1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

Poetic lines from tamil movies- please share your favorites

Discussion in 'Music and Dance' started by DDC, Aug 3, 2010.

  1. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Hi APS,
    இந்த பாடல் வரிகளில் ரொமான்டிக் ரசம் பொங்கி வழியும். நீண்ட நாட்கள் கழித்து இன்று இந்த பாடல் கேட்கிறேன். நன்றி!

    IL la 'Mithy' என்பவருக்கு இந்த பாடல் ரொம்ப பிடிக்கும்.
    நீண்ட நாட்களாக நான் கேட்காமல் விட்ட பழைய ஜெம்ஸ் தேர்ந்து எடுத்து போஸ்ட் பண்றீங்க. பிடித்த பழைய பாடல்கள் எதிர்பாரா தருணத்தில் கேட்பதும் இதம் தான்.
     
  2. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    TNK,

    இன்டர்நெட் ல அல்லது வாட்ஸாப் ல அல்லது ஈமெயில் ல ஏதாவது மெசேஜ் படிக்கும்போது படித்த மெசேஜ் எனக்கு பிடித்து இருந்தால் அதை IL ல பகிர்ந்து கொள்வேன் நமது IL நண்பர்களும் படித்து சந்தோஷம்/பயன் பெறட்டும் என்று. பகிர்வது நல்ல விஷயம். பகிர்ந்து கொள்ளும் கருத்தை சொந்தமாக நாம் எழுதியதா அல்லது பிறர் எழுதியதா என்பதை அவசியம் குறிப்பிட வேண்டும் என்று எண்ணுகிறேன். Give credit where credit is due!!

    கடவுள் அநியாயத்திற்கு எனக்கு மெமரி குடுத்து இருக்கிறார். நீங்க ஏற்கனவே ஒரு முறை எங்கோ படித்ததை இங்கு source quote பண்ணமால் போஸ்ட் பண்ணி இருந்தீங்க. நான் அதை உங்களுக்கு சுட்டி காட்டி இருக்கிறேன். திரும்பவும் நீங்க இப்போ source quote பண்ணாமல் போஸ்ட் பண்ணி இருக்கீங்க.

    பாடல் வரிகளை தேர்ந்து எடுத்து பாடலுக்கு நீங்க இங்கு பகிர்ந்த கருத்தை சொந்தமாக எழுதியவர் கார்க்கி என்பவர். இவர் ஆனந்த விகடனில் சப் எடிட்டர் ஆக பணி புரிந்தவர். இதோ அதற்கான ஆதாரம்:

    Karki blogspot

    கார்க்கியின் கருத்து ரசிக்கும்படி இருந்தது. நீங்க தான் அந்த கார்க்கி என்றால் மனம் திறந்த பாராட்டுக்கள். நீங்க கார்க்கி இல்லை என்றால் கார்க்கியின் கருத்தை இங்கு பகிர்ந்ததிற்கு நன்றி.
     
    Last edited: Jul 21, 2017
  3. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    இந்த வாரத்தில் இன்று தான் எனக்கு பொழுது போக்க கொஞ்சம் நேரம் கிடைத்தது. பழைய பாடல் ரிசர்ச் பண்ண போதிய நேரம் இல்லை. அதனால் இன்று ஒரே ஒரு கருப்பு வெள்ளை பாடலுடன் நிறுத்தி கொள்கிறேன்.

    PBS லாவகமாக பாடி இருக்கிறார். கண்ணதாசனின் வரிகள் எளிமையாக இருந்தாலும் ரசனை மிகுதியானது.

    YT - நேற்று வரை நீ யாரோ - வாழ்க்கைப்படகு - MSV/TKR

    உன்னை நான் பார்க்கும் போது
    மண்ணை நீ பார்க்கின்றாயே
    விண்ணை நான் பார்க்கும் போது
    என்னை நீ பார்க்கின்றாயே
    நேரிலே பார்த்தால் என்ன
    நிலவென்ன தேய்ந்தா போகும்
    புன்னகை புரிந்தால் என்ன
    பூமுகம் சிவந்தா போகும்
     
  4. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    WA la எனக்கு வந்த வீடியோ. இன்று இதை பல முறை ரசித்தேன்.

    அந்த அரபிக் கடலோரம் பாடலை இன்னும் அடுத்த லெவல்க்கு எடுத்து செல்கிறார் இவர்.


    YT - அந்த அரபிக் கடலோரம் - Veena Srivani

    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

    எனது நெருங்கி நண்பர் இன்று WA la பகிர்ந்தது. கருத்தை படித்தும், பாடலை கேட்டும் ரசித்தேன்.

    இன்றைய இரவின் மடியில்
    "எடை போட கம்பன் இல்லை என்க்கந்த திறனும் இல்லை...." . இது தான் கவியரசரின் அவையடக்கம்.
    பாடல் : ‘நெற்றிக்கண்’ படத்தில் ‘ராமனின் மோகனம் ஜானகி மந்திரம்’

    மலர்களினூடே மோகனமும் மந்திரமும், பூங்காவில் மலர்கள் சூழ ரஜினியும் மேனகாவும் பாடுவதாக அமைகிறது காட்சி. மரங்களினூடே காதலர் பவனியும், சிலையாக நான் நிற்பதே அற்புதம் என சிலை போல மேனகா அபிநயம் பிடிப்பதும் ஒரு புறம் மனதைக் கவர்கிறது -காரணம் பாடல் வரிகள்: சிந்தனையைக் காதல் ரசத்திலிருந்து தெய்வீக நிலைக்கு உயர்த்தி விடுகிறது.

    ராமனின் மோகனமே ஜானகியின் மந்திரமா, அல்லது ஜானகியின் மந்திரமே ராமனின் மோகனமா? மந்திரம் மோகனத்தால் உருவானதா அல்லது மோகனத்தால் மந்திரம் சக்தி பெற்றதா? இரண்டும் ஒன்றினுள் ஒன்று அடக்கம்; பிரிக்க முடியாதவை என்பதே பதில். கவிதாலயா நிறுவனம் தயாரித்த முதல் படமே "நெற்றிக்கண்" இதன் இயக்குனர் எஸ்.பி.முத்துராமன்.

    இளையஜாவின் இசையானது பாடலைத் தூக்கித் தர, கண்ணதாசனின் கவிதை வரிகளோ இன்னும் உயரத்தில் ஏற்ற , ராமரும் ஜானகியும் ஒரு தெய்வீகத்தைச் சேர்த்து விடுகின்றனர். காதல் பாடலில் ஒரு புதிய பரிமாணத்தை அறிமுகப்படுத்தும் பாடல் இது என்று சொல்லி முடிக்கலாம்! ராஜா இப்படத்தில் வயலினை மிகவும் உபயோகித்து இருக்கி்றார்

    இளையராஜா+கண்ணதாசன்+ஜேசுதாஸ்+ஜானகி கூட்டணியில், மேனகா, ரஜினி மீது காதல் கொள்ளும் காட்சி, ராமனின் மோகனம் பாட்டின் மெட்டு புல்லாங்குழல் இசையாக. அருமையான பாடல்- இதோ உங்களுக்காக!

    கருவூட்டம்: சுந்தர சீனிவாசன்
    பாடல்:ராமனின் மோகனம்
    திரைப்படம்:-நெற்றிக்கண்-1981
    இசை:- இளையராஜா;
    இயற்றியவர்:- கண்ணதாசன்
    பாடியவர்:- கே.ஜே.யேசுதாஸ், எஸ்.ஜானகி

    YT - ராமனின் மோகனம் - நெற்றிக்கண்
     
    suryakala likes this.
  5. Sweeti83

    Sweeti83 Gold IL'ite

    Messages:
    769
    Likes Received:
    290
    Trophy Points:
    140
    Gender:
    Female
    YT - மல்லிகை என் மன்னன் மயங்கும் - தீர்க்க சுமங்கலி - வாணி ஜெயராம்
    வான் மேகங்கள் வெள்ளி ஊஞ்சல் போல்
    திங்கள்மேனியைத் தொட்டுத் தாலாட்டுது!
    குளிர் காற்றிலே தளிர் பூங்கொடி!
    கொஞ்சிப்பேசியே அன்பைப் பாராட்டுது
     
  6. Sweeti83

    Sweeti83 Gold IL'ite

    Messages:
    769
    Likes Received:
    290
    Trophy Points:
    140
    Gender:
    Female
    YT - மயக்கமென்ன இந்த மௌனமென்ன - வசந்த மாளிகை - TMS/PS

    தேர் போலே ஒரு பொன்னூஞ்சல் அதில் தேவதை போலே நீ ஆட
    பூவாடை வரும் மேனியிலே உன் புன்னகை இதழ்கள் விளையாட
    கார்காலம் என விரிந்த கூந்தல் கன்னத்தின் மீதே கோலமிட
    கை வளையும் மை விழியும் கட்டி அணைத்து கவி பாட
     
  7. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    மறைந்த கவிஞர் வாலியின் தீவிர ரசிகையாக நான் ஆனதுக்கு காரணமான பல பாடல்களில் இந்த பாடலும் அடக்கம். ரொமான்சும் சென்டிமென்டும் கலந்த காலத்தால் அழியாத பாடல். வாணி ஜெயராமின் குரலும் அருமை. இவர் பாடிய பாடல்களை தேர்ந்து எடுத்து கேட்கலாம் என்ற ஆசை இப்போ தான் எனக்குள் துளிர் விட்டு இருக்கிறது.
     
  8. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    எனக்கு மிகவும் மிகவும் மிகவும் பிடித்த எனக்கு தினமும் சாக்லேட் குடுத்த எனது பள்ளி ஆசிரியையிடம் நான் போனில் பேசி விட்டேன். அதுவும் பல ஆண்டுகளுக்கு பிறகு அவரது பிறந்த நாள் அன்று. அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்னேன். எனது குரலை வைத்து என்னை ஒரு நொடியில் கண்டு பிடித்து விட்டார். அவரது குரலில் அவ்ளோ சந்தோஷம் வழிந்தது. இதுவரை அவர் கொண்டாடிய பிறந்த நாளில் இது தான் பெஸ்ட் என்று என்னிடம் சொன்னார். என்னை பற்றி சமீபத்தில் அவருக்கு தெரிந்த ஒரு நபரிடம் பேசியதாக சொன்னார். எனக்கும் அவரை பற்றி சொல்ல ஆசை வாய் வர வந்து விட்டது ஆனால் சொல்ல வில்லை - உங்களை பற்றியும் நான் சமீபத்தில் ஒரு வலைத்தளத்தில் எழுதி இருக்கிறேன் என்று. எனது பள்ளி ஆசிரியர் இங்கு நான் கிறுக்குவதை படித்தால் மயக்கம் போட்டு விழுந்து விடுவார் --> அவரோட most fav 'First bench' student 'Last bench' ல யும் "First' என்பதை அறிந்தால். :smile::smile:

    நாங்கள் போட்டோக்கள் பரிமாறி கொண்டோம். வீடியோ சாட் வர சொல்லி இருக்கிறார். இவர் வாட்சப் ல இருக்கிறார். எனக்கு தினமும் ஒரு positive quote வாட்சப் ல அனுப்புவார். நானும் இவருக்கு மெசேஜ் அனுப்புவேன்.

    மணமான தம்பதிகளை கலாய்க்கும் மெசேஜ் பரிமாறுவதற்கு நாலைந்து நெருங்கிய நண்பர்கள் இருக்கிறார்கள். எப்படி பட்ட மெசேஜும் தயங்காமல் நாங்கள் பரிமாறி கொள்வோம். நான் அப்படி பட்ட மெசேஜ் forward பண்ணும்போது இரண்டு தடவை செக் பண்ணுவேன் எனது அம்மா இருக்கும் WA family group க்கு தவறியும் மெசேஜ் அனுப்ப கூடாது என்பதற்காக. இப்போது எனது checklist ல எனது பள்ளி ஆசிரியையும் வந்து விடுகிறார். இதுக்கு பேர் பயம் இல்லை. ஆழ்ந்த மரியாதை தான்.

    எனது most fav miss kku இந்த quote dedicate பண்றேன்: "The dream begins, most of the time, with a teacher who believes in you, who tugs and pushes and leads you on to the next plateau, sometimes poking you with a sharp stick called truth." ~~ Dan Rather
     
    kaniths likes this.
  9. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    கடந்த வார இறுதியில் பார்த்த படத்தில் இருந்து எனக்கு பிடித்த பாடல். அலை பாயுதே படத்தில் வரும் காதல் சடுகுடு பாடலை காட்சி அமைப்போடு பார்க்கும்போது இன்னும் என்னால் வரிகளில் கவனம் செலுத்த முடியாது. அது போல தான் இந்த பாடலும்..:wink::wink:

    படையப்பா படத்தில் ரஜினியை பார்த்து ரம்யா கிருஷ்ணன் சொல்லுவதை போல சொல்கிறேன்: வயசானாலும் Maddy க்கு charisma, romance குறையவே இல்லை.

    இந்த படத்தில் Maddy இருந்தாலும் நடிப்பில் அசால்ட்டா தூள் கிளப்பி இருப்பார் விஜய் சேதுபதி. விக்ரமாதித்தன் வேதாளம் பாணியில் திரைக்கதை அமைத்த விதம் க்ளாஸ். செம படம். கண்டிப்பாக ஒரு முறை பார்க்க வேண்டிய படம் (குழந்தைகளோடு அல்ல). வாழ்க்கையில் கருப்பு வெள்ளை என்று எதையும் சொல்லிட முடியாது. 'Gray' இருக்கு என்பதை உணர்த்தும் படம். இரண்டு ஹீரோயினும் அவங்க அவங்க நடிப்பில் சூப்பர். இசையும் பட்டய கிளப்பும். படம் பார்த்து முடித்த பின்னரும் படத்தின் தாக்கம் இருந்தது -> நல்ல விதமாக தான். அதர்மம்/நியாயம் பற்றி நிறைய கேள்விகள் எழுப்பியது.

    இந்த படத்தில் டயலாக்ஸ் செம யா இருக்கும். எது பெஸ்ட் என்று ஒன்றை மட்டும் குறிப்பிடுவது கடினம். எனக்கு மிகவும் பிடித்தது: காந்தி/கோட்ஸே, முட்டை/ஆம்லெட் டயலாக்ஸ்.

    YT - யாஞ்சி யாஞ்சி - விக்ரம் வேதா - MD: Sam CS; Singers: Anirudh, Sakthisree Gopalan

    ஏதோ ராகம் நெஞ்சுக்குள்ள வந்து
    வந்து உன் பேரை சொல்லி சொல்லி பாடுது
     
  10. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    கிரிக்கெட் விளையாட்டை பார்வையாளராக பார்க்கும்போது க்ரௌண்ட் க்கு வெளியில் இருந்து கொண்டு நான் மட்டும் க்ரௌண்ட்ல நின்று இருந்தா "6" அடிப்பேன் "4" அடிப்பேன் என்று சொல்வது சுலபம். ஆனால் கிரௌண்ட் க்கு உள்ள நிற்கும் பேட்ஸ்மேன் க்கு தான் பிரஷர்/டென்ஷன்/நிலவரம்/கலவரம் புரியும்/தெரியும்.

    அது போல தான் திருமணத்திற்கு முன்னர் தம்பதிகள் பற்றிய ஜோக்ஸ் படிக்கும்போது ஈஸியா சிரித்து விட்டு போவது சுலபம். திருமணம் முடிந்து கிரௌண்ட் ல நிற்கும்போது தான் பிரஷர்/டென்ஷன்/நிலவரம்/கலவரம் புரியும்/தெரியும். :wink:

    ஆனால் இந்த வீடியோக்கும் எனக்கும் (எங்களுக்கும்) எந்த சம்பந்தமும் இல்லை. :wink:

    சமீபத்தில் WA la வந்த இந்த வீடீயோ என்னை சிரிக்க வைத்தது:

    YT - Couple's Conversation - கலாய்க்கறாங்களா? கிழிக்கறாங்களா?
     

Share This Page