1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

Poetic lines from tamil movies- please share your favorites

Discussion in 'Music and Dance' started by DDC, Aug 3, 2010.

  1. Sweeti83

    Sweeti83 Gold IL'ite

    Messages:
    769
    Likes Received:
    290
    Trophy Points:
    140
    Gender:
    Female
    singapalsmile likes this.
  2. Sweeti83

    Sweeti83 Gold IL'ite

    Messages:
    769
    Likes Received:
    290
    Trophy Points:
    140
    Gender:
    Female
    எங்கே இருந்து தான் தீம் பிடிப்பீங்களோ. அருமை அருமை :clap2::clap2::clap2:
    நான் இரண்டாவது வகை. பாடல் வரிகளை தேடிவிட்டு கற்பனை செய்ய வேண்டும்
     
  3. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    கலக்கீடீங்க APS!! அந்தாதி முறையில் இன்னொரு ரொமான்டிக் பாடல் போஸ்ட் பண்ணது சூப்பர். :clap2::clap2:

    எனக்கு மிகவும் மிகவும் மிகவும் பிடித்த, விஷயம் அறிந்து மணிக்கணக்கில் பேச கூடிய/விவாதம் புரிய வெவேறான விஷயங்கள் நாலில் இருந்து ஐந்து வரை தான் இருக்கும்..அந்த விஷயங்களை பகிர்ந்து கொள்வதற்கு/விவாதம் புரிவதற்கும் என்னை போன்றே முழு ஆர்வமுள்ள நெருங்கிய நண்பர்கள் எனக்கு நேரில் கிடைத்து இருக்கிறார்கள். ஆனால் நான் சந்தித்த நபர்களில் பாடல் வரிகளை பற்றி பேச ஒரு நண்பர் கூட அமையவில்லை. IL வந்த பிறகு, AS க்கு அடுத்த படியாக நீங்க அமைந்ததில் எனக்கு மிக்க சந்தோஷம். IL க்கும், இந்த thread ஆரம்பித்தவர்க்கும், இங்கு பாடல்களை இதுவரை பகிர்ந்து அனைவருக்கும் எனது மனமார்ந்த ஆழ்ந்த நன்றி.

    அந்தி பொழுதை ஆராதிப்பவர்கள் இந்த பாடல் வரியின் துவக்க வரியை ஆதரிக்க மாட்டார்கள். :grinning:

    சில பாடல் வரிகள் கேட்கும்போது மண்டைக்குள் விதம் விதமா 'தீ' பிடிக்கும்..அப்படி பட்ட ஒரு 'தீ' 'தீம்' ஆயிடுச்சு.:wink::wink:

    முதல் வகை/இரண்டாவது வகை என்று எதற்கு பிரித்து பார்க்கணும்? பின்னணி என்றால் சொந்த பின்னணி என்று அர்த்தம் கொள்ள வேண்டாம்..உடன் பிறந்தோர், சொந்தக்காரர், பக்கத்து வீட்டுக்காரர், எதிர் வீட்டுக்காரர், நண்பர், கதை புக்கில் படித்த கற்பனை கதாப்பாத்திரம் - எவரிலும்/எவற்றிலும் பின்னணி எடுத்து கொள்ளலாம்..

    நன்றி. உங்களது படைப்பை இப்போவே ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்.
     
  4. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    இமான் இசையில் வந்த இந்த பாடல் இசைஞானியின் இசையை கேட்ட உணர்வை எனக்கு தந்தது. கார்த்திக்கும் ஷ்ரேயா வும் செமயா feel குடுத்து பாடி இருக்காங்க..யுகபாரதியின் வரிகளில் இசை ஞானியின் மெட்டை பற்றி குறிப்பிட்ட வரி அழகு..

    YT - ஏனடி நீ என்ன இப்படி - அதாகப்பட்டது மகாஜனங்களே

    மெட்டில் இசைஞானி
    என்றும் அழகாக செய்கின்ற மாயம் போல

    என்னில் பல நூறு இன்பம் தர
    நீயும் வந்தாயே கூடி வாழ
     
  5. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    பல்லவியில் ஞாயிறு (Sun), திங்கள் (Moon), செவ்வாய் (Mars) என்று மூன்று கோள்கள்.
    முதல் சரணத்தில் நேற்று, இன்று, நாளை என்று மூன்று காலங்கள்.
    கோள்களையும் காலங்களையும் சம்பந்தப்படுத்துவது தான் ஜோதிட கலை.
    இப்படியே இரண்டாவது சரணத்திலும் மூன்றாவதில் ஏதாவது தொடர்புள்ள வார்த்தைகளை எதிர்பார்த்தேன். அப்படி எதுவும் இல்லை. நானே இப்படி தொடர்பு படுத்தி கொண்டேன்:
    இரண்டாவது சரணத்தில் கோயில், விளக்கு, நெய் என்று வார்த்தைகள் வருகிறது. நேரம் சரியில்லை என்றால் கோயிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்ற சொல்லும் ஒரு எளிய பரிகாரம் ஜோதிடத்தில் இருக்கிறது. இப்படி பொருள் எடுத்து கொண்டேன்.
    மூன்றாவது சரணத்தில் முன்னொரு பிறவி, பின்னொரு பிறவி என்று வார்த்தைகள் வருகிறது. ஒருவரது ஜாதகத்தில் ஐந்தாம் பாவத்தை வைத்து பூர்வ புண்ணியம் கணிக்கலாம். பின்னொரு பிறவி இருக்கிறதா என்பதை பனிரெண்டாம் பாவத்தை வைத்து கணிக்கலாம். இப்படி பொருள் எடுத்து கொண்டேன்.

    எப்படி எல்லாம் எனது கற்பனை ஓவர் டயம் பார்க்குது..எல்லாம் பொறந்த நேரம்..எனது ஜாதக கட்டம் இப்படி எல்லாம் கற்பனை பண்ண வைக்குது..:grinning::grinning:

    இப்போ பாடலுக்கு வருகிறேன்..பாடல் ஆரம்பித்து ஹம்மிங் ல PS குரலில் அப்படியே மயங்கி விட்டேன்..திரும்ப திரும்ப ஹம்மிங் கேட்டேன்..கணீர் குரல் என்றாலும் TMS பதமாக பாடி மெலோடியிலும் கலக்கி இருக்கிறார்..கவியரசரின் வரிகளும் கலக்கல்..KVM இசையும் மனதை இதமாக வருடுகிறது..படம் பிடித்து இருக்கும் விதத்தை கவனித்தேன்..ஹீரோயின் என்னமா வெட்கப்படறாங்க..முக பாவனைகள் அசத்தல்!!

    பழைய பாடல்கள் ரொமான்டிக் மெலோடிஸ் கலெக்டின் ல இந்த பாடல் கண்டிப்பாக இருக்க வேண்டிய ஒரு ஜெம்!! (ஜெம் க்கும் ஜாதகத்துக்கும்/பரிகாரத்துக்கும் சம்பந்தம் இருக்கா?? ஆனா இதில் எனக்கு நம்பிக்கை துளியும் கிடையாது.)

    YT - ஞாயிறு என்பது கண்ணாக - காக்கும் கரங்கள்

    நேற்றைய பொழுது கண்ணோடு
    இன்றைய பொழுது கையோடு
    நாளைய பொழுதும் உன்னோடு
    நிழலாய் நடப்பேன் பின்னோடு
     
    vaidehi71 likes this.
  6. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    PBS பாடல் கேட்க வேண்டும் என்று தோன்றியது..இந்த பாடல் தான் முதலில் எனது தேடலில் தென்பட்டது..பாடல் வரிகள் மட்டும் அல்ல PBS குரலும் நிதானமாக போதை ஏற்றியது..

    TT - கண்ணாலே பேசி பேசி கொல்லாதே - அடுத்த வீட்டுப் பெண்

    மதுவை ஏந்தி கொந்தளிக்கும் மலரிலே
    என் மதி மயங்க்கி வீழ்ந்தேன் உன் வலையிலே
     
    vaidehi71 likes this.
  7. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    ரெண்டு மென்மையான பாடல்கள் தொடர்ந்து கேட்டு மயங்கிய நிலையில் இருக்கும் மதி மூன்றாவதாக கொஞ்சம் துள்ளலாக ஒரு பாடல் கேட்கும்போது கொஞ்சம் விழித்து கொள்கிறது.. 'ரசனை' கூடு விட்டு கூடு பாயும்..:wink::wink:

    YT - வண்ணக்கிளி சொன்ன மொழி - தெய்வ தாய் - Vaali/TMS/PS/MSV-TKR

    கன்னி மன மாளிகையில் காவல் நிற்கவா
    அங்கே காவல் நின்ற மன்னவனை கைப் பிடிக்க வா
     
    vaidehi71 likes this.
  8. Sweeti83

    Sweeti83 Gold IL'ite

    Messages:
    769
    Likes Received:
    290
    Trophy Points:
    140
    Gender:
    Female
    வேதா இன்று கறுப்பு வெள்ளை காலெக்க்ஷனில் நான் பதிவேற்ற நினைத்த பாடலை நீங்கள் பதிவேற்றியதர்காக உங்களுக்கு எனது சிறப்பு விருந்து

    Sweet1.jpg
    Sweet2.jpg Sweet3.jpg
     
    singapalsmile likes this.
  9. Sweeti83

    Sweeti83 Gold IL'ite

    Messages:
    769
    Likes Received:
    290
    Trophy Points:
    140
    Gender:
    Female
    YT - ஆதி மனிதன் காதலுக்குபின் அடுத்த காதல் இதுதான் - பலே பாண்டியா - PBS/Jamuna rani

    கண்ணிலே கண்டதும் எண்ணமே மாறினேன்
    காதிலே கேட்டதும் காதலில் மூழ்கினேன்


    YT - பனி இல்லாத மார்கழியா - ஆனந்த ஜோதி - TMS/PS

    இனிப்புடன் ஒரு பாடல்

    இனிப்பில்லாத முக்கனியா
    இசையில்லாத முத்தமிழா

    YT - நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு நானிருக்கும் - இரும்புத் திரை - TMS/P.Leela

    ஓர விழிப் பார்வையிலே உள்ளதெல்லாம் சொல்லிவிட்டு
    ஒன்றும் தெரியாதது போல் கேட்பதும் ஏனொ?
     
  10. Sweeti83

    Sweeti83 Gold IL'ite

    Messages:
    769
    Likes Received:
    290
    Trophy Points:
    140
    Gender:
    Female
    Week End songs, Weak Aagama irudha sari

    YT - தென்றல் வந்து தீண்டும் போது - Avatharam - IR/SJ

    விவரம் இல்லாமலே பூக்களும் வாசம் வீசுது
    உறவும் இல்லாமலே இருமனம் ஏதோ பேசுது
    எவரும் சொல்லாமலே குயிலெல்லாம் தேனா பாடுது
    எதுவும் இல்லாமலே மனசெல்லாம் இனிப்பாய் இனிக்குது


    YT - ராஜ ராஜ சோழன் நான் - இரட்டை வால் குருவி. - IR/KJ
    This is one of my fav song.எப்போ கேட்டாலும் திரும்ப கேட்க தோன்றும்

    வில்லோடு அம்பு ரெண்டு கொல்லாமல் கொல்லுதே
    பெண்பாவை கண்கள் என்று பொய் சொல்லுதே
     

Share This Page