1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

Poetic lines from tamil movies- please share your favorites

Discussion in 'Music and Dance' started by DDC, Aug 3, 2010.

  1. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Opportunity cost of capital!
    Movies poruththavarai pala varudangalukku munbu 'Risk lover', sila varudangalukku munbu 'Risk neutral', ippo 'Risk averse'
    Sura, Kuruvi maadhiri movies paarthadhil irundhu sudhaariththu vittaen. :smile:
     
    kaniths likes this.
  2. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Hi APS,
    Neenga post panna moonu songs um 'meesai' collection la saerthu kollalaam :wink::wink:

    Idho inru ungalukkaanga paadal:
    YT - காதல் சடுகுடு - அலைபாயுதே

    உன் உள்ளம் நான் காண என் ஆயுள் போதாது
    என் அன்பை நான் சொல்ல உன் காலம் போதாது
     
    kaniths likes this.
  3. kaniths

    kaniths IL Hall of Fame

    Messages:
    5,628
    Likes Received:
    11,612
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Mersel audio release ku apuram nan kooda lesa lesa yosichinggg... :facepalm:
     
    jskls likes this.
  4. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    'Vivegam' padathirkku evlo build up kuduththaanga!! 'Thala' fans ah irundhaalum, andha padam paarththavangalukku dhaan puriyum evlo periya bulb vaangi irukkom nu..'Mersel' follows suit?

    'Puli' padam naan innum paarkkala..'Puli' eppudi irundhadhu?
     
  5. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    இந்த மெலடி கேட்பதற்கு இதமாக இருந்தது. படம் பிடித்து இருக்கும் விதத்தை பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.

    YT - நீதானே நீதானே என் நெஞ்சை தட்டும் சத்தம் - மெர்சல் - ARR, Shreya Ghosal

    என் மாலை வானம் மொத்தம்
    இருள் பூசிக்கொள்ளும் சத்தம்
    இங்கு நீயும் நானும் மட்டும்
    இது கவிதையோ
     
  6. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    இன்று அலுவலகத்தில் ஒரு ஆங்கில பெண்மணியை சந்தித்தேன். நான் தற்போது வசிக்கும் நாட்டில் இவர் பிறந்து வளர்ந்து 31 ஆண்டுகள் இதே அலுவலகத்தில் பல துறைகளில் பணியாற்றி விட்டு தற்போது பெரிய பொறுப்பில் இருக்கிறார். சுமார் இரண்டு மணி நேரங்கள் நின்று கொண்டே நான் இவரிடம் உரையாடி கொண்டிருந்தேன். இவர் வைட் போர்டு ல வரைந்து நான் கேட்ட கேள்விக்கெல்லாம் விளக்கம் கொடுத்தார். இரண்டு மணி நேரம் எனக்கு இரண்டு நிமிடம் ஆகப்பட்டது.

    "Put your hand on a hot stove for a minute, and it seems like an hour. Sit with a pretty girl for an hour, and it seems like a minute. That's relativity." ~~ Albert Einstein

    Chess விளையாடுவது எப்படி என்று கேட்டால் பொதுவாக 16 pieces பற்றியும், அதன் moves பற்றியும் , விதிமுறைகளை பற்றியும் தான் சொல்லி தருவார்கள். யாராவது 8*8 கட்டங்கள் நிறைந்த அந்த செஸ் போர்டுக்கு விளக்கம் கொடுத்து, ஒவ்வொரு piece எதற்கு இந்த விளையாட்டில் வந்தது என்ற பின்னணி கொடுத்து, விதி முறைகளுக்கான காரணங்கள் சொல்லி, எதிர்த்து விளையாடும் எதிராளியின் போக்கை எப்படி கணித்து அதற்கு எப்படி பதிலடி கொடுக்க வேண்டும் என்று சொல்லி, வியூகம் அமைக்கும் சூட்சமங்கள் சொல்லி கொடுத்து, Chess கற்று கொடுத்தால் எப்படி இருக்கும்?

    அப்படி ஒரு பரவசமான அனுபவம் எனக்கு அலுவலகத்தில் கிடைத்தது இன்று தான் முதல் முறை.
    ஒரு இனிய பாடலை கேட்ட பிறகும் அந்த பாடலின் வரிகள் காதில் ஒலித்து கொண்டிருப்பதை போல இன்னும் எங்களது வேலை தொடர்பான உரையாடல் எனது காதில் ஒலித்து கொண்டிருக்கிறது.
     
    jskls likes this.
  7. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    WAல Bestie அனுப்பிய இரண்டு மெசேஜ் படித்து அதன் தாக்கத்தில் இருந்து இன்னும் மீளவில்லை நான்..

    ~~~~~~~~~~~~~~~~~~~

    Who is your fallback??

    People help you the way they know to help you. To help you to come out of stress, one friend will ask you to drink and another will ask you to meditate.

    To overcome hurt, one friend will ask you to take revenge and get even, and another will ask you to forgive and get ahead with your life. ‘Who is your fallback’ makes all the difference.

    Duryodhana’s predicament, in his own words, was, “I know what is right but I am not able to indulge in it. I know what is wrong but I am not able to avoid it.” He needed a fallback. His fallback was his uncle Shakuni, and resultantly, Duryodhana moved from bad to worse.

    Arjuna’s predicament was different. He was allowing his personal emotions to dominate his sense of duty, and hence wanted to escape from the responsibilities he had towards upholding righteousness. He needed a fallback. His fallback was Krishna, and resultantly, Arjuna was restored to his greatness.

    Humans we are, at some point or the other, we all need a fallback. ‘Who is your fallback’ makes all the difference.
    Choose Well!!

    ~~~~~~~~~~~~~~~~~~~

    தெரிந்து மிதித்தாலும் தெரியாமல் மிதித்தாலும் மிதிபட்ட எறும்பிற்கு இரண்டுமே ஒன்றுதான்.

    நினைப்பது போல் வாழ்க்கை எல்லோருக்கும் அமைந்து விடுவதில்லை
    அழகாய் அமைந்த வாழ்க்கையைக் கூட
    சிலருக்கு வாழத் தெரிவதும் இல்லை!

    'சந்தோஷமா வாழறேன்' னு காட்டிக்கொள்ள தான் பணம் தேவைப்படுகிறது.
    உண்மையில், சந்தோஷமா வாழ பணம் ஒரு பொருட்டே இல்லை!

    நோய் வரும் வரை உண்பவன் உடல் நலமாகும் வரை உண்ணாதிருக்க வேண்டி வரும்!

    பணம் சம்பாதிப்பது குண்டூசியால் பள்ளம் தோண்டுவது போல
    ஆனால் செலவழிப்பது குண்டூசியால் பலூனை உடைப்பது போல!

    பணத்தின் மதிப்பு தெரியவேண்டுமா?
    செலவு செய்யுங்க!
    உங்களின் மதிப்பு தெரியவேண்டுமா?
    கடன் கேளுங்க!

    பிச்சை போடுவது கூட சுயநலமே
    புண்ணியம் கிடைக்கும் என்று நினைத்தால்.

    அனுபவத்தால் உணரவேண்டிய ஒன்றை ஆயிரம் தத்துவ ஞானிகளாலும் உணரவைக்க முடியாது.

    வாழ்க்கையில் கற்றுக்கொள்வதில் குழந்தை போல் இரு.
    அதற்கு அவமானம் தெரியாது.
    விழுந்தவுடன் அழுது முடித்து திரும்பவும் எழுந்து நடக்கும்!!

    வெட்டாதீர்கள் - மழை தருவேன் என்கிறது "மரம்".
    வெட்டுங்கள் - மழை நீரைசேமிப்பேன் என்கிறது "குளம்"

    திருமணம் -
    ஒரு ஆண் நல்ல கடந்தகாலம் கொண்ட பெண்ணையும்
    ஒரு பெண் நல்ல எதிர்காலம் கொண்ட ஆணையும் தேடுவது!!

    முன்னே செல்பவனை விட்டுவிடுங்கள்
    பின்னால் வருபவனிடம் மட்டும் கொஞ்சம் எச்சரிக்கையாய் இருங்கள்
    அவனால்தான் உங்களை முந்திச்செல்ல முடியும்.

    மீண்டும் ஒரு முறை முகம் பார்த்து பேசவேண்டியிருக்குமே என்ற ஒரு காரணத்திற்காகவே
    நம்முடைய பல கோபங்கள் தற்கொலை செய்துகொள்கின்றன.

    நேர்மையாக சம்பாதித்த பணம் பெரும்பாலும் கோயில் உண்டியல்களுக்கு வருவதில்லை.

    இவ்வுலகில் வாழ கற்றுக் கொண்டதை விட
    வலிகளை மறைத்து சிரிக்க கற்றுக் கொண்டதே அதிகம்!

    பகலில் தூக்கம் வந்தால் உடம்பு பலவீனமா இருக்குனு அர்த்தம்!!
    இரவு தூக்கம் வரலைனா மனசு பலவீனமா இருக்குனு அர்த்தம்!!

    துரோகிகளிடம் 'கோபம்' இருக்காது
    கோபப்படுபவர்களிடம் 'துரோகம்' நிச்சயமாக இருக்காது.

    தன்னை நல்லவராக காட்டிக் கொள்ள அடுத்தவரை கெட்டவராகச் சித்தரிக்கும்
    எவரும் நீண்ட நாள் நல்லவர் வேடத்தில் சுற்ற முடியாது.

    ~~~~~~~~~~~~~~~~~~~
     
  8. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    எனக்கு எவ்ளோ பிடிக்கும் என்று சொல்லவே முடியாத பாடல் இது. இளையராஜாவின் இசை, பாலு மஹேந்திராவின் காட்சி அமைப்பு, ஜேசுதாசின் குரல் - அத்தனையும் ஜோர்.

    எத்தனையோ இளையராஜா பாடல்களில் இந்த பாடலை தேடிப்பிடித்து டைரக்டர் கெளதம் மேனன் வாரணம் ஆயிரம் படத்தில் ஒரு சீன் வைத்து இருப்பார். GM's படங்களில் ஹீரோ ஹீரோயின் பின்னால் பார்த்தவுடன் சுத்துவதை மிகைப்படுத்தி காட்டினாலும் இவரது ரொமான்டிக் படங்கள் எனக்கு ரொம்பவே பிடிக்கும். GM kku நல்ல ரசனை உண்டு. இந்த பாடலும் ரசனை மிகுந்தது.

    YT - என் இனிய பொன் நிலாவே - வாரணம் ஆயிரம்

    YT - என் இனிய பொன் நிலாவே - மூடுபனி - IR/KJY

    வெண்நீலவானில் அதில் என்னென்ன மேகம்
    ஊர்கோலம் போகும் அதன் உள்ளாடும் தாகம்
    புரியாதோ என் எண்ணமே அன்பே
     
  9. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    WA la படிச்சு சிரிச்ச மெசேஜ். தினுசு தினுசா யோசிக்கிறாங்க..ரெண்டாவது கதையை பத்தி சொல்றதுக்கு ஒன்னுமில்லை..:wink::wink:

    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

    #கல்யாணமாம் #கல்யாணம்

    ஒரு கல்யாணத்துக்குள்ள நுழைஞ்சிட்டோம்னா, பொண்ணு மாப்ளைய மட்டும் படக்குன்னு கண்டுபுடிச்சிடலாம்.
    ஆனா, மத்த எல்லாரையும் யார் யாருன்னு அவங்க செய்கைகள வச்சே எப்படி கண்டுபுடிக்கிறதுங்குறதத் தான் இப்போ பாக்கப் போறோம்....

    கல்யாண மேடையில, ஃபுல் மேக்கப்புல பாத்த உடனே பளிச்சின்னு தெரியிறது பொண்ணுதான்.
    ஆனா அந்தப் பொண்ண விட அதிகமா மேக்கப் போட்டுக்கிட்டு ஒண்ணு அந்த ஸ்டேஜ்ல சுத்திக்கிட்டு இருந்தா அது தான் பொண்ணோட #தங்கச்சி...

    கல்யாண வீடியோ கவரேஜ்ல எல்லா ஃப்ரேம்லயும் பொண்ணும் மாப்ளையும் இருப்பாங்க.
    அவங்களுக்கு அடுத்த படியா, எல்லா ஃப்ரேம்லயும் ரெண்டு மூணு தங்க சங்கிலிகள் தெரியிற மாதிரி
    நிக்கிற ஒரு பொண்ணு இருக்கும். அது வேற யாரும் இல்லை. பையனோட #அக்கா...

    ஆளுக்கும் போட்டுருக்க ட்ரஸ்ஸுக்கும் சம்பந்தமே இல்லாம, ஆனா மாப்ளைக்கு ஈக்குவலா ஒருத்தன் கோட் சூட்டெல்லாம் போட்டுக்கிட்டு டம்மியா, ஸ்டேஜ்ல நின்னுகிட்டு இருப்பான். அது வேற யாரும் இல்லை. மாப்ளையோட அக்கா #புருஷன். அந்தக் கோட்ட, அவர் கல்யாண ரிஷப்ஷனுக்கு அப்புறம் இப்பதான் போட்டுருப்பாரு...

    இன்னொருத்தன் மாப்ள மாதிரியே வேஷ்டி சட்டையெல்லாம் போட்டுக்கிட்டு, ஸ்டேஜ்ல நிக்காம, டான் மாதிரி அங்க இங்க ஓடுறது ஒடியாருறது வர்றவங்கள கவனிக்கிறது, ஸ்டேஜ்ல ஏறுறது இறங்குறதுனு ரொம்ப ஆக்டிவா சந்தோஷமா திரிஞ்சிட்டு இருப்பான். அவந்தான் மாப்ளையோட தம்பி. ரூட்டு கிளியரான சந்தோஷத்துல தலைகால் புரியாம சுத்திக்கிட்டு இருப்பான்..

    கல்யாணம் முடிஞ்சி ஒரு பத்து நிமிஷம் கழிச்சி, எவண்டா அவன் நா வர்றதுக்கு முன்னால தாலியக் கட்டுனது..” ன்னு மண்டபத்தோட வாசல்ல ஒருத்தன் ஃபுல் போதையில கத்திக்கிட்டு இருப்பான்.
    அவனை யாருமே மதிக்காம, ஆனா ஒரே ஒரு அம்மா மட்டும் போய் அவன உள்ள கூப்டாங்கன்னா அவன் தான் மாப்ளையோட தாய் மாமன்.
    அப்போ அவனப் போய் கூப்டுறது யாருன்னு உங்களுக்கே தெரியும்.

    கூட்டத்துல உக்காந்துருக்க எல்லாரும்
    “எப்பப்பா… கல்யாணம் முடியும்.. எப்பப்பா சோறு போடுவாய்ங்க” ன்னு ஒரே ஆவலோட உக்கார்ந்திருக்கும்போது, ஒரே ஒரு அம்மா மட்டும் வச்ச கண்ணு வாங்காம கல்யாணப் பொண்ணையே மொறைச்சி பாத்துகிட்டு இருக்கும்.
    அப்டி இருந்தா அது பொண்ணோட அப்பா வழி அத்தைன்னும்,
    அவங்க பையனுக்கு இந்தப் பொண்ணை கேட்டு, பொண்ணு வீட்டுல இல்லைன்னு சொல்லிட்டாங்கன்னும் நீங்களே கண்டுபுடிச்சிடலாம்...

    ஒரு நிமிஷம் கூட உக்காராம, ஸ்டேஜ்ல கல்யாணம் முடிஞ்சிருச்சா இல்லையான்னு கூட கவனிக்காம எல்லாரையும் போய், “வாங்க வாங்க..சாப்டு போங்க” ன்னு ஒருத்தர் கூப்ட்டா அவர்தான் பொண்ணோட அப்பா...

    பொண்ணுக்கு எத்தனை சவரன் நகை போட்டுருக்காய்ங்க, யார் யார் என்ன செய்றாங்கங்குற விஷயத்த, பையனோட அம்மா அப்பாவ விட, இன்னொரு முக்கியமான கேரக்டர்
    ரொம்ப கூர்மையா, பாத்துக்கிட்டு இருக்கும். அதுவேற யாரும் இல்லை. பையனோட அண்ணி.. எங்க நம்மள விட அதிகமா கிதிகமா நகையப் போட்டுவிட்டு நம்மள டம்மி ஆக்கிறப் போறாய்ங்களோங்குற பீதியிலயே இருக்கும்.

    அந்த கல்யாணக் கூட்டத்துலயே, ஒரே ஒரு குரூப்பு மட்டும், அந்த கல்யணத்துக்கும் அவங்களுக்கும் எந்த சம்பந்தமுமே இல்லாத மாதிரி, தனியா ஒரு மீட்டிங் போட்டுக்கிட்டு இருக்கும். அதுதான் பொண்ணோட அப்பாவோட சொந்தக்காரய்ங்க.

    கல்யாணமெல்லாம் முடிஞ்ச உடனே அரக்க பரக்க ஒரு கும்பல், வீங்கிப்போண மூஞ்சோட, ஒழுங்கா சீவாத தலையோட வேக வேகமா வந்து மாப்ளைக்கும் பொண்ணுக்கும் வெறும் கைய மட்டும் குடுப்பாய்ங்க. அவிங்க வேற யாரும் இல்லை. மாப்ளையோட ஆஃபீஸ் மேட்ஸோ இல்லைகாலேஜ் மேட்ஸோ...

    கடைசியா கல்யாணம் முடிஞ்சி, எல்லாரும் ஃபோட்டோ எடுக்க வரும்போது, பொண்ணோட ஃப்ரண்ட்ஸை பாத்து “இவ்வளவு நாளா நீங்கல்லாம் எங்கம்மா இருந்தீங்கன்னு” மைண்டுல நினைக்கிறான் பாருங்க அவந்தான் நம்ம #மாப்ள....

    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

    ஒரு பையனுக்கு புதுசா கல்யாணம் ஆகுது, கொஞ்ச நாள் கழிச்சு வேலைக்கு போனவன் திரும்ப வரும்போது புது மனைவிக்கு ஆசையாய் முறுக்கு வாங்கி வந்திருக்கிறான், அவன் மனைவி ராத்திரி பத்து மணிக்கு உட்கார்ந்து கடக்கு முடக்கு சத்தத்துடன் சாப்பிடுகிறாள்...

    அடுத்த நாள் காலையில் அவன் அம்மா சொல்றாங்க "பாத்து, வளர்த்து, படிக்க வச்சு, கல்யாணம் பண்ணிவச்ச ஆத்தாளுக்கு இது வரை எதாவது வாங்கி கொடுத்து இருக்கியா, ஆனா நேத்து வந்தவளுக்கு முறுக்கு" என்று சொல்லி மகனுடன் தனது முதல் சண்டையை ஆரம்பித்திருக்கிறார் அவனது அம்மா.

    அதுவரை கள்ளம், கபடம் தெரியாத அந்த பையனுக்கு ஒரு யோசனை.......

    முறுக்கு வாங்கி போய் கொடுத்தால் தானே பிரச்சனை, இன்று முதல் மனைவிக்கு அல்வா வாங்கி போய் கொடுப்போம் என்று வாங்கி செல்கிறான்.

    அடுத்த நாள் அம்மா ஒன்றும் கேட்கவில்லை.....

    ஏன் என்றால்

    அவனது மனைவி சாப்பிடும் போது சத்தம் வரவில்லை.

    அம்மாவை ஏமாற்ற முதன் முதலில் அல்வா பயன்பட்ட காரணத்தால்....

    அடுத்தவர்களை ஏமாற்றுவதற்கு "அல்வா" கொடுப்பது என்ற பெயரும் வந்தது..

    அல்வா பிறந்த கதை!!

    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
     
    suryakala likes this.
  10. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    எப்படி தான் இவ்ளோ ரொமான்டிக் பாடல் வரிகள் எழுத முடியுதோனு என்னை வியக்க வைத்த பாடல் இது..:wink::wink:
    இசையும் சரி பாடி இருக்கும் விதமும் சரி பாடல் வரிகளுக்கு மெருகூட்டி இருக்கிறது..அசத்தல்!!

    MD: Imman
    Singers: Sean Roldan, Kalyani Nair
    Lyricist: Yugabharathi

    YT - எம்புட்டு இருக்குது ஆசை - சரவணன் இருக்க பயமேன்
     

Share This Page