Oh, It Is Margazhi And Time For Thiruppavai!

Discussion in 'Religious places & Spiritual people' started by suryakala, Dec 16, 2018.

  1. suryakala

    suryakala IL Hall of Fame

    Messages:
    8,638
    Likes Received:
    10,880
    Trophy Points:
    470
    Gender:
    Female
    VENKATESAA.jpg

    மார்கழி மாதம்-15ம் நாள். ஞாயிற்றுக்கிழமை.

    திருப்பாவை- பாசுரம் 15

    எல்லே இளங்கிளியே! இன்னும் உறங்குதியோ!
    சில்லென்று அழையேன்மின் நங்கைமீர்! போதருகின்றேன்
    வல்லையுன் உன் கட்டுரைகள் பண்டேயுன் வாயறிதும்
    வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக
    ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை
    எல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்து எண்ணிக்கொள்
    வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
    வல்லானை மாயனைப் பாடலோர் எம்பாவாய்.

    Ragam, Thalam.
    Bagada- Misrachapu.

    பொருள்:

    ""ஏலே என் தோழியே! இளமைக் கிளியே! நாங்களெல்லாம் உனக்காக இவ்வளவு நேரம் காத்திருந்தும், இப்படியெல்லாம் அழைத்தும் உறங்குகிறாயே? என்று சற்று கடுமையாகவே தோழிகள் அவளை அழைத்தனர். அப்போது அந்த தோழி, ""கோபத்துடன் என்னை அழைக்காதீர்கள்! இதோ வந்து விடுகிறேன், என்கிறாள்.

    உடனே தோழிகள், ""உன்னுடைய வார்த்தைகள் மிக நன்றாக இருக்கிறது. இவ்வளவு நேரம் தூங்கிவிட்டு இப்போது எங்களிடம் கோபிக்காதே என்கிறாயே, என்று சிடுசிடுத்தனர்.அப்போது அவள், ""சரி..சரி...எனக்கு பேசத்தெரியவில்லை. நீங்களே பேச்சில் திறமைசாலிகளாய் இருங்கள். நான் ஏமாற்றுக்காரியாக இருந்து விட்டுப் போகிறேன், என்கிறாள்.""அடியே! நாங்களெல்லாம் முன்னமே எழுந்து வர வேண்டும். உனக்காக காத்திருக்க வேண்டும். அப்படியென்ன எங்களிடமில்லாத சிறப்பு உனக்கு இருக்கிறது? என்று கடிந்து கொள்கிறார்கள். அவளும் சண்டைக்காரி. பேச்சை விட மறுக்கிறாள். ""என்னவோ நான் மட்டும் எழாதது போல் பேசுகிறீர்களே! எல்லாரும் வந்துவிட்டார்களா? என்கிறாள்.தோழிகள் அவளிடம், ""நீயே வெளியே வந்து இங்கிருப்போரை எண்ணிப் பார். வலிமை பொருந்திய குவலயாபீடம் என்னும் யானையை அழித்தவனும், எதிரிகளை வேட்டையாடும் திறம் கொண்டவனுமான மாயக்கண்ணனை வணங்கி மகிழ உடனே வருவாய், என்கிறார்கள்.

    விளக்கம்:

    ஒரு பாடலை இருதரப்பார் பாடுவது போல், அவர்களின் பெயரைக் குறிப்பிடாமலே இனிமைபட பாடியிருக்கிறாள் ஆண்டாள். இந்தப் பாடலில் ஒரு பெண்ணை மற்ற பெண்கள் கலாய்க்கும் படியான ஒரு சூழலை நகைச்சுவை ததும்ப பாடியிருக்கிறாள். படிக்கப்படிக்க சர்க்கரைத் துண்டாய் இனிக்கும் பாடல் இது. இந்தப் பாட்டுடன் தோழியை எழுப்பும் படலம் முடிந்து விடுகிறது.

    அடியார்கள் எல்லோரும் ஒன்றுசேர்ந்திருக்கும் கூட்டத்தைக் காணவேண்டும் என்று ஆசைப்படுகிறவள் ஓர் ஆயர்மகள். அப்படிப்பட்டவளை இப் பாசுரத்தில் எழுப்புகிறார்கள் தோழியர்கள். ஏனைய பாசுரங்கள் போல் இல்லாமல் இந்தப் பாசுரம் உரையாடல் நடையில் அமைந்துள்ளது.
    தோழியர்கள் இவளுடைய வீட்டுக்கு வரும்போது, இவள் இனிய குரலில் கண்ணனைப் பாடிக்கொண்டிருப்பதைக் கண்டார்கள். வந்தவர்கள் வந்த நோக்கத்தை மறந்து இவளுடைய அழகிலும் இசையிலும் மனதைப் பறிகொடுத்து, "எல்லே இளங்கிளியே!' என்று புகழ்ந்து பாடிக்கொண்டிருக்கும் வேளையில், தோழியர் எழுப்புவது தன் செயலுக்கு இடையூறு என்று நினைத்த அப்பெண் "சில்' என்று அழைக்காதீர்கள்! நங்கைமீர்! இதோ வந்துகொண்டிருக்கிறேன் என்று சினத்துடன் பதில் கூறினாள்.

    இவள் கூறியதைக் கேட்ட தோழியர், "நீ இவ்வாறு கடுமையாகப் பேசுவாய் என்பது எங்களுக்கு வெகுநாள்களாகவே தெரியும்' என்றார்கள். கடுமையாகப் பேசுவதில் நீங்களே வல்லவர்கள் என்று மிகக் கடுமையாகச் சொன்ன ஆயர்மகள், அடியார்களோடு வாதிடக்கூடாது என்று கூறப்படுவதால் கடுமையைக் குறைத்துக்கொண்டு, "நானே பேச்சில் வல்லவளாக இருந்துவிட்டுப் போகிறேன்' என்று கூறி அடங்கிவிட்டாள். அப்படியாகில் "எங்களோடு சேர்வதைவிட நீ என்ன பெரிய வாய்ப்பை எதிர்பார்க்கிறாய்! விரைவாக வந்துசேர்' என்றார்கள் தோழியர்கள். எல்லாரும் வந்தனரா? என்றாள் படுத்திருப்பவள்.

    வந்துவிட்டனர் நீ வந்து ஒவ்வொருவராக எண்ணிப் பார்த்துக்கொள்! வலிமை மிக்க குவலயாபீடம் என்கிற யானையை அழித்தவனும், பகைவர்களின் பகையை நீக்கவல்லவனும் முதலில் கோபியர்களுக்குத் தோற்று, பிறகு அவர்களைத் தோற்கடிப்பவனுமாகிய மாயனைப் பாட எழுந்துவாராய் என்று அழைக்கிறார்கள்.

    “Hey, little bird, Are you still sleeping? ” “Don’t disturb my sleep , Lasses, I will just come”. “You are good in your speech, We know what you mean.” “You be good, but leave me alone” “Come quickly, why is it different for you?” “Have every one gone?” “Gone, think they have gone” “Please wake up and sing, Of he who killed the big elephant , Of him who can remove enmity from enemies, And of him who is the holy enchanter, And worship our Goddess Pavai.”.
     
    ChandrikaV likes this.
  2. suryakala

    suryakala IL Hall of Fame

    Messages:
    8,638
    Likes Received:
    10,880
    Trophy Points:
    470
    Gender:
    Female
    VISHNU FACE.jpg


    மார்கழி 16ம் நாள்.திங்கள்கிழமை.
    திருப்பாவை- பாசுரம்- 16.

    நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய
    கோயில் காப்பானே! கொடித்தோன்றும் தோரண
    வாயில் காப்பானே! மணிக்கதவம் தாள்திறவாய்
    ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை
    மாயன் மணிவண்ணன் நென்னனலே வாய்நேர்ந்தான்
    தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்
    வாயால் முன்னமுன்னம் மாற்றாதே யம்மா! நீ
    நேய நிலைக்கதவம் நீக்கலோர் எம்பாவாய்.

    ராகம் தாளம்:
    Mohanam, Adi.

    பொருள்:

    எங்களுடைய தலைவனாய் இருக்கிற நந்தகோபனின் திருமாளிகையை பாதுகாக்கும் காவலனே! கொடித் தோரணம் கட்டப்பட்ட வாசல் காவலனே! ஆயர்குல சிறுமியரான எங்களுக்காக இந்த மாளிகைக் கதவைத் திறப்பாயாக. மாயச்செயல்கள் செய்பவனும், கரிய நிறத்தவனுமான கண்ணன் எங்களுக்கு ஒலியெழுப்பும் பறை (சிறு முரசு) தருவதாக நேற்றே சொல்லியிருக்கிறான். அதனைப் பெற்றுச்செல்ல நாங்கள் நீராடி வந்திருக்கிறோம். அவனைத் துயிலெழுப்பும் பாடல்களையும் பாட உள்ளோம். "அதெல்லாம் முடியாது என உன் வாயால் முதலிலேயே சொல்லி விடாதே. மூடியுள்ள இந்த நிலைக்கதவை எங்களுக்கு திறப்பாயாக.

    விளக்கம்:

    ஒருவர் ஒரு செயலைச் செய்யப் போவதாக தெரிந்த ஒருவரிடம் சொல்கிறார். ஒருவேளை, அது அவருக்கு பிடிக்காமல் இருந்தாலும் கூட, ஆரம்பத்திலேயே, ""இதைச் செய்யாதே, நீ செய்யப் போவது உருப்படவா போகுது போன்ற அபசகுனமான வார்த்தைகளை பேசிவிடக்கூடாது. "அப்படியா? என்று ஆரம்பித்து, செய்யப்போகும் பணியைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொண்டு, அதன் பின், "இப்படி செய்தால் நன்றாக இருக்குமே என்று சாந்தமாக அறிவுரை சொல்லலாம். சொற்கள் மனித வாழ்வில் மிக முக்கியமானவை என்று ஆண்டாள் இப்பாடல் மூலம் நமக்கு அறிவுறுத்துகிறாள்.

    கோபியர்கள் எல்லோருமாகச் சேர்ந்து, கண்ணனை எழுப்புவதற்காக ஸ்ரீநந்தகோபரின் மாளிகைக்குச் செல்கிறார்கள். அங்கு சென்று கோயில் காப்பானையும், வாயில் காப்பானையும் எழுப்புகிறார்கள். இறைவன் இருப்பிடம் கோயில். எங்களுக்கு நாயகனாய் இருக்கும் நந்தகோபருடைய கோயிலைக் காப்பவனே! எழுந்திராய்! என்று எழுப்பி உள்ளே செல்கிறார்கள். கொடிகள் கட்டியிருக்கும் வாயில் காப்பானே! நவரத்தினமணிகளால் இழைக்கப்பட்ட கதவின் தாழ்ப்பாளைத் திறந்து எங்களை உள்ளே விடு. நாங்கள் எல்லோரும் ஆயர்சிறுமியர்கள்! எங்களுடைய நோன்புக்குரிய பறையை நேற்றே கொடுப்பதாகக் கண்ணன் கூறியிருக்கிறான். நாங்கள் அகத்தூய்மை, புறத்தூய்மையுடன் வந்திருக்கிறோம். திருப்பள்ளியெழுச்சி பாட வந்திருக்கிறோம். முதன் முதலில், நாங்கள் விரும்பும் கோரிக்கையை மறுத்துவிடாதே! ஒன்றோடொன்று பிணைந்திருக்கும் கதவுகளை நீ திறப்பாயாக! என்கிறார்கள். கோயிலுக்குப் போகும்போது ஒருவரை தடுக்கக்கூடாது.

    Hey, He who guards the palace of Nanda Gopa, hey, who guards the ornamental door with flags, Please be kind to open the door with bells, For yesterday the enchanter Kannan, Has promised to give beating drums, To us the girls from the houses of cow herds. We have come after purification, To wake Him up with song, So do not talk of this and that, Hey dear man, And open the door with closed latches, So that we can worship our Goddess Pavai.
     
    ChandrikaV likes this.
  3. suryakala

    suryakala IL Hall of Fame

    Messages:
    8,638
    Likes Received:
    10,880
    Trophy Points:
    470
    Gender:
    Female
    PIC4.jpg
    PIC12 ANDAL.jpg

    Happy New Year 2019 to you and your families!

    மார்கழி மாதம் 17ம் நாள்.
    திருப்பாவை- பாசுரம் 17.

    அம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும்
    எம்பெருமான் நந்தகோபாலா! எழுந்திராய்
    கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே! குலவிளக்கே!
    எம்பெருமாட்டி யசோதாய்! அறிவுறாய்!
    அம்பரம் ஊடறுத்து ஓங்கி உலகளந்த
    உம்பர்கோமானே! உறங்காது எழுந்திராய்
    செம்பொற் கழலடிச் செல்வா! பலதேவா!
    உம்பியும் நீயும் உறங்கலோர் எம்பாவாய்.

    ராகம், தாளம்:
    Kalyani, Khandachapu.

    பொருள்:

    ஆடைகளையும், குளிர்ந்த நீரையும், உணவும் பிறர் திருப்திப்படும் அளவுக்கு தர்மம் செய்யும் எங்கள் தலைவரான நந்தகோபரே! தாங்கள் எழுந்தருள வேண்டும். கொடிபோன்ற இடைகளையுடைய பெண்களுக்கு எல்லாம் தலைவியான இளகிய மனம் கொண்ட யசோதையே! மங்களகரமான தீபம் போன்ற முகத்துடன் பிரகாசிப்பவளே! நீ எழ வேண்டும். விண்ணையே கிழித்து உன் திருவடிகளால் உலகளந்த தேவர்களின் தலைவனான எங்கள் கண்ணனே! நீ கண் விழிக்க வேண்டும். செம்பொன்னால் செய்த சிலம்புகளை அணிந்த செல்வத்திருமகனான பலராமனே! நீயும், உன் தம்பியும் உறக்கத்தில் இருந்து எழுந்து எங்களுக்கு தரிசனம் தர வேண்டும்.

    விளக்கம்:

    திருப்பாவையில் வாமன அவதாரத்தைச் சிறப்பாக பாடுகிறாள் ஆண்டாள். மூன்று பாசுரங்களில் இந்த அவதாரத்தை அவள் சிறப்பித்திருக்கிறாள். "ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி என்று மூன்றாவது பாடலிலும், இந்தப் பாடலிலும், 24வது பாடலில் அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி என்றும் சொல்கிறாள். அசுரனாயினும் நல்லவனான மகாபலி, தேவர்களை அடக்கி கர்வம் கொண்டிருந்தான். இந்த கர்வம் அடங்கினால் இறைவனை அடைவது உறுதி என்பதாலேயே நாராயணன் வாமனனாக வந்து அவனை ஆட்கொண்டார். திருப்பாவை பாடுபவர்கள் "தான் என்ற கர்வத்தை அடக்க வேண்டும் என்பது இப்பாடல் உணர்த்தும் கருத்து.

    நந்தகோபரின் மாளிகை நான்கு அறைகளாக அமைந்திருக்கிறது. அதில் முதற் கட்டில் படுத்திருக்கும் நந்தகோபரை, உடை, தண்ணீர், உணவு ஆகியவற்றை எல்லோருக்கும் வாரிவழங்கும் வள்ளலே! எழுந்திரு! என்று எழுப்பினர். அடுத்த அறைக்குச் சென்று, பெண்கள் குலத்துக்கே கொழுந்து போன்றவளே! குலவிளக்கே! எங்கள் தலைவியே எழுந்திரு! என்று யசோதையை எழுப்பினர். ஒரு சமயம் வாமன அவதாரம் எடுத்து, மகாபலி சக்கரவர்த்தியிடம் சென்று, மூவடி மண்கேட்டு, பெரிய உருவங்கொண்டு மூன்று அடிகளால் எல்லா உலகங்களையும் திருவடியால் அளந்துகொண்ட தேவாதி தேவனே! உறங்காதே எழுந்திரு என்று எழுப்பி, அடுத்த அறைக்குச் சென்றனர். செம்பொன்னால் செய்யப்பட்ட வீரக்கழல் அணிந்த செல்வனே! பலராமனே! நீயும் உன் தம்பியான கண்ணனும் உறங்காதே எழுந்திருங்கள் என்கின்றனர். இந்தப் பாசுரம் ஸ்ரீநந்தகோபர், யசோதை, கண்ணன், பலராமன் ஆகிய நால்வரையும், எழுப்புவதாகும்.

    முதல் இரண்டடிகள் நந்தகோபரைச் சொல்வதாக இருந்தாலும் ஆசார்யரைக் குறிக்கிறது. மூன்றாவது நான்காவது அடிகள் யசோதையைக் குறித்தாலும், "மந்த்ரோ மாதா' என்றபடி ஆசார்யன் உபதேசிக்கும் அஷ்டாக்ஷர திருமந்திரத்தைக் குறிப்பிடுகிறது. ஐந்து, ஆறாவது அடிகள் மந்திரத்துக்கு உள்ளீடான பகவானைக் குறிக்கிறது. ஏழு, எட்டு அடிகள் பகவானுக்குத் தொண்டுசெய்யும் அடியார்களைக் குறிக்கிறது என்பதாகக் கூறுவர்.

    Hey Nandagopa, who does good deeds and charity, Who gives water, cloth and food to others, Pleas wake up. Our lady Yasodha, who is the light of the homes of cow herds, She who is dear to all the ladies, Please wake up Hey, Krishna who is the king of Gods, Who went up tearing the sky. Please wake up, and do not sleep.Hey Baladeva, who wears pure golden anklets, Please wake up along with your brother, So we can worship our Goddess Pavai.

     
    ChandrikaV likes this.
  4. suryakala

    suryakala IL Hall of Fame

    Messages:
    8,638
    Likes Received:
    10,880
    Trophy Points:
    470
    Gender:
    Female
    PIC13.jpg

    மார்கழி 18ம் நாள்.
    திருப்பாவை- பாசுரம் 18. புதன்கிழமை.

    உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்
    நந்தகோபாலன் மருமகளே! நப்பின்னாய்
    கந்தம் கமழும் குழலி கடை திறவாய்
    வந்தெங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப்
    பந்தல் மேல் பல்கால் குயிலினங்கள் கூவின காண்
    பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர்பாட
    செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப
    வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

    பொருள்:

    உந்து மத களிற்றன் - மத ஜலத்தைப் பெருக விடுகின்ற பலமுள்ள யானையை உடையவன், யானையைப் போன்றவன்
    கந்தம் - பரிமளம்; மாதவிப் பந்தல் - குருக்கத்திக் கொடிப் பந்தல்,
    மல்லிகைப்பூ கொடிப்பந்தல்; பல்கால் - பல தடவை; பந்தார் விரலி - பந்தைப் பற்றியிருக்கும் விரல்களை உடையவன்-

    மதநீர் சிந்தும் யானைகளை உடையவனும், போரில் பின்வாங்காத
    தோள்வலிமை உடையவனுமான நந்தகோபனின் மருமகளே! நப்பின்னை பிராட்டியே! வாசனை சிந்தும் கூந்தலை உடையவளே! உன் வாசல் கதவைத் திற! கோழிகள் கூவும் ஒலி நாலாபுறத்தில் இருந்தும் கேட்கிறது. குருக்கத்திக் கொடியின் மேல் அமர்ந்து குயில்கள் பாடத் துவங்கி விட்டன. பூப்பந்தைப் போன்ற மென்மையான விரல்களைக் கொண்டவளே! உன் கணவனின் புகழ் பாட நாங்கள் வந்துள்ளோம். அளவுமாறாத உன் அழகிய வளையல்கள் ஒலிக்க, செந்தாமரைக் கையால் உன் வாசல் கவைத் திறந்தால் எங்கள் உள்ளம் மகிழ்ச்சியடையும்.

    விளக்கம்:

    பெருமாள் கோயிலுக்குப் போனால் நேராக சுவாமி சன்னதிக்கு போகக்கூடாது. தாயாரை தான் முதலில் சேவிக்க வேண்டும். வீட்டில் கூட அப்படித்தானே! அப்பாவிடம் கோரிக்கை வைத்தால் "எதற்கடா அதெல்லாம் என்று மீசையை முறுக்குவார். அதையே, அம்மாவிடம் சொல்லி அப்பாவிடம் கேட்கச்சொன்னால், அதே கோரிக்கை பத்தே நிமிடத்தில் நிறைவேறி விடும். இதுபோல் தான் நாராயணனிடம் ஒரு கோரிக்கை வைத்தால்...அந்த மாயன் அவ்வளவு எளிதில் ஏற்கமாட்டான். அதையே தாயாரிடம் சொல்லி வைத்துவிட்டால் அவனால் தப்பவே முடியாது. நரசிம்மரின் கோபத்தைக் கூட அடக்கியவள் அல்லவா அவள்! அதனால், கண்ணனின் மனைவி நப்பின்னையை எழுப்பி, கண்ணனை எழுப்புகிறார்கள் பாவை நோன்பிருக்கும் பெண்கள்.

    இந்தப் பாசுரம் நப்பின்னைப் பிராட்டியின் பெருமையைக்கூறி அவளை எழுப்புகிறது. உந்து மதகளிற்றன் என்ற சொல் கண்ணனாகிற யானைக்கன்றை உடையவன் நந்தகோபன் என்றும் கூறலாம். பெரியாழ்வார் "தொடர்ச்சங்கிலிகை' என்ற பாசுரத்தில், அணிந்துகொண்டு இருக்கும்படியான அணிகலன்கள் ஒலிக்க, யானை (வாரணம்) வருவதுபோல் அழகிய திருவடிகளால் கம்பீரமாக நடந்து வா என்று கண்ணனைக் கூறுகிறார். எனவே, நந்தகோபருக்கு கண்ணனே ஒரு யானை என்றும் கூறலாம். பகவான் நான்கு வகை நடைகளை உடையவன். அதில் கம்பீரமாக நடந்து வருவதை "கஜகதி' (யானைபோன்ற நடை) என்பர். உந்து மதகளின் என்பதற்கு மதங்கொண்ட யானையை எதிர்த்துப் போரிடுபவன் என்றும், யானையை உடையவன் என்றும் பொருள். மதங்கொண்ட யானையை உடையவரும், போர்க்களத்தில் புறமுதுகு காட்டி ஓடாமல் வலிமையை உடையவரான ஸ்ரீநந்தகோபரின் மருமகளே! நறுமணம் வீசும் கேச பாசத்தை உடையவளுமான நப்பின்னைப் பிராட்டியே! கதவைத்திற. உதயமாவதற்கு அடையாளமாக எல்லா இடங்களிலும் கோழிகள் கூவி அழைக்கின்றன, வந்துபார். மாதவிக் கொடி படர்ந்த பந்தலின் மேல், குயில்கள் பலமுறை கூவுகின்றன. கண்ணனோடு வந்து விளையாடி, வெற்றிபெற்ற கையிலே பந்தை வைத்துக்கொண்டிருப்பவளே! கண்ணனின் பெயரைப் பாடுவோம். கையிலே அணிந்திருக்கும் வளையல்கள் ஒலிக்க, எங்களுக்காக எழுந்துவந்து கதவைத் திறந்து உதவ வேண்டும் என்கிறார்கள். வளையொலி செவிகளுக்கும், பாடுவது வாய்க்கும், நப்பின்னையைக் காண்பது கண்ணுக்கும், அவளது கேசபாசம் மூக்குக்கும் அவளுடன் சேர்வது உடலுக்குமாக விருந்தாக இந்தப் பாசுரம் அமைகிறது.

    Hey, Who is the fair daughter in law, of Nanda gopala, who has several elephants, And who is a great hero who never ran away from his enemies, Hey Lady Nappinnai, who has hair surrounded by holy scent, Please be kind to open the door. The cocks are everywhere waking us up, the koels flock on the jasmine Pandals, and coo so that we all wake up, Hey Lady who happily plays ball, To help us sing your Lords fame, With your hands with tingling bangles, Please open the door with happiness, So that we can worship our Goddess Pavai.

     
    ChandrikaV likes this.
  5. suryakala

    suryakala IL Hall of Fame

    Messages:
    8,638
    Likes Received:
    10,880
    Trophy Points:
    470
    Gender:
    Female
    GOVINDA.jpg

    மார்கழி 19ம் நாள்.

    திருப்பாவை- பாசுரம் 19.

    குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில் மேல்
    மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி
    கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல்
    வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய் திறவாய்
    மைத்தடங் கண்ணினாய்! நீயுன் மணாளனை
    எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண்
    எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாயால்
    தத்துவமன்று தகவேலோர் எம்பாவாய்.

    ராகம், தாளம்:
    Sahana, Misrachapu.

    பொருள்:

    ""குத்து விளக்கெரிய, யானைத் தந்தத்தால் ஆன கட்டில் மேல் விரிக்கப்பட்ட மிருதுவான பஞ்சுமெத்தையில், விரிந்த கொத்தாக பூ சூடிய நப்பின்னையின் மார்பில் தலை வைத்து கண் மூடியிருக்கும் மலர் மாலை தரித்த கண்ணனே! நீ எங்களுடன் பேசுவாயாக. மை பூசிய கண்களை உடைய நப் பின்னையே! நீ உன் கணவனாகிய கண்ணனை எவ்வளவு நேரமானாலும் தூக்கத்தில் இருந்து எழுப்புவதில்லை. காரணம், கணநேரம் கூட அவனைப் பிரிந்திருக்கும் சக்தியை இழந்து விட்டாய். இப்படிசெய்வது உன் சுபாவத்துக்கு தகுதியாகுமா?

    விளக்கம்:

    பஞ்சசயனம் என்பது அன்னத்தின் தூரிகை, இலவம்பஞ்சு, பூக்கள், கோரைப்புல், மயில் தூரிகை ஆகிய ஐவகை பொருட்களால் செய்யப்பட்ட மெத்தையில், தன் மனைவியின் மார்பின் மீது தலை வைத்து தூங்குகிறானாம் கண்ணன். எழுவானா? அவள் தான் எழ விடுவாளா? ஆனாலும், கண்ணன் ஓரக்கண்ணால் தன் பக்தைகளைப் பார்க்கிறானாம்."நீ எங்களுடன் பேசு என்று பாவைப் பெண்கள் கோரிக்கை எழுப்ப, அவன் ஓரக்கண்களால் பார்த்து "நீங்களே அவளிடம் சொல்லுங்கள் என்று தன் மனைவியை நோக்கிசைகை காட்டுகிறானாம். தாயே! நீயே எங்கள் கோரிக்கையை கவனிக்கவில்லையானால், அந்த மாயவனிடம் யார் எடுத்துச் சொல்வார்கள்? அவன் உன் மார்பில் தலைவைத்து கிடக்கும் பாக்கியத்தைப் பெற்றவள் நீ. எங்களுக்கு அவன் வாயால் "நன்றாயிருங்கள் என்று ஒரே ஒரு ஆசி வார்த்தை கிடைத்தால் போதும் என்கிறார்கள்.

    நப்பின்னையும் நானும் இருக்கும்போது நப்பின்னையை மட்டும் கோபியர்கள் எழுப்புகிறார்களே என்று கண்ணன் குறைபட்டுக் கொண்டான். அதனால், இந்தப் பாசுரத்தின் மூலம் கண்ணனையும் நப்பின்னையையும் எழுப்புகிறார்கள். முதல் நான்கடிகளில் கண்ணனையும், அடுத்த நான்கடிகளில் நப்பின்னைப் பிராட்டியையும் எழுப்புகிறார்கள். வீரன் கொண்டுவரும் பொருளை வீரப்பத்தினி மிகவும் விரும்புவாள். அதுபோல், கம்சனால் ஏவப்பட்ட "குவலயாபீடம்' என்ற யானையோடு சண்டையிட்டு அதைக் கொன்று, அதன் தந்தங்களைப் பறித்து வந்தான். அந்த தந்தங்களினால் செய்யப்பட்ட கட்டிலில் நப்பின்னையும், கண்ணனும் உகந்து படுத்துள்ளனர். பாசுரத்தில் "கோடு' என்பது தந்தத்தைக் குறிக்கும். மங்களகரமாக குத்துவிளக்கு ஒளிவீச, தந்தத்தினால் செய்யப்பட்ட கால்களைக்கொண்ட கட்டிலின் மேல், மென்மையான துயிலணையின் மேல் - கொத்துக் கொத்தாக தலையில் மலர்களை அணிந்த நப்பின்னையோடு படுத்திருக்கும் மலர்ந்த மார்பை உடையவனே! எங்களைப் பார்த்து 'மாசுச:' (கவலைப்படாதே) என்று ஒரு வார்த்தை சொல்லலாமே! என்றனர். அவன் வார்த்தை சொல்லத் தொடங்கியதும் நப்பின்னை அவன் வாயை மூடிவிட்டாள். இந்த நிகழ்ச்சியை கோபியர்கள் சாளரத்தின் வழியாகக் கண்டார்கள். கண்ணன் வராததற்கு நப்பின்னைதான் காரணம் என்று உணர்ந்த கோபியர்கள், அழகிய கண்களை உடையவளே! நீ உன் மணாளனை ஒருபொழுதும் பிரியவிடமாட்டாய். லோகமாதாவான உனக்கு இது ஸ்வபாவமுமன்று; ஸ்வரூபமுமன்று என்று கூறுவதாக இந்தப் பாசுரம் சொல்கிறது.

    In the light of the oil lamp, On the ornamental four legged ivory cot, On the soft bed filled with cotton, Reclining on the busts of Nappinnai, You sleep, Oh he who has a flower like heart, Please open your mouth.
    She who has, wide black eyes with collyrium. We know that
    you will never allow him to wake up, For you can never bear to be away from Him,
    This is not that good, And cannot be accepted by us.
    Please allow us to worship our Goddess Pavai.

     
    ChandrikaV likes this.
  6. suryakala

    suryakala IL Hall of Fame

    Messages:
    8,638
    Likes Received:
    10,880
    Trophy Points:
    470
    Gender:
    Female
    PIC5.jpg
    THAYAR.jpg

    மார்கழி 20ம் நாள். வெள்ளிக்கிழமை.
    ஸ்ரீஆண்டாள் திருவடி சரணம்.

    திருப்பாவை- பாசுரம் 20

    முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று
    கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்!
    செப்பமுடையாய் திறலுடையாய் செற்றார்க்கு
    வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்!
    செப்பன்ன மென்முலைச் செவ்வாய் சிறுமருங்குல்
    நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய்
    உக்கமும் தட்டொளியும் தந்துன் மணாளனை
    இப்போதே எம்மை நீராட்டலோர் எம்பாவாய்.

    ராகம், தாளம்:
    செஞ்சுருட்டி, மிஸ்ரச்சப்பு.

    பொருள்:

    முப்பத்து மூவர் - முப்பத்து முக்கோடி; கப்பம் - நடுக்கம்;
    கலி - பலமுள்ளவன், சக்தியுள்ளவன், கண்ணன்; செற்றார் - பகைத்தவர்; வெப்பம் - சூடு, துக்கம்; விமலா - பரிசுத்தமாணவன்; செப்பன்ன - பொன்கலசம் போன்ற, பொன்குடம் போன்ற, செப்புக்குடம் போன்ற; மருங்குல் - பக்கம்; உக்கம் - பெரிய வட்ட வடிவமான விசிறி, சீறிய வேலைப்பாடு அமைந்த விசிறி, தங்கம், நெருப்பு காளை; தட்டொளி - கண்ணாடி..

    முப்பத்து மூன்று கோடி தேவர்கள் இருந்தாலும், அவர்களுக்கெல்லாம் முன்னதாகச் சென்று பக்தர்களின் துயர் துடைக்கும் கலியுக தெய்வமே! நீ எழுவாயாக! நேர்மையானவனே! ஆற்றல் மிக்கவனே! பகைவர்களுக்கு வியர்வை பெருக்கெடுக்கும்படி செய்யும் தூயவனே! துயில் எழுவாயாக. பொற்கலசம் போன்ற மென்மையான ஸ்தனங்களும், பவளச் செவ்வாயும், சிற்றிடையும் கொண்ட நப்பின்னை பிராட்டியே! லட்சுமிக்கு நிகரானவளே! துயில் எழுவாயாக. எங்களுக்கு விசிறி, கண்ணாடி ஆகியவற்றையும், உன் கணவனாகிய கண்ணனையும் தந்து இப்போதே எங்களை அருள்மழையில் நனையச் செய்வாயாக.

    விளக்கம்:

    கண்ணனின் திருக்குணங்களையும், நப்பின்னையின் அழகையும் வர்ணிக்கிறார்கள் ஆயர்குலப் பெண்கள். கண்ணன் கடவுள். அவள் எல்லோருக்கும் பொதுவானவன், அவன் நப்பின்னைக்கு மட்டும் சொந்தமானவன் என்று எடுத்துக் கொள்ள முடியாது என்பதால் அவனையும் கேட்கிறார்கள். உக்கமும் தட்டொளியும் ஆகிய விசிறியையும், கண்ணாடியையும் ஏன் கேட்கிறார்கள். விசிறினால் காற்று வரும். வீசுபவனுக்கு மட்டுமல்ல, அருகிலுள்ளவனுக்கும் சேர்த்து! நம் செயல்பாடுகள் நமக்கு மட்டுமின்றி பிறருக்கும் பயன் தருவதாக அமைய வேண்டும் என்பது இதன் உட்கருத்து. கண்ணாடி உருவத்தைக் காட்டும். ஆனால், உருவத்தில் ஒட்டியுள்ள அழகையோ, அழுக்கையோ தன்னில் ஒட்டிக்கொள்ளாது. வாழ்க்கை என்றால் பட்டும் படாமலும், இந்த உடல் ஒரு வாடகை வீடு, இதை எந்த நேரமும் காலி செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடனும் இருக்க வேண்டும் என்பதை விளக்குகிறது. ஆண்டாளின் கவித்திறமையில் ஒளிந்துள்ள மறைபொருளுக்கு ஈடேது!

    கோபியர்கள் இந்தப் பாசுரத்திலும் பகவானையும், பிராட்டியையும் எழுப்புகிறார்கள். தேவர்கள் முப்பத்து முக்கோடி பேர்கள். அஷ்டவசுக்கள், ஏகாதச ருத்ரர்கள், துவாதச ஆதித்யர்கள், அஸ்வினி தேவர்கள் இரட்டையர்கள் இவர்கள் தலைமையில் முப்பத்து முக்கோடி தேவர்கள். கோஷ்டி என்பதை கோ(ட்)டி என்பர். இவர்களுக்கு மரணம் என்பதே கிடையாது. அதனால் இவர்கள் "அமரர்கள்' எனப்படுவர். நீ தேவர்களுக்குத் தலைவனாகிய இவர்களுக்கு ஆபத்து வருவதற்கு முன், முன்னே இருந்துகொண்டு, பகைவர்களால் ஏற்படும் ஆபத்தை நீக்கி, இவர்களுடைய நடுக்கத்தைப் போக்கும் மிடுக்கு உடையவனே எழுந்திராய்! (பாரதப்போரில் பகதத்தன் அர்ஜுனன் மீது குறிவைத்து போடப்பட்ட ஒரு சக்திமிக்க ஆயுதத்தை தேரோட்டியான கண்ணன், தேரிலிருந்து எழுந்திருந்து தன் மார்பில் வாங்கிக் கொண்டான். பீஷ்மர் போட்ட அஸ்த்ர சஸ்திரங்களை எல்லாம் தான் ஏற்றுக்கொண்டு அர்ஜுனனைக் காப்பாற்றினான்).
    நேர்மையும் திறமையும் கொண்டவனே! பகைவர்களுக்கு பயத்தை உண்டுபண்ணுபவனே! மிகவும் தூய்மையானவனே! என்று கண்ணனை எழுப்பினார்கள். ஆனால், அவன் எழுந்திருக்கவில்லை. கீழ்ப்பாசுரத்தில், நப்பின்னையை "தத்துவமன்று தகவுமன்று' என்று பேசிவிட்டார்கள் என்று கண்ணனுக்கு எண்ணம். அதனால் நப்பின்னையின் திருமேனி அழகைக் கூறுகிறார்கள். சாமுத்திரிகா லட்சணத்தில் சொல்லப்பட்டபடி, அழகிய திருமேனியைக்கொண்ட மகாலட்சுமியைப் போன்ற நப்பின்னையே எழுந்திரு. எங்கள் கோஷ்டிக்கு விசிறியும், கண்ணாடியும் கொடுத்து எங்களை கண்ணனோடு இப்போதே சேர்க்கவேண்டும் என்கிறார்கள்.

    Please wake up Oh, Lord, Who removed sorrow and fear,
    From the thirty three sections of Devas, Even before they approached you, Oh Lord, Who is glittering like gold,
    Oh Lord, who has inimitable valour, Please wake up,
    Oh Lady Nappinnai, Who has desirable busts like golden pots.
    Who has little red mouth, And who has thin narrow hips,
    Please wake up, Oh Goddess of wealth. Please give mirror and fan,
    Just now to your consort, And allow us to take bath,and thus worship our Goddess Pavai.

     
    ChandrikaV likes this.
  7. suryakala

    suryakala IL Hall of Fame

    Messages:
    8,638
    Likes Received:
    10,880
    Trophy Points:
    470
    Gender:
    Female
    KUMBAKONAM.jpg

    மார்கழி 21ம் நாள். சனிக்கிழமை.
    இன்று ஆஞ்சநேயர் ஜெயந்தி.
    திருப்பாவை - பாசுரம் 21.

    ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப
    மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்
    ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்
    ஊற்றமுடையாய்! பெரியாய் உலகினில்
    தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய்
    மாற்றார் உனக்கு வலிதொலைந்துன் வாசற்கண்
    ஆற்றாது வந்துன் அடிபணியு மாபோலே
    போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்.

    ராகம், தாளம்.
    Nadanamakriya, Misrachapu

    பொருள்:

    கறக்கும் நேரமெல்லாம் பாத்திரங்கள் நிரம்பி வழியும் வகையில் பாலைச் சுரக்கும் வள்ளல் தன்மை கொண்ட பசுக் களுக்கு உரிமையாளரான நந்தகோபனின் மகனே! கண்ணனே! நீ எழுவாயாக. வேதங் களால் போற்றப் படும் வலிமையானவனே! அந்த வேதங்களாலும் அறிய முடியாத பெரியவனே! உலகிற்கே ஒளிகாட்டும் சுடரே! துயில் எழுவாயாக! உன்னை எதிர்த்தவர்களெல்லாம் வலிமையிழந்து, உன் வாசலில் உன் பாதத்தில் விழ காத்துக் கிடப்பது போல, நாங்களும் உன் திருவடியைப் புகழ்ந்து பாட காத்திருக்கிறோம். எங்கள் வேண்டுகோளை ஏற்பாயாக.

    விளக்கம்:

    "மன்னாதி மன்னர்களெல்லாம் உன் காலில் விழ காத்துக் கிடப்பது உன்னிடமுள்ள பயத்தால்! ஆனால், நாங்கள் அவர்களைப் போல பயந்த சுபாவம் உள்ளவர்கள் அல்ல! நாங்கள் வா என்று அழைத்தால் நீ வந்தாக வேண்டும். வர மறுத்தால், உன்னை எங்கள் அன்பென்னும் கயிறால் கட்டிப் போட்டு விடுவோம். அப்போது, நீ தப்பவே முடியாது என்கிறார்கள் ஆயர்குலப் பெண்கள். ஆம்...ஆண்டாள் மாலைக்குள் புதைந்து கிடந்த ஒரு தலைமுடியால் அவனைக் கட்டிப் போட்டு விட்டாளே! அந்த ரங்கநாதன் அவளிடம் வசமாக சிக்கிக் கொண்டானே! இதுதான் பக்தியின் உச்சநிலை. பகவானிடம் நம்மை அர்ப்பணித்து விட்டால், அவன் நம்மிடமிருந்து தப்பி ஓடமுடியாது என்பது இப்பாடலின் உட்கருத்து.

    Oh son of him, Who owned several cows, Which gave so much milk, That always the milking vessel got overflowed, Please wake up. Oh Lord, who is full of mercy, Oh Lord, who is better than the best, Oh lord, who is the light that began the world,
    Please wake up. Like your flock of defeated enemies, Falling at your feet in surrender, We came praising you, So that we get fame, And worship our Goddess Pavai.

     
    ChandrikaV likes this.
  8. suryakala

    suryakala IL Hall of Fame

    Messages:
    8,638
    Likes Received:
    10,880
    Trophy Points:
    470
    Gender:
    Female
    PIC9 SHOLINGANALLUR.jpg


    மார்கழி 22ம் நாள்.ஞாயிற்றுக்கிழமை.

    திருப்பாவை- பாசுரம் 22.

    அங்கண்மா ஞாலத்தரசர் அபிமான
    பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட் டிற்கீழே
    சங்கம் இருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம்
    கிங்கிணி வாய்ச்செய்த தாமரை பூப்போல
    செங்கண் சிறுகச்சிறதே யெம்மேல் விழியாவோ?
    திங்களும் ஆதித் தியனும் எழுந்தாற்போல்
    அங்கண் இரண்டும்கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்
    எங்கள் மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்.

    Ragam, Thalam-
    Yamuna Kalyani, Misrachapu.

    பொருள்:

    கண்ணா! எங்களை விட உயர்ந்த வீரர்கள் இருக்கிறார்களா என தங்களைப் பற்றி பெருமையடித்துக் கொண்டவர்களும், இந்த பரந்த பூமியை ஆட்சி செய்தவர்
    களுமான அரசர்கள் மிகுந்த பணிவுடன் உன் பள்ளி கொண்டுள்ள கட்டிலைச் சுற்றிலும், சத்சங்கத்துக்கு வந்த பக்தர்கள் போல் காத்து நிற்கிறார்கள். அவர்களைப் போல் நாங்களும் உன் அருகில் நிற்கிறோம். எங்கள் மீது, கிண்கிணி என ஒலிக்கும் சிறுமணியின் வாய்போலவும், தாமரைப்பூ மெதுவாக மலர்வது போலவும், உன் சிவந்த தாமரைக் கண்களை சிறுகச் சிறுக திறந்து விழிக்கமாட்டாயா? சந்திரனும், சூரியனும் உதித்தது போல, அந்தக் கண்களைக் கொண்டு எங்களைப் பார்ப்பாயானால், எங்கள் மீதுள்ள எல்லா பாவங்களும் சாபங்களும் தீர்ந்து விடுமே!

    விளக்கம்:

    இறைவனின் கடைக்கண் பார்வை பட்டால் போதும். சாபங்கள் கருகிப்போகும். எப்படி அவனது பார்வையை நம் மீது திருப்புவது. மிக எளிதாக ஆண்டாள் பாடிய திருப்பாவையின் பாடல்களையும் மார்கழியில் மட்டுமல்ல! எந்நாளும் பக்தியுடன் படித்தால் போதுமே! அதற்கு அவகாசமில்லையா! அவள் சொல்லியிருக்கிறாளே! இந்த பாவையில் கோவிந்தா, விக்ரமா போன்ற எளிய பதங்களை... அவற்றைச் சொன்னாலே போதுமே! அவனது பார்வை பட்டுவிடும்.

    இந்தப் பாசுரத்தில் கோபியர்கள் கண்ணனின் அருளைப் பெறவேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். கோபியர்களே! நீங்கள் எல்லோரும் வந்த காரணம் என்ன? என்று கண்ணன் கேட்கிறான். உன்னை விட்டுப் பிரிந்திருந்த சாபம் நீங்கவேண்டும். இனியும் அப்படி ஒருநிலை ஏற்படக்கூடாது. அழகு, விசாலம், போகப் பொருள்கள் நிறைந்த இந்த பூமியில் வாழும் அரசர்கள் தங்களது அபிமானம் இழந்து, உன்னுடைய அருள் நோக்கே வேண்டும் என்று கூட்டங் கூட்டமாக திருப்பள்ளி அறையின் வாசலில் நிற்பதுபோல், நாங்களும் ஸ்த்ரீத்வ அபிமானம் இழந்து வந்து நிற்கிறோம். உன்னை வந்து அடைவோமோ என்று எண்ணினோம், அடைந்துவிட்டோம். கிண்கிணியைப் போன்று இருக்கும் அழகிய தாமரைக் கண்ணால் எங்களை மெல்ல கடாக்ஷிக்க வேண்டும்.
    வாடிய பயிரின் மேல் ஒரு பாட்டம் பெருமழை பொழிவதுபோல் இல்லாமல், மாத உபவாசிக்குப் புறச்சோறு இடுவதுபோல் கொஞ்சம் கொஞ்சமாகக் கடாக்ஷிக்க வேண்டும். ஒருவன், ஒருமாத காலம் பட்டினி இருந்தால், ஒரு மாதத்திற்குப் பிறகு, அவனுடைய உடலுக்கு உணவுச்சத்து பிடிப்பதற்கு, சோற்றை நன்கு அரைத்து உடம்பி ல் பூசுவார்களாம். இது முற்காலத்தில் செய்யும் வைத்தியம். இதனால் உடம்பில் சக்தி கொஞ்சம் கொஞ்சமாக வரும். அதுபோல் நீ சிறிது சிறிதாகப் பார்த்தால், உன்னை விட்டுப் பிரிந்திருக்கும் பிரிவாற்றாமை என்னும் நோய் நீங்கும். சூரியனையும் சந்திரனையும் போன்ற கண்களால் எங்களைக் கடாக்ஷித்தால் எங்கள் மீது இருக்கும் சாபமும் நீங்கும்.

    Like all the famous kings, Of the wide World, that is pretty, Have crowded near your cot, After surrendering their ego, We also have come near. Will not the sight, Of your red eyes which is like the lotus Fall little by little on us? If you see us using those eyes, Which are like sun and the moon, All the curse on us will vanish, And we can worship our Goddess Pavai.

     
    ChandrikaV likes this.
  9. suryakala

    suryakala IL Hall of Fame

    Messages:
    8,638
    Likes Received:
    10,880
    Trophy Points:
    470
    Gender:
    Female
    PIC14.jpg


    மார்கழி 23ம் நாள். திங்கள்கிழமை.
    திருப்பாவை- பாசுரம் 23.

    மாரி மலைமுழஞ்சில் மன்னிக்கிடத்துறங்கும்
    சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து
    வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி
    மூரி நிமிர்ந்து முழங்கப் புறப்பட்டு
    போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா! உன்
    கோயில் நின்று இங்ஙனே போந்தருளி கோப்புடைய
    சீரிய சிங்கா சனத்திருந்து யாம்வந்த
    காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.

    Ragam, Thalam.
    Bilahari, Adi.

    பொருள்:

    மழைக்காலத்தில் மலையிலுள்ள குகையில் உறங்கும் பெருமை மிக்க சிங்கம் விழிக்கிறது. அதன் கண்களில் நெருப்பு பொறி பறக்கிறது. நாற்புறமும் நடமாடி பிடரி மயிரை சிலிர்த்து, பெருமையுடன் நிமிர்ந்து கர்ஜனையுடன் வெளியே கிளம்புகிறது. அதுபோல, காயாம்பூ நிறத்தையுடைய கண்ணனே! நீயும் வீரநடை போட்டு உன் கோயிலில் இருந்து வெளியேறி, இங்கே வந்து அருள் செய். வேலைப்பாடுகளைக் கொண்ட மிகச்சிறந்த சிம்மாசனத்தில் அமர்ந்து, நாங்கள் எதற்காக இங்கே வந்தோம் என்பதை அறிந்து, அந்த கோரிக்கைகளைப் பரிசீலனை செய்து நிறைவேற்றி அருள வேண்டுகிறோம்.

    விளக்கம்:

    எதிரே இருப்பவன் கடவுள் என்பதற்காக வீட்டைக் கொடு, பொருளைக் கொடு, நகையைக் கொடு, வாகனத்தைக் கொடு...என நம் கோரிக்கைகளை ஆண்டவன் முன்னால் வைக்கக்கூடாது. அவை நமக்கு அமைய வேண்டுமென்ற விதியிருந்தால், நம் உழைப்பைப் பொறுத்து அவை இறைவனால் நமக்குத் தரப்பட்டு விடும். எனவே, நியாயமான கோரிக்கைகளையே இறைவனிடம் சொல்ல வேண்டும். இதைத்தான் ஆயர்குலப் பெண் கள் நாங்கள் கேட்பது நியாயம் எனத் தெரிந்தால் மட்டும் அதைக் கொடு எனக் கேட்கிறார்கள். அவர்கள் கேட்டது என்ன? அந்தக் கண்ணனையே கேட்டார்கள். அவனோடு கலந்து விட்டால் சோறு எதற்கு? வாகனம் எதற்கு? இதர வசதிகள் எதற்கு? அதற்கெல்லாம் மேலான பேரின்பமல்லவா கிடைக்கும். அதனால் அவனையே கேட்டார்கள் ஆயர்குலப் பெண்கள்.

    கண்ணன் கோபியர்களை இன்னமும் உங்களுக்கு வேண்டியது என்ன? என்று கேட்க, உன்னுடைய நடையழகையும், வீற்றிருந்த திருக்கோலத்தையும் சேவிக்க வேண்டும். பழைய காலத்தில், மலைக்குகையில் ஓர் அசேதனப் பொருள்போல் ஒன்றும் அறியாமல் உறங்கிக் கொண்டிருக்கும் சீரிய சிங்கம், மழைக்காலம் முடிந்தவுடன், அறிவுபெற்று, கோபத்துடன் கண்ணைத் திறந்து, சுற்றும் முற்றும் பார்த்து, தன்னுடைய உடம்பில் படிந்திருக்கும் வேரிமயிர்கள் வாசனையைக் காட்டிக்கொண்டு எழுந்திருந்து, கால்களை முன்னும் பின்னும் நீட்டி மடக்கி, கர்ஜித்து வெளியில் வருவதுபோல், நீயும் சயன அறையிலிருந்து புறப்பட்டு உனக்குரிய சிங்காசனத்தில் அமர்ந்து கொள்ளவேண்டும். அப்போது, எங்களது தேவையைக் கூறுகிறோம். சொல்லமுடியாத குறைகளை நீயாகவே ஆராய்ந்து அருளவேண்டும் என்று வேண்டுகிறார்கள். கண்ணனுடைய நின்ற திருக்கோலத்தையும், நடையழகையும் காண்கிறார்கள்.

    Like the majestic lion wakes up with ire, From the mountain cave in the rainy season, Looks with fiery sight, And with deep angry sweat from all the hairs, Turns up its head with awe, And comes out making lots of din, Hey Lord, who is the colour of the blue lotus, Come from your temple to here, And sit on the majestic royal throne, And hear with compassion, For why we have come here, And help us to worship our Goddess Pavai.

     
    ChandrikaV likes this.
  10. suryakala

    suryakala IL Hall of Fame

    Messages:
    8,638
    Likes Received:
    10,880
    Trophy Points:
    470
    Gender:
    Female
    12993492_1119838468046465_7545052930437499893_n.jpg
    ANDAL2.jpg

    மார்கழி மாதம் 24ம் நாள். செவ்வாய்க்கிழமை.

    திருப்பாவை- பாசுரம் 24.

    அன்று இவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றி
    சென்றங்கு தென்னிலங்கை செற்றாய் திறல்போற்றி
    கொன்றடச்சகடம் உதைத்தாய் புகழ் போற்றி
    கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி
    குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி
    வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல் போற்றி
    என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான்
    இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்.

    Ragam, Thalam.
    Sindhu Bhairavi. Adi.

    தென்னிலங்கை - அழகியஇலங்கை, தெற்கிலுள்ளஇலங்கை;
    செற்றாய் - ஜெயித்தாய், அழித்தாய்; பொன்ற - கட்டுக்குலையும்படி, அழியும்படி;
    குணிலாய் - எறிதடியாய், கன்றுவடிவில்வத்ஸாசுரன், விளாமரவடிவில்கபித்தாசுரன்;
    சேவகம் - வீர்யம், லீலாவிபூதி, ஏவியதைசெய்வது, குற்றேவல்;
    சகடம் - சக்கரம், சகடாசுரன்; கழல் - கால், காலணி, ஆபரணம்; ஏத்தி - புகழ்ந்து, பாடி..

    பொருள்:

    மகாபலி இந்த உலகத்தை கைப்பற்றிய காலத்தில், அதை மூன்றடிகளால் அளந்து உன்னுடையது என்று உணர்த்தியவனே! உன் திருவடிகளுக்கு வணக்கம். ராமாவதாரம் எடுத்த போது, சீதையை மீட்க தெற்கிலுள்ள இலங்கைக்கு சென்று ராவணனை வெற்றி கொண்டவனே! உன் வீரத்துக்கு நமஸ்காரம். சக்கர வடிவில் வந்த சகடன் எனற அசுரனை ஒரே உதையில் வீழ்த்தியவனே! உன் புகழுக்கு வந்தனம்.கன்று வடிவில் வந்த வத்சாசுரனை தடியாகக் கருதி, அவனை விளாமர வடிவில் வந்த கபித்தாசுரன் மீது எறிந்து அழித்தவனே! உன் கால்களில் அணிந்த வீரக்கழலுக்கு மங்களம் உண்டாகட்டும். கோவர்த்தனகிரியை குடையாக்கி ஆயர்குலத்தவரை இந்திரன் அனுப்பிய மழையில் இருந்து காத்தவனே! உன் இரக்க குணத்துக்கு தலை வணங்குகிறோம்.பகைவர்கள் எவ்வளவு பலவான்களாயினும் அவர்களை உன் கையிலுள்ள வேலால் அழித்தவனே! அந்த வேலாயுதத்துக்கு நமஸ்காரம். உன் வீரச்செயல்களைப் பாடி, உன்னருளைப் பெறுவதற்கு, இப்போது நாங்கள் வந்துள்ளோம். எங்கள் மீது இரக்கம் காட்ட வேண்டுகிறோம்.

    We worship your feet which measured the world then, we worship your fame of winning over the king of Southern Lanka, We worship thine valour in breaking the ogre who came like a cart, We worship thy strength which threw the calf on the tree, we worship thine goodness in making the mountain as an umbrella, And we worship the great spear in your hand, which led to your victory, We have come hear to sing always for ever your praises, And get as gift the drums to sing, and worship our Goddess Pavai.

     
    ChandrikaV likes this.

Share This Page