Rebirth

Discussion in 'Queries on Religion & Spirituality' started by jayasala42, Dec 29, 2013.

  1. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,365
    Likes Received:
    10,561
    Trophy Points:
    438
    Gender:
    Female


    மறு பிறவிக்கும் மனிதனின் இறுதி எண்ணங்களுக்கும், பேசிய வார்தைகளுக்கும் ஒரு இணைப்பு உள்ளது என்பது
    இன்றைய வாதம்.



    முதலில் ஒரு கதை தான் கேட்போமே!(story of Ajaamilan in Bhagavatham)



    ஒரு மானிடன் உலக பர சுகத்தையே ஆண்டு அனுபவித்தவன்,
    இறுதி மரணப் படுக்கையில்.


    அவன் வாழ்ந்த காலம் முழுவதும் அந்த இறைவனின் திருநாமங்களை
    ஓதியே அறியாதவன்.


    அவனது உயிரை கொண்டு செல்ல பாசக் கயிறுடன் எம தூதர்கள் அருகிலேயே காத்திருக்கின்றார்கள்.




    இந்த மானிடன் இறுதிக் கட்டம் நெருங்கியதை உணர்ந்தவன், தனது கடைசி
    புதல்வன் நாராயணனை உரக்க கூவி விளிக்கின்றான்.


    எமதூதர்கள் பாசக் கயிற்றை வீச அங்கு ஓர் அற்புதம்; ஆச்சரியம்.


    பாசக் கயிற்றை தடுத்து இரண்டு தேவ தூதர்கள்.


    எம தூதனிடம் அவர்கள், சாட்சாத் வைகுண்டத்திலிருந்து வந்திருப்பதாகவும் இந்த நரன் அந்த பராத்மனின் திரு நாமத்தை விளித்ததால் அவன் திருமால், திருமகளுடன் பள்ளி கொள்ளும் வைகுண்டத்திற்கு அனுமதி, அங்கீகாரம் பெற்றவன் என்று தன்களின் திடீர் பிரசன்னத்திற்கு விளக்கம் சொல்கின்றனர்.




    எனவே அவர்களே, அவனது காவலர்கள் என்று எம தூதர்களை விலகிச் செல்லுமாறு ஆணைஇடுகிறார்கள்.

    எமதூதர்களுக்கு குழப்பம்; வழக்கு எமதர்மராஜனிடம் வருகிறது


    எமதர்மராஜன், எதற்கு பெரிய இடத்து சம்ம்சாரங்களில் தலையிட்டு
    தனது பதவிக்கு ஆபத்தை வலிய வரவழைப்பானே என்று தனது எஜமானர்
    சிவபெருமானிடம் முறை இடுகிறான்.


    அந்த சிவனாரோ அந்த நரனுக்கு வைகுண்ட ப்ராப்தி அந்த கிருஷ்ணனே அளித்தது எனவே அந்த நரனை வைகுண்டம் அனுப்பிவிட சொல்லிவிடுகிறார்.




    அடுத்து விவாதங்களுக்கும் சர்ச்சைக்கும் உள்ளான மகாத்மா காந்தியின் கடைசி வார்த்தைகள் , "ஹே! ராம்"


    மகாத்மா என்னவோ சந்தேகம் இல்லாமல் அந்த ராம நாமத்தின் சிறப்புக்களையும் பெருமையையும் தனது வாழ்நாளில் பேசி வாழ்ந்தவர்தான்.


    அண்ணல் அந்த கடைசி நிமிடங்களில் கோட்சேயின் குண்டடி பட்டு
    மண்ணில் சாய்கையில் அவர் வெறும் பேரு மூச்சு ஒன்றைத்தான் விட்டாரே ஒழிய எந்த ஒரு வார்த்தைகளையும் சொல்லவில்லை என்று அடித்து சத்தியம் செய்கிறார், கோபால் கோட்சே,காந்தியைசுட்டவனின் சகோதரர்.


    இது மட்டுமில்லை; காந்தியின் தனிப் பட்ட உதவியாளர் கல்யாணம் வெங்கிடராமனும் இதே கருத்தைத்தான் சந்தேகத்திற்கு இடமில்லாமல் சொல்கிறார், காந்தி கடைசியாக ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்று. அவர்தான் காந்திக்கு வெகு அருகிலேயே நின்றவர்.


    ஆனால் காந்தி கடைசி நிமிடத்தில் ராமநாமம் தன உதடுகள் உச்சரிக்க வேண்டும் என்று விரும்பினாராம். அவ்வளவுதான்.


    காந்தி கட்டாயம் அவர் வழி பட்ட அந்த ஸ்ரீராமனின் திருவடிகளை சேர்ந்து இருக்கலாம்.


    ஆனால் அவர் கடைசியாக கொண்டிருந்த எண்ணங்கள் எல்லாம், இந்து முஸ்லிம் கலவரங்களும், நேரு - படேலின் முரண்பாடுகள் பற்றிய பெரும் கவலையும் தான்.


    இதற்க்கு என்ன சொல்லுகின்றீகள் நண்பர்களே!


    மனிடன்கதை, மகாத்மாவின் கதையும் பார்த்தாகிவிட்டது.




    அடுத்து அந்த தேவ மைந்தன் இயேசு பிரான் சிலுவையில் அறை பட்டு ஆவி பிரியும் முன் சொன்ன வார்த்தைகளும் விவாத திலும் சர்சையிலும் தான் முடிந்து உள்ளது.


    ஏசுபிரான் ஒரு பெருமூச்சு விட்டு ஆவி நீங்கியதாக சொல்லுகின்றார்கள்.


    MARK பேசுவதோ - [FONT=arial black, sans-serif]"Jesus uttered a loud cry, and breathed his last" (16.37). [/FONT]
    [FONT=arial black, sans-serif]Both agree that sometime before he cried out loudly, Jesus said with evident anguish, "My God, my God, why hast thou forsaken me?" (Matthew 27.46; Mark 15.34) [/FONT]
    [FONT=arial black, sans-serif]This may well have been imagined by Jesus’s disciples, since none of them were present at the crucifixion, or if they were, which is exceedingly unlikely, they could not have been close enough to Jesus to discern his last words. [/FONT]
    [FONT=arial black, sans-serif]Indeed, "My God, my God, why hast thou forsaken me", is a quotation from the Old Testament (Psalms 22.1), and was almost certainly inserted to make the prophecy of the appearance of the Messiah seem to come true. [/FONT]
    [FONT=arial black, sans-serif]However, in the public imagination, it is the words which Luke ascribes to Jesus, "Father, forgive them; for they know not what they do" (23.34), which are most often viewed as Jesus’ last utterance, though the evidence for supposing that these words were inserted into the gospels much later, perhaps several decades after the death of Jesus, is compelling. If the messianic view of Jesus had to prevail, doubtless something more than a "loud cry" had to be attributed to him as he was about to breathe his last. [/FONT]
    இது இப்படி இருக்க ஸ்ரீ கிருஷ்ணன் கீதையில் சந்தேகம் இல்லாமல் தான் சொல்லி விடுகிறானே!
    எவனொருவன் கிருஷ்ண பக்தியில் முழு சரணாகதி அடைந்து விடுகிறானோ, புத்தியோகம் பெற்று தனது ஜீமாத்மாவை நடுத்துகிறானோ அவனுக்கு மறுபிறவி ஒன்றும் இல்லை.
    மற்றவர்களுக்கு அவர்களை பிணிபோல தொடர்ந்து வரும் பிறப்பு, மறு பிறப்பு என்ற மாய சூழலில் அவர்கள் அந்த வேதங்களில் சொல்லிய கருத்துகளைக் மனதில் கொண்டு, நடப்பது எல்லாம் நாராயணன் செயலே என்று தன்னை இந்த பிறவியில்ருந்து முற்றிலும் விலகி நின்று கழிக்கின்றானோ அவன் தொடர்ந்து உயர் பிறவி ப்ராப்தம் பெற்று இறுதியில் அந்த பராமாத்வுடன் ஐக்கியம் அடைகிறான்.

    எனவே கடைசி நிமிட பேச்சோ, எண்ணங்களோ செயல்களோ மாத்திரம் நமது அடுத்த பிறவியை நிர்ணயம் செய்வது இல்லை.
    Jayasala42

     
    Loading...

    Similar Threads
    1. SuiDhaaga
      Replies:
      0
      Views:
      251
    2. ratan
      Replies:
      113
      Views:
      18,343
    3. coolgal123
      Replies:
      31
      Views:
      2,987

Share This Page