1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

Poetic lines from tamil movies- please share your favorites

Discussion in 'Music and Dance' started by DDC, Aug 3, 2010.

  1. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    இந்த பாடல் முழுதும் காதல் ரசம் சொட்டு சொட்டாக சொட்டும்..ரசித்து கேட்கும்போது கண்டிப்பாக மனதில் காதல் துளிர் விடும்..

    அனைத்து வரிகளும் கவிதை..

    YT - முத்தமிழே முத்தமிழே - ராமன் அப்துல்லா - IR/SPB/KS Chitra/Arivumathi
     
    jskls likes this.
  2. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    இந்த பாடலில் இசையும் சரி பாடிய விதமும் சரி என்னை எங்கோ இழுத்து செல்லும்..இந்த பாடலை கேட்ட பிறகு நான் நிதானத்திற்கு வருவதற்கு சில மணி நேரங்கள் ஆகும் என்று சொன்னால் மிகை ஆகாது..

    YT - மஹராஜனோடு ராணி - சதி லீலாவதி - IR/UnniK/KS Chitra/Balu Mahendra

    கண்ணில் என்ன வண்ணங்கள்
    சின்னச் சின்ன மின்னல்கள்
    ஓர் காதல் பூத்ததோ
     
    knbg, kaniths and jskls like this.
  3. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    இந்த பாடல் இன்று கேட்டேன்
    ராசாவே உன்ன நம்பி
    பிடித்த வரிகள்

    பருவம் தெரியாம மழையும் பெய்ஞ்சாச்சு
    விவரம் புரியாம மனசும் நனைந்சாச்ச
    உனக்கு வச்சிருக்கேன் மூச்சு ....
     
    PavithraS and kaniths like this.
  4. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    இனிய தைப்பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் ! ஜல்லிக்கட்டைப் பற்றி எண்ணிக் கொண்டிருந்ததில் இந்தப்பாடலைக் கேட்க வேண்டும் போலிருந்தது. பாசம் திரைப்படத்திற்காக எம்.எஸ்.வி இசையில் கண்ணதாசன் வரிகளுக்கு எஸ்.ஜானகி குரல்,சரோஜா தேவி நடிப்பு.

    அவன் தான் திருடன் என்றிருந்தேன்
    அவனை நானும் திருடி விட்டேன்
    முதல் முதல் திருடும் காரணத்தால்
    முழுசாய்த் திருட மறந்து விட்டேன்
     
    jskls likes this.
  5. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    மேற்கொண்டு இந்தப்பாடலையும் கேட்டேன்... கோயில்புறா படத்திற்கு இளையராஜா இசையில் கவிஞர்
    புலமைப்பித்தனின் அருமையான வரிகள்...

    தமிழிசையே தனியிசையே
    தரணியிலே முதலிசையே
    ஊன் மெழுகாய் உருகும் கரையும்
    அதில் உலகம் மறந்து போகும்....
    என் கனவும் நினைவும் இசையே
    இசையிருந்தால் மரணமேது
     
    jskls likes this.
  6. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    இன்று தேடி பிடித்து தற்போது கேட்டு கொண்டிருக்கும் ரம்மியமான ஒரு பாடல்:

    YT - கூட மேல கூட வச்சு - ரம்மி

    சாதத்துள்ள கல்லு போல
    நெஞ்சுக்குள்ள நீ இருந்து
    சரிக்காம சதி பண்ணுற

    சீயக்காயை போல கண்ணில்
    சிக்கிக்கிட்ட போதும் கூட
    உறுத்தாம உயிர் கொல்லுற
     
    jskls likes this.
  7. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Oh my favorite one. Once I heard this same song non-stop for 2 hrs
     
  8. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    இன்று படித்து ரசித்தது..சிலவற்றை படித்து வாய் விட்டு சிரித்தேன்..எவ்ளோ யதார்த்தமாக இருக்கிறது..
    உண்மையும் கூட..

    Source: WhatsApp
    Credit: Friend

    "என்னைத் தவிர யாரைக் கட்டியிருந்தாலும்
    குடும்பம் நடத்தியிருக்க முடியாது'' எல்லா
    புருஷன் பொண்டாட்டிக்கும்
    இருக்கும் ஒன்றுபட்ட எண்ணம் இதுவே ...

    ஆஸ்பத்திரியில் நலம் விசாரிப்பதற்கு
    நாலு நல்ல வார்த்தைகளை விட ...
    நாலு நல்ல ஆப்பிள்களே போதுமானதாய்
    இருக்கிறது ...

    காலையில எழுந்ததும்
    Whatsapp ஓபன் பன்ற மாறி
    சின்னபுள்ளையில
    பாட புத்தகத்த
    ஓபன் பன்னிருந்தா
    உருப்பட்டுருப்பன்.

    ஓட்டலில் சர்வர் என்ன சாப்புடுறீங்கன்னு
    கேட்டாலே ஒழுங்கா பதில்
    சொல்லத் தெரியல ....
    இதுல கடவுள் வந்து என்ன வரம் வேணும்னு
    கேட்டா... எப்படி சொல்லுவது ?

    ஊருக்கே குறி சொல்லும் பூசாரி ,
    ATM வாசல நின்னு...
    பணம் இருக்கானு இன்னொருத்தன்ட
    கேட்கிறான்...

    பந்தி பரிமாறுபவர்
    நமக்கு நன்கு தெரிந்தவராயின்
    மனதிற்குள் வரும் சந்தோசம் சுகமானது ...

    பொண்டாட்டியை
    சமாதானப்படுத்த வீட்ல பீரோவில் கிடக்கும்
    சேலையையே பேக் பண்ணி கிப்டா
    கொடுத்துரனும்...
    கண்டிப்பா தெரியாது ...
    பீரோ பூரா அவ்ளோ சேலை ...

    பேருந்தில் ஏறி அமர்ந்தவுடனே தூங்கிவிடுவது
    வரம் ....
    அவ்வரம் பெற்றவர் நம் அருகில்
    அமர்ந்திருப்பது சாபம் ...

    ஒரு பெண் , ஒரு நிமிடத்தில் சேலை
    செலக்ட் செய்கிறாள் என்றால்,
    அந்த சேலை வேறு யாருக்கோ என்று அர்த்தம் ....

    அம்மா இலவசமா கொடுத்த
    ஆடு மாடு மட்டும்தான் இன்னும்
    அம்மானு கத்திகிட்டு இருக்கு மீதி இருக்க
    எல்லா பயலுகளும் சின்னம்மானுதான்
    கத்துதுங்க...

    முன்பு
    ஆண்களுக்கு குட்டிச்சுவர் ,
    டீக்கடை பெஞ்ச் ,
    பெண்களுக்கு
    வீட்டுத் திண்ணை ,
    குழாயடி,
    இப்போ ...
    எல்லோருக்குமா
    இப்போ வாட்ஸப் ஆயிடுச்சு

    200 ரூபாய் வாங்கி ஓட்டு போட்ட
    உங்களுக்கு
    சின்னம்மா CM மா வராமல்
    அன்னை தெரசா வா CM மா
    வருவார்கள்...
     
    PavithraS and kaniths like this.
  9. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    இந்த தமிழ் "Palindrome" பாடல் WhatsApp ல சுற்றி கொண்டிருக்கிறது..இதை எழுதிய மதன் கார்க்கி க்கு பாராட்டுக்கள்..இந்த கடினமான பாடலுக்கு இசை அமைத்து இனிமையான ரொமான்டிக் பாடலாக தந்த இமானுக்கு பாராட்டுக்கள்..

    தமிழ் மொழியின் மேல் காதல் இன்னும் கன்னா பின்னா வென்று எகிறுகிறது..

    YT - மேக ராகமே - 'Palindrome' தமிழ் பாடல் - "விநோதன்" படத்தில் இருந்து

    YT - மதன் கார்க்கி on Palindrome tamil song

    The Hindu - A palindrome song in Tamil
     
    jskls and PavithraS like this.
  10. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    கேட்டேன் பாடலை. பகிர்வுக்கு நன்றி ! சிறுவயதில் இந்தப் பின்பிச் சொற்களை கட்டத்தில் அமைத்துக் குறுக்கெழுத்துப் புதிர் போல விளையாட என் தந்தைச் சொல்லித் தந்தது நினைவில் நிழலாடுகிறது. அதையே பாடல் முழுதும் செய்ய எண்ணிய வித்தியாசமான முயற்சிக்காக மதன் கார்க்கியைப் பாராட்ட வேண்டும். ஆயினும் மனசுழற்சிக்கு ஆட்பட்ட கதாநாயகனின் சமச்சீர் இயல்பினைப் படம் பிடிக்க வேண்டிய கோணத்தில், பின்பிச் சொற்களாக வர வேண்டும் என்பதற்காகவே வலுவிலே திணித்த வார்த்தைகளாகவேப் பட்டது. தமிழில் என்னவெல்லாம் செய்யலாம் பாருங்கள் என்று ஒரு தியானம் போலவே எழுதிச் சாதித்திருக்கும் கவிஞனை மெச்சும் அதே நேரத்தில் அவ்வளவு அழகோ,பொருளோ இல்லாதது போலவேத் தோன்றுகின்றது .... கதைக்குத் தேவைப்படும் பாடல் ஆகவே கட்டாயம் வரவேற்கலாம்.
     
    singapalsmile likes this.

Share This Page