1. The Great Big Must Read List : Find Interesting Book Suggestions
    Dismiss Notice
  2. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

tamil novel lovers

Discussion in 'Books & Authors in Regional Languages' started by deepthiraj, Jun 26, 2014.

  1. storiesdetails

    storiesdetails Junior IL'ite

    Messages:
    96
    Likes Received:
    8
    Trophy Points:
    13
    Gender:
    Female
    நீயின்றி நானில்லை செந்தேனே – (எஸ்.பர்வின் பானு)
    லிங்க் : https://www.amazon.in/gp/product/B07ZHLB4FT

    காதலிப்பதை இன்னும் பாவச் செயலாகப் பார்ப்பது நடக்கத்தான் செய்கிறது. அதுவும் திருமணத்தில் முடியாத காதலர்களைக் கேலிகூத்தாக்கி அதன் மூலம் தங்களை நீதி அரியணையில் அமர்த்திக் கொள்பவர்களுக்குத் தெரிவதில்லை வார்த்தையினால் உண்டாகும் வலிகள்.

    மாமா பெண்ணைக் காதலிக்கும் திவாகருக்கு இவ்வளவு ஆண்டுகள் கூடவே வந்த அதிர்ஷ்டம் காதலில் கைகொடுக்கவில்லை.

    எப்பொழுதும் போராடியே அமையும் ஒவ்வொரு செயலையும் எதிர்கொண்ட நளனுக்குத் திருமணமும் மணப்பெண் ஓடியதால் ஒரு குழப்ப சூழலை உண்டாக்கதன் தம்பியின் காதலி என்று தெரியாமல் பெரியவர்கள் முன்னிருத்திய மாமா பெண்ணின் கழுத்தில் தாலியை கட்டிவிடுகிறான்.

    திருமணத்திற்குப் பின் தெரியும் மனைவியின் காதலுக்கு என்னவிதமான உதவி செய்ய வேண்டும் என்ற தெளிவும் நளனுக்கு இருக்கிறது. காலம் அனைத்தையும் மாற்றும் என்ற நளனின் நம்பிக்கை பொய்த்துப்போகாமல் காதல் தோல்வியில் இருந்து மீண்டு திவாகர் தனிப்பட்ட வாழ்வில் நிறைவான குடும்ப அமைப்பை எட்டிவிடுகிறான்.

    நளனின் செய்கையால் அவன் மீது இருக்கும் மதிப்பில் இருந்து மெல்ல காதல் நோக்கி நகரும் அவனின் மனைவி முழுமையாக அவனுடன் இணையக் காத்திருக்கும் வேளையில் சமூகம் சுட்டிக்காட்டியதை பிடித்துக்கொண்டு தவறு செய்துவிட்டோம் என்று குறுகி போய் மாயமாகிறாள்.

    புரிதலும் நிதானமும் கொண்ட நளனுக்குக் குடும்ப வாழ்வு என்றாவது சிறக்கும் என்ற நினைப்பு ஆழ்மனதில் பதிந்து காத்திருத்தலை முழுமனதுடன் ஏற்கவைக்கிறது.
     
  2. storiesdetails

    storiesdetails Junior IL'ite

    Messages:
    96
    Likes Received:
    8
    Trophy Points:
    13
    Gender:
    Female
    உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் – (ரமணிசந்திரன்)
    லிங்க் : https://www.amazon.in/gp/product/B07T136L36

    காதலின் மெல்லுணர்வு வெளிப்படும் நேரத்தை அறுதியிட்டு கூறமுடிவதில்லை அதுபோலவே எவரிடத்தில் அது தோன்றும் என்றும் சொல்லமுடிவதில்லை.

    மூன்று தலைமுறைகளாக நட்பாக இருக்கும் குடும்பத்தின் தற்போதைய தலைமுறையைச் சேர்ந்த பெண்களான பானுசித்ராவும் மனோகரியும் இரட்டையர்கள் போலவே பழகிவருகின்றனர்.

    பானுசித்ராவிற்குப் பெற்றவர்கள் பார்த்த மாப்பிள்ளையான வினோதனை பிடித்து இருந்தாலும் அவனின் விலகல் குழப்பத்தையே உண்டாக்குகின்றன.

    ஊட்டிக்கு வினோதன் வந்து இருப்பதைக் கேள்விபட்டவள் தன் மனகுழப்பத்திற்கான விடைதேடி அங்கே வருகிறாள்.தங்கி இருக்கும் ரிசார்ட்டின் உரிமையாளனான ஜெயதேவனுக்கு உதவும் சூழல் உண்டாகும் போது இருவருக்குள்ளும் காதலும் மலர்ந்துவிடுகிறது.

    பானுசித்ராவை பெண் பார்க்க வந்த போது சந்தித்த மனோகரியை விரும்பத் தொடங்கிய வினோதன் அதை எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியாமல் தயங்கியபடியே இருந்தது தான் பெரும் குழப்பத்தை உண்டாக்கும் சூழலை ஏற்படுத்தியது என்றாலும் பெண்கள் இருவருக்கும் இடையேயான நட்பு அவர் அவர்களின் காதலை புரிந்து கொள்கிறது.

    தோழிகள் இருவரும் தாங்கள் விரும்பியவர்களின் கரம் பற்றுகின்றனர்.
     
  3. storiesdetails

    storiesdetails Junior IL'ite

    Messages:
    96
    Likes Received:
    8
    Trophy Points:
    13
    Gender:
    Female
    வெண்ணிலவே தன்மதியே – (எஸ்.பர்வின் பானு)
    லிங்க் : https://www.amazon.in/gp/product/B083347FPL

    விருப்பமில்லாத திருமணம் அதுவும் கௌரவத்தைக் காக்க ஒரு வார்த்தை கூடச் சம்மதத்தை எதிர்பார்க்காமல் பலியாடு மாதிரி படையல் போட முன்னிருத்தும் சூழலை எதிர்கொண்டாலும் அதில் ஒரு பிடித்தத்தை உள்ளுக்குள் கொண்டு வரும் மாயை காதலுக்கு உண்டு.

    சொந்தமே என்றாலும் அபிக்கும் தூரிகாவிற்கும் ஒத்து போவதே இல்லை. இரு குடும்பங்களுக்குள் இருக்கும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும் ஒரு காரணம்.

    பெரியவர்களுக்கு ஓர் ஆசை, ஆனால் அபியின் ஆசை அவர்களின் ஆசைக்கு நேர் எதிர்.

    தான் பல வருடங்களாகக் காதலித்தவளை கரம் பிடிக்க மணமேடையில் உட்கார போகும் நேரத்தில் அவளின் கனவான மாடலிங் துறையில் கிடைத்த வாய்ப்பை பிடித்துக் கொண்டு திருமண வாய்ப்பை உதறி தள்ளியவளால் அவமானத்தைச் சந்தித்த அபிக்கு மற்றொரு இடியாகப் பெரியவர்கள் அனைவரும் சேர்ந்து தூரிகாவை அவனுக்கு மனைவியாக்கிவிட, காதல் தோல்வியுடன் பிடிக்காமல் போனவளுடன் ஒரு பந்தம் என்று குழப்பதிலே சில நாட்கள் தள்ளினாலும் முடிவில் எவளுடன் தன் வாழ்வு செழிப்பாக இருக்கும் என்ற முடிவை எட்டும் வேளையில் காதலியின் பிரசன்னம்.

    அபி தனக்குள்ளே ஓர் ஒப்பீட்டை உருவாக்கி எந்தப் பக்கம் சாய வேண்டும் என்று முடிவெடுக்கும் போது ஈகோ அங்கிருந்து காணாமல் போகிறது.
     
  4. storiesdetails

    storiesdetails Junior IL'ite

    Messages:
    96
    Likes Received:
    8
    Trophy Points:
    13
    Gender:
    Female
    காதல் ராசி – (ஹன்சிகா சுகா)
    லிங்க் : https://www.amazon.in/gp/product/B082Y16GWN

    பதட்டத்தில் வார்த்தையை விடுபவர்கள் அதன் பின் இயல்பு நிலைக்கு மீளுவது ஒரு பக்கம் என்றால் அதைக் கேட்பவர்களுக்கு வலியின் தாக்கத்தில் துவண்டு போவது மறுபக்கம் என்று சென்றாலும் குற்றவுணர்வு இருசாரரையும் ஒரே நேரத்தில் தாக்கி துவண்டு போகச் செய்யும் உணர்ச்சியையும் மறுக்க முடியாது.

    கூட்டுக் குடும்பமாக இன்பமாகச் செல்லும் வீட்டில் அடுத்த வாரிசுகளுக்குச் சொத்துச் சேர்ப்பதில் பிரச்சனை எழ அவ்வீட்டின் தலைவனைப் பார்த்துக் கேட்கப்படும் ஒரு சொல் அவரின் உயிரை எடுப்பதுடன் குடும்பப் பிரிவுக்கும் வழி வகுத்து விடுகிறது.

    கௌரவக் கொலைகளின் சூழலும் இளைய தலைமுறை காதலால் கதையில் லேசாக எட்டிப் பார்க்கிறது.

    மதியின் காதல் அதைச் சுற்றிப் பின்னப்பட்ட காட்சிகளும் கதையின் ஆதாரம்.
     
    MuraliJK likes this.
  5. storiesdetails

    storiesdetails Junior IL'ite

    Messages:
    96
    Likes Received:
    8
    Trophy Points:
    13
    Gender:
    Female
    தொடுவானம் என்னருகில் – (சத்யா இராஜ்குமார்)
    தவறுசெய்யாமல் தங்கள் குடும்பம் பாதிக்கப்பட்டதால் அதற்குச் சம்மந்தமானவர்களைப் பழிவாங்குவேன் என்று கிளம்பும் மூர்க்கத்தனம் உண்மை விவரத்தை ஆராய விடாது.

    பழிவாங்கும் செயல் அந்நேரத்து மனநிம்மதியை கொடுத்தாலும் அதன் பிறகான மனஉளைச்சல் காலம் முழுவதும் தொடர்ந்து வரும்.

    ஊரின் பொதுச் சொத்தாக இருந்த பணத்தைக் கையாலடல் செய்தார்கள் என்று குற்றம் சாட்டப்பட்டதால் தாத்தாவும் பெரியப்பாவும் விஷம் அருந்தி இறந்து போனதற்குப் பழிவாங்க அந்தத் தீர்ப்பை சொன்ன குடும்பத்தைப் பழிவாங்க முப்பது வருடங்களுக்குப் பிறகு அவ்வீட்டின் பெண்ணான அனுவை தேடி காதலித்து மணந்து தன் வீட்டிற்குக் கொண்டுவருகிறான் ஆதி.

    பல கனவுகளுடன் வந்த அனுவிற்கு அக்குடும்பமே துன்பத்தைத் தர, தானா தேடிய வாழ்வு என்பதால் அனைத்தையும் பொறுத்துக் கொண்டே அங்கேயே இருக்கிறாள் தன் வீட்டினருக்கு எதுவும் தெரியப்படுத்தாமல்.

    குற்றம் செய்தவன் தன் சித்தப்பா என்றும் தாத்தா பெரியப்பா இறப்பு தற்கொலை அல்ல அதைச் செய்தவனும் சித்தப்பா தான் என்று அறிந்த பிறகு ஆதியின் மனம் பாதிப்படைந்து தன் செய்கைக்கு மன்னிப்பு கேட்டவனை மன்னிக்கும் அனுவின் மனமே அவனைப் பெரிதும் தண்டனைக்கு உள்ளாக்குகிறது.

    தன் தவறுக்குப் பிராயசித்தமாக அனுவை பிரிய வேண்டும் என்று முடிவெடுப்பவனைத் தன் காதலால் அதை மாற்றியமைக்கிறாள் அவள்.
     
  6. storiesdetails

    storiesdetails Junior IL'ite

    Messages:
    96
    Likes Received:
    8
    Trophy Points:
    13
    Gender:
    Female
    பூ வாசம் புறப்படும் பெண்ணே – (ஜி.சியாமளா கோபு)
    லிங்க் : https://www.amazon.in/gp/product/B081W9Q8P9

    நமக்கு நடக்கும் சம்பவங்களை மட்டும் கொண்டு வாழ்க்கையை வாழ கற்றுக் கொள்வதில்லை தவறுகளின் வழியே மற்றவர்கள் தத்தளிப்பதை பார்த்தும் வாழ்க்கை பாடம் கற்றுகொள்பவர்கள் ஏராளம்.

    கணவன் தவறான வழியில் போவதால் மனைவியும் அவனுக்குப் போட்டியாக வேற வழியில் போக அவர்களின் மூன்று குழந்தைகளின் நிலைமை கேள்விக்குறியாகிறது. நல்ல உள்ளங்கள் சிலரின் உதவியால் திருந்திய மோகன் தன் குழந்தைகள் மூவருக்கும் எல்லாமுமாகிறான்.

    தந்தை மோகனின் அரவணைப்பிலே வளரத் தொடங்கிய ஸ்வேதாவிற்குப் பருவ கிளர்ச்சியால் ஈர்ப்பை காதல் என்ற அளவில் புரிந்து கொண்டு அதில் வீழ்ந்து மாயஇன்பத்தில் திளைப்பவள் விரைவிலே அதிலிருந்து மீண்டும் விடுகிறாள்.

    ஸ்வேதா வளர்ந்த பிறகு கதை முழுகுடும்ப நாவல் என்ற வரையறைக்குள் வந்துவிடுகிறது.

    ஸ்வேதாவின் அண்ணனின் காதல் இவளுக்கும் அவனுக்கானவனை முன்னிறுத்திவிடுகிறது.

    பல சிறுகதைகளின் சேர்க்கை தான் நாவல். கதாபாத்திரங்களின் பின்புல கட்டமைப்பு, உணர்ச்சிகர நிகழ்வு என்று தனித்தனி காட்சிகள் கூடும் போது நாவல் என்ற பதத்தில் விரிவடைகிறது.

    இந்தக் கதையில் வரும் சின்னச் சின்னக் கதாபாத்திரங்கள் கூட ஒரு சிறுகதையின் நிகழ்வாகவே மனதில் பதிகிறது.

    ஸ்வேதாவின் சிறுவயது நிகழ்வு, ஸ்வேதாவின் ஈர்ப்பு, ஸ்வேதாவின் சஞ்சலம், இளங்கோவுடனான ஸ்வேதாவின் காதலும் திருமணமும் என்று நீளும் சிறு சிறு பகுதிகள் மனித மனங்களின் வெளிச்சமாகிறது.
     
  7. storiesdetails

    storiesdetails Junior IL'ite

    Messages:
    96
    Likes Received:
    8
    Trophy Points:
    13
    Gender:
    Female
    கனவோ இது நனவோ – (சத்யா இராஜ்குமார்)
    கண்ணெதிரே தன் தாய்க்கு நடந்த அவமானங்களைப் பார்த்தவர்களால் அதற்குக் காரணமானவர்களைச் சுலபத்தில் மன்னிக்க முடியாது என்னதான் அவர்களின் பக்க நியாயத்தை எடுத்துரைத்தாலும்.

    தன் தந்தைக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதே தாயின் உடலையும் மனதையும் அரித்து இவ்வுலகை விட்டே அவரை அனுப்பிவிட்டது என்ற கோபத்தில் தந்தையிடம் இருந்து பிரிந்து அத்தையின் வீட்டில் வேலைக்காரியாக இருக்கும் வினயா தனக்கு அங்கேயும் பாதுகாப்பில்லையென்று வெளியேறுகிறாள்.

    சிவானந்தன் வீட்டில் அவனின் உடல்நலம் குன்றிய தாயை பார்த்துக் கொள்ள வந்த வினயாவை முதலில் பிடிக்காமல் போனாலும் அதன் பிறகு அவளிடம் தன்னைத் தொலைத்து மனைவியாக்கியவன் அவளின் தந்தையுடன் வினயாவிற்கு இருக்கும் பிணக்கை சரிசெய்கிறான்.
     
  8. storiesdetails

    storiesdetails Junior IL'ite

    Messages:
    96
    Likes Received:
    8
    Trophy Points:
    13
    Gender:
    Female
    சந்திராழினி– (அருணா கதிர்)
    லிங்க் : https://www.amazon.in/gp/product/B0833CWVJ1

    சகோதரிகள் என்றாலும் இருவருமே தனித் தனிப்பட்ட மனுஷிகள் தான் . இயல்பாகத் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளும் செய்கைகள் எழும். அது அடுத்தவரின் வாழ்க்கையில் விளையாடாதவரைப் பொறாமை என்ற வட்டத்திற்குள்ளேயே அடைபடும் மீறி எழுதும் போது வன்மம் என்ற வார்த்தை உயிர்பெறுகிறது.

    சந்தியாவிற்குப் பக்கத்து வீட்டு நண்பர் பருவ வயதில் காதலனாகத் தெரிந்தாலும் தங்களின் வயதைப் புரிந்து கொண்டவர்கள் அன்பை மட்டுமே பற்றிக்கொள்ள அக்காவின் பல காதல் பிரச்சினை இவர்களின் அன்பை நாடகமாக்கியதைச் சொல்லும் கதை.

    தங்கையே என்றாலும் அனைவரும் சந்தியாவைக் கொண்டாடுவதைப் பிடிக்காத யாழினி அவளின் காதலனும் தன் நண்பனுமான ராமைப் பற்றி தவறான புரிதலை குடும்பத்தில் ஏற்படுத்திவிட்டு தன் வாழ்க்கையை மட்டுமே பார்க்கும் குறுகிய கண்ணோட்டம் கொண்டவளுக்கு நிறைவான வாழ்வே அமைகிறது.

    பள்ளிப் பருவத்தில் வந்த காதல் தானே பிரிந்த பிறகு அது மனதில் தங்கவே இல்லை என்ற சந்தியாவின் எண்ணத்தை உடைத்து நொறுக்குகிறது ராமுடனான திடீர் சந்திப்பு.

    தன் தாயின் மனதில் ராமைப் பற்றி அக்கா தூவிய விஷ விதை விருட்சமாக வளர்ந்து இருப்பதை அறிந்திருந்தாலும் அவனை விடுத்து தனக்கொரு வாழ்வு இல்லை என்ற தெளிவு வந்த பிறகு தன்னால் முடிந்த முயற்சி செய்பவள் உறவுகளையே வெறுத்துப் போகும் அளவிற்கு மற்றவர்களின் நடத்தை இருக்கிறது.

    மனிதர்களை அரவணைத்துப் போகும் சந்தியாவிற்குத் தடைகள் ஏற்பட்டாலும் திருமணம் அவளின் ஆசைப்படியே நடக்கிறது.

    யாழினி மாதிரியான மனிதர்களை நாம் அனைவருமே கடந்து வந்திருப்போம். அவர்களை ஞாபகப்படுத்தி விடுகிறது தான் இக்கதையின் பலம்.

    சந்தியா - ராம் இருவரின் புரிதல் அழகிய கவிதை.
     
  9. storiesdetails

    storiesdetails Junior IL'ite

    Messages:
    96
    Likes Received:
    8
    Trophy Points:
    13
    Gender:
    Female
    வசந்தமென வந்தவளே – (சத்யா இராஜ்குமார்)
    அபிரிமிதமான அன்பை வைத்திருக்கும் ஒருவர் தன்னை மற்றவர்கள் சொல் பேச்சு கேட்டு சந்தேகப்படுகிறார் என்று அறியும் நொடியே உள்ளுக்குள் இருக்கும் அன்பு சரியத் தொடங்கிவிடுகிறது.

    திருமணமே வேண்டாம் என்றிருந்த ஜீவானந்தன் பெற்றவர்களின் தொடர் வற்புறுத்துதலால் விஷாலினியை மணந்து கொள்கிறான்.

    திருமண வாழ்வில் இருக்கும் எதிர்பார்ப்புகளுடன் புகுந்த வீட்டில் காலெடி எடுத்து வைத்த விஷாலினிக்கு பெரிதும் ஏமாற்றமே கிடைக்கிறது.நாட்கள் செல்ல தம்பதிகளுக்குள் இணக்கமான சூழல் ஏற்பட்டுக் காதலில் கட்டுண்டு போகின்றனர்.

    தந்தை தொழிலை திறன்பட ஏற்று நிர்வகிக்கும் ஜீவானந்தத்திற்குப் பணநெருக்கடி ஏற்படும் போது உடன்பிறப்புகளின் விலகல்கள் யதார்த்தத்தை எடுத்துரைக்கிறது.

    ஜீவானந்தத்தின் தந்தை தானும் சுயநலமாக இருப்பது போல் காட்டிய பாவனை அவ்வீட்டில் இருக்கும் அவரின் மற்ற மகன்களுக்குப் பிடிக்காமல் போக வீட்டின் மூத்த மருமகளான கல்யாணி விஷாலினியால் தான் இவ்வளவு பிரச்சனைகள் என்று காரணத்தைக் கற்பித்துக்கொண்டு அவளை வீட்டில் இருந்து வெளியேற்ற செய்த சூழ்ச்சியில் தம்பதிகளுக்குள் கருத்து வேற்றுமை எழுந்து பிரிவு வரை செல்கிறது.

    தன் அண்ணியால் தான் தவறே செய்யாத மனைவியின் மீது வீண்பழி சுமத்த நேர்ந்ததைத் தெரிந்த பிறகு மன்னிப்பை யாசிப்பவனுக்கு அதை வழங்குகிறாள் விஷாலினி.

    குழந்தையின் வரவு பெற்றவர்களுக்கான பிணக்கை சரிசெய்கிறது.
     
  10. storiesdetails

    storiesdetails Junior IL'ite

    Messages:
    96
    Likes Received:
    8
    Trophy Points:
    13
    Gender:
    Female
    அனித்ராவின் வெற்றிகள் – (அருணா கதிர்)
    லிங்க் : https://www.amazon.in/gp/product/B0833BC6VN

    முதல் பார்வையில் எதிர்பாலினத்தைப் பார்க்கும் போது தோன்றும் சலனம், ஈர்ப்பு என்று எந்த வார்த்தையில் வேண்டுமானாலும் சொல்லப்படும் உணர்வை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்து செல்ல அதன் மீது ‘ஆர்வம்’ என்ற தாக்கம் தேவைப்படுகிறது.

    தன் வேலை விஷயமாகவே சந்தித்த வெற்றியின் மீது லேசான பார்வையை உன்னிப்பாக நோக்கிய அனித்ராவிற்கு எதிர்பக்கத்திலிருந்தும் கூரிய அறுதி முடிவாக வந்த பதில் பதட்டத்தை உண்டாக்கினாலும் தனக்குப் பிடிக்கிறது என்பதால் வீட்டிற்கே நண்பனாக வர வைத்தவளின் காதல் அனைவருக்கும் தெரிய வருகிறது.

    எந்த வித பிரச்சனைகளும் எழாது என்று நிலையில் அமைச்சரின் மகன் வெற்றி என்ற பின்புலம் அனித்ராவின் மண்டையில் புகுந்து நிலையின்மையைத் தோன்றுவித்து விலக இருப்பவளை அவசர அவசரமாகத் தன் பாதியாக்க வெற்றியை தூண்டிவிடுகிறது.

    இரண்டே பேர்கள் அவர்களின் தடுமாற்றமும், காதலும் அதன் பிறகான வாழ்வும் என்பதுடன் முடிகிறது.

    மென்மையாக நகரும் கதையை விரும்புவர்களுக்கு ஏற்றது இக்கதை.
     

Share This Page