1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

Poetic lines from tamil movies- please share your favorites

Discussion in 'Music and Dance' started by DDC, Aug 3, 2010.

  1. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,888
    Trophy Points:
    490
    Gender:
    Female
  2. knbg

    knbg Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    5,815
    Likes Received:
    5,614
    Trophy Points:
    455
    Gender:
    Female
    Amen to that....ரொம்பstressful நேரத்தில் எங்கிருந்தோ கேட்கும் பாடல் வரிகள் சட்டென்று பிரச்சனையின் வெப்பத்தை கொஞ்சம் தணிக்கும்..also books...
     
    kaniths likes this.
  3. knbg

    knbg Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    5,815
    Likes Received:
    5,614
    Trophy Points:
    455
    Gender:
    Female


    இன்னும் ஒரு இன்னும் பாடல்....

    BGMல் உணர்ச்சிகளை வெளிச்சம் போடும் இசை....
    தேன் குரலில் ஜொலிக்கும் வரிகள்....

    புது புது விடுகதை தொடதொட தொடர்கிறதே.....:)

    Assignment done SPS....:)
     
    subashini07, singapalsmile and jskls like this.
  4. snowyhats

    snowyhats Silver IL'ite

    Messages:
    116
    Likes Received:
    71
    Trophy Points:
    68
    Gender:
    Female
    When I heard this song for the first time I cant wait 2 put it in tis forum...So its here..I cnt put best lines only bcz I like all lines in this song by thamarai..:hearteyes::hearteyes::hearteyes:

    மறுவார்த்தை பேசாதே! மடிமீது நீ தூங்கிடு! இமைபோல நான் காக்க.. கனவாய் ...(ENPT Movie)


    மறு வார்த்தை பேசாதே!
    மடிமீது நீ தூங்கிடு!
    இமை போல நான்காக்க..
    கனவாய் நீ மாறிடு!

    மயில் தோகை போலே விரலுன்னை வருடும்!
    மனப்பாடமாய் உரையாடல் நிகழும்..

    விழிநீரும் வீணாக
    இமை தாண்டக் கூடாதென..
    துளியாக நான் சேர்த்தேன்..
    கடலாகக் கண்ணானதே..!

    மறந்தாலும் நான் உன்னை
    நினைக்காத நாளில்லையே..!
    பிரிந்தாலும் என் அன்பு..
    ஒருபோதும் பொய்யில்லையே!


    விடியாத காலைகள்..
    முடியாத மாலைகளில்..
    வடியாத வேர்வைத் துளிகள்..
    பிரியாத போர்வை நொடிகள்!
    மணி காட்டும் கடிகாரம் தரும்வாதை அறிந்தோம்..
    உடைமாற்றும் இடைவேளை அதன் பின்பே உணர்ந்தோம்!
    மறவாதே மனம்..
    மடிந்தாலும் வரும்..!
    முதல் நீ...! முடிவும் நீ...!
    அலர் நீ...! அகிலம் நீ...!

    தொலைதூரம் சென்றாலும்...
    தொடுவானம் என்றாலும் நீ...
    விழியோரம்தானே மறைந்தாய்..
    உயிரோடு முன்பே கலந்தாய் ...!
    இதழ் என்னும் மலர்கொண்டு..
    கடிதங்கள் வரைந்தாய்!
    பதில் நானும் தருமுன்பே
    கனவாகி கலைந்தாய் ..!
    பிடிவாதம் பிடி !
    சினம் தீரும் அடி!
    இழந்தோம்.. எழில் கோலம்!
    இனிமேல் மழை காலம்..!!
     
    cinderella06 and jskls like this.
  5. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    KNBG,

    நீங்கள் சொல்வதும் சரி.

    சிலருக்கு பாடல்கள்; சிலருக்கு புத்தகங்கள்; சிலருக்கு நண்பர்கள்; சிலருக்கு ஷாப்பிங்; இன்னும் சிலருக்கு திரைப்படங்கள்; சிலருக்கு கோவில்; சிலருக்கு கடற்கரையோரம்; சிலருக்கு சாப்பாடு; சிலருக்கு கவிதை..அவங்க அவங்களுக்கு எது சிறப்பாக வேலை செய்யும் என்பதை கண்டு பிடித்து கை வசம் வைத்து இருந்தால் தக்க சமயத்திற்கு உதவியா இருக்கும்.

    சினிமாவில் சொல்ற மாதிரி அரசு ஆஸ்பத்திரிக்கு போனால் வயிற்று வலி, தலை வலி, காய்ச்சல் எல்லாத்துக்கும் ஒரே மாத்திரை என்பது போல, எனக்கு உடல் நிலை சரி இல்லை என்றாலும், மன நிலை சரி என்றாலும் பாடல்கள் தான் முதன்மையான மருந்து.

    மிக்க நன்றி. IR/SPB/SJ combo la ஒரு இனிமையான பாடல் கேட்ட பிறகு இன்னும் உங்களிடம் கேள்வி கேட்கும் நிலையில் மனம் இருக்குமா என்ன? :grinning:

    நீங்களே கொஸ்டின் பேப்பர் செட் பண்ணி நீங்களே பதிலும் சொல்லிடீங்க..இந்த ஐடியாவும் ரொம்ப நல்ல இருக்கு. அடுத்த வருடம் Feb special assignment அவங்க அவங்களை கொஸ்டின் பேப்பர் செட் பண்ணி பதிலும் போட சொல்லி விடலாம். :grinning:
     
    knbg and jskls like this.
  6. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Welcome back, Snowyhats.

    நச்சுனு ஒரு ரொமான்டிக் பாடலோடு சரியான நேரத்தில் தான் இங்கு காலடி எடுத்து வைத்து இருக்கீங்க. உங்களுக்கான ragging எப்போவோ முடிந்து விட்டது. இருந்தாலும் இது ஸ்பெஷல் மாதம் என்பதால் இந்த கேள்விகள்:

    ஒரு ரொமான்டிக் பாடலை தனியாக தான் மட்டுமே கேட்டு ரசிப்பதில் சுகம் அதிகமா? ரசித்து கேட்ட பாடலை நண்பர்களும் ரசித்து கேட்பதற்காக பகிர்ந்து கொள்வதில் சுகம் அதிகமா?

    இந்த வரிகளை கேட்டவுடனே உங்களுக்கு என்ன தோன்றியது?
     
  7. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Kaniths,

    குறை ஒன்றுமில்லை படத்தை பார்க்க சொன்ன உங்களுக்கு நிறைய மஜா கிடைக்கும் என்று வாழ்த்துகிறேன். :grinning:

    இந்த படத்தில் சோசியல் மெஸேஜ் இருந்தாலும் படத்தில் எனக்கு மிகவும் பிடித்தது ரொமான்டிக் சீன்ஸ் தான். இந்த டைரக்டர் இந்த படத்தை ரொமான்டிக் படமாகவே முழுவதும் எடுத்து இருக்கலாமே என்று என்னை ஏங்க வைத்தது. :wink:

    இந்த படத்தில் ரொமான்டிக் பாடல்கள் கேட்டபோது இந்த வரிகள் எழுதியது ஒரு பெண் கவிஞராக தான் இருக்கும் என்று என் மனதிற்கு பட்டது..இணைய தளம் என் அனுமானம் சரி என்று ஊர்ஜிதப்படுத்தியது..

    இந்த படத்தில் இருந்து என்னோட விருப்ப பாடல்:

    YT - இதுயென்ன இவன் பின்னே இரு விழிகள் - குறை ஒன்றுமில்லை

    காதல் மழையில் நனையும் போது
    குடையாய் மனமே விரியாதே

    உன் சட்டையில் மாட்டிக்கொள்ள
    என் கூந்தல் கொஞ்சம் நீளுமா
     
    kaniths likes this.
  8. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
  9. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    நண்பர் ஒருத்தர் என்னுடன் பகிர்ந்து கொண்டது.. முதல் முதலில் கேட்கும்போதே சிரித்தேன், சில நிகழ்வுகளை சம்பந்தப்படுத்தி கொண்டேன், மறுபடியும் சிரித்தேன்...

    YT - Women are more intelligent - Anil Tandon
     
  10. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    என்னுடைய அனைத்து நண்பர்களுக்கும் இனிய V-day வாழ்த்துக்கள். எனது நெருங்கிய நண்பர் ஒருவர் என்னுடன் பகிர்ந்து கொண்ட இந்த மெசேஜ் என்னை ரசிக்க வைத்தது..ஆழமாக யோசிக்க வைத்தது.. ஒவ்வொரு தம்பதிகளுக்கும் காதலை வெளிப்படுத்துவதில் ஒரு தனித்துவம் இருக்கும்..வெளியே நின்று பார்ப்பவர்களுக்கு இது அபத்தமாய், பைத்தியக்காரத்தனமாய் இருக்கலாம்..யார் என்ன நினைத்தாலும் தனித்துவத்தை புரிந்து கொண்டு கொண்டாட ஆரம்பித்தால் எல்லா நாட்களும் V-day தான்..:grinning::grinning:


    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

    ஒரு பெரிய அரங்கம்

    25 வருடங்களுக்கு மேல் சேர்ந்து வாழ்ந்த தம்பதிகளில் சிறந்த தம்பதியை தேர்ந்தெடுத்து ஒரு கார் பரிசு வழங்குவது என்று ஒரு நிறுவனம் முடிவு செய்து விளம்பரம் செய்தது.

    நூற்றுக்கணக்கான தம்பதிகள் கலந்துகொண்டார்கள். அதில் ஒரு மனைவி ''அப்படி என்னத்த பெருசா வாழ்ந்து கிழிச்சிட்டோம்னு சொல்ல சொல்ல கேக்காம இந்த போட்டிக்கு கூட்டிட்டு வர்றீங்க '' என்றபடி சண்டையிட்டு கொண்டே உள்ளே வந்தார்!

    கொஞ்ச நேரத்தில் போட்டி தொடங்கியது, கணவன் மனைவியை தனித்தனியாக அழைத்து நிறைய கேள்விகள் கேட்டார்கள் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலானோர் ஓரளவுக்கு சரியான பதிலை சொன்னார்கள்.

    அதில் ஒரு தம்பதி சொன்ன பதில்கள் அரங்கத்தையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. யாரிடமும் இல்லாத அளவிற்கு அவர்களிடத்தில் அவ்வளவு ஒற்றுமையும் பரஸ்பர புரிதலும் விட்டுகொடுத்தலும் எல்லாமே நிறைந்திருந்தது. அவர்களுக்கு கிடைத்த மதிப்பெண் 100/100!

    எல்லோருக்குமே தெரிந்துவிட்டது அவர்கள் தான் ஜெயிக்கப் போகிறார்கள் என்று, எல்லோரிடமும் கேள்வி கேட்டு முடித்தபின் நூறு மதிப்பெண்கள் வாங்கிய அந்த சிறந்த தம்பதியையும், மிகக்குறைவாக பூஜ்ஜியம் மதிப்பெண் வாங்கிய ஒரு தம்பதியையும் மேடைக்கு அழைத்தார்கள்! பூஜ்ஜியம் வாங்கியது வேறுயாரும் இல்லை, வரும்போதே சண்டைபோட்டுக்கொண்டு வந்தார்களே அவர்கள் தான்.

    இரண்டு தம்பதிகளும் மேடைக்கு வந்தார்கள்.

    ஜீரோ மதிப்பெண் பெற்ற தம்பதியை அழைத்து காதல் திருமணமா என்று கேட்க, இல்லை arranged marriage என்றார்கள். எத்தனை குழந்தைகள் என்றதற்கு நான்கு என்றார்கள், திருமணம் ஆகி எவ்வளவு வருடங்கள் ஆகிறது என்றதற்கு 35 வருடங்கள் என்று சொல்ல, எல்லோரும் சிரித்துவிட்டார்கள்!

    35 வருடங்களாகியும் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளவில்லை என்று ஏளனமாய் கேலி பேசினார்கள். அவமானம் தாங்கமுடியாமல் அவர்களுக்கு அழுகை வர கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டார்கள்.

    ஆனால் போட்டியின் நடுவர் இந்த போட்டியில் கலந்துகொண்ட 500 தம்பதிகளில் மிகச்சிறந்த தம்பதி இவர்கள்தான் என்று அறிவித்து ஜீரோ மார்க் வாங்கிய தம்பதிக்கு காரை பரிசளித்தார்!

    காரணம்...
    எல்லாவித மனப்பொருத்தத்தோடும் புரிதல்களோடும் 25 வருடங்கள் வாழ்வது பெரியவிஷயம் கிடையாது, எந்த ஒரு மனஒற்றுமையும் புரிதலும் இல்லாவிட்டாலும் 35 வருடங்கள் சேர்ந்து வாழ்ந்திருக்கிறார்களே இதுதான் உண்மையிலேயே மிகப்பெரிய விஷயம் என்று பாராட்டினார்!

    இருவரும் ஆனந்தக்கண்ணீரோடு கார் சாவியை வாங்கிக்கொண்டு செல்ல எல்லோரும் எழுந்து நின்று கைதட்டினார்கள்!

    சிறிது நேரத்தில் எல்லோரும் கலைந்து செல்ல, தூரத்தில் யாரோ சண்டை போடுவது போல் சத்தம் கேட்டது, எல்லோரும் திரும்பி பார்க்க காரை சுற்றி சுற்றி வந்தபடி அந்த மனைவி: நானும் எத்தனையோ நாள் தலைபாடா அடிச்சிகிட்டேன். சும்மா இருக்கிற நேரத்துல எதாவது உருப்படியா பண்ணுங்கன்னு, டிரைவிங் கத்திருந்தாலாவது இந்நேரம் உபயோகமா இருந்திருக்கும்...உங்கள கட்டிகிட்டு என்ன சுகத்தை கண்டேன்...என திரும்ப, கணவனும் பின்னாலேயே சுற்றிவர, எதுக்கு இப்படி குட்டிபோட்ட பூனை மாதிரி பின்னாடியே சுத்தறீங்க ?! உங்களுக்கு தான் மூட்டுவலி இருக்கு இல்ல..பேசாம ஒரு இடத்துல உட்காருங்க..அப்புறம் ராத்திரிபூரா லட்சுமி லட்சுமின்னு பொலம்புவீங்க நான்தான் என்னவோ ஏதோன்னு எண்ணை தேச்சி விடனும்..எனக்குன்னு பாத்து கட்டிவச்சான் பாரு எங்கப்பன்...சீமையில இல்லாத மாப்பிள்ளைய அவன சொல்லனும்...என்றபடி காரை சுற்றி சுற்றி வர வேடிக்கை பார்த்த தம்பதிகள் புன்னகையோடு விரல் கோர்த்து நடந்தார்கள்!

    அன்பையும் காதலையும் வெளிப்படுத்த அழகான வார்த்தைகள் தான் வேண்டும் என்று யார் சொன்னது? மானங்கெட்ட கேள்வியிலும் மறைந்திருக்கும் காதல்!!

    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
     
    knbg likes this.

Share This Page