1. The Great Big Must Read List : Find Interesting Book Suggestions
    Dismiss Notice
  2. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

tamil novel lovers

Discussion in 'Books & Authors in Regional Languages' started by deepthiraj, Jun 26, 2014.

  1. storiesdetails

    storiesdetails Junior IL'ite

    Messages:
    96
    Likes Received:
    8
    Trophy Points:
    13
    Gender:
    Female
    பன்னீர் புஷ்பங்கள்... – (விஜிபிரபு)
    லிங்க் : https://www.amazon.in/பன்னீர்-புஷ்பங்கள்-PANNEER-PUSHPANGAL-Tamil-ebook/dp/B07Z914C3V

    எழுத்தாளர் தன் எழுத்துநடையை இம்மியளவு கூட மாற்றாமல் கொடுத்திருக்கும் கதை. வழக்கம் போல ஜமீன்தார் வம்சத்து வாரிசுகள், கூட்டு குடும்ப எத்தனங்கள்.

    தன் ஊருக்கு வந்த பேங்க மேனேஜர் மீராவை பார்த்த நொடியிலே மயங்கிய வசந்தன் அவளைக் காதலிக்கவும் தொடங்கித் தன்னைக் காதலிக்கவும் வைத்து விடுகிறான்.

    கூட்டுக் குடும்பமாக வாழும் வசந்தன் வீட்டு அருகில் இருக்கும் சிவகாமி அவனின் செல்ல ஆன்ட்டி ஆகினாலும் அவனின் அத்தையால் சிவகாமியை தவறாகவே எண்ண முடிகிறது. தன் இரு மகள்களையும் அண்ணன் மகன்களுக்கே கட்டி வைத்து மூன்றாவது மகளை வசந்தன் திருமணம் செய்யும் நாளுக்காகக் காத்திருக்க, மீராவின் வருகை அந்தக் குடும்பத்தில் பிளவை உண்டாக்கிவிடுகிறது.

    பணத்தை உச்சமாகக் கருதி அண்ணன் தன்னுடன் விளையாடியதை வெறுத்து ஒதுக்கிய வசந்தன் பெற்றவர்களுடன் சேர்ந்து அவர்களிடமிருந்து விலகி மீராவை கைத்தலம் பற்றும் நேரத்தில் தன் தாத்தாவின் அந்தரங்கத்தில் மலர்ந்த பூ தான் சிவகாமி என்று தெரிந்து கொள்கிறான்.
     
  2. storiesdetails

    storiesdetails Junior IL'ite

    Messages:
    96
    Likes Received:
    8
    Trophy Points:
    13
    Gender:
    Female
    இமாலயன் – (திவாகர்)

    பிறப்பின் பயனையும் தன்னால் ஆன உதவியை மற்றவர்களுக்குச் செய்ய முயலும் மனமும் உடலுமே காலத்தை வென்று இப்புவியில் நின்றதற்கு ஒரு நியாயம் செய்கிறது.

    பதினாறாம் நூற்றாண்டின் முடிவின் தொடர்ச்சியாகப் பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஓர் அத்தியாயம் எழுதப்படுகிறது.அது கடவுளின் சித்தம் என்றாலும் மானிட அழிவிற்கு மனிதர்களாலே உண்டாக்கப்படும் அழிவு ஒன்றை தடுத்து நிறுத்த தன்னிடம் அடைகலமான மானிடனையே அனுப்பி வைத்து காப்பதை அவர் அவர்களின் நம்பிக்கையைக் கொண்டே அது எது என்று உணரலாம்.

    பாண்டிய வாரிசான வரகுணன் அரசாங்க விஷயங்களிள் இருந்து ஒதுங்கி தன் குருவுடன் பயணத்தில் இருப்பவனுக்கு உடலை வெல்லும் சக்தி குருவால் வழங்கப்படுகிறது.தன் துணையான ஷெண்பகாவும் அந்தச் சக்தியை பெற அழைத்து வந்தவனை இயற்கை வென்று காட்டாற்றில் அவளை மடிந்து போகச் செய்து விடுகிறது.இது நடைபெறும் ஆண்டு 1696.

    காலமாற்றங்கள் நடந்தேற கதையின் தொடக்கம் 1959ம் ஆண்டில் இருந்து தொடங்குகிறது. இந்தோ-சீனா போர் நடந்த காலகட்டத்தைக் கதையின் மையமாகக் கொண்டு அந்த நாட்களில் நடந்த அரசியல் நிகழ்வுகளின் பின்னணியில் கதைமாந்தர்களின் இன்ப துன்பங்கள்,காதல்,அன்பு,ஏமாற்றம், துரோகம்,நாட்டுப்பற்று என்ற பலவகை உணர்ச்சிகளை ஒரு சேர கொடுத்த புதினம் தான் இந்த இமாலயன்.

    உளவுதுறையில் இருக்கும் சுப்பு தன் குருவாக ஏற்றுக் கொண்டு ‘ஜி’ என்று அழைப்பவரின் ஆணைக்கிணங்கவே அனைத்தும் செய்து முடிக்கிறார்.உலக விஷயங்களைக் கற்றுக் கொள்ளத் தன்னிடம் இருந்த மாறனை சுப்புவின் மகளிடம் அனுப்பி வைக்கிறார் ‘ஜி’.

    பச்சை உடல் கொண்ட மாறன் தற்கால அனைத்தையும் சுப்புவின் மகளான ஹரிஷாவின் துணையால் கற்றுத் தேர்கிறான்.இந்திய எல்லையில் போதை மருந்து கும்பலை பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபடும் அதிகாரியான ரவி அவர்களின் பிடியில் அகப்பட்டு உடல்நல குறைவாக இருப்பதால் ஆள் மாறாட்டத்தின் மூலம் மாறனை ரவியின் இடத்தில் வைத்து தான் தீட்டிய திட்டத்தை வெற்றியடைய வைக்கிறார் சுப்பு.இதுவும் ‘ஜி’யின் அறிவுறுத்தலாலே.

    எதிரிகளால் தன் முகம் சிதைந்து போனதை மீட்டெடுக்கும் முயற்சியில் தன் இடத்தில் மாறனை இருக்க வற்புறுத்திய ரவி சிகிச்சைக்காக அந்த மலைவாசத்திலே பழங்குடிகளுடன் தங்கிப் போகிறான்.

    ரவியின் இடத்திற்கு வந்த மாறன் விமானபடையைப் பலமாக்குகிறான் மற்ற வல்லரசு நாடுகளின் துணைக் கொண்டு.இரண்டு வருடத்தில் மாறன் செய்த செயல்கள் மிகப் பெரியது என்றாலும் அனைத்தும் ரவியின் பெயரிலே அடங்கிவிடுகிறது.

    தன்னைப் பார்ப்பவர்கள் அனைவரையும் வசீகரிக்கும் மாறனை பிடிக்காதவர்கள் என்று ஒருவருமில்லை.

    தன் முகத்தைப் பழையபடி சீர்படுத்திக் கொண்ட ரவி மீண்டும் தன்னிடத்திற்கே வந்து சேர்கிறான்.அதற்குள் தலாய்லாமாவிற்கு அடைகலம் கொடுத்த குற்றசாட்டைச் சுமத்தி சீனா இந்தியாவின் மீது போர் தொடுக்கிறது.

    இமயம் இப்புவியின் மையம் அதன் மீது குண்டுகளோ நாசவேலைகளோ நடக்கக் கூடாது என்று அங்கே இருக்கும் மலைவாசிகளைக் கொண்டு மாறனும் ஹரிஷாவும் தண்ணீர் மூலம் சீனபடையை இந்தியா உள்ளே நுழையாமல் தடையேற்படுத்த அந்த நொடியில் மாறனுக்குப் பழைய நினைவுகளும் தான் இழந்த ஷெண்பகா தான் தற்போது தன்னுடன் இருக்கும் ஹரிஷா என்பதை உணர்ந்து கொள்கிறான்.

    குருவான ‘ஜி’ யின் அருளால் ஹரிஷாவும் உடலை வென்று இமயத்திலே மாறனுடன் தங்கிப் போகிறாள்.

    ரவியின் காதலியாக வரும் நிர்மலாவின் பாத்திரபடைப்பு நாட்டுப்பற்றைச் சராசரி மனிதன் எப்படி அடைகிறான் என்பதைக் குறிப்பிட்டுச் சொல்கிறது.

    சாகச வீரனாக வரும் மாறன் தன் பார்வையாலே அனைவரையும் வசீகரித்துத் தன் கட்டுப்பாட்டில் அவர்களைக் கொண்டு வருவதால் அவனின் எதிர்பார்ப்புக்கு ஏற்பவே அனைத்தும் நடந்தேறுகிறது.

    நுணுக்கமான அரசாங்க விஷயங்கள்,போர் பதட்டம் அதனால் ஏற்படும் இன்னல்கள், வியூகங்கள், வெற்றிக்கான போராட்டங்கள் என்று எழுதப்பட்ட முறையிலே கண்டறியலாம் இந்தப் புதினத்திற்கான ஆசிரியரின் உழைப்பை.
     
  3. storiesdetails

    storiesdetails Junior IL'ite

    Messages:
    96
    Likes Received:
    8
    Trophy Points:
    13
    Gender:
    Female
    நினைத்தாலே இனிக்கும் – (அமுதவல்லி கல்யாணசுந்தரம்)

    பெற்ற பாசமும் வளர்த்த பாசமும் ஒன்றோடு ஒன்று போட்டிப் போட்டு உறவுகளின் உன்னதத்தைச் சொல்லும் கதைகளம்.

    மகள் ஜான்சி காதலித்துத் திருமணம் செய்து கொண்டதால் அவளிடம் பேசாமல் ராகவன் இருப்பதால் மகன் ஜெய்யும் அவரிடம் சரிவரப் பேசாமல் இருக்கிறான்.

    வெளிநாட்டில் வாழும் பிள்ளைகள் கடந்த ஆறுவருடமாக வராமல் இருப்பதால் ஜானகியின் மனம் பாசத்தால் நெகிழ்கிறது அதன் பொருட்டுக் கணவன் ராகவனுடன் சண்டை எழுகிறது.இவர்களின் வளர்ப்புப் பிள்ளையாக இருக்கும் தமிழ் ஜானகியின் மனதை குளிர்விக்கச் செய்யும் முயற்சி வெற்றிப் பெறுகிறது.

    ஜான்சி குடும்பத்துடன் பெற்றவர்களைப் பார்க்க வந்து சேர்கிறாள்.தன் பாட்டி வீட்டில் தமிழுக்கு இருக்கும் முக்கியத்துவத்தை விரும்பாத ஜான்சியின் மகள் கவிதா அவனைக் கிடைக்கும் நேரத்தில் எல்லாம் மட்டம் தட்டிக் கொண்டிருக்கிறாள்.

    தாத்தா ராகவனை விட்டு விட்டுத் தங்கள் வீட்டோடு மாப்பிள்ளையாக வரவேண்டும் என்று காதலி சொன்னதால் காதலையே விட்டு விட்ட தமிழ் அந்த முதிய தம்பதிகளின் சந்தோஷத்திற்கு எதுவும் செய்யவேன் என்பவன் பொய் சொல்லி அவர்களின் பிள்ளைகளை இந்தியாவிற்கு வர வழித்ததைத் தெரிந்து கொண்டாலும் அவனை அவர்களிடம் விட்டுக் கொடுக்காமல் அந்தப் பொய்யை தாங்கள் தான் சொன்னோம் என்று பழியை ஏற்றுக் கொள்கின்றனர்.

    தங்களின் பாசத்திற்குப் பெற்றவர்கள் ஏங்கிப் போய் இருப்பதைப் பிள்ளைகள் புரிந்து கொள்கின்றனர்.

    தமிழின் பாச முகத்தையும் அவன் அக்குடும்பத்தின் மீது வைத்திருக்கும் அக்கறையும் பார்த்து கவிதாவின் மனது அவன் பக்கம் திரும்புகிறது.

    தன் பேத்தி தமிழை மணந்து கொண்டு தங்களுடனே இருப்பாள் என்ற செய்தி அம்முதியவர்களைச் சந்தோஷத்தில் ஆழ்த்திவிடுகிறது.
     
  4. storiesdetails

    storiesdetails Junior IL'ite

    Messages:
    96
    Likes Received:
    8
    Trophy Points:
    13
    Gender:
    Female
    நீ வந்த போது - (ஜெய்சக்தி)
    லிங்க் : https://www.amazon.in/dp/B082GFBFDZ

    செய்த உதவியின் பலன் நெடுங்கால உறவுக்கு அடிதளமாக அமையும்.

    தன்னை விட வயதில் மிகவும் மூத்தவருக்கு திருமணம் செய்ய போவதை அறிந்து வீட்டை விட்டு வரும் தனஸ்ரீக்கு இரண்டு மிகப் பெரிய பழபண்ணை வைத்து இருக்கும் வருண் உதவி செய்கிறான். ஏற்கனவே அவளின் பெற்றோர் இதை பற்றி டிரைனில் பேசியதை கேட்டதால்.

    வருணிடமே வேலை செய்பவள் அவனால் ஈர்க்கப்பட்டு காதலில் விழுகிறாள். இது எதுவுமே தெரியாமல் அவளுக்காக பார்த்து பார்த்து செய்தவனுக்கு நாட்கள் கடந்தே புரிகிறது அவளை மனம் காதலிக்கிறது என்பதை...

    தனஸ்ரீ பெற்றோரை தன் அப்பாவின் மூலம் சரிகட்டி அவளிடம் தன் காதல் மனதை திறக்கிறான். அந்தஸ்து குறுக்கே வரும் என்பதால் தடுமாறுபவளை காதல் மனது வெற்றிக்கொள்கிறது. அனைவர் சம்மதத்துடன் திருமண ஏற்பாடு முடிவாகிறது.
     
  5. storiesdetails

    storiesdetails Junior IL'ite

    Messages:
    96
    Likes Received:
    8
    Trophy Points:
    13
    Gender:
    Female
    நிலவொளியில் பட்டாம் பூச்சிகள் - (வி.உஷா)

    லிங்க் : https://www.amazon.in/நிலவொளியில்-பட்டாம்-பூச்சிகள்-Tamil-V-Usha-ebook/dp/B07YTX81CZ

    தவறுகள் பெருகும் நேரத்தில் எவரோ ஒருவர் தண்டனை கொடுப்பார் என்ற எதிர்பார்ப்புக்களால் மட்டுமே பாதிக்கப்பட்டவர்கள் மனதை சமாதானப்படுத்திக் கொள்கின்றனர்.

    படித்து முடித்து வேலைக்குப் போக வேண்டும் கட்டாயத்தில் கால் சென்டரில் வேலைக்குச் செல்லும் உதயாவிற்குச் சில மாதங்களுக்குப் பிறகு கம்பெனி கைமாறியதால் வேலையும் பறிபோகிறது.

    மலைக்கிராமத்தில் இருக்கும் ஆசிரமத்தை பார்த்துக் கொள்ள வருகிறாள். திடீர் என்று ஆசிரமத்திற்கு வரும் பணம் குறைவதால் நெருக்கடி நிலவுகிறது. அம்மலையில் கடத்தல்காரன் என்று சமூகத்தால் சொல்லப்பட்ட செழியன் உதவி செய்கிறான்.

    இருப்பவர்களிடம் இருந்து இல்லாதவர்களுக்கு எடுத்து கொடுப்பதால் போலீஸ் அவன் தலைக்குப் பத்து இலட்சம் என்று விலை வைத்து தேடிக் கொண்டிருக்கிறது. எதிர்பாராமல் காலில் குண்டடிபட்டு போலீஸில் மாட்டியும் கொள்கிறான்.

    நாட்டில் அதிகரித்து இருக்கும் பாலியல் குற்றங்கள், தவறுகள் அனைத்தையும் பார்த்து வெறுத்துப் போயிருக்கும் உதயாவிற்குச் செழியன் மேல் அன்பு உருவாக அதன் பலனாக அவனை போலீஸ் பிடியில் இருந்து தப்பித்துச் செல்ல உதவி செய்கிறாள்.

    செழியன் தப்பிவிட்டான் என்பதை அறிந்தவர்கள் குற்றங்கள் செய்வதற்குப் பயம் கொள்கின்றனர்.
     
  6. storiesdetails

    storiesdetails Junior IL'ite

    Messages:
    96
    Likes Received:
    8
    Trophy Points:
    13
    Gender:
    Female
    நீர்மேல் ஆடும் தீபங்கள் - (லட்சுமி ராஜரத்தினம்)
    லிங்க் : https://www.amazon.in/gp/product/B07BDHSFQL

    இரக்கத்தினால் உண்டாகும் எதற்கும் நீண்ட ஆயுள் கிடையாது எந்த நேரத்தில் வேண்டுமானாலும் முடிவை எதிர்நோக்கியே இருக்கும் அதற்குத் துணையாகக் கொள்ளும் காரணங்கள் வலுவானதாக இல்லாமல் இருந்தாலும் வேறு எந்தப் பக்கமும் யோசனையைப் படர விடாது.

    விஜய் ஏற்கனவே திருமணமானவன் என்றாலும் முரடர்களிடம் மாட்டிக்கொள்ளாமல் இரயில் பாதுகாப்பு கேட்டு ஓடிவந்த பிரேமாவை கவர்ந்து இரகசிய வாழ்க்கை வாழ சம்மதம் பெறும் அளவிற்கு ஒன்றிவிடுகின்றனர் இருவரும்.

    மனைவியும் அடுத்து தான் இரக்கத்தால் கட்டுண்டு கிடக்கும் பிரேமாவும் ஒரு நேரத்தில் கர்ப்பமானதை கேட்டவன் மகிழ்ச்சியில் ஆழ்ந்தாலும் பிரேமாவுடனான உறவு தந்தைக்குத் தெரிந்து அவளின் கடந்த காலத்தை அறிந்தவன் அப்படியே அவளிடமிருந்து ஒதுங்கி போகிறான். கேட்டது உண்மையா என்று ஆராயும் அளவிற்குக் கூட அவனின் குற்றமுள்ள மனது தெளிவில்லாமல் போகிறது.

    பிரேமாவிற்குப் பிறந்த குழந்தையைத் திருடி வந்த விஜய்யின் தந்தை அவளைத் தனது பேத்தியாகவே வளர்கிறார். பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்கள் ஆன பிறகு தன்னுடைய சந்தேகத்தைக் கேட்பவனால் யாருக்கும் கடந்து வந்த மோசமான பாதை மாறிவிடவில்லை.
     
  7. storiesdetails

    storiesdetails Junior IL'ite

    Messages:
    96
    Likes Received:
    8
    Trophy Points:
    13
    Gender:
    Female
    அனல் மேலே பனித்துளி - (பரிமளா ராஜேந்திரன்)
    லிங்க் : https://www.amazon.in/gp/product/B07P6RD84Z

    சுயநலத்திற்காக எடுக்கும் முடிவுகளால் பாதிப்பில்லாமல் போகாது.

    ஏழை சமையல்காரியின் மகளாக அபிநயா இருந்தாலும் அவளின் குணத்தால் ஈர்க்கப்பட்ட நிகிலாவிற்கு உற்ற தோழியாக இருக்கிறாள். வீட்டிற்கு வந்த அபிநயாவை பார்த்தவுடனே காதல் கொள்கிறான் நிகிலாவின் அண்ணன் பரத்.

    தன் தங்கை மகனை எப்படியாவது மகளுக்குக் கட்டிவைக்க வேண்டும் என்று இருக்கும் மோகனரங்கத்திற்கு பரத்தின் காதல் தெரிகிறது. அவன் ஜாதகத்தில் இருதாரம் என்பதால் தங்கையை பரத்தின் திருமணத்திற்குச் சம்மதிக்க வைக்கிறான் எப்படி இருந்தாலும் தன் மகள் தான் இரண்டாவதாக இந்த வீட்டில் நீண்ட காலம் வாழ போகிறாள் என்ற நினைப்பில்...

    திருமணம் முடிந்து மறைமுகமாகப் பல பிரச்சனைகளை எதிர் கொள்ளும் அபிநயாவை குழந்தை பிறந்த பிறகு விபத்து மாதிரி ஏற்படுத்திக் கொன்று விடுகிறான் மோகனரங்கம்.

    சொத்துக்காகத் தன் மனைவியைக் கொன்றார்கள் என்பதை தெரிந்த பரத்,அதை மாமா மற்றும் தாய் பேரில் எழுதி வைத்து குழந்தையைப் பார்த்துக் கொள்ள வந்த சாந்தியை மறுமணம் புரிந்து வீட்டை விட்டு வெளியேறுகிறான்.
     
  8. storiesdetails

    storiesdetails Junior IL'ite

    Messages:
    96
    Likes Received:
    8
    Trophy Points:
    13
    Gender:
    Female
    நீ இன்றி நான் இல்லையே - (விமலா ரமணி)
    லிங்க் : https://www.amazon.in/Nee-Indri-Naan-Illaye-Tamil-ebook/dp/B07XTR9KR7

    தவறு செய்பவர்கள் தன்னைத் திருத்தியமைக்க ஏதோ ஒரு கணத்தில் முடிவெடுப்பர்.

    சிறு வயதில் இருந்து நண்பர்களான விஸ்வா,ஆனந்த மற்றும் சத்யா மைசூருக்கு சுற்றி பார்க்க வர அங்கே தோழியைக் காணாமல் பணத்திற்காகப் பரிதவிக்கும் ரூபிணிக்கு உதவி செய்கின்றனர்.

    ஊருக்கு திரும்பி வந்த மூவரும் ரூபிணியின் நினைவால் இருக்கின்றனர்.

    டிரைவரானாலும் மகளின் கனவுகளை நிறைவேற்றும் பழனி கட்டுப்பாடு இல்லாமல் மகள் ரோகிணியை வளர்க்கிறார்,பெண்களை ஏமாற்றும் சஞ்சய் பிடியில் மாட்டிக் கொள்ளும் ரோகிணியைக் கர்ப்பமாக்கிவிட்டு வேறு பெண்ணை ஏமாற்றும் தொழிலில் ஈடுபட அவனைத் தன் தோழியின் மூலம் போலீஸிடம் மாட்டிவிட வைத்த ரூபிணியைத் தான் இந்த மூவரும் மைசூரில் சந்தித்தது...

    தன் திருமண அழைப்புடன் இவர்கள் வீட்டிற்கு வரும் ரூபிணியால் அனைத்து உண்மைகளும் தெரியவருவது மட்டுமில்லாமல் அவர்கள் ஒருவரின் வீட்டில் டிரைவராக இருந்த பழனிக்கு தன் மகள் ரோகிணியின் நிலைமையும் தெரிகிறது.

    ஜெயிலில் இருந்த வெளிவந்த சஞ்சய் திருந்தி புதுமனிதனாக இருப்பதை அறிந்த பழனி மகளின் வளைகாப்பிற்கு அவனை அழைத்துக் கொண்டு செல்கிறார்.
     
  9. storiesdetails

    storiesdetails Junior IL'ite

    Messages:
    96
    Likes Received:
    8
    Trophy Points:
    13
    Gender:
    Female
    பூப்பூவாப் பூத்திருக்கு – (ரமணிசந்திரன்)

    லிங்க் : https://www.amazon.in/gp/product/B07T48N7DT

    தன்னைச் சுற்றி இருப்பவர் அனைவரும் நல்லவர்களே என்று நினைப்பது அறியாமையே அதற்கான விலையைக் கொடுத்த பிறகே அதை உணர முடியும்.

    காதலித்தவனுடன் சென்ற அக்கா ஐந்து வருடங்களுக்குப் பிறகு விபத்தில் மாட்டி அதில் கணவனை இழந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தவள் தங்கை மயூரியை அழைத்துத் தன் இரு பிள்ளைகளை ஒப்படைத்து இறந்து போனது அதிர்ச்சியே.

    பிள்ளைகளைத் தேற்றி சராசரி வாழ்க்கைக்குத் திரும்பும் போது என் அண்ணன் குழந்தைகள் எங்கள் வீட்டில் தான் வளர வேண்டும் என்று வித்யாசாகரன் வந்து நிற்கிறான்.

    கணவன் குடும்பத்து ஆட்கள் மோசம் என்று அக்கா சொல்லியதால் குழந்தையை அவனுடன் அனுப்ப முடியாது என்று முரண்படுபவளையும் தன்னுடனே அழைத்துச் சென்று தங்களின் குடும்பத்தைப் புரிந்து கொள்ளச் செய்கிறான் வித்யாசாகரன்.

    அவ்வீட்டு தலைவனின் தம்பி மகனான சுந்தரேசன் சொத்துக்காக வித்யாசாகரனின் அண்ணன் மனதில் குடும்பத்தைப் பற்றித் தவறாகப் பதிய வைத்ததைப் புரிந்து கொள்கிறான், வீட்டிற்கு வந்த அண்ணன் பிள்ளைகளைக் கொலை செய்யும் வரை சென்ற பிறகே இந்த உண்மைகள் தெரிய வருகிறது.

    அக்கா குழந்தைகளுக்காக என்று அங்கே வந்த மயூரிக்கு வித்யாசாகரனால் புதுவாழ்க்கை உண்டாகுகிறது.
     
  10. storiesdetails

    storiesdetails Junior IL'ite

    Messages:
    96
    Likes Received:
    8
    Trophy Points:
    13
    Gender:
    Female
    நிழல் போல தோன்றும் நிஜம் – (ஜி.சியாமளா கோபு)
    லிங்க் : https://www.amazon.in/gp/product/B08286P2BC

    ஓர் ஆண் தான் நல்லவன் அனைவரையும் ஒரே மாதிரி தான் நடத்துவேன் என்ற நடவடிக்கையில் இருக்கும் போது அவனின் சரிவின் வட்டமும் அதை ஒட்டியே தான் அமையும். அதுவும் தாழ்வுமனப்பான்மை கொண்டவனாக இருக்கும் போது திட முடிவு என்று எதையும் அவனால் அறுதியாக நடத்தவும் முடியாது அப்படிப்பட்டவனாக இருக்கிறான் மகேஷ்.

    சொந்தங்களில் உதவி என்று கேட்டு வரும் பெண்களை வீட்டின் தலைவிகள் ஓர் எள்ளலோடு பார்ப்பது அந்தப் பெண்ணின் நிலைமைக்காக அல்ல தன் வீட்டு ஆணின் உள்ளும் புறமும் அறிந்திருப்பதனால் நிலைமையின் தீவிரம் எங்கே போய் முடியும் என்று ஆழ்மனம் எடுத்துரைக்கும் அதிர்வால் உண்டாகும் எதேச்சையான செயல்.

    பல வருட தாம்பத்தியத்தையே இரக்கத்தின் போர்வையால் மறைமுகமாக சுமதியால் வெட்ட முடிகிறது என்றால் அதன் பெரும்பகுதி மகேஷின் திடமில்லா மனதாலே சாத்தியமாகிறது. ஆளுமையான மனைவி ராஜியை கீழ்தள்ளி பார்க்கும் ஒரு குரோதமும் உள்மனதில் அவனுக்கு இருக்கிறது அதை அறிந்தவள் அவனுக்கு அந்த வாய்ப்பை வழங்காமல் மகள் திருமணம் ஆகி புகுந்த வீட்டிற்குப் போனவுடன் தன் தாய் வீட்டிற்கு வந்து சேர்ந்தது மட்டுமில்லாமல் தனக்கென ஓர் அடையாளத்தையும் ராஜி அடைந்துவிடுகிறாள்.

    பல நேரங்களில் இழப்புகளே பெண்ணிற்கு உந்துசக்தியாக மாறிவிடுகிறது. ராஜி கணவனின் துரோகத்தைத் தனக்கான வலிமையாக மாற்றிக் கொள்கிறாள்.

    சுமதியிடம் மாட்டி அவதிப்பட்டுச் சரணாகதியை தேடிய மகேஷுக்கு உதவ முன்வந்த ராஜி சுமதியின் வாழ்விலும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்து அவளைத் தனித்தியங்கும் பெண்ணாக மாற்றிச் சார்பு நிலையை முழுவதும் அழித்தொழிக்கிறாள்.

    நடந்த சம்பவங்கள் எல்லாம் மகேஷின் பாதை எதை நோக்கி இருக்க வேண்டும் என்று எடுத்துரைக்க சரணாகதியே அனைத்திற்கும் சிறந்தது என்ற மனதின் முடிவிற்குத் தானும் இசைந்துபோகிறான்.
     

Share This Page