1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

Kathai Mukkiyam Alla.

Discussion in 'Posts in Regional Languages' started by jayasala42, Feb 3, 2017.

  1. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,367
    Likes Received:
    10,570
    Trophy Points:
    438
    Gender:
    Female
    மிக அருமையான வரிகள்
    கண்டிப்பா_படிங்க:
    ❤ஒரு கிராமத்து பெண்ணிற்கும் ஒரு நடுத்தர நகரத்து வாலிபனுக்கும் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு மிகச் சிறப்பாக திருமணம் நடந்தது முடிந்தது.
    ❤திருமணத்திற்கு பிறகு கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் காதலித்தனர்...
    ❤இருவருக்குமே அது முதல் காதல் என்பதால் அவர்களின் காதல் மிகவும் தூய்மையானதாக இருந்தது.
    ❤ நகரத்து வாழ்க்கையை பற்றி எல்லாவற்றையும் தன் மனைவியிடம் பகிர்ந்துக்கொள்வான்.
    அதேபோல, அவளும் கிராமத்து.,. அதாவது ஒருவர் மீது ஒருவர் அதிகப்படியான நம்பிக்கை வைத்தனர்...,
    ❤ ஒருவர் ஆசையை மற்றோருவர் நிறைவேற்றி என்று அன்புடன் வாழ்ந்தனர்.
    ❤ஞாயிற்றுக்கிழமை என்றாலே அவர்களுக்கு தீபாவளிதான் கொஞ்சம் சண்டை, நிறைய அக்கறை, என்று ஒரு குழந்தை பிறக்கும் வரை அவர்களின் திருமண வாழ்க்கை சந்தோஷமாகத்தான் இருந்தது.
    ❤அவர்களுக்கு ஒரு அழகான பெண் குழந்தையும் பிறந்தது.
    ❤ குழந்தை பிறந்த நேரமோ என்னமோ! கணவனுக்கு வேலையில் பதவி உயர்வு கிடைத்தது.
    ❤முன்பை விட இப்போது வேலை சுமை அதிகரிக்க கொஞ்ச கொஞ்சமாக தன் மனைவியை விட்டு அவன் பிரிய ஆரம்பித்தான்.
    ❤அவர்களின் நெருக்கம் குறைந்தது.
    ❤ அடிக்கடி வெளியூர் பயணம் செல்லவும் நேர்ந்தது.
    ❤ இந்த ஒரு பிரிவு அவனுடைய மனைவிக்கு பெறும் இழப்பாக இருந்தது.
    ❤ தன் கணவன் மீது அடிக்கடி கோவப்பட ஆரம்பித்தாள்.
    ❤ஒருநாள் அவர்களின் வாய் சண்டையில் கணவன் கோபித்துக்கொண்டு வெளியே சென்றுவிடுகிறான்.
    ❤ கோபத்தில் அவன் மனைவி ஒரு சிறிய வெள்ளை காகிதத்தில் "நீ முன்பை விட இப்போது இல்லை! மிகவும் மாறிவிட்டாய்! நீ என்னிடம் சரியாக பேசியே பல மாதங்கள் ஆயிற்று நான் வீட்டை விட்டு எங்கோ போகிறேன்! தயவுசெய்து என்னை தேடாதே!" என்று எழுதி படுக்கையறையின் கட்டிலுக்கு மேலே போட்டுவிட்டு இவாள் கட்டிலுக்கும் கீழே ஒழிந்துக்கொண்டாள்.
    ❤கோபம் தனிந்து தன் மனைவியின் பெயரை சொல்லியே உள்ளே வந்த கணவன் கட்டிலில் இருந்த கடிதத்தை படித்து அதன் பின்புறம் இவன் ஏதோ எழுதிவிட்டு தன் நன்பனுக்கு கைபேசியில் அழைக்கிறான்.
    "மச்சான்! இன்று நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன்டா! பிசாசு பொய்டாடா!" என்று பேசிக்கொண்டே வெளியே நடக்கிறான்.
    ❤கணவன் பேசியதை கேட்டவள் தன் வாயை பொத்திக்கொண்டு விக்கி விக்கி அழுகிறாள்.
    "அடப்பாவி! என்னை இவ்வளவு நாளாய் ஏமாத்திட்டானே! எவளையோ வச்சிருக்கான் போல அதான் இவ்வளவு Cool Ah! பேசிட்டுப்போறான்!!" என்று பொலம்பி எழுந்து கட்டிலில் தன் கணவன் எழுதிய கடிதத்தை எடுத்து படிக்கிறாள்.
    ❤"அடியே லூசு பொண்டாட்டி!" கட்டிலுக்கும் கீழே உன் காலு தெரியுது.டி!
    ❤ நான்தான் அன்னைக்கே சொன்னேல என் உயிர் உன்னிடம் இருக்கு.னு!
    ❤நீ போய்விட்டால் நான் இறந்துடுவேன்டி!!!"
    இதை படித்தவள் கண்களில் நீர் பொங்க அழுதுகொண்டே "நான் எங்கும் போலங்க! வீட்லதாங்க இருக்கேன்!" நீங்க எங்க இருக்கிங்க!!! ஏனுங்க!!! என்று பேசிக்கொண்டே தன் கணவனை தேடுகிறாள்.
    ((பொதுவாக ஆண்கள் சொத்து வாங்கும்போது தன் மனைவி பெயரிலும், கடன் வாங்கும்போது தன்னுடைய பெயரிலும் வாங்குவார்கள்.
    *அதனுடைய உண்மையான அர்த்தம் என்னவென்றால்* :
    கடன் என்று கேட்டால் என்னை வந்து கேட்கட்டும்!
    சொத்து என்றால் அது தன்னுடைய மனைவி மட்டுமே என்பதாகும்.
    # நேசியுங்கள்.
    நேசிக்கப்படுவீர்கள்...#
     
    GaythriV, PavithraS and blackbeauty84 like this.
    Loading...

Share This Page