1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

Sss( Shanthi Social Service)

Discussion in 'Interesting Shares' started by jayasala42, Dec 4, 2019.

  1. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,365
    Likes Received:
    10,561
    Trophy Points:
    438
    Gender:
    Female
    நன்றி : Mrs. Vijayalakshmi Prasad

    கோவை திருச்சி ரோட்டில் கோவைக்கு முன்புள்ள சிங்காநல்லூரில் அமைந்திருக்கும் சாந்தி கேண்டீனில் மதிய சாப்பாடு சாப்புட சென்றால் அங்கு .......
    பிரமாண்டமான சுத்தமான வளாகம். ராணுவக் கட்டுப்பாடு. பார்த்தவுடன் பிரமிப்பை ஏற்படுத்தியது. வரிசையில் நின்று சாப்பாட்டிற்கான டோக்கன் வாங்கினோம். ஒரு நபருக்கு ரூபாய் 20/- மட்டுமே. எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிட்டுக் கொள்ளலாம். பார்சல் கிடையாது.

    அருமையான சாப்பாடு. அங்கு வேலை செய்பவர்களிடம் இயந்திரம் தோற்றுப் போகும். அவ்வளவு வேகம். ஒரு நாளுக்கு மதிய வேளையில் 3000 நபர்களுக்கு சாப்பாடு தயார் செய்து விநியோகிப்பதாக தெரியவந்தது. அதற்கு மேல் கண்டிப்பாக கிடையாது.

    இதனை நிறுவியர் பெயர் உயர்திரு பி.சுப்பிரமணியம் அவர்கள். சாந்தி கியர்ஸ் அதிபர் என்றால் அனைவருக்கும் தெரியும். அவரது மனைவியின் பெயர் திருமதி சாந்தி. தனது மனைவியின் நினைவாக சாந்தி சோஷியல் சர்வீஸஸ் என்ற பெயரில் இதனை அவர் நடத்தி வருகிறார்.

    தமிழகத்தில் தரமான உணவுகளை இவர்கள் அளவிற்கு எந்த உயர்தர உணவகமும் கொடுக்க முடியாது என்பது மறுக்க முடியாத உண்மை. ரூ.20-க்கு முழுச் சாப்பாடு, ரூ.5 முதல் ரூ.15-க்கு டிபன் வகைகள், பில்டர் காபி, டீ, ராகி பால், சத்து மாவு பால் என்று எதைத் தேர்ந்தெடுத்து சாப்பிட்டாலும் விலை ரூ.5 தான். நாம் மூன்று வேளையும், கொலைப் பசியில் சாப்பிட்டாலும் பில் நூறு ரூபாய் ஆகாது. இதனால், இந்த பகுதியில் வாடகைக்கு வீடு கிடைப்பது அரிது. அங்கு குடியிருப்பவர்கள் அந்த வீடுகளில் சமையல் செய்வதும் கிடையாது.

    ஏழைகள் மற்றும் முதியோர்களுக்கென தனி உணவு விடுதியுள்ளது. அங்கு அவர்களுக்கு இலவசமாகவே உணவு வழங்கப்படுகிறது என்பது விசேஷ செய்தி

    உணவில் மட்டுமல்லாமல், கல்வி, பெட்ரோல், டீசல், பார்மஸி, டயாலிஸிஸ் சேவை, ரத்த வங்கி சேவை, கண் கண்ணாடி கடை, ரேடியோலஜி சேவை, ஆய்வு மையம், எரிவாயு எரியூட்டு மையம் என்று பல சேவைகளை செய்து வருகிறார்கள். இந்த வளாகத்திலுள்ள மருத்துவ ஆய்வகத்தில் எடுக்கப்படும் ஸ்கேன், எக்ஸ்ரே உள்ளிட்டவை மற்ற மையங்களைவிட, 50 முதல் 70 % கட்டணம் குறைவு.

    இந்த அனைத்துப் புகழுக்கும் காரணம் இதன் நிறுவனர் சுப்பிரமணியம். ஆனால், வலது கை கொடுப்பது, இடது கைக்குத் தெரியக் கூடாது என்று சொல்வதைப் போல, இதுவரை தன்னை எங்கேயும் இவர் அடையாளப்படுத்திக் கொண்டது இல்லை. பெரும்பாலான ஊடகங்கள் அவரைச் சந்தித்துப் பேட்டியெடுக்க முயற்சி செய்தன. ஆனால், அவர் எந்த ஊடகத்தையும் சந்திக்கவுமில்லை. பேட்டி கொடுக்கவுமில்லை.

    ஒரு அரசு தன் மக்களுக்கு செய்ய வேண்டிய பணிகளை சத்தமே இல்லாமல் சுத்தமாக செய்து வரும் சுப்பிரமணியம் அவர்களை பாராட்ட வார்த்தைகளில்லை.

    முகத்தையும் காட்டாமல், முகவரியையும் தெரிவிக்காமல் பல லட்சம் மக்களின் வாழ்த்துகளை வாங்கிக் கொண்டிருக்கிறது சுப்பிரமணியத்தின் குடும்பம். நல்ல மனம் வாழ்க...!

    மேலும் இங்கு பல்வேறு வகையான சிற்றுண்டிகளும் விற்கப்படுகின்றன. மைதாமாவில் எந்தவிதமான பதார்த்தங்களும் செய்வதில்லை.

    காலை 4.30 மணி முதல் 200க்கும் மேற்பட்டோர் நடைபெயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். பிறகு
    6 மணி முதல் கம்பங்கூல், சூப் (அருகம்புல், கீரை, மனத்தக்காளி மற்றும் பல) மற்றும் ஜூஸ் (மாதுளை, முருங்கை, கேரட் மற்றும் பல) அனைத்தும் 5 ரூபாய்க்கு ஒரு டம்ளர் என்று விற்பனை செய்கிறார்கள்.

    களி, சுண்டல், முளைகட்டிய பயிர்களும் விற்கிறார்கள்.
    அனைத்தும் சுத்தமாகவும், அளவில் அதிகமாகவும், விலை குறைவாகவும் கொடுக்கிறார்கள்.

    முக்கியமாக ஒரே நேரத்தில் குறைந்தது 200 குழந்தைகள் விளையாடும் அளவிற்கு விளையாட்டுக் கருவிகளும், பெரிய விளையாட்டுத்திடலும் உள்ளது.

    மேலும் 5 கிலோ மீட்டர் சுற்றளவில்
    5 மழலையர் பள்ளிகள்
    (PRE KG, LKG, UKG) இலவசமாக நடத்திக்கொண்டிருக்கிறார்.
    இங்கு பயிலும்
    அனைத்து குழந்தைகளுக்கும் காலையில் சிறப்பான சிற்றுண்டியும், இடைவேளையில் பாலும்-சுண்டலும்,
    மதியம் மிக உயர்தரமான மதிய உணவும் இலவசமாக கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

    எஙகள் வீடு SSS (SHANTHI SOCIAL SERVICE) -லிருந்து 1.5 KM தொலைவில் தான் உள்ளது. மொத்தத்தில் இதன் அருகில் வசிக்கும் அனைவரும் கொடுத்து வைத்தவர்கள்.

    கோவைக்கு வருபவர்கள் ஒரு முறையேனும் இங்கு வந்து செல்லவும்.

    இவர்களைப் பற்றி இன்னமும் அறிந்து கொள்ள
    Shanthi Social Services
    jayasala42
     
    gknew likes this.
    Loading...

  2. Amulet

    Amulet IL Hall of Fame

    Messages:
    3,147
    Likes Received:
    5,088
    Trophy Points:
    408
    Gender:
    Female
    I gather (THANKS google translate) that someone is feeding people at low cost, so that people in the neighbourhood of that service had stopped cooking at home. This is like Singapore, where it is easy to eat in hawker's stalls, and no need to toil at home, and have dishwashing and clean-up jobs as well.

    I hope more such food service stalls come up so that people can quit cooking at home and focus on following all the serial shows on TV. Some of these shows suffer for lack of audience. Sports is drawing them away. :disappointed:
     
  3. suasin

    suasin Gold IL'ite

    Messages:
    305
    Likes Received:
    544
    Trophy Points:
    173
    Gender:
    Female
    Not like that..
    He also provides much subsided medical services.. Many pharmacies brought down prices by around 20% because people traveled from far to buy medicines here.. He pays the doctors and pharmacists competetive salaries but charges less than 50%..
    If a family is to buy medicines for arnd 4000, then the charges at most for travel will be 100(bus), give the prescription, take a token, go have food at rs 5, come back and collect the medicines at atleast 800 rs lesser price..
    It started off as a pharmacy at an IOC petrol pump and all these other services were add ons..
     

Share This Page