Paruppu Thengai

Discussion in 'Festivals, Functions & Rituals' started by Ushakrishnan64, Oct 25, 2006.

  1. usha v

    usha v New IL'ite

    Messages:
    3
    Likes Received:
    0
    Trophy Points:
    1
    Gender:
    Female
    hello IL
    i would like to know whether paruppu thengai can be made out of vella seedai?
    If yes, then recipe pls.
    with regards,
    usha
     
  2. swamy24598

    swamy24598 New IL'ite

    Messages:
    1,389
    Likes Received:
    377
    Trophy Points:
    0
    Gender:
    Male
    Paruppu thengai

    தேவையானவை:

    அரிசி மாவு - கால் கிலோ,
    பாகு வெல்லம் - கால் கிலோ,
    வறுத்து, அரைத்து, சலித்த உளுத்தம்பருப்பு மாவு - 2 டீஸ்பூன்,
    எண்ணெய் - அரை லிட்டர்,
    ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.

    செய்முறை:

    அரிசி மாவில் முறுக்குமாவு பதத்துக்கு தேவையான தண்ணீர் விட்டு, உளுந்தமாவு சேர்த்துப் பிசைந்து முறுக்கு அச்சில் போட்டு, காயும் எண்ணெயில் பிழிந்து எடுத்து வைத்துக் கொள்ளவும். இதுதான் மனோகரம். வெல்லத்தை உடைத்து, தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து வடிகட்டி, கெட்டிப் பாகாக காய்ச்சவும். (ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் விட்டு வெல்லப்பாகை சிறிது ஊற்றி கையில் திரட்டினால்... உருண்டு வரும். இதுதான் சரியான பதம்). பாகை ஒரு அகலமான பாத்திரத்தில் ஊற்றி, செய்து வைத்திருக்கும் மனோகரத்தை சிறு துண்டுகளாக உடைத்துப் போட்டு, ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கலக்கவும். பின்னர், இதற்கென பிரத்யேகமாக இருக்கும் பருப்பு தேங்காய் கூட்டில் உள்புறம் சிறிது நெய் தடவி மனோகரத்தை நிரப்பவும். பிறகு, கூட்டை அகற்றினால், கூம்பு வடிவில் அழகாக இருக்கும் மனோகர பருப்பு தேங்காய்.

    குறிப்பு:

    பருப்பு தேங்காய் கூட்டினை கலர் பேப்பரால் அலங்கரித்தால் மிகவும் அழகாக இருக்கும். கூட்டின் உள்புறம் நெய் தடவி இருப்பதால் எளிதாக எடுக்க முடியும். உப்பு சேர்க்க வேண்டாம். பெயர்தான் பருப்பு தேங்காய்... ஆனால், தேங்காய் சேர்க்கத் தேவையில்லை.
     

Share This Page