1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

Poetic lines from tamil movies- please share your favorites

Discussion in 'Music and Dance' started by DDC, Aug 3, 2010.

  1. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,483
    Likes Received:
    2,467
    Trophy Points:
    338
    Gender:
    Female
    தாயகம் திரும்பி வந்தவுடன் எங்க வீட்டிற்கு வந்து ட்ரிப் எப்படி இருந்தது என்று அக்கறையோடு நேரில் விசாரித்து விட்டு போன எனது அலுவலகத்து நண்பர் எனக்கு அனுப்பிய WA மெசேஜ் இது..இருபது வருடங்கள் மேலாக அந்நிய தேசத்து வாசம் கடந்தும் நம் நாட்டு பிரஜையாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இன்னும் அந்நிய தேசத்து குடி உரிமை பெறாதவர் இவர்..எனக்கு எப்பவும் இவங்க மேல செம மரியாதை இருக்கிறது..இவங்க எனக்கு அனுப்பும் மெசேஜ் ஒவ்வொன்றும் முத்துக்கள்..

    ~~~~~~~~~~~~~~~~~~~~~

    நான் ஒரு முடிவெடுத்தா அது சரியாகத்தான் இருக்கும் என்கிற எண்ணம் கொண்டவர்களுக்கு மஹாபாரதம் அறிவுறுத்தும் பாடம்

    மஹாபாரதம் என்ற இந்த இதிகாசம் முழுக்க முழுக்க தர்மத்தின் வழிமுறைகளால் நிரம்பியிருக்கிறது. ஒவ்வொரு கதாபாத்திரமும் தர்மத்தின் படி வாழ வேண்டிய விளக்கங்களையும் கலியுக மனிதர்களைக் காட்டும் கண்ணாடியாகவும் உள்ளது.

    உலகத்தில் வேறெந்த மதத்திலும் வாழ்க்கை தர்மத்தை வாழ்ந்து காட்டி உபதேசிப்பதான ஒரு இதிகாசம் கிடையாது. அது பாரதக் கதையில் சாத்தியம். ஒவ்வொரு கதாபாத்திரமும் அதன் ஒவ்வொரு நாள் நிகழ்வுகளும் கூட வாழும் மனிதர்களுக்கு ஒரு பாடமாகவே இருக்கிறது என்றால் மிகையாகாது.

    பொதுவாக நம் எல்லோருக்குமே எந்த ஒரு சூழ்நிலையிலும் சரி தவறுகளை ஆராய்ந்து சிந்தித்து முடிவெடுக்கும் திறன் இருக்கத்தான் செய்யும். மானைத் உண்ணும் புலிக்கு அதை எப்படி எப்போது சாப்பிடுவது என்று முடிவெடுக்கும் திறன் இருந்தால் அதனால் உண்ணப்படப் போகும் மானுக்கும் அதே புலியிடமிருந்து எப்போது எப்படி தப்பிக்க வேண்டும் என்று முடிவெடுக்கும் திறனும் இருக்கும். இதில் புலியோ மானோ ஒன்றுக்கொன்று சளைத்ததல்ல. ஆனால் ஒன்று மற்றொன்றுடன் தோற்கும் நிகழ்வைத் தீர்மானிப்பது அதனதன் சூழலே ஆகும்.

    மனிதனும் அதே போன்ற சூழ்நிலைக் கைதிதான் என்பது இயற்கையின் நியதி. சூழ்நிலைகள் தான் பெரும்பாலும் நம்முடைய எண்ணங்களைத் தீர்மானிக்கின்றன. அவற்றைப் புரிந்து கொண்டு கடந்து வருபவன் சூழலை வெற்றி பெறுகிறான். கடந்து வரமுடியாமல் சுழலுக்காட்பட்டு அதனால் தூண்டப்பட்ட எண்ணங்களினால் அலைக்கழிக்கப்படுபவன் பல துன்பங்களுக்கு ஆளாகிறான். ராமாயணம் , மகாபாரதம் போன்ற இதிகாசங்களில் மட்டுமல்லாமல் நடைமுறை வாழ்க்கையிலும் அதுபோன்று துன்புறுபவர்களை நாம் காணமுடியும்.

    உதாரணமாக சிலருக்கு தான் முடிவெடுத்தால் அது சரியாகத்தான் இருக்கும் என்கிற எண்ணம் நிலைத்திருக்கும். தன்னைப் பற்றி அவர்கள் பெருமிதப்பட்டுக்கொள்ளும் விஷயமாகவும் அது அமைந்திருக்கும். ஆனால் சூழ்நிலைகள் அவர்களை அறியாமலேயே அவர்களை மோசமாக வழிநடத்தும் போது அந்த பெருமிதம் துணைவராது. தன் முடிவு சரியென்ற நம்பிக்கையில் செயல்பட்டுப் பின் துன்பமுறுபவர்களை நாம் பார்க்கலாம்!

    இதற்கு காரணம் எல்லாம் சீராகச் சென்று கொண்டிருக்கும் வாழ்க்கையில் நம் முடிவுகள் சரியாக இருக்கும். ஆனால் அது பற்றிய சிந்தனை நம் கண்களை மறைத்து ஒருவித கர்வத்தைக் கொடுத்துவிடும். அந்த மாயை நம் செயல்களின் மீது தெளிவு கொள்ளச்செய்யாது.
    பிறருடைய யோசனையைக் கேட்கவேண்டும் என்கிற எண்ணம் தோன்றாது. அத்தகைய மாய வலையில் நாம் சிக்கிக் கொண்டால் பின்னர் நம்முடைய முடிவுகளுக்கும் அதனால் விளையும் நன்மை தீமைகளுக்கும் நாமே காரணமாகி விடுகிறோம்.

    இதனை மஹாபாரத்த்தில் நடந்த கீழ்கண்ட நிகழ்வு நமக்கு உணர்த்துகிறது.

    மகாபாரத்தில் ஒரு நாள்!

    பிறருடைய யோசனையைக் கேட்கவேண்டும் என்கிற எண்ணம் தோன்றாமல் மாய வலையில் சிக்கிக் கொண்ட ஒரு சூழலில் தான் அன்று தர்மராஜன் யுதிஷ்ட்டிரர் இருந்தார்.

    அந்த ஒரு நாள் பாண்டவர்களின் வாழ்வில் பல திருப்பங்களைக் கொண்டு வந்து நமக்கு கீதை கிடைக்கக் காரணமான நாளாக அமைந்தது

    அரக்கு மாளிகை சூழ்ச்சியிலிருந்து தப்பிவந்த பாண்டவர்கள் தங்களுக்குக் கிடைத்த காண்டவ வனத்தை நாடாக மாற்றி இந்திரபிரஸ்தம் என்கிற நாட்டை உருவாக்கி மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

    இனி நமக்கு துன்பமில்லை என்கிற மகிழ்ச்சியில் வாழ்ந்து கொண்டிருந்த தருமபுத்திரரை சூதாட அழைக்கின்றான் துரியோதனன். தர்மபுத்திரர் யுதிஷ்டிரரும் அவனது அழைப்பை ஏற்று சூதாட்டக்களத்தில் அமர்கிறார்.

    இந்த சூதாட்ட அழைப்புக்கு முன்பாக ஒருநாள் சகுனி வெறுமனே விளையாடிக் கொண்டிருக்கையில் அவ்வழியே வந்த யுதிஷ்ட்டிரனை ஒரு ஆட்டம் போடு எனக் கூப்பிட அந்த ஒரே ஆட்டத்தில் யுதிஷ்ட்டிரன் வென்று சகுனி தோற்கிறார். அதாவது தோற்பது போல யுதிஷ்ட்டிரனிடம் நடிக்கிறார்.

    மகிழ்ச்சியான வாழ்க்கை ஓட்டத்தில் சூதுவாதுகள் புரிவதில்லை.
    காரணம் இது தான், யுதிஷ்ட்டிரன் தனது முடிவுகள் மீது நம்பிக்கை கொண்டவனாக ஏற்கனவே இருந்து வருகிறார். அவனிடம் ஒரு முறை தோற்றுக் காண்பித்தால் கண்டிப்பாக தனது முடிவுகள் எல்லாம் சரியாகத்தான் இருக்கும் என்கிற மனத்திரை பலமாக விழுந்து விடும் என்று சகுனி நம்பினார். அது பலித்தும் விட்டது.

    சகுனி திட்டம் தீட்டிய அந்த நாள் வந்தது. சூதாட்டக் களத்தில் பாண்டவர்கள் ஒரு புறமும், துரியோதனன் சகுனி மற்றும் கௌரவர்கள் மறு புறமும் அமர்ந்திருக்க ஆட்டம் துவங்கியது.

    அந்த வேளையில் துரியோதனன் வஞ்சகமாகச் சொல்கிறான் "அவையோர்களே, என் சார்பாக என் மாமா சகுனி காய்களை உருட்டி விளையாடுவார்." என்று அறிவித்தான். அனைவரும் இதனை ஏற்றுக் கொண்டனர். யுதிஷ்ட்டிரனும் மறுக்காமல் புன்னகையுடன் ஏற்றுக் கொண்டார்.

    காரணம் ஏற்கனவே யுதிஷ்ட்டிரன் மனதில் சகுனி நம்மிடம் ஒரு முறை தோற்றவர் தானே என்றும் விளையாட்டில் நாமும் அவரை வெல்ல முடியும் என்றும் நம்பிக்கை இருந்தது. ஆனால் யுதிஷ்ட்டிரன் தான் சூழலின் மயக்கத்தில் ஆழ்ந்திருந்ததை உணரவில்லை.

    ஆட்டம் துவங்கியது. தன் முடிவுகள் சரியாகத்தான் இருக்கும் என்கிற அவரது நம்பிக்கை பொடிப்பொடியானது. சகுனியின் சூதாட்டத் திறனுக்கு முன்னால் யுதிஷ்ட்டிரன் ஒரு முறை கூட ஜெயிக்க முடியவில்லை. தன் நாட்டை, செல்வங்களை, சகோதரர்களை, ஏன் தன்னையே வைத்து சூதாடி பின் தங்கள் மனைவியையும் வைத்துச் சூதாடி அனைத்தையும் இழந்து தலை குனிந்து நின்றான்.

    சூழலின் மாயத்தோற்றத்தால் , அந்த மாயை தந்த மயக்கத்தால் யுதிஷ்ட்டிரன் தன்நிலை மறந்து தோல்வியுற்று நின்றான். தான் செய்யும் செயல்கள் அனைத்துமே சரியானதாக இருக்கும் என்றும் தன்னுடைய முடிவுகள் எப்போதும் வெற்றியையே தேடித்தரும் என்றும் பிறருடைய ஆலோசனைகள் தனக்குத் தேவைப்படாது என்றும் நினைப்பவர்களுக்கு அந்த நாள் ஒரு பாடமாக இருந்தது.

    ஆட்டம் துவங்கும் முன்பாக யுதிஷ்ட்டிரன் ஒரு முறை தனக்கு உதவத் துணை வேண்டுமென்று நினைத்திருந்தால் இந்த சூழல் அப்படியே தலைகீழாக மாறியிருக்கும்.

    துரியோதனன் தனக்குப் பதிலாக தன் மாமா சகுனி விளையாடுவார் என்று அறிவித்த அடுத்த நொடி யுதிஷ்ட்டிரனும் தனக்குப் பதிலாக தன் உறவினனும் உற்ற நண்பனுமான ஸ்ரீ க்ருஷ்ணன் இங்கே விளையாடுவார் என கண்ணனை அழைத்திருந்தால் அவன் நாடிழந்திருக்க மாட்டான். தன் சகோதர்களை இழந்திருக்க மாட்டான். மனைவி திரௌபதிக்கு அவமானம் தேடித்தந்திருக்க மாட்டான்.

    அந்த ஒரு நாள் சூழல் மயக்கத்தால் யுதிஷ்ட்டிரர் செய்த தவறு குருக்ஷேத்திரத்திற்கு வழிவகுத்தது!

    'என் முடிவே சரி! எனக்கு யாரும் புத்தி சொல்ல வேண்டாம்!" என்று உங்கள் அருகில் யாரேனும் பேசுகிறார்களா!

    அவர்களிடம் சொல்லுங்கள்!
    குருக்ஷேத்திரம் காத்திருக்கிறது!
     
  2. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,483
    Likes Received:
    2,467
    Trophy Points:
    338
    Gender:
    Female
    இன்று பழைய படத்தில் இருந்து நான் ரிசர்ச் பண்ண இரண்டு பாடல்கள் போஸ்ட் பண்றேன்..

    முதல் பாடல் - ஊடல்
    இரண்டாவது - அதற்கு எதிர் பதம்

    இரண்டு பாடல்களும் கவியரசு கண்ணதாசனின் வரிகள்.

    முதல் பாடல் - வார்த்தைகளுக்கு வலிக்குமோ என்று நினைத்து மென்மையாக பாடி இருக்கிறார் PBS. இவரது குரலில் இருக்கும் குழைவு காதுகளுக்கு குளிர்ச்சி.

    இந்த பாடலில் கண்கள் கோபத்தை காட்டுது..

    YT - நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் - போலீஸ்காரன் மகள் (MD: MSV-TKR)

    உந்தன் கண்களுக்கு என்மேல் என்னடி கோபம்
    கணையாய் பாய்கிறது


    திருமண நாளில் மணவறை மீது இருப்பவன் நான் தானே
    என்னை ஒரு முறை பார்த்து ஓர கண்ணாலே சிரிப்பவன் நீதானே


    ~~~~~~~~~~~~~~~~~~~
    என்னுடைய சிற்றறிவுக்கு எட்டிய வரை, அந்த கருப்பு வெள்ளை திரைப்படத்து காலத்தில், மண நாள் அன்று மணப்பெண் ஓர கண்ணால் மணமகனை பார்த்து சிரிக்க வாய்ப்பில்லை. அப்படியே "அண்ணலும் நோக்கினான்;அவளும் நோக்கினாள்" ஸ்டைல்ல கொஞ்சம் திருட்டு தனமாக சைட் அடிச்சாலும் பிறர் பார்த்து விடுவார்களோ என்ற பயத்தில் சிரித்திருக்க வாய்ப்பில்லை..கவியரசு கண்ணதாசன் ஏன் இந்த வரிகளை எழுதினார் என்று புரியவில்லை..விளக்கம் தெரிந்தால் சொல்லவும்..
    ~~~~~~~~~~~~~~~~~~~
     
    Thyagarajan and Sweeti83 like this.
  3. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,483
    Likes Received:
    2,467
    Trophy Points:
    338
    Gender:
    Female
    சில PBS பாடல்கள் தொடர்ந்து கேட்டு கொண்டிருந்தேன்..காதில் தேன் ஊற்றிய மாதிரி இருந்தது..ஒரு மாறுதலுக்காக கொஞ்சம் அதகளமான பழைய பாடல் தேடி பார்த்தேன்..

    கம்பீரமான TMS குரலில், கொஞ்சும் PS குரலில், கவியரசரின் குறும்பான வரிகளில் இந்த பாடலை கேட்டதும் காதில் விஸ்கி ஊற்றிய மாதிரி இருந்தது..

    இந்த பாடலில் கண்கள் ஜாலம் காட்டுது..:wink::wink:

    YT - கன்னத்தில் என்னடி காயம் - தனிப்பிறவி (MD: KV Mahadevan)
     
    Thyagarajan likes this.
  4. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,483
    Likes Received:
    2,467
    Trophy Points:
    338
    Gender:
    Female
    ஒன்னும் சொல்றதுக்கு இல்லை..:wink::wink:

    Source: WhatsApp
    Credit: Friend

    father : father in law
    mother : mother in law
    son : son in law
    daughter : daughter in law
    brother : brother in law
    sister : sister in law
    wife : ????

    *She Is The Law*

    Dedicated to all married friends!!
     
  5. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,483
    Likes Received:
    2,467
    Trophy Points:
    338
    Gender:
    Female
    வார இறுதியில் பாகுபலி 2 படத்தை திரையில் பார்த்த பிரம்மாண்டம் இன்னும் எனது கண்களை விட்டு அகலவில்லை. கொஞ்சம் பெரிய படம் என்பதாலோ என்னவோ இந்த திரை அரங்கில் இன்டெர்வல் இல்லை..எங்கேயும் அசையாமல், போன் பார்க்காமல், வேறு எந்த சிந்தனையும் இல்லாமல், ஒரு நிமிடம் கூட போர் அடிக்காமல், தொடர்ந்து 2 மணி நேரம் 48 நிமிடங்கள் என்னை கட்டி போட்ட படம்..இந்த அளவிற்கு நான் வேறு எந்த படத்தையும் பார்த்து வியந்து போனதில்லை..திரை அரங்கில் இதுவரை இங்கு நான் பார்த்த படங்களிலே இந்த படத்திற்கு தான் டிக்கெட் விலை அதிகமாக இருந்தது..இன்னும் இரண்டு மடங்கு டிக்கெட் விலை இருந்தாலும் சந்தோசமாக கொடுத்து இருப்பேன்..இந்த படத்தில் இருந்து எனக்கு மிகவும் பிடித்த பாடல்...

    YT - ஒரே ஓர் ஊரில் - பாகுபலி 2
     
    cinderella06 likes this.
  6. Roopamanju

    Roopamanju Platinum IL'ite

    Messages:
    1,835
    Likes Received:
    2,436
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Punjai Undu, Nanjai Undu
    Pongi Varum Gangai Undu
    Panjam Mattum Innum
    Ingu Maaravilla...
    Enga Bharadhathil
    Sothu Chanda Theeravilla...
    Veedhikkoru Katchi Undu
    Saadhikkoru Sangam Undu
    Needhi Solla Mattum
    Inge Naadhi Illa...
    Sanam Nimmathiya Vaazha
    Oru Naalumilla...

     
    Thyagarajan likes this.
  7. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,483
    Likes Received:
    2,467
    Trophy Points:
    338
    Gender:
    Female
    RM,
    எப்படிங்க இப்படி தேடி பிடிச்சு பாட்டு போடறீங்க?

    வீட்டு பிரச்சனையே தீர்க்க முடியாம தலையை பிச்சுக்கற நிலையில் நாட்டு பிரச்சனை கொண்ட பாடல் இங்க போட்டு கேக்க சொல்றீங்களே? இது உங்களுக்கு நியாயமா படுதா? :smile::smile:

    இந்த படம் எனக்கு மிகவும் பிடிக்கும்..KB/Kamal/IR kalakki iruppaargal..
     
  8. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,483
    Likes Received:
    2,467
    Trophy Points:
    338
    Gender:
    Female
    இப்போ தேடி பிடித்து கேட்கும் பாடல்..

    Lyricist: Dhanush
    MD: Anirudh
    Singers: Vijay Yesudas, Shweta Mohan

    TT - நீ பார்த்த விழிகள் - 3

    வலியடி பெண்ணே வரைமுறை இல்லை
    வதைக்கிறாய் என்னை மெதுவாக
     
    bhagya85 and jskls like this.
  9. cinderella06

    cinderella06 Platinum IL'ite

    Messages:
    1,210
    Likes Received:
    517
    Trophy Points:
    208
    Gender:
    Female
    Ioppo ennaku endha pattu lines post pandradhunu therila, ennoda oru kannula Prabasum iooru kannula Ranavum irukarathala pattellam enkadhula vizhamatengudhu.
    Ps. Naa innum Bahubali 2 pakala adhuke ippidi :wink::facepalm:
     
  10. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,483
    Likes Received:
    2,467
    Trophy Points:
    338
    Gender:
    Female
    C,

    படம் பார்க்காமலே எங்கயோ போய்ட்டிங்க னா படம் பார்த்த பிறகு எங்க போவீங்க னு தெரிஞ்சுக்க ஆவல்..படம் பார்த்திட்டு இங்க வந்து கமெண்ட் போடுங்க..

    வீரபாண்டிய கட்டபொம்மன் படம் நான் பார்த்ததில்லை..இந்த படத்தை பார்த்தவர்கள் வீரபாண்டிய கட்டபொம்மன் என்றதும் சிவாஜி தான் நினைவுக்கு வருவார்கள் என்று சொல்வார்கள்..அந்த அளவிற்கு அந்த கதாப்பாத்திரத்தில் சிவாஜி ஒன்றி போய்/வாழ்ந்து/உயிர் கொடுத்து உண்மையான கட்டபொம்மனும் இப்படி தான் இருந்து இருப்பார் என்று மக்கள் மனதில் பதிய வைத்தார்.

    அது போல, எனக்கு இனிமேல் எந்த சரித்திர கதை கேட்டாலும் மகாராணி என்றதும் ரம்யா கிருஷ்ணன், நல்ல ராஜா/இளவரசன் என்றதும் பிரபாஸ், கெட்ட ராஜா/இளவரசன் என்றதும் ராணா, ராஜாங்கத்து ராணி/இளவரசி என்றதும் அனுஷ்கா தான் எனது நினைவிற்கு வருவார்கள். (நூத்து கணக்கான அந்தப்புரத்து ராணிகளில் ஒருவராக தமன்னா ((பாகு பாலி 1) சேர்த்துக்கொள்ளலாம்)

    நான் இன்னும் கல்கியின் 'பொன்னியின் செல்வன்' படிக்கவில்லை. பொன்னியின் செல்வனை பாகுபலி இயக்குனர் படமாக எடுத்தால் ஒவ்வொரு கதாப்பாத்திரமும் உயிர் பெற்று கண் முன் நிழலாடும் என்றால் மிகை ஆகாது. உன்னிப்பாக செயல்பட்டு பிரம்மாண்டமாக பாகுபலி படத்தை தந்த இயக்குனரை எவ்ளோ பாராட்டினாலும் தகும்.
     
    bhagya85, cinderella06 and jskls like this.

Share This Page