1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

Poetic lines from tamil movies- please share your favorites

Discussion in 'Music and Dance' started by DDC, Aug 3, 2010.

  1. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம் போல எண்ண எண்ண வற்றாது கவிஞர்களின் கற்பனை வளம்..நேற்று போஸ்ட் பண்ண பாடல்களின் தொடர் சங்கிலியாக அதே அலை வரிசையில் இன்று பழைய பாடல்..அந்த காலத்து பாடல் வரிகளும் செமயா இருக்கு..ஆணின் பார்வையிலும் பெண்ணின் பார்வையிலும் சரி சமமாக புகுந்து விளையாடி இருக்கிறார்கள் பாடல் வரிகளில்..இந்த பாடலில் முதலில் போஸ்ட் பண்ண நினைத்த வரிகள் வேறு.. போஸ்ட் பண்ணும் வரிகள் வேறு..:wink::wink:

    இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
    பாடியவர்கள்: AM ராஜா, P சுசீலா
    பாடலாசிரியர்: மருதக்காசி

    YT - தென்றல் உறங்கிய போதும் - பெற்ற மகனை விற்ற அன்னை

    தென்றல் உறங்கிய போதும்
    திங்கள் உறங்கிய போதும்
    கண்கள் உறங்கிடுமா?
    காதல் கண்கள் உறங்கிடுமா?
     
    Thyagarajan and jskls like this.
  2. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    இந்த பாடலை நான் முதன் முதலாக கேட்டபோது TMS/LRE's குரலில் இருந்த குழைவு, பாடல் வரிகளை கவனிக்கும் தெளிவை தொலைக்க செய்து விட்டது. இந்த பாடலில் கவியரசரின் வரிகளை அலச எனக்கு அறிவு பத்தாது..அதனால் எந்த வரிகள் போடறது னு தெரியல..:wink::wink:

    YT - பார்வை ஒன்றே போதுமே - யார் நீ
     
    Sweeti83, jskls and bhagya85 like this.
  3. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    சமீபத்தில் நான் அடிக்கடி கேட்டு கேட்டு ரசிக்கும் பாடல்கள்..பாடல் வரிகள் கவிதை..பாடல்களை படம் பிடித்த விதமும் அருமை.. இசையும் அற்புதம்..

    MD: Sean Roldan

    YT - பார்த்தேன் களவு போன நெலவ நான் பார்த்தேன் - பவர் பாண்டி
    Lyricist: Selvaraghavan
    Singers: Sean Roldan, Shweta Mohan

    YT - வெண்பனி மலரே - பவர் பாண்டி
    Lyricist: Dhanush
    Singer: Sean Roldan
     
    jskls likes this.
  4. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    கணவன்/மனைவி/திருமணம் பற்றி கலாய்த்து ஏதாவது WA மெசேஜ் வந்தால், மெசேஜ் கணவனை கலாய்த்தாலும் மனைவியை கலாய்த்தாலும் பாரபட்சம் இன்றி ரெண்டுக்கும் சரி சமமாக நான் சிரிப்பேன்.

    அழுதிட்டு சிரிக்கிறோமா இல்லை சிரிக்கணும் னு சிரிக்கிறோமா என்பது அவரவர் மெச்சூரிட்டி பொருத்தது. :wink::wink:

    ~~~~~~~~~~~~~~~~

    There was a group of women gathered at a seminar on how to live in a loving relationship with your husband.

    The women were asked, 'How many of you love your husbands?'

    All the women raised their hands.

    Then they were asked, 'When was the last time you told your husband you loved him?'
    Some women answered today, some yesterday, some didn't remember..

    The women were then told to take their cell phones and send the following text to their respective husband: I love you, sweetheart. Then the women were told to exchange phones and read the replies..

    Here are some of the replies:

    1. Eh, mother of my children, are you sick?
    2. What now? Did you crash the car again?
    3. I don't understand what you mean?
    4. What did you do now? I won't forgive you this time!!
    5. ?!?
    6. Don't beat about the bush, just tell me how much you need?
    7. Am I dreaming??
    8. If you don't tell me who this message is actually for, you will die today !!
    9. I asked you not to drink anymore!!
    and the best one
    10. Who is this?

    ~~~~~~~~~~~~~~~~

    Husband: I have changed my mind.
    Wife: Is it working now?

    ~~~~~~~~~~~~~~~~
     
    Thyagarajan likes this.
  5. cinderella06

    cinderella06 Platinum IL'ite

    Messages:
    1,210
    Likes Received:
    517
    Trophy Points:
    208
    Gender:
    Female
    Veda neenga Tillana Mohanambal movie paaturukeengala?
     
  6. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    C,
    Enakku vivaram therindhu andha movie paarththadhu illai..andha padathil varum 'train scene' eppodho TV la paartha ninaivu irukkiradhu..edhukku kekkareenga? edho/ennavo special andha padathil irukkaa?
     
  7. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    வித்யாசமான படங்கள் பார்க்க விரும்பினாலும் பொதுவாக படம் பார்த்தோமோ ஜாலியா இருந்தோமோ சிரிச்சோமோ னு போயிட்டே இருக்கணும் என்று தான் நினைப்பேன்..ஆனால் நான் பார்த்ததிலே என்னை மனதளவில் பாதித்த படம் டைரக்டர் பாலாவின் 'நான் கடவுள்' ..இந்த படம் பார்த்து பல மணி நேரங்கள் வலி - பார்வையற்ற பெண்களை நினைத்து/யாசிப்பவர்களை நினைத்து..

    போன வார இறுதியில் நான் ஒரு புது படம் பார்த்தேன்..அந்த படத்தின் பாதிப்பு என்னை விட்டு போக பல மணி நேரங்கள் ஆச்சு..படத்தின் இயக்குனர் ஒரு ஆன் லைன் சமுதாய அவலத்தை குத்தி கிழித்து விட்டார்!!

    நல்ல வேளையாக ஒரு நெருங்கிய நண்பரோடு தொடர்ந்து மூன்று மணி நேரங்கள் போனில் பேசினேன்..படம் பற்றிய சிந்தனை இல்லாமல் இருந்தேன்..எனது நண்பருக்கு மிக்க நன்றி. இந்த வாரம் ஆரம்பத்தில் இருந்து அலுவலகத்து பணி என்னை முழுவதும் ஆக்கிரமித்ததால் அந்த படத்தை பற்றி நினைக்க நேரமும் இல்லை..வேலைக்கும் மிக்க நன்றி.

    நான் அதிகமாக ஆன் லைனில் எனது நேரத்தை செலவிடும் ஒரே தளம் IL தான். எனக்கு ரொமான்டிக் பாடல்கள் மீது தீராத காதல்/மோகம். எனக்கு தெரியாத பாடலை யாரவது எனக்கு அறிமுகப்படுத்தினால் எனக்கு சந்தோசமாக இருக்கும். நான் பெரும் சந்தோசத்தை என்னை போல பாடல் பைத்தியம் பிடித்தவர்களுக்கும் குடுக்க வேண்டும் என்பதற்கு தான் இங்கு பாடல்கள் பகிர்ந்து கொள்கிறேன்.

    Lyricist: Yugabharathi
    MD: GVP
    Singer: Harini

    Raaga - மூங்கில் நிலா - லென்ஸ்

    ரோஜா இதழ் பேசா கதை பேசாதோ
    கூந்தல் மழை மீசை குளிர் வீசாதோ
     
    Last edited: May 18, 2017
    bhagya85 and jskls like this.
  8. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    இன்று படித்து ரசித்த WA மெசேஜ்..கண்களுக்கு இவ்ளோ இருக்கா? அதனால் தானோ கண்கள் சம்பந்தப்படுத்தி எத்தனையோ பாடல்கள்? இருந்தாலும் நான் கட்சி மாறப்போவதில்லை. கண்டிப்பாக என்னோட நல்ல வோட்டு கண்களுக்கு இல்லை..கள்ள வோட்டு வேணா கண்களுக்கு வைத்து கொள்ளலாம்..:wink::wink:

    ~~~~~~~~~~~~~~~~~~~~~

    கண்களின் மொழி
    -----------------------------
    1. கண்கள் வலப்புறமாக பார்த்தால் பொய் சொல்கிறது
    2. கண்கள் இடப்புறமாக பார்த்தால் உண்மை பேசுகிறது
    3. கண்கள் மேலே பார்த்தால் ஆளுமை செய்கிறது
    4. கண்கள் கீழே பார்த்தால் அடிபணிகிறது
    5. கண்கள் விரிந்தால் ஆச்சர்யப்படுகிறது, ஆசைப்படுகிறது
    6. கண்கள் சுருங்கினால் சந்தேகப்படுகிறது
    7. கண்கள் கூர்ந்து பார்த்தால் விரும்புகிறது
    8. கண்கள் வேறு எங்கோ பார்த்தால் தவிர்க்கிறது
    9. கண்கள் வலமும் இடமும் மாறி மாறி ஓடினால் பதட்டத்தில் உள்ளது
    10. கண்கள் படபடத்தால் விரும்புகிறது, வெட்கப்படுகிறது
    11. கண்கள் மூக்கைப்பார்த்தால் கோபப்படுகிறது
    12. கண்கள் எதை பார்க்கிறதோ அதை விரும்புகிறது
    13. கண்கள் கழுத்துக்கு கீழே பார்த்தால் காமம்
    14. கண்கள் கண்ணுக்குள் பார்த்தால் காதல்
    15. கண்கள் இடமாக கீழே பார்த்தால் தனக்குள் பேசிக்கொள்கிறது
    16. கண்கள் இடமாக மேலே பார்த்தால் பழைய நினைவுகளை தேடுகிறது
    17. கண்கள் வலமாக கீழே பார்த்தால் விடை தெரியாமல் யோசிக்கிறது
    18. கண்கள் வலமாக மேலே பார்த்தால் பொய் சொல்ல யோசிக்கிறது
    19. கண்கள் உயர்ந்தும் தலை தாழ்ந்தும் இருந்தால் எதையோ தேடுகிறது
    20. கண்கள் ஓரப்பார்வையில் அவ்வப்பொழுது பார்த்தால் விரும்புகிறது
    21. கண்கள் மூடித்திறந்தால் உள்ளுக்குள் தேடுகிறது
    22. கண்களை கைகள் மறைத்தால் எதையோ மறைக்கிறது
    23. கண்களை கைகள் கசக்கினால் தஞ்சம் கேட்கிறது
    24. கண்கள் மூடித்திறந்தால் வெறுக்கிறது
    25. கண் புருவங்கள் உயர்ந்தால் பேச விரும்புகிறது
    26. கண் புருவங்கள் சுருங்கினால் பேச விருப்பமில்லை
    27. கண்களும் புருவங்களும் சுருங்கியிருந்தால் கோபம்
    28. ஒரு கண் திறந்திருந்தால் சேட்டை
    29. இரண்டு கண்களும் மூடி இருந்தால் தூக்கம்
    30. கண்கள் திறக்கவில்லையென்றால் மரணம்

    ~~~~~~~~~~~~~~~~~~~~~
     
    Thyagarajan likes this.
  9. cinderella06

    cinderella06 Platinum IL'ite

    Messages:
    1,210
    Likes Received:
    517
    Trophy Points:
    208
    Gender:
    Female
    Veda neenga sonna andha scene thaan naanum solla vandhen:wink: pazaya padangala neraya indha madhiri romantic scenegal Varum. Ennaku sattunu niyabagam vandhadhu iduthan.
     
  10. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    C,
    Thappu illaama correct ah scene catch pannitena? :wink::wink:

    இப்படி தான் ஒரு முறை நான் ரூம் மேட் இடம் 'தப்பா' கரெக்ட்டா மாட்டிக்கிட்டேன். நைட் லேட்டா தூங்கறது என்னோட பழக்கம்..தூங்கறதுக்கு முன் ஏதாவது புக் ரூமில் படிப்பேன்..இல்லேன்னா ஹால் ல டிவி பார்ப்பேன்..ஒரு நைட் அப்படி டிவி பார்த்திட்டு இருந்தேன்..ரிமோட் வைத்து சானல் மாத்திக்கிட்டே இருந்தேன்..அரை தூக்கத்தில் இருந்த என்னோட ரூம் மேட் ஹால் பக்கம் இருக்கற கிட்சன் க்கு தண்ணி குடிக்க வந்தாங்க..என்னோட நேரம் நான் சானல் மாத்திட்டு இருந்த போது 'ஒரு சீன்' வந்தது..ரூம் மேட் அதை பார்த்திட்டாங்க..அதில் இருந்து நான் எப்போ நைட் டிவி பார்த்தாலும் என்னை செமயா கலாய்ப்பாங்க..அவங்க தொல்லை தாங்காம நான் டிவி பார்ப்பதை விட்டுட்டேன்..இது பல வருடங்களுக்கு முன்னால் நடந்தது..எப்போ நான் போனில் பேசினாலும் அவங்க 'அந்த சீன்' சொல்லி என்னை கலாய்ப்பாங்க..
     

Share This Page