1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

Kutumbam Pirantha Kathai

Discussion in 'Posts in Regional Languages' started by jayasala42, Oct 5, 2018.

  1. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,365
    Likes Received:
    10,561
    Trophy Points:
    438
    Gender:
    Female
    ஆதி மனிதன் தனக்கு வேட்கை தோன்றிய போது உறவுமுறை பாராமல் உறவு கொண்டான். காரணம் உறவுமுறை
    அப்போது தோன்றியிருக்கவில்லை. பண்பாட்டு வளர்ச்சியின் முதல் கட்டம் பெற்றோரும் பிள்ளைகளும் தமக்குள்
    உறவைத்தவிர்த்து வாழத் தொடங்கிய காலமாகும். தாய் மகனோடும் தந்தை மகளோடும் உறவு கொள்ளல் தகாது
    என விலக்கியதால் ரத்த உறவுக் குடும்ப முறை Consanguinity தோன்றியது.
    இரண்டாம் கட்டத்தில் சகோதரர் சகோதரியர் தமக்குள் உறவைத் தவிர்த்து வாழத் தலைப் பட்டனர். அப்போது
    ஒருவருக்கொருவர் பங்காளி ஆயினர். இம்முறை புனலுவா குடும்பம் எனப்பட்டது Punaluva = பங்காளி. கோத்திரம்
    எனல் இதைத் தான். சகோத்திர மணம் ஆகாது எனல் இக்கட்டம்.
    எக்காலத்திலும் தந்தையைக் காட்டிலும் தாயை அடையாளம் காட்டுதல் சுலபம். தாய் வழி வம்சாவளி உருவாக
    இதுவே அடிப்படை. பெண்வழி தான் முதல் வம்சாவளி என்று முதன்முதலில் சொன்னவர் பாகோஃபென் Bachofen.
    மூன்றாம் கட்டத்தில் ஓர் ஆண் பல மனைவியரோடும் ஒரு பெண் பல ஆண்களோடும் வாழ்ந்தார்கள். ஆனாலும்
    ஒருவனையோ ஒருத்தியையோ பிரதான கணவன், பிரதான மனைவி என வைத்துக் கொண்டார்கள். இம்முறை
    இணைக்குடும்பம் எனப்பட்டது. இக்கட்டமே கற்பு என்னும் கருத்து நிலைகொள்ள ஆரம்பித்த கட்டம்.
    ஆண் பெண்ணிடம் கற்பை எதிர்பார்க்க த்தொடங்கியதால் மீறல் சோரம் Adultery எனப்பட்டது. பல கணவன்,
    பல மனைவி என்னும் போதும் ஏக காலத்தில் ஒருவன் ஒரு த்தியோடு தான் வாழ்ந்திருக்க நேரும். கூடிவாழும்
    அச்சொற்ப கால த்தில் மனைவி தனக்கு மட்டுமே உரியவள் என்னும் சுய நலம் பிறந்தது. Possession, Possessiveness.
    இச்சுய நல வேட்கையே கற்பு பெண்ணின்மீது சுமத்தப்பட நேர்ந்த அடிப்படையாகும். ஆணுக்குப் பெண் அடிமையான து
    இக்கட்டத்தில் தான்.
    நான்காம் கட்டமே இன்றுள்ள ஒரு தாரக் குடும்பம். ஆணின் ஆதிக்கம் உச்சம் கண்டது இப்போது தான். தந்தை வழி வாரிசு ,
    தந்தைக்கே சர்வாதிகாரம் Patria Potesta மூத்த மகனுக்கே முடிசூட்டு Prima Geniture ஆகிய மரபுகள் இப்படித்தான் தோன்றின.
    இக்கட்ட த்தில் தாய்வழி மங்கி மறையத்தொடங்கிற்று. பெண்சோரம் கடும்தண்டனை, ஆண்சோரம் அனுமதி என்னும்
    ஓர வஞ்சனை இக்கட்டத்தில் நிலவியது.
    ஒருபக்கம் ஒருதார மணம், இன்னொரு பக்கம் விபசாரம் - இரண்டும் பண்பாடுகள். ஆணின் சுதந்திரத்திற்கு இரண்டும்
    சாதகம். திருமண அமைப்பில் பிற ஆடவனை நாடமுடியாத பெண் விபசாரியாகத் தான் அவ்வுரிமையைக் கோரமுடிந்தது.
    ஆணுக்கோ கணவன் என்னும் கௌரவமும் விபசாரியை நாடும் சலுகையும் ஒருசேர வழங்கப்பட்டன.
    மகாபாரதத்தில் பீஷ்மர் இந்த நான்கு நாகரிக வளர்ச்சிகளை விளக்குகிறார். அவை முறையே நான்கு யுகங்களுக்கு உரியவை
    என்கிறார். சங்கல்பம், சமஸ்பர்ஷம், மைதுனம், த்வாண்டவம் என்னும் நான்கும் க்ருதயுகம், த்ரேதாயுகம், த்வாபர யுகம்,
    கலியுகம் என்னும் நான்கு யுகங்களுக்கும் பொருந்தும் என்கிறார்.
    சங்கல்பம்- வரைமுறையற்ற உறவுகள். சமஸ்பர்ஷம்- சகோத்திர மணம் இல்லை. மைதுனம்- குழுமணம் இல்லை,
    Polygamy, Polyandray உண்டு. த்வாண்டவம்- ஒருதார மணம். இதன் யுகம் கலியுகம். கணவன் இறந்தபின் மனைவி
    உடன் கட்டை இக்கட்டம். உட்கிடக்கிய ஒரு கைம்பெண் வேறு ஆடவன் தோளில் சாய்ந்துவிடக் கூடாது. ஒருபுறம்
    ஆணுக்கு உதவிசெய்ய விபசாரம், இன்னொரு பக்கம் பெண்ணுக்கு எதிராக சதி என்னும் பெயரில் ஒரு சதி.
    I need not say what today's stand is.

    Jayasala 42
     
    shreepriya and kaniths like this.
    Loading...

Share This Page