1. The Great Big Must Read List : Find Interesting Book Suggestions
    Dismiss Notice
  2. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

tamil novel lovers

Discussion in 'Books & Authors in Regional Languages' started by deepthiraj, Jun 26, 2014.

  1. storiesdetails

    storiesdetails Junior IL'ite

    Messages:
    96
    Likes Received:
    8
    Trophy Points:
    13
    Gender:
    Female
    கண்களில் தூவும் காதல் மழை – (எல்சி திவாகர்)
    பெண்குழந்தைகளை அதன் பாலியத்தைக் கூட அனுபவிக்க விடாமல் தங்களின் காமத்திற்கு வடிகாலாக அவர்களை உபயோகப்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே தான் போகிறது.பொத்தி பாதுகாக்கப்படும் குடும்பத்திற்குள்ளேயே குழந்தைகளுக்குப் பாதுகாப்பு இல்லையெனும் போது ஆசிரமத்தில் வளரும் பிள்ளைகளுக்கு எங்கனம் பாதுகாப்பை எதிர்பார்ப்பது.

    ஆசிரமத்தில் வளரும் நேத்ரா பனிரெண்டு வயதில் அங்கே இருக்கும் நிர்வாகியின் உதவியால் பாலியல் தொல்லைக்கு ஆளானவள் உடனடியாகத் தன் தங்கையாக எண்ணிய காயத்ரியுடன் அங்கிருந்து வெளியேறி கிடைத்த வேலையெல்லாம் செய்து நேத்ரா நர்சரிக்கு உரிமையாளராகிறாள்.

    காயத்ரியை பார்த்தவுடனே காதலில் விழும் இந்திரனுக்கு அவளுடனான திருமணம் நடைபெற வேண்டும் என்றால் அண்ணன் மித்ரன் திருமணமும் நடக்க வேண்டும் என்ற சூழலை உண்டாக்கிவிடுகிறான்.ஏற்கனவே மித்ரன் நேத்ராவை பார்த்து இருந்தாலும் அவளின் கடந்த காலத்தைக் கேள்விபட்டு அதை விபத்தாக ஒதுக்கி விட்டு மணந்து கொள்கிறான்.

    ஆண்களையே வெறுத்து மனிதர்களிடம் இருந்து ஒதுங்கி தனியாக வாழும் நேத்ராவை தங்கை திருமணம் என்ற கட்டாயத்தில் நிறுத்தி மணந்து கொண்ட மித்ரனை நண்பனாகப் பழகி அவன் மூலம் மனதில் இருந்த கசப்புகளை வெளியேற்றிய பிறகே காதல் மனைவியாக முடிகிறது.தன் பொறுமையான குணத்தால் நேத்ராவின் இதயத்தில் காதல் உணர்வை உண்டாக்குகிறான் இதயச் சிகிச்சை செய்யும் நிபுணனான மித்ரன்.
     
  2. storiesdetails

    storiesdetails Junior IL'ite

    Messages:
    96
    Likes Received:
    8
    Trophy Points:
    13
    Gender:
    Female
    கிருஷ்ண தந்திரம் – (இந்திரா சௌந்தரராஜன்)
    கடவுள் இருக்கார் அவரே அனைத்தும் நடத்துகிறார் என்பது விவாதத்துக்கு உட்பட்டது என்றாலும் நம்பியவர்கள் உதவி செய்யும் அனைத்து மனிதர்களையும் கடவுளாகப் பாவிக்கின்றனர் மறுப்பவர்கள் உதவி செய்யும் மனிதர்களை நல்உள்ளம் கொண்ட சகமனிதனாகவே ஏற்றுக்கொள்கின்றனர்.
    கண்ணமங்கலத்தில் கடவுள் கிருஷ்ணனின் புல்லாங்குழல் இருப்பதாக ஒரு வரலாறு இருக்கிறது.

    இசை படிப்பை முடித்துவிட்டு நண்பன் ராகவ்வுடன் சொந்த ஊரான கண்ணமங்கலத்திற்கு வரும் ஷ்யாமளாவிற்கு வந்த நொடி முதல் புரியப்படாத மர்மங்கள் கொண்ட விஷயங்கள் ஊரில் நடக்கிறது என்று தெரிந்துகொள்கிறாள் அதற்குக் காரணம் ஊருக்குள் வந்த பைராகி என்று ஊர் மக்களால் குற்றம்சாட்டப்படுகிறது.

    கிருஷ்ணன் தரிசனம் தருவார் என்ற ஐதீகத்தைப் பிடித்துக் கொண்டு அவரை வரவைக்கப் பைராகிச் செய்யும் செயல்கள் பலித்துத் தான் விரும்பியதை அடைந்துவிட்டே பூமியை விட்டு செல்கிறார்.

    பைராகியால் கண்ணமங்கலத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் அனைத்தும் சரி செய்யப்படுகிறது.வந்தது கிருஷ்ணன் என்ற உண்மை பைராகியோடு மண்ணில் புதைந்து போகிறது.

    ஒவ்வொரு மனிதனின் ஆசையும் மற்றொருவனுக்குக் கேலிகூத்தாகத் தெரிவதும் இயல்பே...
     
  3. storiesdetails

    storiesdetails Junior IL'ite

    Messages:
    96
    Likes Received:
    8
    Trophy Points:
    13
    Gender:
    Female
    எங்கே என் கண்ணன் – (இந்திரா சௌந்தர்ராஜன்)
    தன்னிடம் சரணடைந்தவர்களின் துயர் தீர்க்க மனித ரூபத்தில் சரியான நேரத்தில் உதவுவார் இறைவன், ஆனால் அதை மனிதன் புரிந்து கொள்வதற்கு முன்னால் வந்த வேலை முடிந்து மாயமாகிவிடுவார்.
    பல தலைமுறைகளாக மரத்தாலான கண்ணனை வழிபடும் குடும்பத்தில் இப்பொழுது இருப்பவர் சீனுவாசன்..இவரின் மகனுக்குக் குழந்தை இல்லாமல் போக நாடிஜோதிடத்தில் அதற்கான பரிகாரம் சொல்லிப்பட்டிருக்கு ஆனால் அதில் நம்பிக்கை இல்லாத மருமகளால் அந்தப் பரிகாரத்தைத் தாங்களே நடத்த வாரணாசி செல்கின்றனர் சீனுவாசன் தம்பதியர்.

    ஆடிட்டரான கணேஷ் வேலை விஷயமாக வாரணாசி வர அங்கே சில வித்தியாசமான நிகழ்வுகள் கடவுள் இல்லை என்று சொல்பவனிடம், அங்கே வரும் சீனுவாசனுக்கு உதவச் சொல்லகிறார் அவனின் பாஸ்.கங்கையில் முழுகி பரிகாரத்தை முடித்து டெல்லி திரும்பு சீனுவாசன் வாரணாசியிலே அந்த மரத்தால் ஆன கண்ணனை விட்டு சென்றுவிடுகிறார் ஆனால் அதற்குத் தினமும் பூஜை செய்வது முக்கியம்.

    ஒரு யோகியிடம் இருந்து கணேஷ்க்கு கிடைத்த ஏட்டில் கண்ணன் வருவான் என்று சொல்லியதை நம்ப மறுக்கிறான்.வேலை முடிந்து வாரணாசி விட்டு கிளம்பும் போது புது வேலை வந்து அங்கேயே அவனை நிறுத்தி வைக்கிறது.எதிர்பாராமல் காலில் அடிப்படும் கணேஷ்க்கு உதவ ஆள் அனுப்புவதாகச் சொல்ல, வருபவர் கண்ணன்.

    சீனுவாசனுக்குக் கண்ணன் தன்னை விட்டு பிரிந்ததால் ஹார்ட் அட்டாக் வர டாக்டர் வேண்டுகோளுக்கு நாத்திகனான கணேஷ் தனக்குத் தெரிந்தளவில் பூஜை செய்கிறான்.உதவ வந்த கண்ணன் கணேஷின் குடும்பத்தில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்துவிடுகிறார்.

    சீனுவாசன் ஆசைப்பட்ட குடும்ப வாரிசுக்கும் மருமகளால் நல்ல செய்தி வந்து சேர்கிறது.
     
  4. storiesdetails

    storiesdetails Junior IL'ite

    Messages:
    96
    Likes Received:
    8
    Trophy Points:
    13
    Gender:
    Female
    கனவெங்கும் தித்தித்தாய் – (பொற்கொடி)
    காலப்போக்கில் முடிவுகள் மாற்றங்களை எதிர்கொண்டு சூழ்நிலைக்கு ஏற்ப புதுப் புது வடிவங்களை எடுப்பதை ஏற்கத் தயாராக இருப்பவர்களுக்கே சஞ்சலமில்லா சந்தோஷ வாழ்வு கிட்டும்.
    ஒத்துவராது என்று ஓரங்கட்டப்படும் அனைத்தும் அருகில் வரும் போது தான் அதன் உண்மை தரிசனத்தைக் காண முடியும்.

    தந்தையின் துரோகத்தால் தாயின் தற்கொலையில் மனமுடைந்து போன ராகுலுக்குப் பெண்களை அருகில் விடவே பயம் என்றாலும் நண்பனின் இறப்புக்கு காரணமான நடிகையைப் பழிவாங்க காதல் என்ற ஆட்டத்தை ஆடுபவனுக்கு முடிவு சாதகமில்லாமல் போக அதைச் சரிக்கட்ட தன்னிடத்தில் வேலை செய்யும் தியாவை மனைவியாக நடிக்க வைக்கிறான்.

    விமான விபத்தில் பெற்றவர்களை இழந்ததும்,காதலனின் துரோகத்தாலும் மனம் கசந்து போன தியா,அண்ணன் குடும்பத்துடன் இருக்க இந்தியா வந்தவளுக்கு ராகுலிடம் வேலையும் கிடைக்கிறது.கூடவே அவனுக்கு மனைவியாக நடிக்க வேண்டிய சூழலும் ஏற்படுகிறது.

    இருவரும் எந்த வித உறுதியும் இல்லாத உறவுகளை வெறுத்து வருபவர்களுக்கு உணர்ச்சியின் தூண்டுதலாலும் அருகாமையின் அரவணைப்பும் சேர்ந்து அவர்களுக்கான ஓர் எதிர்காலத்தை உருவாக்குகிறது.

    நடைமுறையில் இருக்கும் எதார்த்தத்தையும் உணர்ச்சிகளையும் புரிந்த இருவரும் உறவை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்துவதற்குள் ஓர் கடத்தல் அரங்கேறுகிறது. தடைகள் இல்லா உறவுகளை இருவரும் ஏகமனதாக ஒத்துக் கொள்ள, ஆடிய நாடகத்தை உண்மையாக்கி விடுகின்றனர்.
     
  5. storiesdetails

    storiesdetails Junior IL'ite

    Messages:
    96
    Likes Received:
    8
    Trophy Points:
    13
    Gender:
    Female
    எந்தன் சிந்தனையே எந்தன் சித்தமே - (ரமணிசந்திரன்)
    சுயநலத்தில் ஊறித் திளைப்பவர்கள் காதல் என்ற மெல்லுணர்வை கூடப் பகடையாக மாற்றி அதிலும் ஆதாயத்தையே தேடவே முயல்வர்.

    ஏழை மாணவனான அன்பரசுவை காதலித்த பணக்கார பெண் ப்ரீத்தத்தால் தாயை இழந்தது மட்டுமில்லாமல் சிறை தண்டனையும் அனுபவித்தவன் தண்டனை காலம் முடிந்து மொழித்தெரியாத ஊரில் வேலைக்காரனாக வாழ்ந்து ஏழு ஆண்டுகளில் தன்னை உயர்த்திக் கொண்டு ப்ரீத்தத்தின் மேல் இருக்கும் வன்மத்தை குறைக்காமலே நாட்களைக் கடத்துகிறான்.

    முதலாளியின் பெண்ணுடன் நிச்சயம் செய்த பிறகு ப்ரீத்தத்தைப் பழிவாங்க சென்னை வந்தவனிடம் அவள் போட்ட நாடகம் நன்றாகவே வேலை செய்கிறது. அவள் அப்பாவியோ என்று தடுமாறுபவனை வருங்கால மனைவி நேர்படுத்தி அவளின் குணத்தை மொத்தமாக அறியச் செய்கிறாள்.

    தன்னை ஏமாற்றியவள் மோசமான கணவனுடன் தான் வாழ்கிறாள் என்று தெரிந்த பிறகே அன்பரசனால் தன் வருகால மனைவியின் பக்கம் காதல் பார்வை பார்க்க முடிகிறது.
     
  6. storiesdetails

    storiesdetails Junior IL'ite

    Messages:
    96
    Likes Received:
    8
    Trophy Points:
    13
    Gender:
    Female
    பால் நிலா – (ரமணிசந்திரன்)
    லிங்க் : https://www.amazon.in/பால்-நிலா-Tamil-Ramani-Chandran-ebook/dp/B07QWGLZQ4

    பழிவாங்கும் உணர்ச்சியைக் கட்டுக்குள் வைக்காமல் அதில் வெற்றி பெற செய்த முயற்சிகளே எதிர்காலத்தில் துன்பத்தில் தள்ளிவிடும்.

    அன்பு வைத்திருப்பவர்கள் சொல்கிறார்கள் என்றாலும் அதில் ஆராயாமல் அவர்களின் பேச்சின்படியே நடக்கும் செயல் அனர்த்தங்களின் எல்லையைத் தொட்ட பிறகே ஞானம் உண்டாகும்.

    தந்தையை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு வந்தவள் முழுச் சுதந்திரத்தை அளிப்பதால் அவளின்பால் அன்பால் இருக்கும் மாதங்கினியை தன் சுயநலத்திற்காக அவள் உபயோகித்துக் கொள்கிறாள்.

    வேலை செய்த நிறுவனத்தில் பணத்தைக் கையாடல் செய்தது மட்டுமில்லாமல் வாய்ப்பு கிடைத்தவுடன் மேலதிகாரியாக இருக்கும் மாதங்கினி தந்தையைத் திருமணம் செய்து கொண்ட பிறகும் தன் தோழியின் மூலம் பொய்கணக்கு எழுத வைத்து இருப்பதை அந்நிறுவனத்தை வாங்கிய நிரஞ்சன் கண்டுபிடிக்கிறான்.

    தான் கையாடல் செய்த பணத்திற்குப் பதிலாக மூன்று மாதம் மாதங்கினியை அவனுடன் அனுப்பி வைக்கிறாள் அவளின் சித்தி. சித்தியை ஆராதிக்கும் மாதங்கினிக்கு உண்மை எதுவும் தெரியாமல் மூன்று மாதம் அவனுடன் துன்பத்தை அனுபவித்து வந்த பிறகே சித்தியின் உண்மை ரூபம் தெரிய வருகிறது.

    நிரஞ்சனை பழிவாங்குவதற்காக என்று எண்ணி குழந்தையைப் பெற்றுக் கொண்டாலும் அதனைக் கொடுமைபடுத்த மனமில்லாமல் தவிப்பவள் தன்னைத் தற்கொலை முயற்சியில் இருந்து காப்பாற்றிய குடும்பத்துடன் வாழ்கிறாள்.

    நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மாதங்கினியை பார்த்த நிரஞ்சன் அவளுடன் வாழத் துடிக்கிறான்.அவள் சென்ற பிறகு அவளின் நினைவாகவே தேடி அலைந்தவன் கண்டபிறகு தன் பக்கத்து நியாயமாக என்று நினைத்ததைச் சொல்லி அவளின் மனதை கரைத்துவிடுகிறான்.
     
  7. storiesdetails

    storiesdetails Junior IL'ite

    Messages:
    96
    Likes Received:
    8
    Trophy Points:
    13
    Gender:
    Female
    காதலின் காலடி சத்தம் – (காஞ்சனா ஜெயதிலகர்)
    லிங்க் : https://www.amazon.in/gp/product/B07DCQD53R

    தான் எவ்வகையான வாழ்க்கை வாழ்கிறோம் என்பதை மனிதன் தனித்து விடும் போது மட்டுமே உணர்ந்து கொள்கிறான்.வாழ்வை நேர்படுத்தும் துவக்கப்புள்ளி அங்கிருந்து தான் தொடங்குகிறது தன்னை மாற்றிக் கொள்ள விரும்புவர்களுக்கு..

    தொழிலில் நொடிந்து கொண்டிருப்பவருக்கு உங்கள் மகளின் திருமணத்திற்கு ஆகும் செலவை முழுவதும் தாங்களே பார்த்துக் கொள்கிறோம் என்று வந்த பெரிய இடத்துச் சம்பந்தத்தை மறுக்கவா தோன்றும்..பணத்தைச் சம்பாதிக்கும் வழியை அறிந்து கொள்ள விரும்பாதவள் செலவுகளில் மட்டும் தன்னைத் தொலைத்துக் கொண்டிருப்பவளுக்குக் கோடீஸ்வர வீட்டு மருமகளாகக் கசக்குமா என்ன... ஷன்மதியின் சம்மதத்துடன் நிச்சயம் நடந்த பிறகே தெரிகிறது ரோஹித்தின் வக்கிரங்கள் அதனால் அவனுடனான திருமணத்தை மகள் நிறுத்தியதால் சரியானவனை மகளுக்குத் தேர்ந்தெடுக்கவில்லை என்ற குற்றவுணர்ச்சியே அவளின் தந்தையைப் பூமியை விட்டு அனுப்பிவிடுகிறது.

    கடனுக்காக இருப்பதை எல்லாம் இழந்து கொல்லிமலையில் இருக்கும் சிறிய வீட்டில் வந்து சேரும் ஷன்மதிக்கு அங்கே இருக்கும் சூர்யா பக்கபலமாக இருந்து அவளின் தைரியத்தையும் வாழும் முறையையும் மாற்றியமைக்கிறான்.

    தன்னை மாற்றிக் கொண்டேன் என்று வந்து நிற்கும் ரோஹித்திடம் எதுவும் மாறவில்லை என்பதைக் கண்டு கொண்டவளுக்குத் தன் தந்தையைக் கொன்றது அவன் தான் என்பது பேரதிர்ச்சி ஆகிறது.சூர்யாவின் அருகாமை அவளின் பாதுகாப்பிற்குப் பலம் சேர்த்து அவனுடனான வாழ்விற்கு அழுத்தமான தடத்தை உண்டாக்கிவிடுகிறது.

    ஒரு மனத்தின் மாற்றம் அது இருக்கும் நிலையில் இருந்து மாறுவதற்குச் சுற்றி நடைபெறும் சம்பவங்களே பொறுப்பேற்கிறது,ஷன்மதியின் மாற்றங்களே நாவலின் மையப்புள்ளியாகிறது.
     
  8. storiesdetails

    storiesdetails Junior IL'ite

    Messages:
    96
    Likes Received:
    8
    Trophy Points:
    13
    Gender:
    Female
    மாயமென்ன... பொன்மானே... – (ஹன்சிகா சுகா)
    லிங்க் : https://www.amazon.in/gp/product/B07LCRQ5V9

    தேவைபடும் நேரத்தில் கிடைக்காத அன்பால் சிறுவயதில் மனதின் ஆழத்தில் பதிந்த வலிகளால் உண்டான ஏமாற்றத்தை மட்டுப்படுத்த காலத்தால் மட்டுமே முடியும்.வலி தாங்கிய உள்ளத்திடம் இயல்பை எதிர்பார்ப்பதை விட அதைப் புரிந்து கொள்ள முயல்வதே அவர்களை மீட்டெடுக்க முக்கியக் காரணியாகத் திகழும்.

    பணகஷ்டத்திற்குத் தன்னைப் பணயம் வைத்தார்கள் என்று தெரிந்து கொண்டதுடன் பெற்றவர்கள் மீது வளர்த்த தாய்க் கொண்ட துவேஷத்தால் கற்பித்த துர்போதனைகளின் பிடியில் அகப்பட்ட அரவிந்தசாமி வளர்ந்த பிறகு உறவுகளையே வெறுக்க ஆரம்பித்ததின் விளைவு அவனைத் திருமணபந்தத்தில் நுழைய விடாமல் தடுக்கிறது.

    பிடிகொடுக்காமல் திருமணத்தில் இருந்து தப்பித்துக் கொண்டு இருப்பவனைப் பெற்றவளின் உயிரை காரணமாக்கி அவனிடத்தில் வேலை செய்யும் சிவரஞ்சனியை கட்டி வைக்கின்றனர்.

    தன்னிடம் இயல்பாக இருந்தாலும் அவனுள்ளே இறுகி போய் இருப்பதைக் கண்டவள் காரணத்தை அறிய முற்படும் போது அவனின் கடந்த கால ஏமாற்றங்கள் வெளிவருகிறது. பெற்றவளும் மகனும் கடந்த காலச் சம்பவத்தை அலசாமல் விட்டதே அவர்களுக்குள் இடைவெளியை உண்டாக்கியது என்பதைப் புரிந்த சிவரஞ்சனி மேற்கொண்ட செயல் அக்குடும்பத்தின் இயல்பை மீட்டெடுக்கிறது.

    குழந்தை பிறப்பை எதிர்பாக்கும் அரவிந்தசாமியின் அண்ணனும் அண்ணியும் சமுதாயம் காட்டும் முட்களால் துன்பத்தில் துவண்டுபோனாலும் தம்பதிகளுக்குள் உள்ள பரிவும் பிரியமும் அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்திச் செய்கிறது.
     
  9. storiesdetails

    storiesdetails Junior IL'ite

    Messages:
    96
    Likes Received:
    8
    Trophy Points:
    13
    Gender:
    Female
    உயிரை உரசும் அழகே – (லதா சேகர்)
    அன்பு செய்பவர்களுக்குள் எழும் பிரச்சனைகள் பேசி சரிசெய்பவையே என்றாலும் ஏனோ அதைச் செய்ய மனம் வராமல் மனதில் வன்மத்தை மட்டுமே வளர்த்து அன்பாக இருப்பவர்களிடமே தரம் தாழ்ந்த செயலில் ஈடுபடுகின்றனர்.

    மேலோட்டமாக இக்கதையைப் பார்த்தால் காதலில் விழுந்தவர்கள் அதைக் காதலிப்பவர்களிடம் சரிவரச் சொல்லாமல் நம்பகத்தன்மையை இழந்து மனம் போன போக்கில் அவர்களாக ஒரு முடிவெடுத்து துன்பத்தை இழுத்துக் கொண்டு பிறகு பதட்டமான சூழலில் ஓர் முடிவான முடிவை எட்டுகிறார்கள்.

    ஆசிரமத்தில் வளர்ந்த தேவசேனாவிற்கு எவர் என்று தெரியாமலே மற்றவருக்கு உதவிய விஷ்ணுவின் இரக்கக் குணத்தைப் பார்த்தவுடன் காதல் அரும்பு மொட்டுவிடத் தொடங்கிவிடுகிறது.

    குடும்ப நாவலின் இலக்கணப்படி அவனே அவளின் முதலாளியாக வந்து வாழ்வின் போக்கைத் திசை மாற்றிவிடுகிறான்.

    பணத்திற்காக ஒரு பெண் தன்னை காதல் வலையில் விழவைத்து ஏமாற்றியதால் ‘பெண் குலத்தின்’ மீதே தீரா கோபத்தில் இருப்பவனின் முன் முதல்நாளே மயங்கும் விழிகளுடன் தன் முன் வந்து நின்ற தேவசேனாவை கடவுளின் அவதாரமாக தன்னைத் தானே நினைத்து தண்டனை தருகிறான்.

    புரிதல் இல்லாத போக்கால் வீணான மனஸ்தாபங்கள், ஏன் என்று சந்தேகம் கொள்ளும்படியான சூழ்நிலைகளை அவர்களே உருவாக்கி கொண்டு நடுவில் ‘வில்லி’ நுழைய வழிவகையும் செய்து மனகஷ்டம், உடல்கஷ்டம் என்று அவர்களுக்கே தண்டனைகளை வழங்கி பின் நடந்த பிரச்சனைகள் போதும் என்று சுப முடிவை நோக்கி நகர்ந்து விடுகின்றனர்.
     
  10. storiesdetails

    storiesdetails Junior IL'ite

    Messages:
    96
    Likes Received:
    8
    Trophy Points:
    13
    Gender:
    Female
    நந்தி நாயகன் - (மங்களம் ராமமூர்த்தி)
    லிங்க் : https://www.amazon.in/நந்தி-நாயகன்-Nandhi-Naayagan-Tamil-ebook/dp/B077Y537FS

    தமிழ்நாட்டில் முகமதியர்களின் ஆட்சி தொடங்கிய நேரத்தில் தனிப்பெரும்பான்மையில் ஆண்ட மூன்று சாம்ராஜ்ஜியங்களும் அடையாளம் தெரியாமல் அழிந்தொழிந்து போனது. இரு சகோதர்களால் உருவான விஜயநகர சாம்ராஜ்ஜியம் வளரத் தொடங்கியவுடன் முகமதியர்களின் கொடும் ஆட்சிமுறை முடிவுக்கு வந்துவிடுகிறது.

    நல்லவனை விட வல்லவனுக்குத் தான் அரியணையில் அமரும் தகுதியும் அதைக் காப்பாற்றும் பொறுப்பும் அதிகம் இருக்கிறது.

    விஜய நகர சாம்ராஜ்ஜியம் என்று சொன்னாலே கிருஷ்ண தேவராயர் பெயர் தான் நம் நினைவில் எழும். அவரின் பேரனான அச்சுத தேவராயர் காலகட்டத்தின் பின்னணியில் இந்த ‘நந்தி நாயகன்’ நாவல் எழுதப்பட்டிருக்கிறது.

    தஞ்சை பெரிய கோவிலை கட்டிய சோழர்களின் புகழ் என்றென்றும் நிலைத்திருப்பது போல, அப்பிரமாண்ட நாயகனுக்கு வாகனமான நந்தியையும் அதற்கேற்ப பிரமாண்டமாக வார்த்தெடுத்ததும், சரஸ்வதி மகாலை நிறுவியருமான செவ்வப்ப நாயக்கரை பற்றியது தான் இந்த நாவல்.

    நந்தி நாயகனான செவ்வப்ப நாயக்கரை முதன்மைபடுத்தியதால் அரசாலும் அச்சுத தேவராயரின் புகழ்மாலைகள் எங்கேயும் நுழைக்காமல் அதன் போக்கிலே சரித்திர நிகழ்வுகள் சொல்லப்பட்டிருக்கிறது.

    பிற்காலத்தில் செவ்வப்ப நாயக்கருக்கு மந்திரியாக இருக்கும் கோவிந்த தீட்சிதர் முதன் முதலில் நாயக்கரை சந்திக்கும் நிகழ்வுகளிலிருந்து தொடங்குகிறது.

    உள்ளுக்குள் இருக்கும் பேராசை உறவுகளாலே விஜயநகர சாம்ராஜ்ஜியம் பலவீனப்படுத்துகிறது என்பது மன்னனுக்குத் தெரிந்தாலும் அவர்களைக் கையாளத் தெரியாமல் உறவின் உணர்வு கட்டிப்போடுகிறது. கேரளமும் போர் தொடுக்கப் போகிறது என்ற செய்தி மேலும் பலவீனத்தையே கொண்டுவருகிறது.

    காளிங்க ராயர் ஆட்களால் தாக்கப்பட்டு உயிருக்கு போராடிய செவ்வப்ப நாயக்கரை காப்பாற்றிய கோவிந்த தீட்சிதர் அவனுக்கு மட்டும் உறுதுணையாகயில்லாமல் அவனின் வம்சத்திற்கே தன் காலம் முழுவதும் மந்திரியாக இருந்து நல்லாட்சி நடத்த பக்கபலமாக இருந்திருக்கிறார்.

    உள்நாட்டுக் குழப்பத்தைச் சமாளிக்க நாயக்கதானத்தை அச்சுத தேவராயர் மூன்றாகப் பிரித்தளிக்கிறார். அதில் தஞ்சையிலிருந்து திருவண்ணாமலை வரை செவ்வப்ப நாயக்கரின் வசம் வருகிறது.

    சாதாரண வீரன் ஒருவன் நல்லாட்சி வழங்கும் இடத்தில் அமர்வதற்கு எதிர்கொண்ட சம்பவங்களையும், அவனின் சாதூர்யத்தையும், இன்னல்களின் நெருக்கடிகளையும் விவரிக்கிறது.

    சிதம்பர கோவிலில் தானொரு தீட்சிதர் என்று சிவனே சொல்லி இருப்பதாக அந்தப் புனிதத்தைப் பற்றி இதில் எழுதப்பட்டிருப்பதைப் படிக்கும் போது சமீபத்தில் கோவிலை “பிரமாண்ட கல்யாண மண்டபமாக்கிய” சம்பவம் தான் நினைவில் வந்து போகிறது.

    மிகப் பெரிய நந்தியை ஆண்டவனுக்கு முன் சமர்பிக்க எழும் எண்ணத்தைப் பற்றிக்கொண்ட செவ்வப்ப நாயக்கருக்கு அதற்கான பூர்வாங்க வேலையான கல்லை தேடி அலையும் கஷ்டம் கூட இல்லை. அனைத்தும் அவரின் விருப்பப்படியே நடந்தேறுகிறது.
     

Share This Page