1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

sadangu,sampradayam

Discussion in 'Posts in Regional Languages' started by jayasala42, Apr 21, 2015.

  1. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,367
    Likes Received:
    10,570
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Many sampradayams are followed even today, with or without belief.But there have been specific justification behind such customs.

    இந்த நவீன யுகத்திலும் சில பழைய சம்பிரதாயங்களைக் கடைபிடிப்போர் இருக்கவே செய்கிறார்கள்.
    1.கும்பம் வைத்தல் ;

    கும்பம் இறைவனது திரு உருவின் அடையாளம்.இறைவனின் உடல் கும்பம்.
    கும்ப வஸ்திரம்-உடம்பின் தோல் .நூல்-நாடி நரம்புகள்.
    குடம்-தசை. தண்ணீர்-ரத்தம் .நவரத்தினம்-எலும்பு தேங்காய்---தலை .மாவிலை--தலை முடி தர்பை --குடுமி

    மந்திரம்--உயிர்

    இறைவனை சாட்சியாக வைத்து நடத்தப் படும் நிகழ்வு.


    2.ஊஞ்சல் :

    அறம் ,பாவம் என்ற இருவினை கயிற்றால் பிணைக்கப்பட்ட உயிர்,உடல் எனும் பலகையில் ஆடுகிறது.ஆட்டுவிப்பார் இறைவன் .ஊஞ்சல் போல ஏற்றமும் இறக்கமும் நிறைந்தது வாழ்க்கை.


    3.மேள தாளம் :மற்ற தீய பேச்சுக்கள் காதில் விழா வண்ணம் தடுக்கும் தெய்வீக இசை.


    4.உப்புப் பானை தொடுதல்:

    புகுந்த வீட்டுக்கு வந்த பெண்ணை விளக்கு ஏற்றச் செய்து உப்புப் பானையைத் தொட வைக்கும் பழக்கம் உண்டு.உணவு வகைகளுள் கலந்து உணவுக்குச் சுவை கூட்டி தன்னைக் காட்டிக் கொள்ளாத தியாகத்தின் சின்னம் உப்பு.பெண்ணின் வாழ்வும் அளவோடு அமைந்து வளமாகத் திகழ வேண்டும் என்பதைக் குறிக்கும் நிகழ்ச்சி.


    5.வாழ்த்துப் பெறுதல்:

    எந்த முறையில் திருமணம் நடந்தாலும் வணங்குதலும் வாழ்த்துப் பெறுதலும் நிச்சயம் உண்டு.மனித உடல் காந்தம் போன்றது.தலைப் பகுதி வட துருவமாகவும்,கால் பகுதி தென் துருவமாகவும் இயங்கி வருகிறது.நாம் விழுந்து வணங்கும்போது பாத மாகிய தென் துருவத்தில் ,நம் தலையாகிய வட துருவம் படிகிறது.மாறுபட்ட துருவங்கள் ஒன்றை ஒன்று ஈர்க்கும்போது காந்த சக்தி நம் தலை மூலம் உடல் முழுதும் பரவுகிறது.மின் அழுத்தம் அதிகமான இடத்திலிருந்து குறைவான இடத்தை நோக்கி மின்சாரம் பாய்வது போல ,காந்த சக்தி அதிகமுள்ள அறிவிலும் அனுபவத்திலும் சிறந்த பெரியோரிடமிருந்து வணங் குபவரை நோக்கிப் பாயும்.இதுவே அடிப்படை உண்மை.


    6.மொய் :-

    மணமக்களை வாழ்த்த வந்தவர்கள், பலாப் பழத்தை ஈ மொய்ப்பது போல மண மக்களைச் சுற்றி நின்று தங்கள் அன்பின் அடையாளமாக வழங்கிய பரிசுகள் மொய் எனப்படும்.திருவிளையாடல் புராணத்தில் திருமணப் படலத்தில் ,திருமால், இந்திரன், பிரம்மன் போன்ற அனைவரும் கற்பகத் தரு, காமதேனு, சிந்தாமணி போன்ற செல்வத்தை மீனாக்ஷி அம்மையின் திருவடியில் வரிசை ( மொய்) செய்து அருள் பெற்றனராம்.


    7.ஷட்ரசம் பரிமாறுதல்:

    அதாவது அறுசுவை உண்டி பரிமாறுதல் ..திருமணம் முடிந்தபின் முதன் முதலாக மனைவி கையினால் பரிமாற கணவன் உண்ணுவது.கணவனுடன் சேர்ந்து கணவன் வீட்டாருக்கும் சேர்த்து உணவு பரிமாறுவது முன்கால வழக்கம். இப்போது வாயில் ஊட்டுவது என்ற பழக்கத்தில் வந்து விட்டது.

    இதன் வரலாறு சுவையானது. ஞான சம்பந்தர் நெசவாளர் குடியிருப்பின் வழியே செல்லும்போது ,பசிக்குப் பாவுக் கஞ்சியை ( நெசவுக்குப்ப்பயன்படுத்தும் கஞ்சி ) வாங்கிக் குடித்தார்.அப்போது அவரது முழங்கை வழியே வழிந்த கஞ்சியை உமாபதி சிவாசாரியார் கையில் ஏந்திக் குடித்ததன் மூலம் குரு சிஷ்ய உறவு ஏற்பட்டது.குருவின் அருளால் உமாபதி சிவாச்சாரியார் சிவ ஞானம் அடைந்து பல நூல்களை இயற்றினார்.

    கணவன் மனைவியிடையே குரு-சிஷ்ய பாவமும் அவசியம் என்பதை உணர்த்தவே இந்த நிகழ்ச்சி.( Husband or wife may be either Guru and Shishya in different aspects)கணவன் சாப்பிட்ட இலையில் மனைவி சாப்பிடும் பழக்கமும் இப்படித் தான் வந்திருக்கலாம்.ஆனால் டேபிள் கலாச்சாரமும் இருவரும் வேலைக்குச் செய்யும் சூழ்நிலை வந்ததும் இந்நிலை மாறிவிட்டது.


    8.சுருள் :-
    உறவினர்களின் பங்கேற்புக்கு நன்றி கூறும் வகையில் அவர்களுக்கு அளிக்கும் மரியாதை.அதற்காகக் கொடுக்கும் பணத்தை வெற்றிலை பாக்கில் வைத்துச் சுருட்டிக் கொடுப்பார்கள்.எனவே சுருள் எனப்பட்டது.இதுதான் பெயர் ,உரு மாறி 'return gift ' என சக்கை போடு போடுகிறது. அமெரிக்காவில் return gift காக தனி கடைகளும் உண்டு. விழாவுக்கு வருபவர் தன gift ஐ தேர்ந்தெடுக்கும் உரிமையும் உண்டு. அன்பளிப்பு ,விருப்பம் என்பதிலிருந்து அடித்துப் பிடித்து gift வாங்குவது மாதிரி புலப்படும்.

    கல்யாணங்களில்
    இப்போது return gift க்கே சில லக்ஷங்கள் செலவாகின்றன.


    9.மூக்குப் பிழிதல்​

    சீமந்தத்தின் போது நடை பெரும் நிகழ்ச்சி.

    இரு காய்களுள்ள ஆலங் கொழுந்துடன் , அரச மரத்தின் மொட்டு சேர்த்துப் பால், நெய் கலந்து அரைத்துப் புதுத் துணியில் கட்டுவார்கள்.கருவுற்ற பெண்ணை மேற்கு முகமாக அமர வைத்து,கணவன் கிழக்கு முகமாக நின்று, அரைத்து வைத்துள்ளதை எடுத்து மனைவியின் வலது மூக்கு துவாரத்தில் சில சொட்டுகள் பிழிய வேண்டும்.இச்சாறு பெண்ணின் இதயத்தையும் குழந்தையின் இதயத்தையும் வலுவடையச் செய்கிறது.பேறு காலம் பற்றிய பெண்ணின் அச்சம் நீங்குகிறது.

    கருவுற்ற பெண்ணுக்கு இந்த காலத்தில் 3 முறை தடுப்பு ஊசி போடப் படுகிறது.இன்றைய தடுப்பு ஊசியைதான் முன்னோர்கள் 'மூக்குப் பிழிதல் 'என்ற சிறப்பான சடங்காக நிகழ்த்தி வந்தனராம்.

    இது மாதிரி பூப்பெய்துதல்,நலுங்கு, முத்து விழா போன்ற அநேக வைபவங்களும் ஒரு அறிவியல், சமூகக் கோட்பாடுகளை மனதில் வைத்துக் கொண்டாடப் படுகின்றன.

    அவற்றை மூட நம்பிக்கை என்று இகழ்வாரும், நெறிமுறை என்று போற்றுவாரும் உண்டு.


    Jayasala 42


























    __._,_.___

    [HR][/HR] Posted by: vathsala jayaraman <vathsalaj@yahoo.com> [HR][/HR]

    [TABLE]
    [TR]
    [TD="colspan: 1"] Reply via web post [/TD]
    [TD="colspan: 1"]•[/TD]
    [TD="colspan: 1"] Reply to sender [/TD]
    [TD="colspan: 1"]•[/TD]
    [TD="colspan: 1"] Reply to group [/TD]
    [TD="colspan: 1"]•[/TD]
    [TD="colspan: 1"] Start a New Topic [/TD]
    [TD="colspan: 1"]•[/TD]
    [TD="colspan: 1"] Messages in this topic (1) [/TD]
    [/TR]
    [/TABLE]
    Visit Your Group
    [​IMG] PrivacyUnsubscribeTerms of Use






    .


    [​IMG]
    [​IMG] __,_._,___
     
    1 person likes this.
  2. Poetlatha

    Poetlatha Platinum IL'ite

    Messages:
    1,058
    Likes Received:
    1,944
    Trophy Points:
    290
    Gender:
    Female
    Dear JayMa,

    Migha azhagaha, porumaiyaga, sadangu sampradhyam patri villakkam kurineerghal. Nandri. Nam poojai galai patriyum, undru nam thinn porul ( naivadeyam sweets and savor its) patriyum villakkam tharungalane.
     
    1 person likes this.

Share This Page