Navarathri 2017

Discussion in 'Queries on Religion & Spirituality' started by Lalithasree, Sep 16, 2017.

  1. Lalithasree

    Lalithasree Senior IL'ite

    Messages:
    38
    Likes Received:
    13
    Trophy Points:
    23
    Gender:
    Female
    Special Note on Navarathri 2017

    புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசைக்கு அடுத்த நாளான பிரதமை முதல் நவமி வரை மாலை வேளைகளில் அம்பிகையின் பல ரூபங்களை வழிபடுவது நவராத்திரி பூஜையாகும். பெண்களின் பெருமையைப் போற்றும் விழா, நவராத்திரி விழா. பெண்களின் கைவினைத்திறன், கற்பனை சக்தியைத் தூண்டும் விழா.

    நவராத்திரி வழிபாட்டால்,
    பெண் குழந்தைகள் பெறுவது மகிழ்ச்சியின் பயன்.
    கன்னியர்கள் பெறுவது திருமணப் பயன்.
    சுமங்கலிகள் பெறுவது மாங்கலயப் பயன்.
    மூத்த சுமங்கலிகள் பெறுவது மனமகிழ்ச்சி, மன நிறைவு;
    எல்லோரும் பெறுவது பரிபூரண திருப்தி.

    நவராத்திரி என்பது ஒன்பது நாட்களிலும் இரண்டு முதல் ஒன்பது வயது வரையிலுள்ள சிறுமிகளை அம்பாளாக பாவித்து, வயது வரிசைப்படி, ஒரு நாளைக்கு ஒரு குழந்தை வீதம், குழந்தைகளுக்கு அலங்காரம் செய்து, பூஜித்து வழிபடுவது முறையாகும். அதன்படி,
    முதல் நாளில் 2 வயதுக் குழந்தை - குமாரி
    இரண்டாம் நாள் 3 வயதுக் குழந்தை - திரிமூர்த்தி
    மூன்றாம் நாள் - 4 வயதுக் குழந்தை - கல்யாணி
    நான்காம் நாள் - 5வயதுக் குழந்தை - ரோஹிணி
    ஐந்தாம் நாள் - 6 வயதுக் குழந்தை - காளிகா
    ஆறாம் நாள் - 7 வயதுக் குழந்தை - சண்டிகா
    ஏழாம் நாள் - 8 வயதுக் குழந்தை - சாம்பவி
    எட்டாம் நாள் - 9 வயதுக் குழந்தை - துர்கா
    ஒன்பதாம் நாள் - 10 வயதுக் குழந்தை - ஸுபத்ரா
    என்று வணங்கப்படுவார்கள்.

    முதல் (1,2,3) மூன்று நாட்கள் துர்க்கையின் வழிபாடு.
    இடை மூன்று (4,5,6) நாட்கள் லட்சுமி வழிபாடு.
    கடை மூன்று நாட்கள் (7,8,9) சரஸ்வதி வழிபாடு.

    நவராத்திரி தினமான 9 நாட்களும் ஊசியால் துணிகளை தைப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது.
    விஜயதசமியையொட்டி வீடுகள் மாவிலை தோரணங்கள் கட்டி அலங்கரிக்கப்படும்.

    சரஸ்வதி பூஜை தினத்தோடு நவராத்திரி விழா நிறைவடைந்து விடுவதான காரணத்தால் விஜயதசமி தினத்தன்று அம்மனுக்கு சுண்டல் நிவேதனம் கிடையாது.

    காலையிலேயே வடை, பாயாசம், பலகாரங்களுடன் அம்மனுக்கு நிவேதனம் செய்யப்படும். இரவு கொலுவில் வைக்கப்பட்டிருந்த பொம்மைகள் படுக்கவைக்கப்பட்டு மறுநாள் கொலு பொம்மைகள் எடுத்து வைக்கப்படும்.

    நவராத்திரி சமயத்தில் சுமங்கலிகளை வீட்டிற்கு அழைக்க வேண்டும், அவர்களை அன்போடு அழைத்து, வஸ்திரம் (புடவை அல்லது சட்டை பிட்), குங்குமம், சீப்பு, சிமிழ், கண்ணாடி, மஞ்சள் கிழங்கு, வெற்றிலை பாக்கு, தக்ஷணை ஆகியவற்றோடு வடை, பாயஸம் அளித்து, மகிழ்வித்தால் மிகப் பெரும் பாக்கியம் கிட்டும்.

    நவராத்திரியில் கொலு வைக்கும் முறை.
    ஒன்பது படிகள் :
    முதல் படியில் ஓரறிவு உயிர்ப் பொருட்களை உணர்த்தும் புல், செடி, கொடி போன்ற தாவர பொம்மைகள் இருத்தல் வேண்டும்.
    இரண்டாவது படியில் இரண்டறிவு கொண்ட நத்தை, சங்கு போன்ற பொம்மைகள் இருத்தல் வேண்டும்.
    மூன்றாவது படியில் மூன்றறிவு உயிர்களை விளக்கும் கரையான், எறும்பு போன்ற பொம்மைகள் இடம் பெற வேண்டும்.
    நான்காவது படியில் நான்கு அறிவு கொண்ட உயிர்களை விளக்கும் நண்டு, வண்டு பொம்மைகள் இடம் பெற வேண்டும்.
    ஐந்தாவது படியில் ஐந்தறிவு கொண்ட நான்கு கால் விலங்குகள், பறவைகள், பொம்மைகள் இடமி பெற வேண்டும்.
    ஆறாவது படியில் ஆறு அறிவு படைத்த உயர்ந்த மனிதர்களின் பொம்மைகள் இடம் பெற வேண்டும்.
    ஏழாவது படியில் மனிதனுக்கு மேற்பட்ட மகரிஷிகளின் பொம்மைகள் இடம் பெற வேண்டுமி.
    எட்டாவது படியில் தேவர்களின் உருவங்கள் இடம்பெற வேண்டும். நவக்கிரக அதிபதிகள், பஞ்சபூத தெய்வங்கள், அஷ்டதிக்கு பாலகர்கள் என்பன வைக்கலாம்.
    ஒன்பதாவது படியில் பிரம்மா, விஷ்ணு, சிவன் என்னும் மும்மூர்த்திகள் அவர்தம் தேவியர்களான சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகியோருடன் இருக்க வேண்டும். ஆதிபராசக்தி நடு நாயகமாக இருக்க வேண்டும்.
     
    Loading...

  2. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,888
    Trophy Points:
    490
    Gender:
    Female
    மிகவும் நல்ல பயனுள்ள தகவல் அளித்ததற்கு நன்றி. இதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திட்டால் பலருக்கும் பயனுடையதாய் இருக்கும்.
     
    Lalithasree likes this.

Share This Page