் பிடிப்பதில் செங்கம்மாவின் அறிமுகமும், அமானுஷ்யங்களின் வேரும் புரியத் தொடங்குகிறது.

    ஊரில் ஜமீன் வாரிசுகள் என்று இருவர் சண்டை போட்டுக்கொண்டு தீப்பெட்டி தயாரிக்கும் அந்த அரண்மனை தங்களுக்கே சொந்தம் என்று கோர்ட் வரை போராடி கொண்டிருக்கும் நேரத்தில் சத்யாவின் பிரசன்னம் அவர்களுக்குத் தொல்லையாகிறது.அதில் ஒருவன் சூர்யநாராயணன் முழுக்க முழுக்கச் சத்யாவிற்கு உதவுவது போலவே பேச்சாலே அவனை வளைத்துவிடுகிறான்.

    ஐம்பது ரூபாய் கடனுக்காக மூன்று தலைமுறைகளாக மலைவாழ் மக்களைக் கொத்தடிமைகளாக நடத்தி காட்டின் உள்ளே வைத்திருப்பதைக் கண்டுபிடித்த சத்யா அதை அரசாங்கத்திற்குத் தெரியப்படுத்திய பிறகு சூர்யநாராயணிடம் அகப்பட்டுப் போகிறான்.

    தீப்பெட்டி தயாரிக்கும் அந்த அரண்மனையில் புதையல் இருப்பது வழி வழியாக அவர்களின் தலைமுறையில் சொல்லப்பட அதைத் தேடுவதற்குள்ளே ஆங்கிலேயரால் அந்த அரண்மனை கையகப்படுத்தி அரசாங்கத்திற்கு அதன் பிறகு போனதை தாங்க முடியாமல் முன்பு இருந்த மேனேஜர் கணேஷைக்கு இந்தப் புதையல் பற்றிச் சந்தேகம் வந்ததால் கொலை செய்ததை ஒத்துக்கொண்ட சூர்யநாராயணன் சத்யாவையும் கொலை செய்ய முயலும் போது செங்கம்மாவால் புதையல் இருக்கும் இடம் தெரிந்து கொண்டவன் அதனுள் நுழையும் போது அவளால் வழி அடைக்கப்பட்டுச் சத்யாவிற்காக எழுதிய இறுதி முடிவில் தானே எரிந்து போகிறான்.

    சூர்யநாராயணனை காப்பாற்ற சத்யா முயன்றாலும் தீ நாக்கு அவனை அரண்மனைக்கு நெருங்கவிடவில்லை.
     

Share This Page