1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

Reality Hurts

Discussion in 'Posts in Regional Languages' started by jayasala42, Jan 1, 2017.

  1. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,367
    Likes Received:
    10,570
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Turn off for: Tamil
    திடீரென ஒரு நாள் நாட்டையாளும் மாகாராஜா ஒரு உத்திரவு போட்டார்.
    "இன்று முதல் எல்லோரும் வேட்டி சட்டைக்கு மாற வேண்டும். தாங்கள் அணிந்திருக்கும் சட்டை பேண்ட்டுகளை எல்லாம் அரசாங்கத்திடம் ஒப்படைக்கனும்.
    அரசாங்கமே உங்களுக்கு வேட்டி சட்டை தரும். நாட்டில் தீவிரவாதிகள் சட்டை பேண்ட் போட்டுக்கொண்டு இருப்பதாலும் சில அயோக்கியர்கள் கருப்புச்சட்டை பேண்ட் போட்டுக்கொண்டு அக்கிரமங்கள் செய்வதாலும் இந்த முடிவெடுக்கப்பட்டது.
    எனவே நாளை முதல் உங்கள் சட்டை பேண்ட்டுகளை அரசாங்கத்திடம் ஒப்படைத்து விட்டு இதற்கென நிர்ணயித்த இடங்களில் புது வேட்டி சட்டை வாங்கிகொள்ளவும். என்று சொல்லப்பட்டது.

    அதன்படி மறுநாள் சட்டைப்பேண்ட்டுகளை ஒப்படைத்து விட்டு வரிசையில் வேட்டி வாங்க நின்ற மக்களுக்கு அதிர்ச்சி. கோவணம் மட்டுமே கொடுக்கப்பட்டது.
    தற்சமயம் வேட்டிகளுக்கு தட்டுப்பாடு இருப்பதால் கோவணத்தை வைத்து அட்ஜஸ்ட் செய்து கொள்ளவும் என்று அறிவிக்கப்பட்டது.
    அது one use கோவணம் என்பதால் வாரம் ஏழு கோவணம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தினமும்
    வரிசையில் நின்று நின்று கோவணம் வாங்க வேண்டி இருந்தது. சிலருக்கு கிடைத்தது. சிலருக்கு கிடைக்கவில்லை. ஒரே வாரத்தில் மேலும் அதிர்ச்சி. கோவணம் தட்டுப்பாடாக இருப்பதால் இனி வாரம் இரண்டு கோமணம் மட்டுமே வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
    அடேய். இது one use கோவணம்டா. தினம் ஒன்று கட்டனுமேன்னு மக்கள் கூக்குரலிட்டார்கள். அதற்கு அரசர் தரப்பில் ஒரு நாளுக்கு 24 மணி நேரம் கட்டினால் அப்படி தான். அதனால் அவசியமான நேரத்தில் கட்டிக்கொண்டு மற்ற நேரத்தில் கழட்டி வைத்து விடுங்கள். அதற்கு வசதியாக சில இடங்கள் கோவணமின்றி சுற்றலாம் என அறிவிக்கப்பட்டது.
    மக்கள் நொந்து போனார்கள். ஆனாலும் அரசருக்கு அடிவருடும் கூட்டம் ஒன்று ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து நாங்கள் எப்போதும் கோவணமின்றி சுற்றுவதாகவும் அது தங்களுக்கு பேரின்பம் தருவதாகவும் எனவே நீங்களும் மாறுங்கள் என்று குதூகலித்தார்கள்! மிஞ்சி கேட்டவர்களை அங்கே அரசரின் படைகள் எல்லையில் .... என்று தேவையின்றி ராஜபக்தி ரசத்தை வலுக்கட்டாயமாக வாயில் ஊற்றினார்கள்.
    இல்லையென்றால்...ஓஹோ! நீதான் அந்த கருப்புச்சட்டைக்காரனா என்று பகடி பேசினார்கள். இதுவரை கைவசம் இருந்த பழைய கோவணங்களை வைத்து சமாளித்தாகி விட்டது. ஆனால் நேற்றிருந்து பழைய கோவணமும் அணியக்கூடாது என்று நிறுத்தப்பட்டு விட்டது.

    அதெல்லாம் இருக்கட்டும்!
    எங்களுக்கு கோவணம் கூட கிடைக்க மாட்டேங்குது!
    ஆனா நிறைய பேரு வெள்ளையும் சொள்ளையுமா திரியறங்களே?
    அது எப்படி?
    சில பேர் பாத்ரூம்ல கூட கட்டுக்கட்டா வெள்ளை வேட்டி சட்டை அடுக்கி வெச்சிருக்காங்களே?
    அது எப்படி?
    அவுங்க எங்கேயும் லைன்ல நின்ன மாதிரியும் தெரியலையே!
    ஒரு நாள் கூட அவுங்க கோவணம் கட்டுன மாதிரியும் தெரியலையே!

    ஒருத்தர் ரெண்டு பேரை மட்டும் புடுச்சீங்க?
    அவுங்களுக்கு எப்படி அத்தனை வேட்டி சட்டை கெடச்சதுன்னு விசாரிச்சீங்களா?
    கோவணம் வாங்க வரிசையில் நிக்கிற அப்பாவிகளை உங்க படையினர் அடியடின்னு அடிச்சு நொறுக்குறாங்களே!
    இவ்வளவு வெச்சிருக்கிறவங்களை பொடனியிலே நாலு உட்டு விசாரிச்சிருக்க வேண்டாமா?

    அய்யா சாமிகளா!
    அவிங்களுக்கு கொடுத்த மாதிரி ஊடு தேடிப்போய் வேட்டி சட்டை கொடுக்கலேன்னாலும் பரவாயில்லை!
    வாக்களித்த கோவணத்தையாவது தாங்களேன்.
    மானம் போகிறது!!

    Jayasala 42
     
    periamma and Rajeni like this.
    Loading...

  2. Rajeni

    Rajeni Moderator Platinum IL'ite

    Messages:
    1,257
    Likes Received:
    2,318
    Trophy Points:
    290
    Gender:
    Female
    Hilarious snippet Jayasala Mam!! Nethiyadi!! Muttrilum Unmai!! Netru varai karuppu sattai pottavan indru pudhidhaga vandha vetti sattaiyaiyum karuppakki padhukkuhiraan.. Vellai sattai pottu vari katti yogiyamai vazhadhavan dhaan ondrumillamal kovanathukku alaihiraan..!!
     
    periamma likes this.

Share This Page