1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

Neer Illaamal Neer ( Neengal ) Illai

Discussion in 'Posts in Regional Languages' started by jayasala42, Aug 22, 2019.

  1. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,367
    Likes Received:
    10,570
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Subject: neer illaamal neer (Neengal) illai
    நமஹ் காத்யாய ச நீபியாய ச
    நமஹ சூத்யாய ச சரஸ்யாய ச
    நமோ நா த்யாய ச வைசாந்தாய ச
    நமஹ் கூப்யாய சாவடயாய ச
    நமோ வர்ஷாய ச............. ஸ்ரீ ருத்ரம்
    "கால்வாய் நீரிலும் அருவி நீரிலும்,மடுவிலுள்ள நீரிலும்,ஏரியிலுள்ள நீரிலும்,நதி நீரிலும்
    குளத்து நீரிலும் ,கிணற்று நீரிலும், சுனை நீரிலும், மழை நீரிலும் இருப்பவரான உனக்கு நமஸ்காரம் " என்று யஜுர் வேதம் சிவ பெருமானை நீர் வடிவாகப் போற்றி வணங்குகிறது.
    " நீர் தேவதைகளுக்குள் வருணனாகவும்,நதிகளுள் கங்கையாகவும் தான் இருப்பதாக கிருஷ்ணர் கூறுகிறார்.
    நீர் மட்டுமன்றி பஞ்ச பூதங்களையும் இறைவனாக பாவிப்பது இந்துக்களின் மரபு..உன்னதமான அந்த நீரின் மஹிமையை முன்னோர்கள் தெள்ளத் தெளிவாக உணர்ந்திருந்தனர்.
    Rain Water harvest 'என்பதெல்லாம் இன்றைய கான்செப்ட் இல்லை.
    'வாய் நன்கு அமையாக் குளனும் ,வயிறாரத் தாய் முலை உண்ணாக் குழவியும்,
    சேய் மரபின் கல்வி மாண்பு இல்லாத மாந்தரும் -இம்மூவர் நல்குரவு சேரப் படார்.( திரி கடுகம் )
    தாய்ப் பால் அருந்தாத குழந்தையும்,கல்வி அறிவு ஏற்றவாறும் எப்படி சிறக்க முடியாதோ, அது போல வாய்க்கால் நன்கு அமையாத குளமும் சிறக்க முடியாது.

    சிறு பஞ்ச மூலம் எனும் நூலிலிருந்து இன்னொரு பாடல்
    "குளம் தொட்டு,காவு பதித்து,வழி சேத்து,உளம் தொட்டு, உழு வயல் ஆக்கி, வளம் தொட்டு,பாகு படும் கிணற்றோடு என்று
    இவை பாற்படுத்தான் ஏகும் ஸ்வர்கம் இனிது "

    குளம் வெட்டுபவர்,அதைச் சுற்றி மரக்கிளைகளை வெட்டி
    நடுபவர்,மக்கள் நடக்கும் வழியைச் செதுக்கி சீர் செய்பவர்,தரிசு நிலத்தைச் செப்பனிட்டு வயல் ஆக்குபவர், பொதுக் கிணறு அமைப்பவர்-இவர்கள் ஸ்வர்கத்துக்கு எளிதாகச் செல்வர்..
    மழை நீரைச் சேமித்து வைப்பதற்கு ஏற்ற நீர் நிலைகளை அமைப்பது மன்னனின் தலையாய கடமை என்று புறநானூற்றுப் பாடல் கூறுகிறது.
    " நிலன் நெளி மருங்கில் நீர் நிலை பெருகத் தட்டோர் அம்ம,
    இவண் தட்டோரே ;
    தல்லாதோர் இவண் தள்ளாதோரே "
    " நிலம் எங்கெங்கெல்லாம் பள்ளமாக இருக்கிறதோ அங்கெல்லாம் நீர் நிலைகளை அமைத்த மன்னர்களே இவ்வுலகில் அழியாய் புகழ் பெற்றுவிளங்குவர்.
    அக்காலத்தில் தமிழகத்தை ஆண்ட மன்னர்கள் யாவரும் புதிதாக கிராமங்களையோ, நகரங்களையோ உருவாக்குவதற்கு முன்பு, ஏறி, குளம் போன்ற நீர் நிலைகளைத் தான் உருவாக்கினார்.நீர் நிலைகளை சேதப் படுத்தியவர்களுக்குத் தண்டனை அளித்தனர்.இதற்கான சான்றுகள் வரலாறுகளில் உள்ளன.
    ஆனால் இன்றைக்கு மன்னர்கள் அரும்பாடு பட்ட நீர்நிலைகளை அழித்து நகரங்களை உருவாக்கி விட்டனர்.இந்த செயல் மேல் கிளையில் அமர்ந்து அடிக் கிளையை வெட்டுவது மாதிரி உள்ளது.பரந்த நீர் நிலைகளை அழித்து விட்டு இயற்கைக்கு வி ரோதமாக நிலத்தடி நீரை உறிஞ்சுவதில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது.
    மூச்சுக்கு முன்னூறு முறை தமிழ்ப் பெருமை பேசும் அரசியல் வாதிகள், தமிழ்ப் பாடலிலுள்ள அருமையான கருத்துக்களைத் தூக்கி எறிந்து விட்டு,செயல் படுவது வேதனை அளிக்கிறது.
    நிலத்தடி நீர் மட்டுமே நாம் எதிர்கால சந்ததியினருக்கு சேர்த்து வைக்கும் அரிய சொத்து.
    jayasala42
     
    Thyagarajan likes this.
    Loading...

  2. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,726
    Likes Received:
    12,546
    Trophy Points:
    615
    Gender:
    Male
    :hello:வரும்முன் காப்பது அந்த காலம்.
    வந்த பின் வாடுவது இந்த காலம்
    ஏரியில் கல்லூரி கட்டுவது இந்த காலம்
    நீர் இல்லாது அமையாது உலகம்
    படித்தது அந்த காலம்
    கார்ப்பரேசன் ரேஷன் தண்ணிய கானில் புடித்து
    விற்பது இந்த காலம்
    வள்ளுவர் சொன்னது
    அவருக்கு முன்னாடி பலர்
    அவருக்கு பின்னாட்களில் சிலர்
    கேட்டவர் மிதன்தவர் டாஸ்மாக் தண்ணியிலே

    I enjoyed reading your point of view. :expressionless:
    Regards.
     
    Last edited: Sep 5, 2019

Share This Page