1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

Poetic lines from tamil movies- please share your favorites

Discussion in 'Music and Dance' started by DDC, Aug 3, 2010.

  1. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Bhargs,

    மழை வரும் போது எத்தனை பேருக்கு மழையில் நனையும்/மழையை ரசிக்கும் ரசனை இருக்கும்?

    நான் பள்ளியில் படிக்கும்போது ரேடியோவில் பாடல் ஒலித்து கொண்டு தான் இருந்தது ஆனால் காது கொடுத்து நான் கேட்டதே இல்லை..

    படித்து முடித்து உடனே வேலைக்கு சேர்ந்த பிறகு தான் எனது நெருங்கிய நண்பர்கள் புண்ணியத்தில் இந்த பாடல் ரசனை என்னோடு ஒட்டிக் கொண்டு விட்டது..

    ~~~~~~~~~~~~~~~~~~

    மூன்று வருடங்களுக்கு முன் நமது தாய் நாட்டில் உறவினர்களுடன் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தேன்..அப்போது விக்ரம் படத்தில் இருந்து வனிதா மணி பாடல் ஓடியது..உடனே எனது மனதிற்கு மிகவும் நெருக்கமான இரண்டு IL நண்பர்களுடைய ஒரு எக்குத்தப்பான உரையாடல் நினைவிற்கு வந்தது..கள்ளத்தனமான சிரிப்பை கஷ்டப்பட்டு அடக்கி கொண்டேன்..

    ~~~~~~~~~~~~~~~~~~

    நமது நாட்டில் இருக்கும்போது வீட்டில் எல்லோருடனும் சேர்ந்து டிவியில்/ரேடியோவில் எந்த பாடலும் பார்க்க/கேட்க மாட்டேன் --> நான் ரசிப்பதை என் முகம் காட்டி குடுத்து விடும் என்பதால்..

    ~~~~~~~~~~~~~~~~~~
     
    knbg likes this.
  2. knbg

    knbg Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    5,815
    Likes Received:
    5,614
    Trophy Points:
    455
    Gender:
    Female
    Aww.....sweeet and naughty Veda.....Mint n Chocochip icecream girl.....:kissingheart::)
     
    singapalsmile likes this.
  3. knbg

    knbg Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    5,815
    Likes Received:
    5,614
    Trophy Points:
    455
    Gender:
    Female

    மற்றுமொரு பள்ளிக்கால பாடல்....
    இதன் இசையின் துள்ளல் மற்றும் தொடக்க வரிகள் captivating......
    காதல் வந்தால் இப்படித்தான் இருக்குமோ என early teensல் கற்பனை செய்ய வைத்த பாடல்....:blush:
     
    anushri and singapalsmile like this.
  4. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    RM,
    Idho link
     
  5. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Neenga ennai ippo 'vera' engayo kondu poreenga..:wink::wink:
     
  6. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Bhagya,
    Welcome to the thread!! Neengalum ungalukku pidiththa 'good songs' ingu share pannunga..

    Ennoda mind voice: Namma thread la irukkara songs "good songs list" la ivanga serthukkaraanga..appadi naa ivangaloda favorite 'bad songs' evlo 'good' ah irukkum?:wink::wink:
     
    bhagya85 likes this.
  7. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    கண்களை மூடி கொண்டு இதயத்தை வயலின் என்று கற்பனை பண்ணி இந்த பாடலை கேட்டால் வயலின் மீட்டிவதை உணர முடியும்..

    YT - கதைகளை பேசும் விழி அருகே - அங்காடி தெரு

    கதைகளை பேசும் விழி அருகே
    எதை நான் பேச என்னுயிரே
    காதல் சுடுதே காய்ச்சல் வருதே

     
  8. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    உங்களது பாடல்கள் பதிவும், அதற்கு நீங்கள் பதியும் சொந்த அனுபவங்களும் படிப்பதற்கு இனிமை. தொடர்ந்து கேள்விகளும் போஸ்ட் பண்ணுங்க..அதற்கு தகுந்த பாடல்கள் பகிர்ந்து கொள்ளலாம்..

    அந்த பாடலில் SJ's குரல் தூக்கல்..
     
  9. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    WhatsApp la வந்த இந்த மெஸேஜ் படித்து நான் சிரித்தேன்..என்னமா யோசிக்கிறாங்க!!

    *Stamp Malfunction*

    The US Postal Services created a stamp with a picture of President Trump. But the new stamp was not sticking to envelopes. This enraged the President, who demanded a full investigation.
    After weeks of testing and $1.73 million in congressional spending, a special Presidential commission presented the following findings:
    The stamp is in perfect order. There is nothing wrong with the adhesive. People are spitting on the wrong side.
     
  10. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    WhatsApp la படித்து ரசித்தது..

    Best of twitter 2016:

    twitter.com/chevazhagan1:
    சின்ன வயசுல எங்க அப்பாவால வாங்கித் தர முடியாத சைக்கிளை என் மகனுக்கு வாங்கித் தரணும்னு லட்சியமா வெச்சிருந்தேன். ஆனா, அவன் பைக் கேட்கிறான்!

    twitter.com/sowmya_16:
    அஞ்சு நிமிஷம் யூஸ் பண்ற ஏடிஎம் மெஷின்ல Select Language-ல English-னு செலெக்ட் பண்ற நாமதான், `எங்கும் தமிழ்... எதிலும் தமிழ்’னு சண்டை போடுறோம்!

    twitter.com/i_Soruba:
    சாமி கும்பிடும்போது முகத்தை சீரியஸா வெச்சிக்க ட்ரை பண்ணுதுங்களே... அப்ப குழந்தைகள் அழகோ அழகு

    twitter.com/KartikThoughts:
    ராத்திரி முழுக்க புரண்டு புரண்டு படுத்தாலும் தூக்கம் வராது. ஆனா, காலையில எந்த பொசிஷன்ல படுத்தாலும் தூக்கம் வருது!

    twitter.com/VignaSuresh:
    அர்த்த ராத்திரியில் தெர்மக்கோல் நறுக்கிக்கொண்டிருக்கிறேன். பெற்றோரை டிசைன் டிசைனாக டார்ச்சர் செய்வது பற்றி சி.பி.எஸ்.சி பள்ளிகள் நன்கு அறியும்!

    twitter.com/teakkadai:
    வேறு எந்தக் கணத்தையும்விட என்னைத் தோல்வியாளனாக உணர்வது, பிள்ளைகளை அடித்து முடித்த மறுகணம்தான்!

    twitter.com/meenammakayal:
    `இல்லை’ என்பதைவிட `இருந்தது’ என்பது வலிமிக்கது!

    twitter.com/Lalithajeyanth:
    நான்: வாவ்..! Rainbow பாருடா!
    மகன்: நான் அப்பவே பார்த்துட்டேன்மா.
    நான்: ஏன்டா என்கிட்ட சொல்லலை?
    மகன்: சொன்னா, நீ rainbow-க்கு ஸ்பெல்லிங் கேப்ப.

    twitter.com/pshiva475:
    சண்டைக்கு அப்புறம் மனைவி என்ன சொல்லியும் சமாதானம் ஆகலைன்னா, உடனே சமையலறைக்குள்ள போயி, எல்லா பாட்டில்களோட மூடிகளையும் இறுக்க மூடிவிட்டுத் தூங்கிவிடுங்கள்!

    twitter.com/navi_n:
    நாம் கழுவிவைத்த பாத்திரத்தை மறுபடியும் கழுவிவிட்டு உபயோகிப்பது எல்லாம், மனைவி போகிறபோக்கில் செய்யும் அவமானம்!

    twitter.com/VignaSuresh:
    `இந்தா’ என, குழந்தை இரண்டு கைகளையும் நீட்டி தன்னையே தருகிறது!

    twitter.com/urs_priya:
    அன்னக் கரண்டியை கைபோலவே வடிவமைத்தவரின் ரசனையை எண்ணி வியக்கேன்!

    twitter.com/Lekhasri_g:
    ஒரு நாளைக்கு அஞ்சு டிரெஸ் போட, பணக்காரனாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை; குழந்தையாக இருந்தாலே போதும்!

    twitter.com/ikrthik:
    கடிகாரத்தை மட்டும், எந்த நேரத்தில் பழுதானது எனச் சரியாகச் சொல்லிவிடலாம்!

    twitter.com/Prazannaa:
    டென் எண்ணுறதுக்குள்ள பால் குடிச்சுறணும்... ஓ.கே-யா? நான் பால் குடிச்சு முடிக்கிற வரைக்கும் டென் எண்ணிட்டு இருக்கணும். ஓகே-யா? # மகளதிகாரம்!

    twitter.com/kumarfaculty:
    `ஒரு போன்கூடவா உன்னால செய்ய முடியலை’ என என்னிடம் கோபப்பட்டவரிடம் போனும் என் நம்பரும் இருந்தன!

    twitter.com/urs_priya:
    கணவனை ஒரு சின்ன வேலை செய்யவைக்க எளிய வழி... அந்த வேலையை மகளைச் செய்ய சொல்வதே

    twitter.com/iKappal:
    குழந்தையைத் தூங்கவைக்கிறது இருக்கே... கை வலிக்க அரை மணி நேரம் தொட்டிலை ஆட்டி முடிச்ச பிறகு உள்ளே பார்த்தா, `நீ யார்றா கோமாளி?’னு பார்க்கும்!

    twitter.com/Sandy_Offfl:
    டெக்னாலஜி தெரியாத பெற்றோர்களைக் கிண்டல் செய்யாதீர்கள். கீரை பேர்கூட என்ன எனத் தெரியாமல்தான் வளர்ந்து கொண்டிருக்கிறோம்

    twitter.com/mpgiri:
    எல்லாம் தெரிந்த பரமாத்மாவுக்கே தெரியாதது ஒன்று உண்டு என்றால், அது... இலையில் ஊற்றிய ரசம் எந்தப் பக்கம் செல்லும் என்பதுதான்!

    twitter.com/srivishiva:
    குழந்தையின் காய்ச்சலுக்கு, குடும்பமே துவண்டுவிடுகிறது!

    twitter.com/HaridiBaby:
    கழுதைகிட்ட 100 ரூபா நோட்டைக் கொடுத்தா, அப்படியே சாப்பிட்டுடும். அதுக்குத் தெரியாது அதுல மூணு கொயர் பேப்பர் வாங்கிச் சாப்பிடலாம்னு!

    twitter.com/Mithrasism:
    வேலை பிடிக்கலைன்னா உடனே வேலையைவிடுற தைரியம்தான்... பொருளாதாரச் சுதந்திரம்!

    twitter.com/Rama Periasamy:
    `அதை எடுத்துட்டு வா’னு அப்பா சொல்ல, `எது?’னு அம்மாவுக்கு மட்டும் புரியும் ரகசியம்தான் காதல்.

    twitter.com/manipmp:
    ஒவ்வொரு புது மொபைலுக்குப் பின்னாலும் பழைய மொபைலை வாங்கிக்கொள்ளும் மனைவி இருக்கிறாள்.

    facebook.com/aruna.raj.35:
    பொங்கல்ல போட்ட முந்திரி, நம்ம தட்டுக்கு வரவே வராது. ஆனா, பிரியாணில் போட்ட ஒரே ஒரு ஏலக்காய் எப்பவுமே நம்ம வாய்க்குள்ளதான் மாட்டும்.
     
    bhagya85 likes this.

Share This Page