1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

Poetic lines from tamil movies- please share your favorites

Discussion in 'Music and Dance' started by DDC, Aug 3, 2010.

  1. Sweeti83

    Sweeti83 Gold IL'ite

    Messages:
    769
    Likes Received:
    290
    Trophy Points:
    140
    Gender:
    Female
    வெகு நாட்களுக்கு பிறகு இந்த பாடலை கேட்டேன். வைரமுத்துவின் வரிகளில் அருமையான பாடல்

    YT- ஒரு பூ எழுதும் கவிதை - பூவேலி - உன்னிகிருஷ்ணன்/ சித்ரா / பரத்வாஜ்

    உலகம் திறந்து வைத்த முதல் சாவி காதல் தான்
    திறந்தவன் தொலைத்து விட்டான் இன்னும் அந்த தேடல் தான்

    சுடர் கோடி எதற்கு வந்தோம் தொலைத்ததை காணத்தான்
    உதட்டினில் தொடங்கி அந்த உயிர் சென்று தேட தான்

    நீ என்பதும் பாதி நான் என்பதும் பாதி
    உன்னில் என்னை என்னில் உன்னை ஊற்றி கொள்வோமா
     
  2. Sweeti83

    Sweeti83 Gold IL'ite

    Messages:
    769
    Likes Received:
    290
    Trophy Points:
    140
    Gender:
    Female
    YT - அன்பே அன்பே நீ என் பிள்ளை - உயிரோடு உயிராக

    கண்களைத் திறந்து கொண்டு நான் கனவுகள் காணுகிறேன்
    கண்களை மூடிக்கொண்டு நான் காட்சிகள் தேடுகிறேன்
    உன் பொன் விரல் தொடுகையிலே நான் பூவாய் மாறுகிறேன்
    பூமியில் நாம் வாழும் காலம் தோறும்
    உண்மையில் என் ஜீவன் உன்னைச் சேரும்
     
  3. Sweeti83

    Sweeti83 Gold IL'ite

    Messages:
    769
    Likes Received:
    290
    Trophy Points:
    140
    Gender:
    Female
    SPB / SJ காம்பினேஷனில் ஒரு அழகான பாடல் கர்ணா படத்தில் இருந்து

    YT- மலரே மௌனமா - Vidyasagar

    பாதி ஜீவன் கொண்டு தேகம் வாழ்ந்து வந்ததோ? ஆ
    மீதி ஜீவன் என்னைப் பார்த்த போது வந்ததோ?
    ஏதோ சுகம் உள்ளூறுதே ஏனோ மனம் தள்ளாடுதே
    விரல்கள் தொடவா விருந்தைத் தரவா?
    மார்போடு கண்கள் மூடவா?

    கனவு கண்டு எந்தன் கண்கள் மூடிக் கிடந்தேன்
    காற்றைப் போல வந்து கண்கள் மெல்லத் திறந்தேன்
    காற்றே என்னைக் கிள்ளாதிரு பூவே என்னைத் தள்ளாதிரு
     
  4. Sweeti83

    Sweeti83 Gold IL'ite

    Messages:
    769
    Likes Received:
    290
    Trophy Points:
    140
    Gender:
    Female
    Today's BW Songs

    YT - தேன் உண்ணும் வண்டு - அமரதீபம் - ஜிக்கி, ஏ.எம். ராஜா

    வீணை இன்ப நாதம் எழுந்திடும் விநோதம்
    விரலாடும் விதம் போலவே ..
    காற்றினிலே .. தென்றல் காற்றினிலே காற்றினிலே
    சலசலக்கும் பூங்கொடியே கேளாய்


    கண்ணோடு கண்கள் பேசிய பின்னாலே
    காதலின்பம் அறியாமல் வாழ்வதும் ஏனோ?


    YT - கண் மூடும் வேளையிலும் - Mahadevi - AMR/PS

    தென்பாங்கின் எழிலோடு பொலிகின்ற அழகை
    சிந்தாமல் சிதறாமல் கண் கொள்ள வந்தேன்!
     
    vaidehi71 and singapalsmile like this.
  5. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Hi APS,

    இந்த பக்கத்தில் நீங்க போஸ்ட் பண்ண முதல் மூணு பாடல்களும் நீங்கள் இங்கு ஏற்கனவே உங்க விருப்ப பாடல்களாக போஸ்ட் பண்ணி இருக்கீங்க. பாடல்கள் கேட்டு ரசிப்பதில் நான் ஒரு விஷயத்தை ரொம்ப ஆச்சர்யமாக பார்க்கிறேன் - அவரவர்களுக்கு தனியாக விருப்ப பாடல்கள் பட்டியல் உண்டு..வேறு எத்தனையோ பாடல்கள் கேட்டாலும் தங்களது பிரத்யேகமான விருப்ப பாடல்கள் பட்டியலில் பெரிதாக மாற்றம் இல்லை. அதற்கு உதாரணம் - நீங்க, AS, நான்.

    கருப்பு வெள்ளை பாடல்கள் அதிகம் கேட்டு பழக்கமா? எப்படி இப்படி சூப்பரா தேடி பிடித்து பழைய பாடல்கள் போடறீங்க?BW songs collection 'களைக்கட்டுது'.. ஆறிப்போன காப்பியா இருந்தா 'இப்போவே கண்ண கட்டுதே' என்று சொல்லி இருப்பார்கள்..:wink::wink:
     
  6. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    போன வாரத்தில் தொடர்ந்து மூன்று நாட்களாக எனது மூன்று நெருங்கிய நண்பர்கள் அவரவர் பிறந்த நாள் கொண்டாடி இருக்கிறார்கள்.Hat-trick birthdays!!

    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

    முதல் நண்பர் - இவருக்கு நான் கால் அடித்து போனில் பிறந்த நாள் வாழ்த்து சொன்னேன். அவ்ளோ சந்தோசமாக பேசி கொண்டிருந்தோம். இவர் தாயகத்தில் எனது ஊரை சேர்ந்தவர். எங்க ஊரை பத்தி ஆசை ஆசையாக மணிக்கணக்கில் இவருடன் பேசலாம். ஒரு காலத்தில் திரைப்படங்கள் பார்ப்பதில் எனக்கு செமயா கம்பெனி கொடுத்தவர். நாங்கள் இருவரும் தியேட்டர் சென்றும் படங்கள் பார்த்து இருக்கிறோம். நாங்கள் இருவரும் தியேட்டர் சென்று பார்த்த ஒரு படத்தில் இருந்து எங்கள் இருவருக்குமே ரொம்ப பிடித்த ஒரு பாடல்.

    TT - அனல் மேலே பனி துளி - வாரணம் ஆயிரம்

    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

    இரண்டாம் நண்பர் - முதலில் WA ல வாழ்த்து சொன்னேன். பிறகு கால் பண்ணலாம் என்று இருந்தேன். அதற்குள் இவரே எனக்கு கால் அடிக்க நான் பிறந்த நாள் வாழ்த்து சொன்னேன். இனிமையான போன் கால். இவர் மதுரையை சார்ந்தவர். அவ்ளோ பாசமானவர். உயிரை கூட நட்பிற்கு கொடுப்பார். இவரோடு நான் personal finance பேசுவேன். வருடத்தில் ஒரு குறிப்பிட்ட நாள் வைத்து இருக்கிறோம் - அன்று நாங்கள் இதுவரை சம்பாதித்து சேர்த்த எங்கள் தனிப்பட்ட net worth பகிர்ந்து கொள்வோம். எப்படி எல்லாம் இன்வெஸ்ட் பண்ணலாம் என்று டிஸ்கஸ் பண்ணுவோம்.

    மூன்றாம் நண்பர் - WA ல மட்டுமே பிறந்த நாள் வாழ்த்து சொன்னேன். இவர் வட இந்தியர். தனது குடும்பத்து நபர்களை எப்படி நடத்துவாரோ அப்படியே தனது நண்பர்களை நடத்துவார். நான் அனுப்பும் அத்தனை WA மெசேஜ்க்கும் தனது தனிப்பட்ட கருத்தை தெரிவிப்பார். இவரது அறிவாற்றல் பார்த்து நான் எத்தனையோ முறை வியந்து போய் இருக்கிறேன். ஏதாவது ஒரு விஷயத்தில் MBA perspective எனக்கு தெரிய வேண்டும் என்றால் நான் முதலில் இவரை தான் தேடி போவேன்.

    இரண்டாம்/மூன்றாம் நண்பர்களுக்காக இந்த WA மெசேஜ்:

    Buying a Car v/s Uber :
    (A Superb analysis)

    Assume a car in India costs at least Rs. 6,00,000
    Scrap value after six years = Rs. 1,00,000
    Net amount goes in effective life of six years = Rs. 5,00,000
    Number of days in six years = 2200 days
    So Rs. 5,00,000/2200 = Rs. 230/day
    Yearly insurance (Rs 20000) = Rs. 55/day
    Daily petrol (minimum) = Rs .300/Day
    After every 3 yrs tires & battery change charge (Rs 35,000) = Rs. 32/day
    Yearly maintenance of car (Rs.15000) = Rs 41/day
    If driver employed (because Uber comes with a driver) = Rs 500/day
    Plus interest loss on Car buying amount @8% on Rs 6,00,000 = Rs 131/day

    So total daily expense after buying new car = Rs 1289/day

    So friends until you pay Rs 1289/- daily to hire a cab you are effectively in gain traveling in Uber This is called financial planning...

    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

    MBA perspective வேண்டும் என்றால் WA la MBA குரூப்ஸ் சேரலாமே என்று ஆலோசனை சொல்ல நினைப்பவர்களுக்கு இந்த மெசேஜ் :grinning::grinning::

    A man is visiting a Pacific Island and is astonished to see the following in a banner outside a restaurant:

    Today's specials
    Brain of Engineer: $ 15
    Brain of Architect: $ 20
    Brain of MBA: $ 250

    He says to one of the waiters: Wow, the brain of MBA must be so delicious!!
    The waiter replies: Are you kidding?? Do you know how many MBAs you need to kill to get just a little bit of brain??

    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
     
  7. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    போன வார இறுதியில் நான் எந்த படமும் பார்க்கவில்லை. அதனால் புது பாடல் போடவில்லை.

    வார இறுதியில், பள்ளியில் என்னுடன் படித்த நண்பருடன் பல வருடங்களுக்கு பிறகு போனில் பேசினேன். எங்கள் இருவருக்கும் வயதின் காரணமாக குரல் கொஞ்சம் மாறி இருந்தாலும், நட்பில் கொஞ்சமும் மாறாமல் எங்கே விட்டோமோ அங்கே இருந்து பேச தொடங்கினோம். நிமிடத்திற்கு ஒரு முறை எனது முழு பெயரையும் சொல்லி கொண்டே பேசினார் எனது நண்பர். நாங்கள் பேசிய ஒவ்வொரு நொடியிலும் சந்தோஷம் ஆழ் மனதில் ஊற்றெடுத்தது. நீண்ட நேரம் பேசியும் பேசியது போதவில்லை. அடுத்த வார இறுதியில் எங்களது பேச்சு தொடரும்.

    நீங்களும் தொலைத்து விட்ட உங்களுக்கு பிடித்த பள்ளி நண்பரை தேடி பிடித்து பேசி பாருங்கள். அந்த இன்பம் அலாதியானது.

    என்னடா எப்பவும் நல்லது மட்டுமே போஸ்ட் பண்ணுறேன் என்று நினைக்கிறீர்களா? எவ்ளோ கெட்டதாக இருந்தாலும் அதில் இருக்கும் நல்லதை மட்டுமே தேடி பார்ப்பது எனது பிறவி குணம். கெட்டதை மறந்து விட்டு நல்லதை மட்டும் நினைத்து கொள்வேன். அதனால் தான் என்னவோ வாழ்க்கையில் கடவுள் எனக்கு மறக்கவே முடியாத ஒரு தினுசான கொஸ்டின் பேப்பர் கொடுத்து இருக்கிறார். அதற்கான விடை கடவுளுக்கு மட்டுமே தெரியும். அதனால் அதற்கு விடை தேடுவதை நிறுத்தி விட்டு, எனக்கு நானே எனக்கு பிடித்த மாதிரி சின்ன சின்ன கொஸ்டின் பேப்பர் செட் பண்ணிட்டு நானே விடை கண்டுப்பிடித்து சந்தோசப்பட்டுக்கொள்கிறேன். :grinning::grinning:

    Lyricist: Vairamuthu
    Singer: UK
    MD: SA Rajkumar

    YT - இன்னிசை பாடி வரும் - துள்ளாத மனமும் துள்ளும்

    கண்ணில் காட்சி தோன்றிவிட்டால்
    கற்பனை தீர்ந்துவிடும்
    கண்ணில் தோன்றா காட்சியில் தான
    கற்பனை வளர்ந்துவிடும்

    வாழ்க்கையின் வேர்களோ
    மிக ரகசியமானது
    ரகசியம் காண்பதே
    நம் அவசியமானது
    தேடல் உள்ள உயிர்களுக்கே
    தினமும் பசியிருக்கும்
    தேடல் என்பது உள்ளவரை
    வாழ்வில் ருசியிருக்கும்
     
    vaidehi71 likes this.
  8. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    இந்த பாடல் வரிகள் ரொம்பவே ரொமான்டிக். பாடி இருப்பவர்கள் இன்னும் அடுத்த லெவல் க்கு இந்த பாடலை எடுத்து செல்கிறார்கள். பாடலை கேட்பவர்கள் எந்த லெவல் க்கு போவாங்க னு தெரியாது..

    ரொமான்டிக்கா இருந்தவர்கள்/இருப்பவர்கள் இந்த மென்மையான உணர்வை கண்டிப்பாக உணர்வுப்பூர்வமாக அனுபவித்து இருப்பார்கள் என்று நம்புகிறேன். :wink::wink:

    இடைவெளி தாண்டாதே
    என் வசம் நானில்லை


    TT - தொட தொட மலர்ந்ததென்ன - இந்திரா - SPB/Chitra/Vairamuthu/ARR
     
  9. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    வெள்ளி தோறும் B&W பாடல்கள் போடலாம் என்று இங்க இருக்கறவங்களை ஏத்தி விட்டுவிட்டு காணாம போன ஒருத்தருக்கு இந்த அறிவிப்பு:

    இங்கு சீக்கிரமா வந்தால் ragging intensity கம்மியா இருக்கும்.
    இன்னும் தாமதமாக வந்தால் ragging intensity அதிகமா இருக்கும்.

    இந்த வெள்ளி ஒரு B&W பாடல் போட்டால் ragging ல இருந்து தப்பிக்கலாம். :grinning::grinning:
     
  10. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    இன்றைய WA share..
    இதை என்னுடன் பகிர்ந்த bestie க்கு மிக்க நன்றி.

    பேச்சாளர்/பேராசிரியர் பர்வீன் சுல்தானா அவர்களின் தாய்மொழி தமிழ் இல்லை என்றாலும் அவர் தமிழை ருசித்து ரசித்து மேடையில் பேசி இருக்கும் விதம் அருமையிலும் அருமை.

    அரசியல் நெடியை தவிர்த்து விட்டு அவர் தமிழை புகழ்ந்து தள்ளும் பேச்சை கவனித்து பார்த்தேன். தமிழ் மொழி மீது எனக்கு காதல் இன்னும் அதிகமாகிறது.

    YT - தமிழ் பற்று உள்ளவர்கள் கண்டிப்பாக இந்த பதிவை ரசிப்பார்கள் - Parveen Sulthana - Tamizh speech
     

Share This Page