1. Have an Interesting Snippet to Share : Click Here
  Dismiss Notice

Letter Love : உயிரைத் தொலைத்தேன் உன்னில் நானோ - 2

Discussion in 'Stories in Regional Languages' started by divyasselvan, Dec 29, 2011.

 1. divyasselvan

  divyasselvan Silver IL'ite

  Messages:
  150
  Likes Received:
  181
  Trophy Points:
  93
  Gender:
  Female
  Part 1

  அன்பு மிக்கவரே,

  இந்த நாள் உங்களுக்கு நினைவிருக்கிறதா? சென்ற வருடம் சர்வதேச பெண்கள் தினத்திற்காக நீங்கள் ஒருங்கிணைத்த இரத்த தான முகாமிற்கு நானும் வந்திருத்தேன். அது தான் நான் முதன் முதலில் செய்த தானம்.

  வைஷ்னவியின் தொடர் நச்சரிப்பால் தான் நான் அங்கு வந்திருந்தேன். உங்கள் விமர்சன எழுத்துக்களில் வசீகரித்து போயிருந்த எனக்கு உங்கள் முகம் பரிச்சயப்படவில்லை.

  ‘இளா.. “ என்று உங்கள் பெயரை வைஷ்னவி உச்சரித்த போது தான் நான் உங்களை கவனித்தேன். முன்பை விட கொஞ்சம் உடல் பூசி இருந்தீர்கள். கொஞ்சம் தாடி, நீண்ட ஜிப்பா எல்லாம் புதிதாக இருந்தது உங்களுக்கு.

  வைஷ்னவி என்னையும் சேர்த்து உங்களிடம் இழுத்து சென்று ..
  “என்ன இளா நியாபகம் இருக்கா என்னை”

  “மிஸ் மிஸ் .. நீங்க என்னோட L.K.G மிஸ் தானே.. “

  “கிண்டல் குறையல இளா உனக்கு”

  “பின்ன என்ன வைஷ்.. பாத்து என்ன ஒரு ஆறு மாசம் இருக்குமா.. அதுக்குள்ள எப்படி மறப்பேன்.. அது சரி வேலை எல்லாம் எப்படி போய்கொண்டு இருக்கு “

  “போகுது.. உனக்கு”

  “அதுவா போகுது போகுது”

  “அது சரி பெண்கள் தினத்துக்கு நீ ஏன் இளா வந்து இருக்க”

  “அதுவா .. இலவசமா வெட்டி சட்டை தராங்களாம் அதான் வந்தேன்.. வாங்கிவிட்டீர்களா” - -

  உங்கள் உரையாடலை கேட்டுக்கொண்டே இருக்கனும் போல இருந்தது. ஆனால் என்னைப்பற்றி நீங்கள் இருவருமே கண்டுக்கொள்ளாதது நெருடலாக இருந்தது. எல்லாரைப்போல நானும் ஒரு செயற்கை இருமலில் உங்கள் கவனத்தை திசை திருப்பினேன்..

  ‘ஓ மறந்துட்டேன்.. இளா இது மலர்விழி .. என்னோட பக்கத்து வீட்டுல இருக்கா.. ரொம்ப தோஸ்த்.. மலர் .. இது இளஞ்செழியன்.. என்னோட கல்லூரி தோழன்.. “

  வைஷ்னவிக்கு உங்களுக்கு தெரிந்திருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை நான்.

  ‘வணக்கம்’ என்று ஒரு வார்த்தையோடு முடித்து கொண்டேன். உங்கள் விமர்சனங்கள் பற்றியோ .. உங்களைப் பற்றி அலுவலகத்தில் தேடியதோ .. அது கிடைக்காமல் தவித்ததை பற்றியோ சொல்ல அப்போது என் மனம் தயாராக இல்லை..

  “என்னங்க மலர்விழி நீங்க இரத்தம் குடுக்க வந்தீங்களா .. இல்லை இரத்தம் ஏத்திக்க வந்தீங்களா” என்று நீங்கள் நையாண்டி செய்த போது என் அத்தனை இரத்தமும் கண்ணங்களில் நாணமாய் தேங்கியதை நீங்கள் கவணித்திருக்க மாட்டீர்கள்..

  யாரோ அழைக்க ஒரு நிமிடம் என்று சென்றவர் தான் நீங்கள்.. பிறகு அங்கும் இங்கும் அலைவதைத்தான் பார்த்தேன். நீங்கள் எத்தனை நேரம் என்னுடன் இருந்திருந்தாலும் உங்களிடம் அதிகம் உரையாடி இருக்க மாட்டேன் என்று தெரியும். உங்களைப் போல இயல்பாய் பேச வராது எனக்கு.. அமைதியை அதிகம் நேசிப்பவள் நான். எனக்கு நண்பர்கள் கூட குறைவு தான். நிறைய நண்பர்கள் வைத்து கொள்ள ஆசை தான் ஆனால் அப்படி எனக்கு அமையவே இல்லை. பேச ஆரம்பிக்கும் பல தோழர்கள் ஒரு வாரத்திலேயே காதல் என்று ஆரம்பித்து விடுவார்கள். உண்மையில் என்னைப்பற்றி எதுவுமே தெரியாமல் வரும் அவர்கள் காதலுக்கு நான் என்ன பச்சை விளக்கா காட்ட முடியும்.. தன்மையாக மறுத்தால் கூட அவர்கள் நட்பு எனக்கு மீண்டும் கிட்டாது. இதனால் எனக்கு தலைக்கனம் பிடித்திருக்கிறதென்று நினைத்து கொள்வதுண்டு.

  உண்மையில் எல்லா பெண்களுக்கும் அழகாய் இருக்க தான் ஆசை இருக்கும்.. எனக்கு அந்த அழகு தான் ஒரு பெரிய விலங்காக இருக்கிறது.. என்னிடம் பேச கூட முயற்சிக்காமல் என்னை ‘அல்டாப்பு’ என்று பலர் அழைப்பதுண்டு. ஒரு பெண் அழகாக இருந்தாலே அவள் செருக்கோடு தான் இருப்பாளா என்ன.. இல்லை அழகு இருந்தால் அறிவு இருக்காது என்று வேறு வேதாந்தம் பேசுவார்கள். பல பெண்கள் காதல் தூது வருவதற்கே என்னிடம் பேச வருவார்கள். இதனால் எனக்கு உண்மையான நட்பை கண்டு கொள்ள கொஞ்சம் சிரமங்கள் இருப்பதுண்டு.. இதனால் நானே என்னை சுற்றி ஒரு சுவர் எழுப்பிக்கொண்டேனோ தெரியவில்லை..

  என் தனிமைக் காலங்களை ப்பற்றி எல்லாம் உங்களிடம் நிறைய சொல்ல வேண்டும்.. இப்போது தூங்கும் நேரம்..

  (மடல் பயணம் தொடரும்.. )

  மலர்..
  08-03-2009
   
  4 people like this.
  Loading...

 2. suganyarangasam

  suganyarangasam Gold IL'ite

  Messages:
  1,133
  Likes Received:
  326
  Trophy Points:
  158
  Gender:
  Female
  hai ma...
  malar vizhi is too silent and cute....
  indha letters ellam eppo ilancheliyan padippan.....
  2009 la irundhu letters start aagudhu... present la(2011) rendu perum serndhu letter padikanum ..
  nice update..
   
 3. zingy

  zingy Local Champion Staff Member Platinum IL'ite

  Messages:
  1,115
  Likes Received:
  789
  Trophy Points:
  215
  Gender:
  Female
  Thanks for intimation divya.
  Episode is very cute and flow of thoughts is very natural . kepp them coming
   
 4. divyasselvan

  divyasselvan Silver IL'ite

  Messages:
  150
  Likes Received:
  181
  Trophy Points:
  93
  Gender:
  Female

  This is a repost.. The story got completed by 2010 itself.. as i said this is imaginary story.. u ll know the climax only in last episode.. :)
   
 5. theanmozhi

  theanmozhi Gold IL'ite

  Messages:
  780
  Likes Received:
  166
  Trophy Points:
  108
  Gender:
  Female
  divya pa,

  supera iruku pa.......differenta vum iruku.......

  keep going pa..........
   
 6. sipanneer

  sipanneer Bronze IL'ite

  Messages:
  447
  Likes Received:
  43
  Trophy Points:
  48
  Gender:
  Female
  Hi Divya,

  romba nalla irukku pa....divya character enakku romba pidichirukku...
  ila vum super.....
   

Share This Page