Interesting facts/stories about Goddess Parashakthi

Discussion in 'Religious places & Spiritual people' started by navs23, Jan 28, 2011.

  1. Sundaravalli

    Sundaravalli Junior IL'ite

    Messages:
    37
    Likes Received:
    5
    Trophy Points:
    13
    Gender:
    Female
    தன்னை நினைத்து வணங்கும் பக்தர்களுக்கு அளவற்ற செல்வத்தை அள்ளித்தரும் இந்த அன்னையின் கோவிலுக்கு சென்று அன்னையை பயபக்தியுடன் வணங்கி அவரது ஆற்றலை பெறலாம். பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு ஆலயம் வசதியாக தினமும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் கோவில் நடை திறந்து இருக்கும். அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களிலும், திங்கள், வெள்ளிக்கிழமைகளிலும் ஆலயத்தில் சிறப்பு பூஜை நடைபெறும். கோவில் பூசாரி செல்வம் அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்வார் அம்மனுக்கு சிறப்பு பூஜை முடிவடைந்ததும், அன்று மாலை அம்மன் உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறும். அள்ளித்தரும் தங்க கவசத்துடன் புதுப்பொலிவுடன் தகதகவென்று மின்னியபடி காட்சியளித்த அம்மனை பக்தர்கள் தரிசனம் செய்தனர் . அம்மனின் மகிமையை கண்டு அதைப்பார்த்த அனைவரும் இது அம்மனின் சக்திதான் என்று முடிவு செய்தனர்.
     
  2. Sundaravalli

    Sundaravalli Junior IL'ite

    Messages:
    37
    Likes Received:
    5
    Trophy Points:
    13
    Gender:
    Female
    நம் மனஸை உருக்கும்படியாக பலர் அபிப்ராயம் சொல்வார்கள். ஸதாகாலமும் கொஞ்சங்கூட அம்பாள் பாவமே இல்லாததாயிருந்தாலும் நம்முடைய பக்தியும், சரணாகதியும்தான் முக்யம். அப்படியிருக்கும்போது, ஒரு க்ஷூத்ர தேவதையையோ, ஸ்ரீ மதுரகாளியையோ, நம்முடைய பக்தி சுத்தமானதாக இருந்தால், அம்பாள் நமக்கு அநுக்ரஹம் பண்ணிவிடுவாள். அநுக்ரஹத்தைப் பெறமுடியும் என்று எண்ணும்போது நம்முடைய பக்தி முக்யம். செல்வம் தருவது (லக்ஷ்மி), அறிவு தருவது (ஸரஸ்வதி), விக்னத்தை போக்குவது (பிள்ளையார்), ஆரோக்யம் தருவது (தன்வந்தரி; ஸூரியபகவானும் தான்), அல்லது நவக்ரஹங்கள் மாதிரி நமது ஜாதக பீடைகளைப் போக்குவது, ஐயனார், மாரியம்மன் மாதிரி துஷ்ட சக்திகளையும் நோய்நொடிகளையும் போக்குவது – ஸ்ரீ மதுரகாளி அன்னை. முழுமுதலாக நின்று கொண்டு என்றும் அநுக்ரஹிக்க கூடியவள். என்றும் சக்தியான அம்பாளின் தாஸனாக இருந்து கொண்டே அவளை பூஜிக்கும் ஸ்தானத்தைப் பெற்றிருக்க ஆவல். நம்முடைய ஆசார்யாளும் சக்தியான அம்பாள் என்றும் சொல்லியிருக்கிறார்.* என்னை தூண்டிவிடும் சக்தியே அவள்தான். அவளை நாம் வேண்டிப் பெறக்கூடிய ஒன்றை அருளுவதாக இருக்க வேண்டும். நமக்கு அநுக்ரஹம் பண்ணும் அவளுக்கு அருளும் சக்தி பற்றி தெரியவில்லையோ!என்று சந்தேகம் மட்டும் இருக்க கூடாது.
    நம்முடைய பக்தி சுத்தமானதாக இருந்தால் நமக்கு அநுக்ரஹம் பண்ணிவிடுவாள். அம்பாள், ஸாக்ஷாத் பராசக்தி. ஒரு பெரிய தெய்வத்தினை, பூர்ணசக்தியை, முறையே ஸ்துதிக்க வேண்டும். அவள் திருப்பாதம் பணிந்து, எல்லோரும் சௌக்கியமாக இருக்க பிரார்த்திக்கிறேன்
     
  3. Sundaravalli

    Sundaravalli Junior IL'ite

    Messages:
    37
    Likes Received:
    5
    Trophy Points:
    13
    Gender:
    Female
    உயிர் ஆனாய் நீ என் உயிரில் ஊறும் உணர்வானாய்
    ஞானப் பேரொளியின் பொருள் ஆனாய்
    தேன் ஆனாய் உயிர்க்கு உயிரே ஆனாய்
    மோட்ச சாம்ராஜ்யத்தின் கடைக்கண் பார்வையால் கடாட்சம் ஆனாய்
    உன்னை உபாசனை, செய்யும் அனைவருக்கும்
    எல்லா சம்பத்துகளையும் ஏராளமாக அள்ளிக் கொடுக்கும் தெய்வமே நீ ஆனாய்
    உன்னை வாக்கு, காயம், மனம் எல்லாவற்றாலும் துதிக்கிறேன்.
    வேதங்களின் ஸ்வரூபிணியாகத் திகழ்பவளே தாயே
    தினமும் உன்னை யார் துதிக்கிறார்களோ, அவர்,
    இவ்வுலகில் எல்லா நற்குணங்களும் நிறைந்தவர்களாகவும், மிகுந்த பாக்யசாலிகளாகவும்
    புத்திப் பலம் உள்ளவர்களாகவும் ஆகிறார்கள்
    உனக்கு தண்டனிட்ட நமஸ்காரம், தாயே
    கடைக்கண் கடாட்சம் எல்லா ஐஸ்வர்யங்களையும் அளிக்க வல்லது.
    எப்படி ஒரு பிரமாண்டமான மரம் எல்லா ஜீவராசிகளுக் கும் நிழல் கொடுத்து
    அவர்களுடைய களைப்பைப் போக்கிப் புத்துணர்வு பெற வைக்கிறதோ
    அது போன்ற கருணை கொண்டவள் நீ தேவியே நமஸ்காரம் உன் பேரழகை யாரால் வர்ணிக்க முடியும்
    பார்வதி என்றும் போற்றித் துதிக்கப் படுகிற ஸ்ரீ மதுரகாளி தாயே
    பக்தர்களின் ஏழ்மையைத் தொலைத்து ஐஸ்வர்யம் பெருக அருள்வாயாக.
    குடும்பத்தில் மன அமைதியை இழந்து தவிப்பவர்கள் மன நிம்மதியையும், மகிழ்ச்சியையும் பெறவும்,
    குடும்பத்திலுள்ள பிரச்சனைகள் தீரவும் அருள்வாயாக.
    உன் கருணைக்கு உண்மையான பாத்திரவானாக என்னை ஆக்குவாயாக.
    உன் கடைக்கண் பார்வையால் உடலே சிலிர்க்கும் ஸ்ரீ மதுரகாளி தாயே
    உன் திருப்பாதம் பணிந்து, எல்லோரும் சௌக்கியமாக இருக்க பிரார்த்திக்கிறேன்.
     
  4. Sundaravalli

    Sundaravalli Junior IL'ite

    Messages:
    37
    Likes Received:
    5
    Trophy Points:
    13
    Gender:
    Female
    One can visit the Temple on Mondays and Fridays only besides Navarathri, Tamil New Year, English New Year, Deepavali, Pongal and Festival days during Chithirai. The temple Timings : 6 am to 8 pm (with no break) every
    Monday & Friday and also on Full Moon
    & No Moon (amavasai & Pournami) days.
    Contact details are :
    Office telephone Nos: 04328-225333 / 291375

    You may also contact Mr. K. Balakrishnan for more information at 9994015512, who is working in the temple.
     
  5. Sundaravalli

    Sundaravalli Junior IL'ite

    Messages:
    37
    Likes Received:
    5
    Trophy Points:
    13
    Gender:
    Female
    தஞ்சம் என்று வந்தோரை தயையுடன் காக்கும் தெய்வம்
    நெஞ்சத்தில் வீற்றிருந்து நாளும் காக்கும் தெய்வம்
    நம்பி வேண்டி வந்தோரை நலமுடன் காக்கும் தெய்வம்
    துன்பங்கள் தீர்க்கும் தெய்வம் தூயவராய் நம்மை ஆக்கும் தெய்வம்
    கர்ம வினை நீக்கும் தெய்வம் காத்தருள் புரியும் தெய்வம்
    சிறுவாச்சூரில் உரை காஞ்சியில் வாழ்ந்த மாமுனி காமகோடியின் குலதெய்வம்
    வேண்டிடும் ப்ரார்த்தனையை என்றென்றும் நான் தொடர உந்தன் ஆசியின் அருகாமை வேண்டும்
     
  6. Sundaravalli

    Sundaravalli Junior IL'ite

    Messages:
    37
    Likes Received:
    5
    Trophy Points:
    13
    Gender:
    Female
    தஞ்சம் என்று வந்தோரை தயையுடன் காக்கும் தெய்வம்
    நெஞ்சத்தில் வீற்றிருந்து நாளும் காக்கும் தெய்வம்
    நம்பி வேண்டி வந்தோரை நலமுடன் காக்கும் தெய்வம்
    துன்பங்கள் தீர்க்கும் தெய்வம் தூயவராய் நம்மை ஆக்கும் தெய்வம்
    கர்ம வினை நீக்கும் தெய்வம் காத்தருள் புரியும் தெய்வம்
    சிறுவாச்சூரில் உரை காஞ்சியில் வாழ்ந்த மாமுனி காமகோடியின் குலதெய்வம்
    வேண்டிடும் ப்ரார்த்தனையை என்றென்றும் நான் தொடர உந்தன் ஆசியின் அருகாமை வேண்டும்
     
  7. Sundaravalli

    Sundaravalli Junior IL'ite

    Messages:
    37
    Likes Received:
    5
    Trophy Points:
    13
    Gender:
    Female
    ஸ்ரீ மதுரகாளிதேவியம்மன் ரொம்ப சாந்த சொரூபத்துடன் அமர்ந்திருப்பது விசேஷ அம்சம். மேலும், இந்த அம்மன் அருள் கூட்டும் முக பருவத்துடன் திகழ்வதாக ஐதீகம். குழந்தைப்பேறு இல்லாதவர்கள் ஸ்ரீ மதுரகாளிதேவி கோவில் சந்நிதிக்கு வந்து அர்ச்சனை செய்து வேண்டிக்கொண்டால், விரைவில் குழந்தை வரம் வாய்க்குமாம். திருமணத் தடை உள்ளவர்கள் அம்மனுக்கு பட்டுப்பாவாடை மற்றும் தங்ககவசம் சமர்ப்பித்து வழிபட்டால் விரைவில் கல்யாணம் கைகூடும் என்பது ஐதீகம். இந்தக் கோயிலின் பங்குனி/சித்திரைத் திருவிழாவும், பூச்சொரிதல் வைபவமும் வெகு பிரசித்தம். பக்தர்கள் மாவிளக்கு ஏற்றுவது இந்தக் கோயிலின் சிறப்பம்சம். கோவில் அம்மையிடம் வரம் கேட்கும் குழந்தை முகம் ஒன்று. இடத்தை அடைந்தபோது, கூட்டமான கூட்டம். பக்தி பிரவாகத்தில் ஆண்களும், பெண்களும், பெரியவர்களும், நடுத்தர வயதினரும், இளைய தலைமுறையினரும், சிறுவர்கள், சிறுமிகளுமாக ஜாதி பேதமில்லாமல் உட்கார்ந்துகொண்டிருந்தார்கள். உட்கார இடம் கிடைக்காதவர்கள் ஓரமாக நின்று கொண்டிருந்தார்கள். !ஆம் நாம் இவ்வுலகில் காண்பதனைத்தும் இறைவியின் கைவண்ணமே தவிர வேறெதுவுமில்லை. நாம் காண்பதனைத்தும் பயன்படுத்தும் அனைத்து பொருட்களும் அவளுடையதே. நம்முடைய உயிரும் அது தங்கியுள்ள உடலுமவள் அளித்ததே நமகென்று எதுவுமே சொந்தமில்லாத நிலைமையில் நான் என்றும், எனது என்றும் என்ற எண்ணம் எங்கிருந்து வந்தது? அம்பாளை மட்டும் உங்கள் உள்ளத்தில் விளையாட விடுங்கள். அவன் உங்கள் மனதில் உள்ள அனைத்து அசுரர்களையும் அழித்து உங்களுக்கு ஆனந்தமயமான வாழ்வை நிச்சயம் அருள்வாள். தாய்போல கருணை தரும் அன்பு முகம் நம்மிடையில் காட்சிதரும். ஆனந்த முகம். நமஸ்காரம் புரிகின்றோம் நம் தாயை இன்று. ஆடி வெள்ளி மற்றும் தை வெள்ளிக்கிழமைகளும் இங்கே விசேஷம். இந்த நாட்களில் அம்மனுக்குப் பாலபிஷேகம் செய்வதால், நமது இல்லத்தில் சகல சுபிட்சங்களும் பெருகும். இந்தத் தினங்களில் மஞ்சள் கொண்டு அம்மனுக்கு அபிஷேகம் செய்ய, மாங்கல்ய பலம் பெருகும் என்று சிலிர்ப்புடன் விவரிக்கிறார்கள் பக்தர்கள். மேலும், ஆடி மாதம் வெள்ளி மற்றும் கடைசிதை வெள்ளிக் கிழமைகளில் இந்தக் கோயிலில் நடைபெறும் விசேஷ அபிஷேக, பூஜை ஆராதனைகளில் கலந்துகொண்டு அம்மனைத் தரிசிக்க, அவளருளால் சகல நலன்களும் கிடைக்கும். அவள் திருநீறணிந்தால்; தயை கூர்ந்த அருள் புரிவாள். நம் நாவால் விவரிக்க இயலாத இறையம்சம் உடையவள் உலகம் ஈன்றத் தாயவள் சிறுவாச்சுரில் வந்து வீற்றிருக்கும்போது நமக்கு கவலைஎதற்கு, அவள் தம் திருவடியை தலைமேற் கொண்டு வாழ்வோம் அவள் நாம ஸ்மரணை ஒன்றேதுணையாக இருக்கும் எங்கும் ஸ்ரீ மதுரகாளி எதிலும் ஸ்ரீ மதுரகாளி என்று நினைத்தால் அதிசயம் மட்டுமில்லாமல் அவள் க்ருபை ஒன்றே துணையாக இருக்கும் நம்பினோர் கெடுவதில்லை என நிதமும் நிரூபிக்கும் , அம்பாள் கருணைக் கடல்.
    எண்ணியது எண்ணியாங்கு நமக்கருளும் தெய்வம்
     
  8. Sundaravalli

    Sundaravalli Junior IL'ite

    Messages:
    37
    Likes Received:
    5
    Trophy Points:
    13
    Gender:
    Female
    நம்மிடம் எல்லாரையும் விட அன்பாக இருப்பது தாயார் தான். தாயாரிடம் எதை வேண்டுமானாலும் பயமில்லாமல் சொல்லலாம். பகவான் எல்லா ரூபமாக இருந்தாலும் மாதா ரூபமாக வந்ததால் ரொம்பவும் ஹிதமாக இருக்கிறது. மனப் பூர்வமாக நமஸ்காரம் செய்துவிட்டால் போதும். அம்பாளை நம்பிக்கையுடன் நமஸ்கரித்தால் மோக்ஷம் நிச்சயம்
     
  9. Sundaravalli

    Sundaravalli Junior IL'ite

    Messages:
    37
    Likes Received:
    5
    Trophy Points:
    13
    Gender:
    Female
    அன்னையின் வடிவம் ஸ்ரீமதுரகாளி. உலகத்து நாயகியான பராசக்தி அவள். தன்னை நாடி வருவபவர்களுக்கெல்லாம் வேண்டுவார் வேண்டுவன எல்லாம் தருகிறாள். கேட்டவற்றையெல்லாம் தரும் கற்பகமாக அவள் விளங்குகிறாள். தன் மெய்யடியார் துயர்தீர்க்க, தன் குழந்தைகள் நல்வாழ்வு வாழ வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு எழுந்தருளி அமர்ந்த திருக்கோலமாக அருள் செய்கிறாள்
    ஸ்ரீ மஹாலக்ஷ்மியை எல்லா ஆலயங்களிலும் அமர்ந்த திருக்கோலத்திலேதான் காண்கிறோம்.
    தன் அடியார் அழைக்கு முன்னே ஓடிவந்து அருள் செய்தற்காகவே விழிப்புடன் இருக்கிறாளாம்!
    அன்னையின் அருள் பெருக்கு எத்தகையது என்பதற்கு எத்தனை எத்தனையோ சான்றுகள் கூறலாம். அற்புதமான மலர்களாக மலர்ந்து, நம்மை வசீகரிக்கும் தன்மை பெற்றவள். சோழமண்டலத்தில் இவருடைய பெயர் நிலைத்து நின்று விட்டது அமாவாஸ்யை, பூர்ணிமையின் பொலிவிலே தாயின் அற்புத வடிவம் தற்பொழுது பளிச்சென்று பொன்னிறமாக ஒளி வீசுகின்றாள். தஞ்சையை ஆண்டுவந்த அரசர் சரபோஜி மன்னர் கூட கண்டதென்ன? மகாதேஜஸ்வியாக ஒளி வீசுகின்றாள். உலக சிந்தையே சிறிதுமில்லாத மெய்ஞ்ஞானிபோல் மானஸிக பூஜை செய்து கொண்டிருந்தவர்களுக்கு தாயின் காட்சிதருகிறாள் திருவருள் தெரிகிறது. இவரைப் பற்றிய கதைகள் பல உண்டு. அவளது எல்லையற்ற பேரெழில், பேரன்பு, தாயின் திருவருள்.அவர்களுக்கு கண்ணுக்குப் புலனாகிறது. தாயின் அற்புதாமன ரூபஸெளந்தர்யம் எப்படித் தெரிகிறது என்பதை அருகில் சென்று காண வேண்டும். வீற்றிருக்கும். அன்னையின் திருவுருவுக்கு மலர்களைத் திருவடிகளிலே தூவி தாயின் அற்புத வடிவை காண வேண்டும். இறைவியின் முன்னே கண்ணீர் மல்க நின்ற, கூடியிருந்த மக்கள், கண்களை மலரவிழித்து ஒரு முறை பார்த்தால் மறு முறை பார்க்க தோன்றும். நெற்றித் திலகம் பளிச்சென்று தெரிகிறது அறிந்தோ அறியாமலோ செய்யும் பிழையையும் பொறுத்து மூடி மறைத்துக் காக்கும் பேரன்புதான் தாயின் திருவருள். அவளது பெருமைகளை துதிப்பவர்களுக்கு எதுதான் கிட்டாது தாயே. அவளை மதிக்கின்றவர்களுக்கு நம்மை வசீகரிக்கும் முறை கூடதெரியாதா! அமுதவெள்ளமாக வெளிவந்தது அன்னையின் கருணை. அன்னையைத் தொழுபவர்களுக்கு என்னவெல்லாம் கிடைக்கும் தெரியுமா ஒருமுறைசென்று பாருங்கள். இதன்பின் அற்புதமான காட்சி கண்முன்னே விரிகிறது. அம்மா இதோ தெரிகிறாள். மேலும் மேலும் கேள்விகளும் விடைகளும் எதற்கு? இன்பம் காண்பவள் தாய். ஒரு முறை ஸ்ரீமதுரகாளி என்று அழைத்தால் போதும்; ஓடிவந்து வாரி எடுத்து அணைத்து வேண்டுவதை எல்லாம் தருகிறாளாம். எனக்குத் தெரிந்த சிலவற்றைச் சொன்னேன். இது மட்டுமல்ல, இன்னும் என்ன என்ன நல்லன உண்டோ அவை எல்லாவற்றையும் ஒருங்கே தரவல்லது இவளது பேரருள். தமிழ் மக்களாகிய நாம் பாக்கியசாலிகள்
     
  10. Sundaravalli

    Sundaravalli Junior IL'ite

    Messages:
    37
    Likes Received:
    5
    Trophy Points:
    13
    Gender:
    Female
    சிறுவாச்சூரில் வெள்ளிக் கிழமைதன்னில் விளங்குகின்ற ஸ்ரீ மதுராம்பிகையம்மா திங்கள் கிழமை தன்னில் செழிக்க வந்த செந்திருவே திருவிளக்கும் ஏற்றி வைத்து பழங்களுடன் தேங்காயும் தாம்பூலம் தட்டில் வைத்து என்ன பலன் என்று பூசாரிதான் கேட்க மங்களமாக மகிழ்ந்துரைப்பாள், எனை வைத்து உபாசித்தவர்களுக்கு தீவினையைப் போக்கி சிறந்தபலன் நானளிப்பேன் கன்னிகைகள் பூஜை செய்தால் நல்ல கணவரைக் கூட்டுவிப்பேன் கிருஹஸ்தர்கள் பூஜை செய்தால் கீர்த்தியுடன் வாழவைப்பேன். தரித்திரத்தை நீக்கி செல்வத்தை நான் கொடுப்பேன், புத்திரன் இல்லாதவர்க்கு புத்திர பாக்கியம் அளிப்பேன், தீராத பிணியை நீக்கி அஷ்ட ஐஸ்வர்யம் நான் அளிப்பேன் மாதாவே உந்தன் தாளினை நான் பணிந்தேன் பரதேவதே தன் அருளால் அற்பப் பிறப்பை தவிர்ப்பாய் நமோஸ்துதே
     

Share This Page