இரத்த சோகையை எப்படி தவிர்ப்பது? இரத்த சோகையை எப்படி தவிர்ப்பது? 1. இரும்புச்சத்து மிகுந்த உணவுகளை நிறைய சாப்பிட வேண்டும். வெல்லம், பேரீச்சம்பழம், தேன், வேர்க்கடலை, முருக்கைக்கீரை முதலியவற்றை தொடர்ந்து சாப்பாட்டில் சேர்த்துக் கொள்ள வேண்டும். 2. இரும்பு சத்து மற்றும் பாலிக் அமிலம் மாத்திரைகளை பேறு காலம் முழுமைக்கும் தொடர்ந்து சாப்பிட்டு வருவதும் கூட இரத்த சோகைக்கு மிகவும் நல்லது. 3. சில கர்ப்பிணிப் பெண்கள் மகப்பேறு மருத்துவர்கள் பரிந்துரை செய்தாலும்கூட, குழந்தையின் தலை பெறுத்துவிடும். இதனால் பிரசவம் சுகமாக இருக்காது என்று அவர்களாக கற்பனை செய்து கொண்டு விடுகின்றனர். இதுவொரு தவறான மூட நம்பிக்கை. பிரசவத்தில் தாய்க்கு ஏற்படும் தேவைகளைப் பூர்த்தி செய்யவே இந்த மாத்திரைகளை மகப்பேறு பரிந்துரை செய்கிறார்கள் என கண்டிப்பாகக் கர்ப்பிணிப்பெண்கள் தெரிந்துகொண்டு இரும்புச்சத்து பாலிக் அமில மாத்திரைகளை சாப்பிடுவது நல்லது.
thank u soo much for u r tips its really helps us to know lot of things very informative great jobs may god bless you