1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

My humble Tribute to Bharathi

Discussion in 'Snippets of Life (Non-Fiction)' started by PushpavalliSrinivasan, Sep 11, 2010.

  1. PushpavalliSrinivasan

    PushpavalliSrinivasan IL Hall of Fame

    Messages:
    4,712
    Likes Received:
    3,758
    Trophy Points:
    340
    Gender:
    Female
    கவிக்குயில் பாரதிக்கு அஞ்சலி
    பாரதியின் புகழ் கொஞ்சம் பாடலாமா...?

    செப்டம்பர் 11ஆம் தேதி ஆண்டு தோறும் பாரதி நினைவு நாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில் நாமும் அவரை நினைவு கூறலாமஎன்று நினைக்கிறேன்.பாரதியின் கவித்திறமையை என்னென்று சொல்லுவது? அவரை தேசீயக்கவி என்று சொல்லுவதா, சமுதாயச் சீர்திருத்தக்கவி என்று சொல்லுவதா, குழந்தைக்கவி என்பதா, அல்லது ஆன்மீகக்கவி என்பதா? மேற்கூறிய அனைத்து வகையைச் சேர்ந்த கவிதைகளையும் அவர் புனைந்துள்ளார்.

    அவரது கனல் தெறிக்கும் தேசபக்திப் பாடல்கள் கோழைகளையும் வீறுகொண்டு எழச்செய்யும்.'தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்' என்ற அவரின் பாடல் வறுமையில் வாடும் ஒரு மனிதனுக்காக அவர் மனம் குமுறி எழும் ஆவேசத்தைக் காட்டுகிறதென்றால் 'பெண்மை வாழ்கென்று கூத்திடுவோமடா பெண்மை வெல்கென்று கூத்திடுவோமடா' என்ற பாடல் அவர் பெண்களின் அவல நிலை கண்டு பெண் விடுதலைக்கு வீறுகொண்டு குரல் கொடுப்பதைக் காட்டுகிறது. அவரது புதிய ஆத்திச்சூடியும் பாப்பாப் பாட்டும் எளிய இனிய தமிழில் தெள்ளென விளங்கும்படி அமைந்துள்ளது.

    ஞானப் பாடலிலும் அவரது கவித்திறம் சொல்லற்கரியதே. 'நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே' 'சென்றதினி மீளாது மூடரே' 'செத்தபிறகு சிவலோகம் வைகுந்தம் சேர்ந்திடலாமென்றே எண்ணியிருப்பார்' போன்றவை சிறந்த உதாரணம் ஆகும்.

    அவரது கண்ணன் பாட்டுகள் அனைத்துமே கொள்ளை அழகுடன் மனத்தை ஈர்க்கின்றன. கண்ணனைத் தாயாகவும் தந்தையாகவும் குழந்தையாகவும் தோழனாகவும் பணியாளனாகவும் எசமானனாகவும் காதலனாகவும் காதலியாகவும் உருவகித்துப் பாடியுள்ள அழகிற்கு ஈடுஇணையில்லை. பாரதியாருக்கும் ஆழ்வார்களைப் போல் பக்தி இலக்கியத்தில் நிச்சயமாக ஒரு இடம் உண்டு.

    பாரதியின் பாஞ்சாலி சபதம் ஒருஇசைக்காவியம் என்றால் அவரின் சக்தி, முத்துமாரி, மலரின்மேவு திருவே, வெள்ளைத்தாமரை ஆகிய பாடல்களும் கவின்மிகு சொற்சுவையும் பொருட்சுவையும் மிக்கவை.

    பாரதியைப் பற்றி இன்னும் எவ்வளவோ கூறலாம். அஞா நெஞ்சினனாய்க் காலனைக் காலால் மிதித்திடுவேன் என்று காலனுக்கே சவால் விட்ட பாரதியார், அவர் தினமும் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் அன்புடன் பழகிவந்த யானையின் காலால் இடரப்பட்டு நோய்வாய்ப்பட்டு தமது 39 வது வயதில் காலமானார்.

    ‘பாட்டுக்கொரு புலவன் பாரதியடா' என்ற பாரதியின் புகழ் இப்பாருள்ளளவும் நிலத்திருக்கும்.

    வாழ்க மகாகவி பாரதி! வாழ்க செந்தமிழ்!

    பாரதியாரின் பாடல்களில் உங்களுக்குப் பிடித்தவைகளை நீங்களும் பகிர்ந்து கொள்ளலாமெ!
     
    Last edited by a moderator: Dec 11, 2019
    Loading...

  2. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    எனக்கு உங்கள் வரிகளை படிக்க இயலுகிறதே..

    இன்னும் எத்துனை வார்த்தைகள் சொன்னாலும் தகும் அந்த மகா கவிக்கு.. இந்நாளின் அவரை நினைவு கூற உங்கள் நூல் ஒரு நல்ல ஆரம்பம் :bowdown

    நான் என்றும் விரும்பும் வரிகளுக்கு சொந்தக்காரன்..
    நானும் சில வரிகளை எழுத காரணமானவன்..
    அவருக்காய் நான் முன்னமே எழுதிய வரிகள்
    இங்கே உள்ளன

    http://www.indusladies.com/forums/tamil-poems/97849-2958;-2985;-3021;-2970;-3009;.html#post1246285
     
  3. PushpavalliSrinivasan

    PushpavalliSrinivasan IL Hall of Fame

    Messages:
    4,712
    Likes Received:
    3,758
    Trophy Points:
    340
    Gender:
    Female
    அன்புள்ள வேணி,
    நீங்களும் பாரதியின் கவிதைகளால் கவரப்பட்டவர் என்பதை அறிந்து மட்டிலா மகிழ்ச்சி கொண்டேன். உங்களின் கவிதாஞசலியையும் படித்து மிகவும் ரசித்தேன். இவ்வாண்டு விநாயக சதுர்த்தி பாரதியின் நினைவு நாள் இரண்டும் ஒரு சேர வருவதால் மக்கள் பாரதியை மறந்து விட்டனர் என்று நினைக்கிறேன். நாமாவது அவருக்கு அஞ்சலி செய்வதை நினைத்து மகிழ்ச்சியாக இருக்கின்றது.
    அன்புடன்
    புஷ்பவல்லி
     
  4. iyerviji

    iyerviji IL Hall of Fame

    Messages:
    34,592
    Likes Received:
    28,760
    Trophy Points:
    640
    Gender:
    Female
    Dear Pushpa Mami

    I am also not able to read . From Veni's post can make out that you have written about Bharathi. I also love Bharathi's songs. Nice of you to remember him today

    Namaskaram
    viji
     
  5. PushpavalliSrinivasan

    PushpavalliSrinivasan IL Hall of Fame

    Messages:
    4,712
    Likes Received:
    3,758
    Trophy Points:
    340
    Gender:
    Female
    கவிக்குயில் பாரதிக்கு அஞ்சலி
    ,
    செப்டம்பர் 11ஆம் தேதி ஆண்டு தோறும் பாரதி நினைவு நாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில் நாமும் அவரை நினைவு கூறலாமஎன்று நினைக்கிறேன்.பாரதியின் கவித்திறமையை என்னென்று சொல்லுவது? அவரை தேசீயக்கவி என்று சொல்லுவதா, சமுதாயச் சீர்திருத்தக்கவி என்று சொல்லுவதா, குழந்தைக்கவி என்பதா, அல்லது ஆன்மீகக்கவி என்பதா? மேற்கூறிய அனைத்து வகையைச் சேர்ந்த கவிதைகளையும் அவர் புனைந்துள்ளார்.

    அவரது கனல் தெறிக்கும் தேசபக்திப் பாடல்கள் கோழைகளையும் வீறுகொண்டு எழச்செய்யும்.'தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்' என்ற அவரின் பாடல் வறுமையில் வாடும் ஒரு மனிதனுக்காக அவர் மனம் குமுறி எழும் ஆவேசத்தைக் காட்டுகிறதென்றால் 'பெண்மை வாழ்கென்று கூத்திடுவோமடா பெண்மை வெல்கென்று கூத்திடுவோமடா' என்ற பாடல் அவர் பெண்களின் அவல நிலை கண்டு பெண் விடுதலைக்கு வீறுகொண்டு குரல் கொடுப்பதைக் காட்டுகிறது. அவரது புதிய ஆத்திச்சூடியும் பாப்பாப் பாட்டும் எளிய இனிய தமிழில் தெள்ளென விளங்கும்படி அமைந்துள்ளது.

    ஞானப் பாடலிலும் அவரது கவித்திறம் சொல்லற்கரியதே. 'நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே' 'சென்றதினி மீளாது மூடரே' 'செத்தபிறகு சிவலோகம் வைகுந்தம் சேர்ந்திடலாமென்றே எண்ணியிருப்பார்' போன்றவை சிறந்த உதாரணம் ஆகும்.

    அவரது கண்ணன் பாட்டுகள் அனைத்துமே கொள்ளை அழகுடன் மனத்தை ஈர்க்கின்றன. கண்ணனைத் தாயாகவும் தந்தையாகவும் குழந்தையாகவும் தோழனாகவும் பணியாளனாகவும் எசமானனாகவும் காதலனாகவும் காதலியாகவும் உருவகித்துப் பாடியுள்ள அழகிற்கு ஈடுஇணையில்லை. பாரதியாருக்கும் ஆழ்வார்களைப் போல் பக்தி இலக்கியத்தில் நிச்சயமாக ஒரு இடம் உண்டு.

    பாரதியின் பாஞ்சாலி சபதம் ஒருஇசைக்காவியம் என்றால் அவரின் சக்தி, முத்துமாரி, மலரின்மேவு திருவே, வெள்ளைத்தாமரை ஆகிய பாடல்களும் கவின்மிகு சொற்சுவையும் பொருட்சுவையும் மிக்கவை.

    பாரதியைப் பற்றி இன்னும் எவ்வளவோ கூறலாம். அஞா நெஞ்சினனாய்க் காலனைக் காலால் மிதித்திடுவேன் என்று காலனுக்கே சவால் விட்ட பாரதியார், அவர் தினமும் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் அன்புடன் பழகிவந்த யானையின் காலால் இடரப்பட்டு நோய்வாய்ப்பட்டு தமது 39 வது வயதில் காலமானார்.

    பாட்டுக்கொரு புலவன் பாரதியடா' என்ற பாரதியின் புகழ் இப்பாருள்ளளவும் நிலத்திருக்கும்.

    வாழ்க மகாகவி பாரதி! வாழ்க செந்தமிழ்! :bowdown:bowdown:bowdown

    பாரதியாரின் பாடல்களில் உங்களுக்குப் பிடித்தவைகளை நீங்களும் பகிர்ந்து கொள்ளலாமெ!
     
    Last edited by a moderator: Dec 11, 2019
  6. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Pushpavalli ma'am,
    True, Bharathiyaar is one of a kind kavi..
    All the songs you had mentioned here are very well known ..like kuyil paatu and kannan paattu. Of the things I wanted to read at least once in my life time is Bharathiyar songs.
    Thank you for making me remember that small desire of mine.
    I am also waiting to enjoy his words, through our friends here.

    sriniketan
     
  7. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    விவேக வரிகளால்
    வீரம் விதைத்தவன்.
    பன்மொழிப் புலவன்
    பண்டைத்தமிழை உயர்த்தியவன்.
    உடலால் மறைந்தாலும்
    பாடலால் வாழ்பவன்.
    யுகம் கடந்து வாழும்
    யுக கவிஞன்.

    அந்தக் கலைஞனுக்கு உங்கள் அர்ப்பணம் அருமை
    நானும் தலை வணங்குகிறேன்
    அவன் தடம் கொண்டு
    தன்னம்பிகையுடன் வீறு நடை போடும்
    தமிழச்சி என்னும் பெருமையில். :thumbsup:-)
     
  8. laddubala

    laddubala Gold IL'ite

    Messages:
    4,035
    Likes Received:
    80
    Trophy Points:
    128
    Gender:
    Female
    வீரமிக்க பாடல்களால் நடுங்க வைத்து
    பாப்பா பாடினால் தூங்க வைத்து
    காதல் பாடி கிறங்க வைத்து
    கண்ணன்பாட்டு, குயில் பாட்டால் கானம் பாடி
    பாஞ்சாலி சபதம் முதல் சந்திரிகையின் கதை வரை
    அதனையும் பொக்கிஷமே
    அப்புலவனுக்கு நினைவு தினம்
    உடலால் மறைந்தாலும்
    நினைவால் என்றும் வாழும்
    அவனை நினைவோம்
    படைப்புக்களைக் கொண்டு

    பாடல்களைப் பாடி
    தாயகத்தைப் போற்றி !!!

    நன்று அம்மா உங்கள் அர்ப்பணம்
    தங்களுடன் நானும் வணங்குகிறேன்
    அப்புதுமை புலவனை :bowdown:bowdown:bowdown
     
  9. meenasankaran

    meenasankaran Platinum IL'ite

    Messages:
    1,611
    Likes Received:
    856
    Trophy Points:
    208
    Gender:
    Female
    கவிஞர் பாரதியின் கலை பொக்கிஷங்களை நினைவு கூற இப்படி ஒரு வாய்ப்பளித்தமைக்கு உங்களுக்கு ஒரு மிகப் பெரிய நன்றியை சொல்ல விரும்புகிறேன். அருமையான கட்டுரை. மிகவும் ரசித்தேன். அவரின் பாடல்களில் எனக்கு பலது பிடிக்கும் என்றாலும் கீழ் வரும் அவரின் வரிகள் என்னை சற்று அதிகமாக கவர்ந்தவை.

    "எத்தனை கோடி இன்பம் வைத்தாய் எங்கள் இறைவா! இறைவா! இறைவா!

    சித்தினை அசித்துடன் இணைத்தாய் - அங்கு
    சேரும் ஐம்பூதத்து வியனுலகமைத்தாய்
    அத்தனை உலகமும் வர்ணக்களஞ்சியம்
    ஆக பலபல நல் அழகுகள் சமைத்தாய்

    முக்தி என்றொரு நிலை சமைத்தாய் - அங்கு
    முழுதினையும் உணரும் உணர்வமைத்தாய்
    பக்தி என்றொரு நிலை வகுத்தாய் - எங்கள்
    பரமா பரமா பரமா !"

    கவிஞர் பாரதி தமிழ்நாட்டின் ஒரு கலை பொக்கிஷம். அவர் சிந்தனைகள் காலத்திற்கு அப்பாற்ப்பட்டது.

    அவரை நினைவு கூற வாய்ப்பளித்தமைக்கு மீண்டும் ஒரு நன்றி.
     
  10. Padmini

    Padmini IL Hall of Fame

    Messages:
    6,795
    Likes Received:
    1,177
    Trophy Points:
    345
    Gender:
    Female
    Dear Pushpa
    Oru maha kaninganukku neengal miga azhagaga anjali selutthi ullergal. Paatu thiraththalae ivvaiyaththai paliththavan avan. Pappaakku, pennukku, kadhaluku enru avan vadiththitta paadalgal nenjil nenga idam petru nirpana. Kannanai sevaganai varniththu padiya azhagudhaan enne!Thenin kadaisi dottu varai inippu ulladhu pol, avan paadal anaiththum then.Kurippaaga, en ullaththil enrum alai modhum paadal
    [​IMG] with love
    pad

Share This Page