1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

Poetic lines from tamil movies- please share your favorites

Discussion in 'Music and Dance' started by DDC, Aug 3, 2010.

  1. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Yes, loop worthy song. One of my all-time favorite melodies.
     
    jskls likes this.
  2. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Pavithra,

    நீங்க ஒரு செம critic.
    அது எப்படிங்க ஆங்கில கலப்படம் இன்றி இப்படி தூய தமிழில் போஸ்ட் பண்றீங்க? இப்படி அக்மார்க் தமிழில் தான் பேசுவீங்களா?

    எனக்கு தெரிந்து திரைப்பட துறையை சார்ந்த இரண்டு நபர்கள் இந்த வகையில் சேர்வார்கள் - வைரமுத்து (உரையாடல்), தாமரை (தமிழ் திரை பாடல்கள்)

    ஏனோ வைரமுத்துவை விவேக் கிண்டல் பண்ண இந்த உரையாடல் எனது நினைவிற்கு வருகிறது..

    YT - Vivek - Vairamuthu spoof
     
  3. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    நீங்க அவங்க கவிதைகளை வாசித்து பாருங்கள்.
     
    knbg and kaniths like this.
  4. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    MSV இசையில் SJ தேன் குரலில் பாடிய இந்த பாடலின் மீது ஒரு காலத்தில் நான் பைத்தியமாக இருந்து இருக்கிறேன்..இந்த பாடலை இன்று கேட்டாலும் காதில் இன்ப தேன் வந்து பாயும்..

    YT - ஊரு சனம் தூங்கிருச்சு - மெல்ல திறந்தது கதவு
     
    knbg and kaniths like this.
  5. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    தூய தமிழ் கவிதைகள் படித்து புரிந்து கொள்ளும் அளவிற்கு எனக்கு புலமை கிடையாது..நான் ஒரு அரை குறை..வாய் கிழிய பேசி சமாளிக்க தெரியும் ஆனா உண்மையில் எனக்கு எந்த மொழியும் 100% சரியா வராது..

    அது மட்டும் அல்ல..தமிழ் கவிதை தளம் வந்தால் ஒரு காலத்தில் IL நண்பர்களுடன் அடித்த அநியாயமான/அராஜகமான லூட்டிகள் நினைவிற்கு வந்து என்னை கொல்லும். எனது வாழ் நாளில் மறக்கவே முடியாத கலக்கல் நாட்கள் அவை. புது நினைவுகளை தேடி போகாமல் சில சுகமான நினைவுகளை அப்படியே விட்டு விடுவது நல்லது. அனைத்து கவிதை தளத்து நண்பர்களையும் நான் மிஸ் பண்றேன்.

    கவிதை தளத்தில் என்னோடு one and only partner-in-crime, Ramyaraja.

    @ramyaraja - இந்த போஸ்ட் நீங்க படிப்பீங்களா னு தெரியாது..படித்தால் இங்கு வந்து ஒரு ரொமான்டிக் கிறுக்கல் போஸ்ட் பண்ணும்படி கேட்டுக் கொள்கிறேன்..கண்டிப்பாக நான் அதற்கு எசப்பாட்டு கவிதை கிறுக்குகிறேன்..
     
    knbg, cinderella06 and jskls like this.
  6. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    இதை படித்தவுடன் கல்லூரி காலத்தில் படித்து கொண்டிருக்கும் போது முதல் முதலாக வந்த கம்பெனி நேர்காணல் நடந்த போது "weakness" என்ன? என்ற கேள்விக்கு "over-confidence" என்று திமிராக பதில் அளித்து வேலை வாங்கிய அந்த கல்லூரி மாணவி நினைவில் வந்து நிற்கிறாள் :smiley::smiley:

    Source: WhatsApp
    Credit: Friend

    One night President Obama and his wife Michelle decided to
    do something out of routine and go for a casual dinner at a
    restaurant that wasn’t too luxurious.
    When they were seated, the owner of the restaurant asked
    the President’s secret service if he could please speak to
    the First Lady in private.
    They obliged and Michelle had a conversation with the
    owner.
    After the conversation President Obama asked Michelle,
    “Why was he so interested in talking to you?"
    She mentioned that in her teenage years, he had been madly
    in love with her.
    President Obama then said, “So if you had married him, you
    would now be the owner of this lovely restaurant?"
    Michelle responded, “No, if I had married him, he would now
    be the President.”
    A WOMAN's CONFIDENCE NEVER COMES IN BITS &
    PIECES.
     
  7. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    என் படைப்புகளின் மீதான உங்கள் பார்வைக்கும்,அன்பிற்கும் நன்றி என் தோழியே !:)
    செந்தமிழும் நாப்பழக்கம் !:)
    அப்படியெல்லாம் ஒன்றுமில்லை,கூடியவரையில் தமிழ்த் திரிகளில் ஆங்கிலக் கலப்பின்றி எழுத வேண்டுமென எண்ணுவேன்,அவ்வளவே !
    அவ்வப்போது நடிகர் கமலஹாசன் தூய தமிழில் பேசுகிறேன் என்ற பெயரில் அவர் என்ன பேசுகிறார் என்பதைப் பிறர் புரிந்து கொள்ள முடியாமல் போகுமளவிற்குக் குழப்புவார் அல்லவா ? அதில் என்ன பயன் ?

    தூய தமிழில் உரையாடினால் இப்போதெல்லாம் சற்று விசித்திரமாக அவர்களை நோக்கும் காலகட்டம், அல்லவா ? ஆயினும் எழுத்து வழி மொழியாடலில் தூயதமிழ்ச் சொல்லாடல்கள் அப்படியொரு கோணத்தில் எடுத்துக்கொள்ளப் படுவதில்லையென்பது ஆறுதல்.

    மேலும் அது சற்றே மேம்பட்டதொரு இரசனையைப் பறைசாற்றுவதாக எண்ணுகிறேன்,ஆகையால் அவ்வாறு எழுத விழைகிறேன். மற்றபடி ஆங்கிலம் கலந்தும்,வட்டார மொழியாகவும்,எனது வீட்டில் பயனுறுத்தும் வகையிலும் வேற்றுமொழிக் கலப்போடும்- இவ்வாறெல்லாம் தான் பேசுவேன். எழுத்தை நான் ஓர் தவமாகப் பார்க்கிறேன். அதனாலோ என்னவோ என்னையறியாமல் அவ்வமயங்களில் எனக்கு ஏதோ தெரிந்த இலக்கணம் வழுவாமல் பார்த்துக்கொள்ள விரும்புகிறேன்.

    ஆம்! நான் சற்றே கடினமான விமர்சகர் ! அவ்வாறு செய்வது சிற்சில போழ்து அடுத்தவரைக் காயப்படுத்தும் என்பதால் அப்பழக்கத்தைக் குறைத்துக் கொள்ளப் பழகி வருகிறேன்.:)
     
  8. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Pavithra,

    உங்களது தமிழ் எழுத்து பணி தொடர வாழ்த்துக்கள்.

    உலகநாயகன் பற்றி நீங்கள் குறிப்பிட்டது முற்றிலும் உண்மை. கவுதமி பிரிந்த பிறகு கமலின் பாணியில் யாரோ கவிதை கிறுக்கி அது whatsapp ல உலவி கொண்டிருந்தது..அதை படித்து எனது நண்பர் ஒருவர் சொன்ன கமெண்ட் - "என்னோட தாய் மொழி தமிழ். எனக்கே இந்த கவிதை சுத்தமா புரியல. அந்தம்மா தெலுங்கு வேற. ஒன்னும் புரிஞ்சிருக்காது. புரியாம 13 வருடங்கள் இவரோட வாழ்ந்தது போதும் டா என்று நொந்து நூடுல்ஸ் ஆகி ஒரேடியா விலகிட்டாங்க.."
     
  9. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    JSKLS போன வாரம் போஸ்ட் பண்ண SJ's "ராசாவே உன்ன நம்பி" பாடல் கேட்டதில் இருந்து நான் SJ's பாடல்களை தேடி பிடித்து கேட்டு கொண்டிருக்கிறேன்..அந்த வரிசையில் SJ's தேன் குரலில் இன்று இந்த பாடல்:

    YT - நாதம் என் ஜீவனே - காதல் ஓவியம்
     
    jskls likes this.
  10. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்.. இந்த வீடியோ கேட்டு நான் 2 நிமிடங்கள் சிந்திக்காம வாய் விட்டு சிரித்துக் கொண்டே இருந்தேன்..

    YT - லியோனி பட்டிமன்றம் - சின்ன சாமி
     

Share This Page