1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

Poetic lines from tamil movies- please share your favorites

Discussion in 'Music and Dance' started by DDC, Aug 3, 2010.

  1. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    கவியரசர் கண்ணதாசனின் கை வண்ணத்தில் ஒரு அற்புதமான பாடல் - இந்த பாடல் வரிகளை வைத்து ஆராய்ச்சியே நடத்தலாம்..இந்த பாடலை கேட்டதுமே எனக்குள் தோன்றிய கேள்வி :wink::wink::

    காதல் வந்ததால் காமம் வந்ததா? காமம் வந்ததால் காதல் வந்ததா?

    YT - கொடி அசைந்ததும் காற்று வந்ததா - பார்த்தால் பசி தீரும் - TMS/PS/MSV-TKR
     
    jskls and vaidehi71 like this.
  2. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    வார்த்தைகள் வைத்து ஓவியம் வரைய முடியும் என்று எனக்கு இந்த பாடலை கேட்டவுடன் தோன்றியது. கவியரசர்க்கு ஓவியம் வரைவது கை வந்த கலை..

    AM Raja அவர்களின் இசையும் குரல் வளமும் இனிமை. PS அவர்களின் குரல் வளம் பத்தி சொல்லவே வேண்டாம்..

    PBS/PS காம்பினேஷன் போலவே AMR/PS காம்பினேஷன் பாடல்கள் கேட்பதற்கு இனிமையோ இனிமை.

    YT - சின்ன சின்ன கண்ணிலே - தேன் நிலவு

    பின்னி வைத்த கூந்தலில் முல்லை பூவை சூடினால்
    கன்னி நடை பின்னல் போடுமா சிறு
    மின்னலிடை பூவை தாங்குமா

    மின்னலிடை வாடினால் கன்னி உந்தன் கையிலே
    அன்னம் போல சாய்ந்து கொள்ளுவேன்
    அதில் அந்தி பகல் பள்ளிக்கொள்ளுவேன்
     
    vaidehi71 likes this.
  3. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    முதல் மெசேஜ் - இந்த thread க்கு நெருக்கமான ஒரு நண்பர் எனக்கு WA ல பகிர்ந்தது.
    இரண்டாவது மெசேஜ் - என்னோட நெருங்கிய நண்பர் ஒருவர் WA ல அனுப்பியது.
    சீரியஸ் ஆக எடுத்து கொள்ளாமல் படித்து சிரித்து விட்டு உடனே மறந்து விடுவது குடும்பத்துக்கு நல்லது..:wink::wink:

    ~~~~~~~~~~~~~~~~~~~~~

    It was a practical session in the psychology class.

    The professor showed a large cage with a male rat in it.

    The rat was in the middle of the cage.

    Then, the professor kept a piece of cake on one side and kept a female rat on the other side.

    The male rat ran towards the cake and ate it.

    Then, the professor changed the cake and replaced it with some bread.

    The male rat ran towards the bread.

    This experiment went on with the professor changing the food every time.

    And, every time, the male rat ran towards the food item and never towards the female rat.

    Professor said: This experiment shows that food is the greatest strength and attraction.

    Then, one of the students from the back row said:

    "Sir, why don't you change the female rat? This one may be his wife!"

    The professor stood straight up his finger pointing towards the student and said "You are a Damn Genius"

    ~~~~~~~~~~~~~~~~~~~~~

    When a wife keeps her head on husband's chest and slowly asks...
    "Dear do you have any woman in your life other than me?"
    ...
    ...
    ...

    Remember,
    the answer is not important at this time..
    ...
    ...
    ...
    Important is
    The heartbeats..

    Keep your heart beats in control...Learn Yoga Meditation..Happy International Yoga Day!!

    ~~~~~~~~~~~~~~~~~~~~~
     
    ORGANICWAY likes this.
  4. Sweeti83

    Sweeti83 Gold IL'ite

    Messages:
    769
    Likes Received:
    290
    Trophy Points:
    140
    Gender:
    Female
    :beer-toast1::beer-toast1::beer-toast1:

    அப்பா இருந்த பொழுது வானவில் பண்பலையில் இரவு ' மயிலிறகு ' என்று ஓர் நிகழ்ச்சி கேட்போம். அதில் முழுவதும் பழைய பாடல்கள் தான். சில சமயம் தொகுப்பாளர் அந்த பாடலின் பின்னணியை கூறுவார்.மிக அருமையாக இருக்கும். சில பாடல்கள் மட்டும் தான் கண்ணுக்கும் , செவிகளுக்கும் விருந்தாக இருக்கும்.பல பாடல்கள் செவிக்கு மட்டுமே விருந்தாக இருக்கும்.
     
  5. Sweeti83

    Sweeti83 Gold IL'ite

    Messages:
    769
    Likes Received:
    290
    Trophy Points:
    140
    Gender:
    Female
    இன்று கண்ணதாசன் பிறந்த நாள். அதற்க்காக

    ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு - ரத்த திலகம் - TMS / KD

    காவியத் தாயின் இளையமகன்
    காதல் பெண்களின் பெருந்தலைவன்
    நான் காவியத் தாயின் இளையமகன்
    காதல் பெண்களின் பெருந்தலைவன்
    பாமர ஜாதியில் தனிமனிதன்
    நான் படைப்பதனால் என்பேர் இறைவன்

    மானிட இனத்தை ஆட்டி வைப்பேன்
    அவர் மாண்டுவிட்டால் அதை பாடிவைப்பேன்
    நான் மானிட இனத்தை ஆட்டி வைப்பேன்
    அவர் மாண்டுவிட்டால் அதை பாடிவைப்பேன்
    நான் நிரந்தரமானவன் அழிவதில்லை
    எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை
     
    vaidehi71 likes this.
  6. Sweeti83

    Sweeti83 Gold IL'ite

    Messages:
    769
    Likes Received:
    290
    Trophy Points:
    140
    Gender:
    Female
    YT - கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா - ஆலயமணி - TMS/LRE - KD

    கன்னித்தமிழ் தந்ததொரு திருவாசகம்
    கல்லைக் கனி ஆக்கும் உந்தன் ஒரு வாசகம்
    உண்டென்று சொல்வதுந்தன் கண்ணல்லவா வண்ணக்கண் அல்லவா
    இல்லையென்று சொல்வதுந்தன் இடையல்லவா மின்னல் இடையல்லவா

    கம்பன் கண்ட சீதை உன் தாயல்லவா
    காளிதாசன் சகுந்தலை உன் சேயல்லவா

    அம்பிகாபதி அணைத்த அமராவதி மங்கை அமராவதி

    இந்த பாடலில் L.R ஈஸ்வரியின் ஹம்மிங் அருமையாக இருக்கும்

     
    vaidehi71 likes this.
  7. Sweeti83

    Sweeti83 Gold IL'ite

    Messages:
    769
    Likes Received:
    290
    Trophy Points:
    140
    Gender:
    Female
    YT - காதோடுதான் நான் பாடுவேன் - LRE / KD

    வளர்ந்தாலும் நானின்னும் சிறுபிள்ளைதான் - நான்
    அறிந்தாலும் அது கூட நீ சொல்லித்தான்
    உனக்கேற்ற துனையாக எனை மாற்ற வா - குல
    விளக்காக நான் வாழ வழி காட்ட வா


    This song specially for you veda.

    YT - இரவும் நிலவும் வளரட்டுமே - PS/TMS/KD

    இல்லையென்னாமல் கொடுக்கட்டுமே
    நெஞ்சில் இருக்கின்றவரையில் எடுக்கட்டுமே
    ஆசையில் நெஞ்சம் துடிக்கட்டுமே
    அங்கு அச்சமும் கொஞ்சம் இருக்கட்டுமே
    நாடகம் முழுவதும் நடக்கட்டுமே
    அதில் நாணமும் கொஞ்சம் பிறக்கட்டுமே
     
    lazy, singapalsmile and vaidehi71 like this.
  8. Sweeti83

    Sweeti83 Gold IL'ite

    Messages:
    769
    Likes Received:
    290
    Trophy Points:
    140
    Gender:
    Female
    YT - கங்கைக் கரைத் தோட்டம் - PS

    கண்ணன் முகத் தோற்றம் கண்டேன்
    கண்டவுடன் மாற்றம் கொண்டேன்
    கண்மயங்கி ஏங்கி நின்றேன்
    கன்னி சிலையாக நின்றேன்
    கண்மயங்கி ஏங்கி நின்றேன்
    கன்னி சிலையாக நின்றேன்
    என்ன நினைந்தேனோ? தன்னை மறந்தேனோ?
    ----
    நாடி வரும் கண்ணன் கோலமணி மார்பில் நானே தவழ்ந்திருப்பேன்
     
    singapalsmile and vaidehi71 like this.
  9. Sweeti83

    Sweeti83 Gold IL'ite

    Messages:
    769
    Likes Received:
    290
    Trophy Points:
    140
    Gender:
    Female
    கருப்பு வெள்ளை பாடல்கள் இன்று இத்தோடு போதும் என்று நினைக்கிறேன்.
    இல்லாவிட்டால் வீக் எண்டு பலருக்கு ஆறிய காபி போலாகிவிடும்.:sleeping1:
    அதனால் வீக் எண்டு பாடல் இதோ

    YT - Thangamagan - Enna Solla
    சொல்லாத எண்ணங்கள் பொல்லாத ஆசைகள்
    உன்னால சேருதே பாரம் கூடுதே
    தேடாத தேடல்கள் காணாத காட்சிகள்
    உன்னோடு நேரம் போகுதே


    YT - Konji Pesida Venaam - Sethupathi
    This is one of my fav romantic song.
    குறு குறு பார்வையால் கொஞ்சம் கடத்துறியே
    குளிருக்கும் நெருப்புகும் நடுவுல நிறுத்துறியே

    வேற என்ன வேணும் நேரில் வர வேணும்
    சத்தம் இல்ல முத்தம் தர வேணும்


    YT - En Jeevan - Theri
    விடிந்தாலும் வானம் இருள்பூச வேண்டும்
    மடிமீது சாய்ந்து கதைபேச வேண்டும்
    முடியாத பார்வை நீ வீச வேண்டும்
    முழு நேரம் என்மேல் உன் வாசம் வேண்டும்
    இன்பம் எதுவரை நாம் போவோம் அதுவரை
    நீ பார்க்க பார்க்க காதல் கூடுதே

    ஏராளம் ஆசை என் நெஞ்சில் தோன்றும்
    அதை யாவும் பேச பல ஜென்மம் வேண்டும்
    ஓ ஏழேழு ஜென்மம் ஒன்றாக சேர்ந்து
    உன்னோடு இன்றே நான் வாழ வேண்டும்
    காலம் முடியலாம் நம் காதல் முடியுமா
     
    singapalsmile and vaidehi71 like this.
  10. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Hi APS,
    எனக்கு மிகவும் பிடித்த பழைய பாடலை நினைவு கூர்ந்து இங்கு எனக்காக போஸ்ட் பண்ணதுக்கு மிக்க நன்றி. இந்த பாடலில் LRE அவர்களின் குரலில் செம கிக்..எனக்கு மிகவும் பிடித்த குறிப்பிட்ட பாடல்களை ரொம்ப நாளா கேட்கா விட்டால், ஒரு விதமான ஏக்கம் வந்து, நானே அந்த பாடல்களை தேடி பிடித்து கேட்பேன். அப்படி நான் தேடி பிடித்து கேட்கும் பாடல்களில் இதுவும் ஒன்று.

    இந்த பாடலுக்கு நீங்க போஸ்ட் பண்ண link வேலை செய்யல. ஆனாலும் நான் வேற link தேடி பிடித்து பாடல் கேட்டேன்.

    இரவு நேர பழைய பாடல்கள் நிகழ்ச்சியின் பேரை 'மயிலிறகு' என்று பொருத்தமாக தான் வைத்து இருக்கிறார்கள்..
    நான் கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து தான் பழைய பாடல்கள் கேட்க ஆரம்பித்து இருக்கிறேன்..பழைய ரொமான்டிக் பாடல்களுக்கும் பரம விசிறியாக மாறி விட்டேன்.

    புது பாடல்களிலும் சரி, பழைய பாடல்களிலும் சரி பட்டய கிளப்பறீங்க..

    மூன்று புது பாடல்களிலும் ஒவ்வொரு பாடலுக்கும் தனி தனியாகவே டோஸ் கொஞ்சம் அதிகம் தான்..இதில் மூணு பாடல்களையும் தொடர்ந்து கேட்டால் ஓவர்-o- ஓவர் டோஸ் :wink::wink:
     

Share This Page